பத்திரிக்கை உலக ஜாம்பவான் “கழுகு’ ராமலிங்கம் இயற்கையை அடைந்துவிட்டார்.
எனக்கு முப்பத்தைந்து ஆண்டுகால நண்பர்.
அரசியல் பத்திரிகை உலகில் என்
எழுத்துலகப் பயணத்தின் வழிகாட்டி.
இயற்கையிலேயே அளவுக்கு மீறிய தயாள குணமும் அளவுக்கதிகமான நகைச்சுவை உணர்வும் கொண்டவர்.
இன்று அரசியலிலும் பத்திரிகை உலகிலும் கலை உலகிலும் உயர்ந்து நிற்போர் பலர் அவருடைய நண்பர்களே.
தராசு, நக்கீரன் தொடங்கி கழுகு வரை தொடர்ந்த நட்பு நேற்று வரை தொடர்ந்து தொடர்ந்த வண்ணம் இருந்தது.
ஊவமைக் கவிஞர் சுரதா ராமலிங்கம் பற்றி என்னிடம் அடிக்கடி சொல்வார் : நீ அவனை நம்பாதே என்று.
அவர் சொன்னது அப்படியே நேற்று உண்மையாயிற்று. ஒரு வார்த்தை கூட சொல்லாமல் கொள்ளாமல் போய்விட்டார்.
இத்தனைக்கும் நேற்று முதல் நாள் மதியம் தான் அவரிடமும் அவருடைய மனைவியிடமும் பேசிக்கொண்டிருந்தேன்.
சென்னையில் கழுகு வார இதழைத் தொடங்கி நடத்தியவர்கள் ஐந்து பேர்.
ராமலிங்கம், சுகானந்தம் மதுமலரன்பன்,
தீனதயாளபாண்டியன் மற்றும் நான்.
ஐவரில் மூவர் மறைந்து விட்டுவிட்டனர்.
நானும் தீனதயாளபாண்டியனும் மீதம் இருக்கிறோம். ராமலிங்கம் குடும்பத்திற்கு ஆறுதல் சொல்லும் போது எங்களுக்கும் ஆறுதல் சொல்லுங்கள்.
கண்ணீர் அஞ்சலியுடன்,
சிவராமன்,
மத்திய மண்டலத் தலைவர்,
தமிழக பத்திரிகையாளர்கள் சங்கம் .