Sunday , September 8 2024
Breaking News
Home / இந்தியா / நாங்களும் மனிதர்கள்தான்…. Driver’s & Owner’s

நாங்களும் மனிதர்கள்தான்…. Driver’s & Owner’s

அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய டிரைவர்களின் நிலமை

யாரு ” அட டிரைவரா …என ஏளனமாகவே எங்களை பார்க்கும் சராசரி பொது மக்களுக்கு டிரைவர் கடம்பை பிரபு எழுதுவது……

உங்கள் வழிப்பயணங்களில் தங்கள் வாழ்க்கைப்பயணங்களை நடத்தும் எங்களையும் சற்று சிந்தியுங்கள்….??

ஏதாவது ஒரு இடத்தில் விபத்து நடக்கும்போது முதலில் பாதிப்படைவது டிரைவர்தான் ,??‍♂ அதே சமயம் முதலில் பழிசொல்லிற்கு ஆளாவதும் டிரைவர்தான்….??‍♂

ஒரு வருடத்திற்கு முன்பு வட இந்தியாவில் புனிய யாத்திரையில் தன் உயிரை பணயம் வைத்து ஐம்பது பயணிகளை காப்பாற்றி தன் உயிரை இழந்தவனும் டிரைவர்தான்….??‍♂

தினந்தோறும் வாடகையிலேயே வாழ்க்கையை கழிக்கும் எங்களின் துயரக்கதையை ஒருநாளாவது கேட்டதுண்டா….?????

நாங்கள் கேட்கும் வாடகையை நீங்களும் தர மாட்டீர்கள் , எங்கள் மீது விதிக்கும் வரியை அந்த அரசும் குறைக்காது….

தினம்தோறும் டீசல்? விலையை தனியார் நிறுவனங்கள் ஏற்றிக்கொள்ளலாம் தவறில்லை , ஆனால் நாங்கள் வருடம் ஒருமுறை வாடகையில் ஐம்பது ஏற்றினால் பாவம் ” அந்த கார்காரன் வாடகையில் கொள்ளையடிக்கிறான் ” என்று விடுவீர்கள்….?

ரோடே இருக்காது ,ஆனால் ரோடு டேக்ஸ் கட்ட வேண்டும்…பல நிறுவனங்கள் புகை வெளியிடலாம் தவறில்லை , ஆனால் வருடம் ஒரு முறை நாங்கள் புகை பரிசோதனை செய்ய வேண்டும்….

வாடகை வாகனத்தில் பயணிக்கும்போது ஒரு முறையாவது வண்டியின் டயர் விலையை கேட்டிருக்கிறீரா….??? மாட்டீர்கள்…

எங்களுக்கு இந்த தொழிலில் மிஞ்சுவது எங்கள் உயிரும் , அந்த உயிர் போனால் எங்களை எரிக்க அந்த டயரும்தான்….

அரசு சொன்ன அளவில் பாரம் ஏற்றினால் டீசலுக்கு கூட கட்டாது , அதிக பாரம் ஏற்றினால் வரும் பணம் போலீஸ்க்கு லஞ்சம் கொடுக்கவே பத்தாது….

பயணிக்கும் உங்களுக்கும் சேர்த்து காப்பீடு எவ்வளவு தெரியுமா….??? சிறிய ரக வாகனத்திற்கே ரூபாய் இருபதாயிரம் தொடும்….அது போக F.C லொட்டு லொஸ்கு…இதல்லா உங்களுக்கு எப்படி தெரியும்….நீங்கதா சொல்ர வாடகைல நூறு ரூபா கொறச்சு கொடுக்கர ஆளாச்சே…..

ஆமா…வாடக வண்டீல போரப்போ ஒரு முறையாவது அந்த சுங்க சாவடி பக்கம் எட்டி பார்த்ததுண்டா….அவ கேட்கர வரிய பாத்தா , இந்த வண்டிய அவனுக்கே கொடுத்தர்லானு தோனும்….

ஒரு லிட்டர் டீசல் அடுச்சா 15 கி.மீட்டர் கூட தாண்டாது, ஆனா உங்க கிட்ட டீசலுக்கு கட்ர மாதிரியாவது கொடுங்கனு வாடகைக்கு கெஞ்சனம்ல….

இவ்வளவு கஷ்ட்டப்பட்டு இந்த தொழில ஏன் செய்ரீங்கனு கேட்கரீங்களா….???

எங்களுக்கும் ஒரு ஜான்ல வயிரு இருக்கே அதுக்குதான்….இத விட்டா வேற தொழில் தெரியாது…

டிரைவனு சொல்லிபாருங்க ஒரு பய பொண்ணு தரமாட்டா…ஆனா எல்லா கல்யாணத்திலையும் பொண்ணு , மாப்பிலைய உட்கார வெச்சுட்டு நாங்கதான் வண்டி ஓட்டுவோம்….அந்த கஷ்டமெல்லாம் உங்களுக்கு எங்க புரிய போகுது…உங்களை பொறுத்த வரை டிரைவர்ங்கரவ காசு கொடுத்த வண்டி ஓட்ர மாடுதானே…..

உங்களுக்காக எத்தனை நைட் கண்முழுங்சு வண்டி ஓட்ரோம் , ஒரு டைம் டீ சாப்பிடராயானு கேட்ருப்பீங்களா….????

மீனவர் போலதான் எங்க பொழப்பும் தொழிலுக்கு போனா , உயிருக்கு உத்திரவாதம் கிடையாது…எமனோட அக்ரிமென்ட் போட்டு பொழைக்கர பொழப்பு இது…

F.C இன்சூரன்ஸ் , டயர் , டீசல் விலை ,போலிஸ் , ஆர்.டி.ஓ , பர்மிட் , ரோட் டேக்ஸ் , ஆயில் சர்வீஸ் , வெங்காயனு இதல்லா நினைக்கும் போது இந்த தொழில விட்டரலானு தோனு , ஆனா வேற தொழில் தெரியாதே…..

குடும்பத்த நினைச்சுப் அப்படியே போக வேண்டியதுதான்….வண்டி வேகமா போர அளவிற்கு எங்க வாழ்க்கை போரதில்லை , நாங்க வாங்குன வரம் அப்படி….

இத படுச்சுச்சு டிரைவனா கொஞ்சம் மரியாதை கொடுத்தீங்கனா அதுவே போதும்…ஏன்னு கேட்கரீங்களா….????

நாங்களும் மனிதர்கள்தான்….
Driver’s & Owner’s.

நன்றி கடம்பை பிரபு

அன்பே சிவம் டிராவல்ஸ்.

Bala Trust

About Admin

Check Also

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு கு செல்வப்பெருந்தகை MLA அவர்கள் தலைமையில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது…

கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தில் நிலச் சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு கு செல்வப்பெருந்தகை …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES