கரூர் மாவட்டம் வெள்ளியணை ஊராட்சி ஜல்லிப்பட்டி யைச் சார்ந்த சிறுவர்கள் மற்றும் பெரியவர்கள் ஆகிய நாங்கள் பல வருடங்களாகவே விளையாட்டு மைதானம் இன்றி சரிவர விளையாட முடியாத சூழ்நிலையில் உள்ளோம். மாவட்ட மற்றும் மாநில அளவில் விளையாடக்கூடிய தகுதி இருந்தும் பயிற்சி எடுப்பதற்கான மைதானம் மற்றும் அதற்கு தேவையான உபகரணங்கள் எதுவும் இல்லாமல் இருக்கும் காரணத்தினால் விளையாட்டு வீரர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. ஆதலால் தயவுகூர்ந்து விளையாட்டு வீரர்களின் வாழ்க்கையை ஒளி ஏற்ற உதவுமாறு தங்களிடம் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம் என்று டாக்டர் ஏபிஜே அப்துல்கலாம் இளைஞர் நற்பணி மன்றம், ஊர் பொதுமக்கள் மற்றும் தமிழ்நாடு இளைஞர் கட்சியினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். மேலும் தமிழ்நாடு இளைஞர் கட்சியின் மாவட்டத் தலைவர் ராஜ்குமார் அவர்கள் பேசிய போது இதுபோல ஒவ்வொரு கிராமத்திலும் மைதானம் இருந்தால் நிறைய திறமையான விளையாட்டு வீரர்களை உருவாக்க முடியும் என்று கூறினார். மேலும் க. பாலமுருகன், மாநில பத்திரிக்கை துறை தொடர்பாக தமிழ்நாடு இளைஞர் கட்சி, கௌஷிக் தலைவர், செல்வா செயலாளர், டாக்டர் ஏபிஜே அப்துல்கலாம் இளைஞர் நற்பணி மன்றம் மற்றும் ஜல்லிப்பட்டி ஊர் பொது மக்கள் கலந்து கொண்டனர்.
Home / இந்தியா / கரூர் மாவட்டம் வெள்ளியணை ஊராட்சியில் ஜல்லிப்பட்டி என்ற கிராமத்தில் சிறுவர்கள் மற்றும் பெரியவர்கள் விளையாடுவதற்கான விளையாட்டு மைதானம் கோரி மனு…
Check Also
ரத்தன் டாடா எனும் சகாப்தம்…
பிறப்பு: டிசம்பர் 28, 1937 | இறப்பு: அக்டோபர் 9, 2024 ஒரு இந்திய தொழிலதிபர் ஆவார் , அவர் …