மதுரையில் பாஜக தமிழ் இலக்கியம் மற்றும் தமிழர் நலன் பிரிவு நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ் இலக்கியம் மற்றும் தமிழர் நலன் பிரிவு மாவட்ட மாவட்டத் தலைவர் பி.வெங்கடேஸ்வரன் தலைமை தாங்கினார். பிரிவுனுடைய மாவட்ட பார்வையாளர் மோடி சங்கர் முன்னிலை வகித்தார்.
தமிழ் இலக்கியம் மற்றும் தமிழர் நலன் பிரிவு மாநில செயலாளரும்,பெருங்கோட்ட பொறுப்பாளருமான டி.எஸ்.கே.ஞானேஸ்வரன் அவர்கள் வழி காட்டினார்.
இக்கூட்டம் தமிழ் இலக்கிய மற்றும் தமிழர் நலன் பிரிவு மாவட்ட செயலாளர் சுந்தரம் இல்லத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சியின் முடிவில் மாவட்டத் துணைத் தலைவர் ராமச்சந்திரன் நன்றி கூறினார். இதில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.