கரூர் மாவட்ட தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகத்துறை சார்பாகவும், கரூர் மாவட்ட வழக்கறிஞர் அணி மற்றும் கரூர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பாகவும். பாரதிய ஜனதா கட்சியின் அதிகார இணையதள சமூக பக்கத்தில் தவறான மற்றும் பொய்யான செய்திகளை பரப்புறை செய்வதை கண்டித்தும் காங்கிரஸ் முன்னணி தலைவர்கள் திருமதி. சோனியா காந்தி மற்றும் திரு. ராகுல் காந்திக்கு எதிராக சமூக வலைதளங்களில் பொய் செய்திகளை பரப்புவதை கண்டித்து அதன் மீது நடவடிக்கை எடுக்கும் பொருட்டு பாஜக சமூக ஊடத்துறை மீது தக்க சட்ட நடவடிக்கை எடுக்க கோரியும் கரூர் காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் கரூர் மாவட்ட தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகத் துறை சார்பாக புகார் மனு அளிக்கப்பட்டது. இந்த புகார் மீது தக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார்கள் என தெரிவித்தார்கள்.
இந்நிகழ்வில் கரூர் மாவட்ட தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகத்துறை ஒருங்கிணைப்பாளர் திரு.பாலமுருகன், தமிழ்நாடு காங்கிரஸ் வழக்கறிஞர் பிரிவு மாநிலச் செயலாளர் திரு க. முகமது அலி, கரூர் மத்திய மாநகர துணை தலைவர் திரு.கண்ணப்பன் மற்றும் கரூர் கிழக்கு மாநகர தலைவர் திரு சண்முகசுந்தரம். மாவட்ட தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகத்துறை பொதுச் செயலாளர் திரு. சாகுல் அமீத், தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகத்துறை மாவட்டச் செயற்குழு உறுப்பினர் திரு. ஷேக் அப்துல் காதர், ஆகியோர் கலந்து கொண்டனர்.