மகாத்மா காந்தியடிகளின் 150 வது பிறந்த நாளை முன்னிட்டு, திருப்பூர் அரசு மருத்துவமனை, பாரதி விகாஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி திருப்பூர், மற்றும் கலாம் நியூஸ் டிவி சென்னை இணைந்து நடத்திய இரத்ததான முகாம் பாரதி விகாஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் திரு கனகராஜ் வட்டார வளர்ச்சி அலுவலர், முதலிபாளையம் ஊராட்சி அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். திருப்பூர் அரசு மருத்துவமனை ரத்ததான வங்கி டாக்டர் குழுவினர் வந்திருந்து இந்த நிகழ்ச்சியை சிறப்பாக நடத்திக் கொடுத்தனர்.
சிறப்பு அழைப்பாளர்களாக பாரதி விகாஸ் எஜுக்கேஷன் டிரஸ்ட் சேர்மன் திரு நாகராஜ், கலாம் நியூஸ் டிவி முதன்மை எடிட்டர் திரு.மயில்மணி அவர்கள் கலந்து கொண்டு ரத்த தானம் வழங்கிய அனைவருக்கும் தமிழக அரசால் வழங்கப்பட்ட பாராட்டு சான்றிதழை வழங்கி ஊக்கப்படுத்தினார். இந்நிகழ்ச்சியில் பள்ளியின் ஆசிரியர்கள் பெற்றோர்கள் ஊழியர்கள் சுற்றுவட்டார பொதுமக்கள் கலந்து கொண்டனர். முன்னதாக பள்ளியின் தாளாளர் திரு முரளி கிருஷ்ணா அவர்கள் அனைவரையும் வரவேற்றார். பள்ளியின் முதல்வர் திரு பிரகாசன் நன்றி கூறினார்.