Friday , November 22 2024
Breaking News
Home / செய்திகள் (page 19)

செய்திகள்

All News

தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்று கலைஞர் நூற்றாண்டை முன்னிட்டு அவரது உருவம் பொறித்த ரூ.100 சிறப்பு நாணயத்தை வெளியிடுகிறது ஒன்றிய அரசு

தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்று கலைஞர் நூற்றாண்டை முன்னிட்டு அவரது உருவம் பொறித்த ரூ.100 சிறப்பு நாணயத்தை வெளியிடுகிறது ஒன்றிய அரசு

சென்னை: கலைஞர் நூற்றாண்டை முன்னிட்டு அவரது உருவம் பொறித்த ரூ.100 சிறப்பு நாணயத்தை ஒன்றிய அரசு வெளியிடுகிறது.

கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியிடப்படும் என்று ஒன்றிய அரசின் அரசிதழில் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. ரூ.100 சிறப்பு நாணயத்தில் கலைஞர் உருவப்படத்துக்கு கீழ் அவரது கையொப்பமும் பொறிக்கப்பட்டிருக்கும். தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்று, முன்னாள் முதலமைச்சர் ‘முத்தமிழ் அறிஞர் கலைஞர்’ டாக்டர் மு.கருணாநிதி என்ற பெயரில் நினைவு நாணயம் வெளியிட ஒன்றிய அரசு அனுமதி வழங்கியது. ஆங்கிலம் மற்றும் இந்தியில் அவரின் பெயருடன் ‘தமிழ் வெல்லும்’ என்ற வாசகம் இடம்பெற உள்ளது.

இதற்கான உத்தரவு விரைவில் ஒன்றிய அரசின் கெஜட்டில் வெளியாக உள்ளது. இதற்கான மாதிரி வடிவத்தை தமிழ்நாடு அரசு வழங்கியுள்ளது. இந்தி மற்றும் ஆங்கிலத்தில் ‘டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி’ என்றபெயருடன், ‘தமிழ் வெல்லும்’ எனும் வாசகம் அவரது நினைவு நாணயத்தில் இடம்பெற உள்ளது. இந்நிலையில் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டையொட்டி 100 ரூபாய் நினைவு நாணயம் வெளியிடுவதற்கான அரசாணை ஒன்றிய அரசின் அரசிதழில் வெளியானது. நாணையத்தின் ஒரு புறம் ‘முத்தமிழ் அறிஞர் கலைஞர் பிறந்த நாள் நூற்றாண்டு 1924 – 2024’ என அச்சிடப்பட்டும், மறுபுறத்தில் தேசிய நினைவுச் சின்னத்துடன் ரூ.100 என நாணயத்தின் மதிப்பும் குறிப்பிடப்பட்டுள்ளது.

2024 நாடாளுமன்றத் தேர்தலில் கரூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளர் Jothimani Sennimalai அவர்களின் வெற்றிக்காக உழைத்த மணப்பாறை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட #INDIA கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும், மாபெரும் வெற்றியை வழங்கிய மணப்பாறை சட்டமன்றத் தொகுதி மக்களுக்கும் நன்றி தெரிவிக்கும் பயணத்தை பொன்னம்பட்டி பேரூரில் தொடங்கி வைத்தோம்.

“தமிழகத்தில் பதற்றத்தை உருவாக்க பாஜக சதி”- திருமாவளவன்

"தமிழகத்தில் பதற்றத்தை உருவாக்க பாஜக சதி"- திருமாவளவன்

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் நேரில் சந்தித்து மனு அளித்தார்.

அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன் எம்பி, “தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கை சீர்குலைத்து அரசின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சி நடக்கிறது.

தமிழ்நாடு அரசு முன்னெடுத்து வரும் மக்கள் நலத்திட்டங்களை முடக்க வலதுசாரி சனாதன சக்திகள் சதி செய்கின்றன. சிறு வாய்ப்பு கிடைத்தாலும் தமிழ்நாடு அரசுக்கும், திராவிட கொள்கைகளுக்கும் எதிராக திருப்புவதில் முனைப்பாக உள்ளனர். சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க வேண்டும் என்பதுதான் பாஜகவின் அரசியல் செயல் திட்டமாக உள்ளது.

கூலிக்கு கொலை செய்யும் கும்பலையும் அவர்களுக்கு அரசியல் புகலிடம் கொடுப்போரையும் இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும். ஆம்ஸ்ட்ராங் படுகொலையின் பின்னணியில் உள்ளவர்கள், கூலிக்கும்பல் உள்ளிட்ட அனைவரையும் கைதுசெய்து தண்டிக்க வேண்டும். ஆம்ஸ்ட்ராங் கொலையில் ஆருத்ரா கோல்டு விவகாரமும் பேசப்படுகிறது. ஆருத்ரா கோல்டு மோசடியில் தொடர்புடையவர்கள் பாஜக-வில் பொறுப்பிலேயே இருக்கிறார்கள். ஆகவே ஆம்ஸ்ட்ராங் படுகொலை- ஆருத்ரா- பாஜக என்ற முக்கோணம் குறித்தும் விசாரணை மேற்கொள்ள வேண்டும்.

கருணாநிதி குறித்து கொச்சையாக விமர்சித்து சட்டம், ஒழுங்கை சீர்குலைக்க சதி நடக்கிறது. நீட் முறைகேட்டை மூடி மறைக்க பாஜக முயல்கிறது. ஆம்ஸ்ட்ராங் படுகொலையில் கூட ஒரு அரசியல் செயல்த்ட்டம் இருக்க வாய்ப்புள்ளது. ஆம்ஸ்ட்ராங் கொலை நடந்த உடனே பகுஜன் சமாஜ் கட்சி கேட்பதற்கு முன்பாகவே சிபிஐ விசாரணை வேண்டும் என்று பாஜக கேட்டது. தமிழ்நாட்டில் எப்படியாவது பதற்றத்தை ஏற்படுத்திவிட வேண்டும் என்று பாஜக தீவிரம் காட்டுகிறது” என்றார்.

காங்கிரஸ் கட்சியை வலிமைப்படுத்தும் அண்ணாமலைக்கு நன்றி.! செல்வப்பெருந்தகை..!!

காங்கிரஸ் கட்சியை வலிமைப்படுத்தும் அண்ணாமலைக்கு நன்றி.! செல்வப்பெருந்தகை..!!

என் மீது தெரிவிக்கும் விமர்சனங்களால் காங்கிரஸ் கட்சியை வலிமைப்படுத்தும் அண்ணாமலைக்கு நன்றி என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம், கல்லுகுறிக்கி கிராமத்தில் இன்று நடந்த காலபைரவர் கோயில் குடமுழுக்கு விழாவில் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய செல்வப்பெருந்தகை, தனி நபர்களை தாக்கிப் பேசுவது பாஜகவினருக்கு பழக்கப்பட்ட ஒன்று தான் என்றும் குறிப்பாக, வடமாநிலங்களில் தனிநபர்களை தாக்கிப் பேசுவது அதிகமாக நடைபெறும் என்றும் தெரிவித்தார்.

தமிழகத்தில் தனி நபர்களை தாக்கி பேசுவது தற்போது தொடங்கி இருப்பதாகவும், தனிநபர்களைத் தாக்கி பேசுவது மட்டுமல்லாது ஆட்களை வைத்து தாக்கவும் செய்வார்கள் எனவும் செல்வப்பெருந்தகை கூறினார். அண்ணாமலை என் மீது தொடுத்த விமர்சனங்களால், காங்கிரஸ் கட்சி வலுப்பெற்றுள்ளது என்று அவர் தெரிவித்தார்.

காங்கிரஸ் கட்சியை வலிமைப்படுத்தும் அண்ணாமலைக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் தொடர்ந்து அவர் என் மீது தனிநபர் தாக்குதல் நடத்த வேண்டும், அதன் மூலம் காங்கிரஸ் கட்சி மேலும் வலிமை பெற வேண்டும் என்றும் கூறினார்.

தமிழகத்துக்கு காவிரி தண்ணீரை வழங்க மறுக்கும் கா்நாடகா அரசை கண்டித்து தமிழக காங்கிரஸ் காந்திய வழியில் போராட தயாராக உள்ளது என்று செல்வப்பெருந்தகை தெரிவித்தார்.

தனிநபர்களை தாக்கி பேசுவது பா.ஜ.க.வினருக்கு பழக்கப்பட்ட ஒன்று: தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பேட்டி

தனிநபர்களை தாக்கி பேசுவது பா.ஜ.க.வினருக்கு பழக்கப்பட்ட ஒன்று: தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பேட்டி

கிருஷ்ணகிரி: தனிநபர்களை தாக்கி பேசுவது பா.ஜ.க.வினருக்கு பழக்கப்பட்ட ஒன்று என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம், கல்லுகுறிக்கி கிராமத்தில் நடந்த காலபைரவர் கோயில் குடமுழுக்கு விழாவில் கலந்து கொண்ட செல்வப்பெருந்தகை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர்; தனி நபர்களை தாக்கிப் பேசுவது பாஜகவினருக்கு பழக்கப்பட்ட ஒன்று தான். குறிப்பாக, வடமாநிலங்கள் போல் தற்போது தமிழ்நாட்டிலும் தனிநபர்களை பா.ஜ.க.வினர் தாக்கி பேச தொடங்கியதாக அவர் குற்றச்சாட்டியுள்ளார்.

பாஜக தலைவர் அண்ணாமலை மறைந்த தலைவர்களை கொச்சைப்படுத்தி பேசுவதை தவிர்க்க வேண்டும். குஜராத்தில் இருந்து தமிழகத்திற்கு போதைப் பொருட்கள் கடத்தி வருவதை ஒன்றிய அரசு தடுக்க வேண்டும். தமிழக அரசும் போதைப் பொருட்கள் நடமாட்டத்தை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலும் உளவுத்துறையில் ஆய்வாளருக்கு பதிலாக, துணை காவல் கண்காணிப்பாளரை நியமிக்க வேண்டும். சென்னை போன்ற பெருநகரங்களில் ஐஜி அந்துஸ்து உள்ள அலுவலர்களை நியமித்து வலிமைப்படுத்த வேண்டும்.

தமிழகத்துக்கு காவிரி தண்ணீரை வழங்க மறுக்கும் கா்நாடகா அரசை கண்டித்து தமிழக காங்கிரஸ் காந்திய வழியில் போராட தயாராக உள்ளது. அண்ணாமலை என் மீது தொடுத்த விமர்சனங்களால், காங்கிரஸ் கட்சி வலுப்பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சியை வலிமைப்படுத்தும் அண்ணாமலைக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தொடர்ந்து அவர் என் மீது தனிநபர் தாக்குதல் நடத்த வேண்டும், அதன் மூலம் காங்கிரஸ் கட்சி மேலும் வலிமை பெற வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தேர்தலில் வெற்றியும், தோல்வியும் சகஜம்.. ஸ்மிருதி இரானி மீதான விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த ராகுல் காந்தி..!!

தேர்தலில் வெற்றியும், தோல்வியும் சகஜம்.. ஸ்மிருதி இரானி மீதான விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த ராகுல் காந்தி..!!

டெல்லி: ஸ்மிருதி இரானியை இழிவாகவும், கேவலமாக பேசுவதை தவிர்க்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன் என்று எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

உத்தரபிரதேச மாநிலம் அமேதி மக்களவை தொகுதியில் 2019ம் ஆண்டு ராகுல்காந்தியை தோற்கடித்தவர் ஸ்மிருதி இரானி. ஒன்றிய அமைச்சராகவும் அவர் இருந்து வந்தார்.

ஆனால் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் மீண்டும் அமேதி தொகுதியில் போட்டியிட்ட ஸ்மிதி இரானி தோல்வி அடைந்தார். புதிய அரசு அமைக்கப்பட்ட ஒரு மாதத்துக்குள் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முன்னாள் எம்.பி.க்கள் தங்கள் அரசு இல்லத்தை காலி செய்ய வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், ஸ்மிருதி இரானி இந்த வார தொடக்கத்தில் தனது அதிகாரபூர்வ இல்லத்தை காலி செய்தார் என்று அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில், ஸ்மிருதி இரானியை இழிவாகவும், கேவலமாக பேசுவதை தவிர்க்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன் என்று எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ராகுல் காந்தி தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியதாவது;

வாழ்க்கையில் வெற்றியும், தோல்வியும் சகஜம்.

ஸ்மிருதி இரானியை இழிவாகவும், கேவலமாக பேசுவதை தவிர்க்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். இந்த விஷயத்தில் ஸ்மிருதி இரானி அல்லது வேறு எந்த தலைவராக இருந்தாலும் இது பொருந்தும் என அவர் அறிவுத்தியுள்ளார்.

மக்களை அவமானப்படுத்துவதும், அவமதிப்பதும் பலவீனத்தின் அடையாளம், வலிமை அல்ல. இவ்வாறு ராகுல் கூறியுள்ளார்.

முதலமைச்சருடன் திருமாவளவன் சந்திப்பு

முதலமைச்சருடன் திருமாவளவன் சந்திப்பு

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமானதொல்.

திருமாவளவன் அவர்கள் சந்தித்துப் பேசினார்.

கடந்த 5 ஆம் தேதி தேசிய கட்சியான பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆம்ஸ்ட்ராங் கொலையில் சரணடைந்தவர்கள் உண்மையான குற்றவாளிகள் இல்லை; உண்மை குற்றவாளிகளை காவல்துறையினர் கைது செய்ய வேண்டும். கூலிப்படை கும்பலை, சாதியவாத கும்பலை தடுக்கத் தவறினால் தமிழ்நாடு அரசுக்கு மேலும் களங்கம் ஏற்படும் என்று திருமாவளவன் வெளிப்படையாக தெரிவித்தார்.

இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமானதொல். திருமாவளவன் சந்தித்துப் பேசினார். இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் சந்திப்பு நிகழ்த்தியுள்ளார். நீட் தேர்வு ரத்து, குற்றவியல் சட்டங்களை சீரமைக்க கோரிக்கை, தமிழ்நாட்டின் சட்டம் – ஒழுங்கு தொடர்பாகவும் முதலமைச்சரிடம் திருமாவளவன் மனு அளித்தார்.

தமிழகத்திற்கு தினமும் 1 டி.எம்.சி.,: கர்நாடகா அரசுக்கு உத்தரவு

தமிழகத்திற்கு தினமும் 1 டி.எம்.சி.,: கர்நாடகா அரசுக்கு உத்தரவு


சென்னை : தமிழகத்திற்கு இம்மாதம் இறுதிவரை நாள்தோறும், 1 டி.எம்.சி., நீர் திறக்கும்படி, கர்நாடகாவிற்கு காவிரி நீர் முறைப்படுத்தும் குழு உத்தரவிட்டு உள்ளது.தமிழகத்திற்கு ஆண்டுதோறும், 177.25 டி.எம்.சி., காவிரி நீரை, கர்நாடக அரசு வழங்க வேண்டும்.

ஒவ்வொரு மாதமும் வழங்க வேண்டிய நீரின் அளவு, காவிரி மேலாண்மை ஆணையம் வாயிலாக முறைப்படுத்தப்பட்டு உள்ளது. ஜூன் மாதம் வழங்க வேண்டிய 9.19 டி.எம்.சி., நீரில், 2.25 டி.எம்.சி., மட்டுமே கிடைத்தது.இம்மாதம், 31.2 டி.எம்.சி., நீர் திறக்க வேண்டிய நிலையில், 9ம் தேதி வரை, 1.99 டி.எம்.சி., மட்டுமே கிடைத்துள்ளது. எனவே, நடப்பாண்டு நிலுவை நீரின் அளவு, 14 டி.எம்.சி.,யாக அதிகரித்துள்ளது.இந்நிலையில், காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவின் கூட்டம், ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக நேற்று நடந்தது. வினீத் குப்தா தலைமையில் நடந்த கூட்டத்தில், தமிழகத்தின் சார்பில், காவிரி தொழிற்நுட்ப பிரிவு தலைவர் சுப்பிரமணியன், திருச்சி மண்டல நீர்வளத்துறை தலைமை பொறியாளர் தயாளகுமார் பங்கேற்றனர்.’மேட்டூர் அணையில், 12.9 டி.எம்.சி., மட்டுமே நீர் உள்ளது. இதிலிருந்து குடிநீர் தேவைக்கு வினாடிக்கு 1,000 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. விரைவில் அணை வறண்டு விடும் கட்டத்தில் உள்ளது. எனவே, குடிநீர் தேவைக்காக, நிலுவை நீரை விடுவிக்க வேண்டும்’ என, தயாளகுமார் வலியுறுத்தினார். அதை பரிசீலித்த காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவின் தலைவர், தமிழகத்திற்கு இம்மாதம் இறுதி வரை நாள்தோறும், 1 டி.எம்.சி., நீர் திறக்க உத்தரவிட்டார்.

வெளிநாட்டில் நடைபெறும் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க தமிழக வீராங்கனைகளுக்கு ரூ.8 லட்சம் நிதியுதவி: அமைச்சர் உதயநிதி வழங்கினார்!

வெளிநாட்டில் நடைபெறும் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க தமிழக வீராங்கனைகளுக்கு ரூ.8 லட்சம் நிதியுதவி: அமைச்சர் உதயநிதி வழங்கினார்!

அமைச்சர் உதயநிதி : அமெரிக்காவின் கலிபோர்னியா நகரில் வரும் நவ.10 முதல்17-ம் தேதி வரை உலக கேரம் போட்டி நடைபெற உள்ளது, இந்த போட்டியில் தமிழகத்தின் சார்பில் கே.நாகஜோதி, எம்.காசிமா, வி.மித்ரா ஆகிய 3 வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர்.

இவர்களுடன் பயிற்றுநர் மரியா இருதயம் செல்கிறார். இவர்களுக்கான செலவின தொகையாக தலா ரூ.1.50லட்சத்துக்கான காசோலையை, தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை நிதியிலிருந்து விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சென்னை தலைமைச் செயலகத்தில் வழங்கினார்.

அதேபோல், நியூசிலாந்தில் ஜூலை 16 முதல் 19-ம் தேதிவரை நடைபெற உள்ள ஜூனியர் காமன்வெல்த் வாள்வீச்சு சாம்பியன்ஷிப் போட்டியில் ஜாய்ஸ் அஷிதா பங்கேற்கஉள்ளார். அவருக்கு தேவைப்படும் செலவின தொகை ரூ.2 லட்சத்துக்கான காசோலையையும் அமைச்சர் உதயநிதி வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

இந்நிகழ்வில், விளையாட்டுத் துறை செயலர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

எல்லோரையும் மிரட்டுவதுபோல அண்ணாமலை என்னை மிரட்ட முடியாது: செல்வப்பெருந்தகை!

எல்லோரையும் மிரட்டுவதுபோல அண்ணாமலை என்னை மிரட்ட முடியாது: செல்வப்பெருந்தகை!

காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்ட வீடியோவில் கூறியுள்ளதாவது:-

எல்லா வழக்குகளையும் பார்த்தவன்.

மடியில் கனம் இருந்தால்தான் வழியில் பயம் இருக்கும். எல்லோரையும் மிரட்டுவதுபோல என்னையும் அண்ணாமலை மிரட்டிக் கொண்டிருக்கிறார். எனது வழக்கின் தன்மை பற்றி அவருக்கு தெரியவில்லை. எங்கள் மீது வழக்கு பதிவு செய்தபோது ‘நீங்கள் சாதாரண நகர காவல்துறை, இதற்கு மேல் உயர் அதிகாரிகள், சிபிசிஐடி, சிபிஐ வலுவான அமைப்புகள் இருக்கிறது’ என சொல்லி வழக்கை சந்தித்தோம். அந்த வழக்கை சிபிஐ-க்கு மாற்றும்படி உயர் நீதிமன்றத்தில் அப்போதைய மூத்த வழக்கறிஞராக இருந்த எனது வழக்கறிஞர் சந்துருதான் வாதாடினார். உடனே நகர காவல்துறை சிபிஐ விசாரிக்க தேவையில்லை. நாங்களே வழக்கை வாபஸ்பெற்றுக் கொள்கிறோம். இல்லாவிட்டால் நீதிமன்றமே இந்த வழக்கை ரத்து செய்யலாம் என்று தெரிவித்தனர்.

அந்த வழக்கில் உயர் நீதிமன்ற உத்தரவை அண்ணாமலை படிக்க வேண்டும். இந்தியாவில் எங்கும் இதுபோல நடந்ததில்லை. வழக்கு போட்டது காவல்துறை. யார் மீது வழக்குப் பதியப்பட்டதோ அவரே சிபிஐ விசாரிக்கட்டும் என தெரிவித்தார். அவ்வாறு கூறியதும் வழக்கை காவல்துறை திரும்பப்பெற்றது. இந்த வழக்கின் சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை இதில் பதிவிடுகிறேன். அதை படித்து உண்மையை தெரிந்து கொண்டு அண்ணாமலையிடம் நண்பர்கள் கேளுங்கள். இவ்வாறு வீடியோவில் செல்வப்பெருந்தகை பேசியுள்ளார்.

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES