Tuesday , July 1 2025
Breaking News
Home / இந்தியா / பிரதமர் மோடி திறந்து வைத்த சத்ரபதி சிவாஜி சிலை… சுக்குநூறாய் விழுந்து சிதறியது!

பிரதமர் மோடி திறந்து வைத்த சத்ரபதி சிவாஜி சிலை… சுக்குநூறாய் விழுந்து சிதறியது!

பிரதமர் மோடி திறந்து வைத்த சத்ரபதி சிவாஜி சிலை... சுக்குநூறாய் விழுந்து சிதறியது!

மராட்டிய மாநிலம் சிந்துதுர்க் மாவட்டத்தில் பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்ட சத்ரபதி சிவாஜி சிலை சரிந்து விழுந்து சிதறியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மராட்டிய மாநிலம் சிந்துதுர்க் மாவட்டம் மால்வனில் உள்ள ராஜ்கோட் கோட்டையில் 35 அடி உயரத்தில் சத்ரபதி சிவாஜி மன்னரின் முழு உருவச்சிலை அமைக்கப்பட்டது. கடற்படை தினத்தையொட்டி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 4ம் தேதி இந்த சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

சத்ரபதி சிவாஜி கடற்படையை திறம்பட நிர்வகித்தவர். எனவே கடற்படை தினத்தில் அவரது நினைவை போற்றும் வகையில், இந்த சிலை திறந்து வைக்கப்பட்டது. இந்த சிலை மிகவும் கம்பீர தோற்றத்துடன் காட்சி அளித்து வந்தது.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக சிந்துதுர்க்கில் காற்றுடன் பலத்த மழை பெய்தது. நேற்று மதியம் 1 மணியளவில் ராஜ்கோட் கோட்டையில் பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்ட சத்ரபதி சிவாஜி சிலை திடீரென பீடத்தில் இருந்து அடியோடு சரிந்து விழுந்து துண்டு, துண்டாக சிதறியது. சிலை விழுந்ததில் அதன் சுற்றுச்சுவரும் சேதமடைந்தது.

தகவல் அறிந்து மாவட்ட நிர்வாக அதிகாரிகள், போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். சிலை விழுந்ததற்கான காரணம் குறித்து நிபுணர்கள் விசாரித்து வருகின்றனர். பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்ட சத்ரபதி சிவாஜி சிலை சரிந்து விழுந்த சம்பவம் மராட்டியத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சியினர் பா.ஜனதா மற்றும் ஆளும் கூட்டணியை கடுமையாக விமர்சித்துள்ளனர்.

Bala Trust

About Admin

Check Also

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டம், அரவக்குறிச்சி – ஆத்துமேடு ஸ்ரீ கள்ளிபழ சித்தர் மட சுவாமிகள் குரு பூஜை விழா அழைப்பிதழ்

நமசிவாய வாழ்க! நாதன்தாள் வாழ்க!கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டம், அரவக்குறிச்சி – ஆத்துமேடு ஸ்ரீ கள்ளிபழ சித்தர் மட சுவாமிகள் …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES