Thursday , December 12 2024
Breaking News
Home / செய்திகள் / சென்னையில் ஃபார்முலா 4 கார் பந்தயத்திற்கு எதிர்ப்பு! நாளை விசாரிக்கிறது சென்னை உயர்நீதிமன்றம்
MyHoster

சென்னையில் ஃபார்முலா 4 கார் பந்தயத்திற்கு எதிர்ப்பு! நாளை விசாரிக்கிறது சென்னை உயர்நீதிமன்றம்

சென்னையில் ஃபார்முலா 4 கார் பந்தயத்திற்கு எதிர்ப்பு! நாளை விசாரிக்கிறது சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: சென்னையில் ஆகஸ்ட் 31, செப்டம்பர் 1ம் தேதிகளில் ஃபார்முலா 4 கார் பந்தயம் நடத்த எதிர்ப்பு தெரிவித்த வழக்கை அவசரமாக விசாரிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது.

இதுதொடர்பான வழக்கை நாளை விசாரணைக்கு எடுப்பதாக தலைமை நீதிபதி அமர்வு ஒப்புதல் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் தனியார் அமைப்பு இணைந்து சென்னையில் ஃபார்முலா 4 கார் பந்தயம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற இருந்த நிலையில், மிக்ஜாம் புயல் காரணமாக கார் பந்தயம் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 1-ம் தேதிகளில் சென்னை தீவுத்திடலைச் சுற்றி 3.5 கிலோமீட்டர் தூரத்துக்கு ஃபார்முலா 4 கார் பந்தயம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. பந்தயத்திற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

மின்விளக்குகள் பொருத்துவது, பொதுமக்கள் போட்டியை 8,000 பேர் கண்டு ரசிக்க இருக்கைகள், பாதுகாப்பு தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் கார் பந்தயத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தாக்கல் செய்யப்பட உள்ள வழக்கை இன்று பிற்பகல் அவசர வழக்காக விசாரிக்க கோரி முறையீடு செய்யப்பட்டது.

இதைக் கேட்ட பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி பாலாஜி அமர்வு, இந்த மனுவை நாளை விசாரிக்க ஒப்புதல் தெரிவித்தது.

Bala Trust

About Admin

Check Also

அரவக்குறிச்சி ரோட்டரி கிளப் சார்பாக கரூர் விஷன் 2030 நிகழ்ச்சிக்கு வாழ்த்துக்கள்….

வணக்கம்..! அரவக்குறிச்சி ரோட்டரி கிளப் சார்பாக President செந்தில் விஷ்ணு ராம், CII அமைப்பு சார்ந்த சேர்மன், கோ சேர்மன், …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES