Sunday , October 13 2024
Breaking News
Home / இந்தியா / என்.பி.ஆர், என்.ஆர்.சி ,சி .ஏ.ஏ, குறித்து பொது மக்களிடையே ஏற்பட்டுள்ள அச்சத்தை களையும் வகையில் தலைமைச் செயலாளர் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு கலந்துகொண்டது

என்.பி.ஆர், என்.ஆர்.சி ,சி .ஏ.ஏ, குறித்து பொது மக்களிடையே ஏற்பட்டுள்ள அச்சத்தை களையும் வகையில் தலைமைச் செயலாளர் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு கலந்துகொண்டது

என்.பி.ஆர், என்.ஆர்.சி ,சி .ஏ.ஏ, குறித்து பொது மக்களிடையே ஏற்பட்டுள்ள அச்சத்தை களையும் வகையில் தலைமைச் செயலாளர் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு கலந்துகொண்டது.

கூட்டமைப்பின் சார்பாக கீழ்க்கண்ட கோரிக்கைகளை நாங்கள் முன்வைத்து வந்துள்ளோம் .

1. என்.பி.ஆர் ,என்.ஆர். சி, சி.ஏ.ஏ, ஆகிய மூன்றையும் எதிர்க்கும் அனைத்து அமைப்புகள் ,கட்சி மற்றும் தலைவர்களையும் அழைத்து தமிழக அரசு முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட வேண்டும்.

2. தமிழகம் முழுவதும் தொடர் போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் சூழலில் மாண்புமிகு வருவாய் துறை அமைச்சர் திரு ,ஆர். பி. உதயகுமார் அவர்கள் மத்திய அரசு கொண்டுவந்துள்ள சட்டத்திற்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற இயலாது என்று தெரிவித்துள்ளார். ஆனால் தேசிய மக்கள்தொகை பதிவேடு (NPR) எந்த சட்டத்திலும் குறிப்பிடப்படாத நிலையில் அதை நடைமுறைப்படுத்த இயலாது என்று மாநில அரசு முடிவு எடுப்பதில் எந்த சட்டமீறலும் நிகழப் போவது இல்லை. அரசமைப்புச் சட்டத்திற்கோ, நாடாளுமன்றம் தன் எல்லைக்கு உட்பட்டு இயற்றிய சட்டத்திற்கோ எதிரானதாக இதைக் கருத இயலாது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

3.குடியுரிமை திருத்தச் சட்டம் 2019 இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கட்டமைப்பான மதச் சார்பற்ற கோட்பாட்டிற்கு எதிரானது. சமத்துவ கோட்பாட்டிற்கு, மதச் சார்பற்ற கட்டமைப்பிற்கு எதிரானது என்று அறிவிக்கக் கோரி மாநில அரசுகள் உட்பட பலரும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர். இந்தியா முழுக்க இச்சட்டத்திற்கு எதிரான போராட்டம் நடைபெறுகிறது. குடியுரிமைச் சட்டம் 1955, 2003லும் திருத்தப்பட்டுள்ளது. 2019ல் திருத்தப்பட்ட கூறுகள் மக்கள் மனங்களில் அச்சத்தையும் பதட்டத்தையும் உருவாக்கியுள்ளது. பதட்டமான சூழலில் வழக்கை விசாரிப்பதே கடினம் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ள சூழலில், மக்கள் மனங்களில் உருவாகியுள்ள பதட்டத்தையும் அச்சத்தையும் கருத்தில் எடுத்துக் கொள்ளாமல் அரசு தன்னிச்சையாக ஒரு முடிவை எடுத்து நடைமுறைப்படுத்த முயல்வது மக்களாட்சி மாண்புகளுக்கு எதிரானது. இத்தகைய சூழலில், குடியுரிமை திருத்தச் சட்டம் 2019-ஐ திரும்பப்பெற வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தியும், , காலங்காலமாக இந்தியவில் வாழும் மண்ணின் மைந்தர்களின் குடியுரிமையை கேள்விக்குறியாக்கும் தேசிய குடிமக்கள் பதிவேட்டை தமிழகத்தில் நடைமுறைப்படுத்த மாட்டோம் என்றும் தமிழ்நாடு சட்டப்பேரவையில், தமிழ்நாடு அரசு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

4.சி.ஏ.ஏ, என்.பி.ஆர், என்.ஆர்.சி ஆகிய மூன்று சட்டங்களுக்கும் எதிராக நாடு முழுவதிலும் மக்கள் தன்னெழுச்சியாக போராட்டங்களை முன்னெடுத்து நடத்திக் கொண்டிருக்கின்றார்கள். இந்த போராட்டங்கள் யாருடைய தூண்டுதலின் பேரிலும் நடைபெறக் கூடியது அல்ல என்பதை நாங்கள் அரசின் கவனத்திற்கு அறியத்தருகிறோம்.

Bala Trust

About Admin

Check Also

ரத்தன் டாடா எனும் சகாப்தம்…

பிறப்பு: டிசம்பர் 28, 1937 | இறப்பு: அக்டோபர் 9, 2024 ஒரு இந்திய தொழிலதிபர் ஆவார் , அவர் …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES