எந்த அலுவலகத்திற்கும் செல்ல வேண்டாம்.. ஆன்லைன் மூலம் கட்டட அனுமதி பெறலாம்.. தொடங்கி வைத்த ஸ்டாலின்
சென்னை: கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்த பட்ஜெட்டில் அறிவித்தபடி ஆன்லைனில் உடனடியாக கட்டிட அனுமதி பெறும் திட்டத்தை முதல்வர் மு.க.
ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். இதன்படி ஆன்லைன் மூலம் ஆன்லைனில் அளிக்கும் விவரத்தின் அடிப்படையில் அனுமதி உடனடியாக வழங்கப்படும். விண்ணப்பதாரர்கள் எந்த அலுவலகத்திற்கும் செல்ல வேண்டியது இல்லை.
தமிழ்நாட்டில் கட்டிடம் மற்றும் மனைப்பிரிவுகளுக்கான அனுமதியை உள்ளாட்சி அமைப்புகள், நகர ஊரமைப்பு இயக்ககம் , சிஎம்டிஏ எனப்படும் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் உள்ளிட்டவை வழங்கி வருகின்றன. இந்த நிலையில் தான், தற்போதைய சூழலுக்கு ஏற்ப அதாவது தொழில்நுட்ப வளர்சியின் படி கோப்புகளை அதிகளவில் குவிப்பதை தடுக்கும் நோக்கத்தில் அனைத்து வகையான செயல்பாடுகளும் ஆன்லைனில் மாற்றப்படுகின்றன.
சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தில் கட்டிட அனுமதிக்காக ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்டு, செயல்பாட்டில் இருக்கிறது. அதே போல உள்ளாட்சி அமைப்புகளிலும் ஆன்லைனில் அனுமதிக்காக விண்ணப்பிக்கும் நடைமுறை கொண்டு வரப்பட்டு இருக்கிறது. கடந்தாண்டு முதல் ஊராட்சிகளில் கட்டிட அனுமதிக்கு ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்கும் நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டு அமலில் உள்ளது.
அதேபோல, தமிழக அரசின் ஒருங்கிணைந்த வளர்ச்சி கட்டிட விதிகளின் படி, கட்டி முடிக்கப்பட்ட கட்டிடத்துக்கு பணி நிறைவு சான்றிதழ் பெற்ற பிறகுதான் மின்சாரம், குடிநீர், கழிவுநீர் இணைப்புகளை பெற முடியும் என்ற நிலை இருந்தது. இதில் தற்போது திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த திருத்தத்தின்படி, அதிகபட்சம் எட்டு வீடுகள் அல்லது 750 சதுர மீட்டருக்குள் உள்ள கட்டிடங்களுக்கு பணி நிறைவு சான்றிதழ் பெறுவது அவசியம் இல்லை.
அதேபோல உயரமில்லா கட்டிடங்களுக்கான அதிகபட்ச உயரம் 12 மீட்டரில் இருந்து 14 மீட்டராக உயர்த்தப்பட்டது. அது மட்டும் இன்றி , 300 சதுரமீட்டர் வரையும், உயரத்தில் 14 மீட்டருக்கு மிகாமலும் கட்டப்படும் கமர்ஷியல் கட்டிடங்களுக்கும் பணி நிறைவு சான்றிதழ் வேண்டாம் எனக் கூறப்பட்டது.
இந்த நிலையில் தான், கடந்த பட்ஜெட்டில் 2,500 சதுர அடி வரை கட்டப்படும் குடியிருப்பு கட்டுமானத்திற்கு கட்டிட அனுமதி தேவையில்லை என்றும் பணி முடிவு சான்று பெற தேவையில்லை என்ற அறிவிப்பும் வெளியானது. கடந்த பிப்ரவரி மாதம் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட இந்த திட்டத்தினை செயல்படுத்தும் விதமாக தமிழகத்தில் முதல் முறையாக கட்டிட அனுமதியை ஆன்லைனில் உடனடியாக வழங்கும் திட்டத்தை முதல்வர் முக ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார்.
‘www.onlineppa.tn.gov.in’ என்ற இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைன் மூலம் ஆன்லைனில் அளிக்கும் விவரத்தின் அடிப்படையில் அனுமதி உடனடியாக வழங்க்கப்படும். விண்ணப்பதாரர்கள் எந்த அலுவலகத்திற்கும் செல்ல வேண்டியது இல்லை.
நீட் தேர்வு மட்டுமல்ல அனைத்துத் தேர்வு முறைகளிலும் மாற்றம் தேவை: ராகுல் காந்தி வலியுறுத்தல்
டெல்லி: நீட் தேர்வு மட்டுமல்ல அனைத்துத் தேர்வு முறைகளிலும் மாற்றம் தேவை என ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.
நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக மக்களவையில் ஒன்றிய அரசுக்கு காங்கிரஸ், திமுக, சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சரமாரி கேள்வி எழுப்பினர். நீட் தேர்வு வினாத்தாள் கசிந்ததாக எந்த ஆதாரமும் இல்லை நீட் முறைகேடு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருவதால் அதன் முடிவுக்காக இருக்கிறோம் என அமைச்சர் தர்மேந்திர பிரதான் விளக்கம் விளக்கம் அளித்தார்.
அப்போது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி; தேர்வு முறைகேட்டுக்கு தீர்வு காண வேண்டியது அவசியம். இந்தியாவின் தேர்வு முறைகளிலேயே பெரிய பிரச்சனை இருப்பது அனைவருக்கும் வெட்ட வெளிச்சமாக தெரிகிறது. அமைப்பு ரீதியாக சிக்கல்கள் உள்ள நீட் தேர்வு முறையை எப்படி சரி செய்யப்போகிறீர்கள். ஒன்றிய கல்வி அமைச்சர் தன்னை தவிர மற்ற அனைவரையும் பொறுப்பாளியாக்க பார்க்கிறார். பணக்காரராக இருந்தால் தேர்வு முடிவுகளை சாதகமாக பெற்றுக்கொள்ள முடியும் என்று லட்சக்கணக்கானோர் நம்புகின்றனர்.
இந்திய தேர்வு முறையே மோசடி என்று பலர் நம்புகின்றனர். தேர்வுகளில் நடைபெறும் முறைகேடுகளுக்கு தீர்வு காண வேண்டியது அவசியம். நீட் தேர்வு மட்டுமல்ல அனைத்துத் தேர்வு முறைகளிலும் மாற்றம் தேவை என்று கூறினார்.
அரவக்குறிச்சி அருகே சாலையோரம் மரத்தில் கார் மோதியதில் தந்தை, மகள் உள்பட 3 பேர் பலி
அரவக்குறிச்சி அருகே திங்கள்கிழமை அதிகாலையில் சாலையோரம் மரத்தில் கார் மோதிய விபத்தில் தந்தை, மகள் உள்பட 3 பேர் பலியாகினர்.
ஈரோடு மாவட்டம் சூளை ஜி.கே.ஆர் நகரைச் சேர்ந்தவர் கிருஷ்ணகுமார்(42). இவர் தனது தனது மனைவி மோகனா (40 ), மாமியார் இந்திராணி( 67) மற்றும் மகள் வருணா(10 ), மகன் சுதர்சன் ( 15), ஆகியோருடன் கடந்த 20ஆம் தேதி ஈரோட்டில் இருந்து திருச்செந்தூர் கோயிலுக்கு சென்றுள்ளனர். பின்னர் அங்கு சுவாமி தரிசனம் செய்து விட்டு திங்கட்கிழமை அதிகாலை ஈரோடு நோக்கி வந்து கொண்டிருந்தனர்.
காரை கிருஷ்ணகுமார் ஓட்டி வந்தார். கார் கரூர்-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் அரவக்குறிச்சி அருகே ஆண்டிப்பட்டி கோட்டை என்ற இடத்தில் அதிகாலை 3.30மணியளவில் வந்து கொண்டிருந்தபோது திடீரென கார் நிலை தடுமாறி சாலையோரம் இருந்த மரத்தின் மீது மோதியது. இதில் கிருஷ்ண குமாரும் அவரது மகள் வருணா மற்றும் அவரது மாமியார் இந்திராணி ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
மேலும் கிருஷ்ண குமாரின் மனைவி மோகனா மற்றும் மகன் சுதர்சன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இது குறித்து தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு வந்த அரவக்குறிச்சி போலீசார், சடலங்களை மீட்டு உடற்கூராய்வுக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் படுகாயம் அடைந்த மோகனா மற்றும் சுதர்சன் ஆகியோரை கரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது தொடர்பாக வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோயிலுக்கு சென்று விட்டு ஊர் திரும்பிய போது நடந்த இந்த கோர விபத்தில் தந்தை, மகள் உட்பட 3 பேர் இறந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
இந்திய தேர்வு முறையே மிகப்பெரிய மோசடி: ராகுல் குற்றச்சாட்டு
புது தில்லி: பணமிருந்தால் தேர்வு முடிவுகளை விலைக்கு வாங்க முடியும் என்றும், இந்திய தேர்வு முறையே மிகப்பெரிய மோசடி எனவும் காங்கிரஸ் எம்.பி.ராகுல் கடும் விமர்சனம் செய்திருக்கிறார்.
மக்களவை இன்று காலை கூடியதும், நீட் விவகாரம் குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பினர்.
நீட் முறைகேடு விவகாரம் தொடர்பாக ராகுல் காந்தி மக்களவையில் கேள்வி எழுப்பினார். பணமிருந்தால், தேர்வு முடிவுகளை தங்களுக்கு சாதகமாக பெற்றுக்கொள்ள முடியும் என்று மக்கள் கூறுகிறார்கள். லட்சக்கணக்கான மாணவர்கள் நீட் தேர்வு முறைகேட்டினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்திய தேர்வு முறையே மிகப்பெரிய மோசடி என மக்களவையில் நீட் விவகாரம் குறித்து ராகுல் காந்தி காட்டமாகப் பேசினார்.
நமது தேர்வு முறையில் மிகப்பெரிய பிரச்னை உள்ளன என்றும் ராகுல் குற்றம்சாட்டினார்.
ஏர்டெல் விஸ்வரூபம்.. இனி மாதாந்திரம் ரூ.167 போதும்.. 1 வருட வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்கள்.. டேட்டா சலுகை!
ஏர்டெல் கஸ்டமர்களில் சிம் ஆக்டிவ் மற்றும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் சலுகையை மட்டும் எதிர்பார்க்கும் நபர்களுக்கு மாதத்துக்கு வெறும் ரூ.167 செலவில் 365 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கும் ப்ரீபெய்ட் திட்டம் களமிறங்கி இருக்கிறது.
அதேபோல 28 நாட்கள், 30 நாட்கள், 77 நாட்கள், 84 நாட்கள் என்று மலிவான விலைக்கு வாய்ஸ் கால்கள் திட்டங்கள் வருகின்றன. முற்றிலும் டேட்டாவே கிடையாது என்றும் சொல்ல முடியாது, தேவைக்கேற்ப டேட்டா சலுகையும் கொடுக்கப்படுகிறது. இந்த திட்டங்கள் குறித்த விவரம் இதோ.
ஏர்டெல் ரூ 199 திட்ட விவரங்கள் (Airtel Rs 199 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டமானது, அன்லிமிடெட் வாய்ஸ் கால் சலுகை கொண்ட பேசிக் திட்டமாகும். இந்த திட்டத்தில் 28 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது. இந்த வேலிடிட்டி நாட்களில் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்களை (Roaming Voice Calls) செய்து கொள்ளலாம்.
இதுபோக நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ் சலுகையையும் பெற்று கொள்ளலாம். டேட்டா சலுகையை பார்க்கையில், 28 நாட்களுக்கும் சேர்த்து 2 ஜிபி லம்ப்-சம் டேட்டா கிடைக்கிறது. இந்த டேட்டாவுக்கு பிறகு 1 எம்பிக்கு 50 பைசா கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. மேலும், விங்க் மியூசிக், ஹலோ டியூன்ஸ் சலுகைகள் வருகின்றன. நாளுக்கு ரூ.7 செலவில் இந்த திட்டம் கிடைக்கிறது.
ஏர்டெல் ரூ 219 திட்ட விவரங்கள் (Airtel Rs 219 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கு 30 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்களை செய்து கொள்ளலாம். 300 எஸ்எம்எஸ் சலுகை மற்றும் 3 ஜிபி லம்ப்-சம் டேட்டா சலுகை கிடைக்கிறது. இதுபோக ரூ.5 மதிப்பில் டாக்டைம் மற்றும் விங்க் மியூசிக், ஹலோ டியூன்ஸ் சலுகை வருகிறது.
ஏர்டெல் ரூ 489 திட்ட விவரங்கள் (Airtel Rs 489 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கு 77 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. இந்த நாட்களின் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் 600 எஸ்எம்எஸ் சலுகைகள் வருகிறது. அதேபோல 6 ஜிபி லம்ப்-சம் டேட்டா சலுகை கிடைக்கிறது. மேலும், அப்பல்லோ 24/7 சர்கிள் சந்தா, விங்க் மியூசிக், ஹலோ டியூன்ஸ் சலுகை கிடைக்கிறது.
ஏர்டெல் ரூ 509 திட்ட விவரங்கள் (Airtel Rs 509 Plan Details): இந்த திட்டத்துக்கு 84 நாட்கள் வேலிடிட்டியை பெற்று கொள்ளலாம். இந்த நாட்களில் முந்தைய திட்டங்களை போலவே அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் சலுகை வருகிறது. ஆனால், இந்த திட்டத்தில் நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்களை செய்து கொள்ளலாம்.
இதுபோக 6 ஜிபி லம்ப்-சம் டேட்டா சலுகை கொடுக்கப்படுகிறது. அதேபோல மூன்று மாதங்களுக்கான அப்பல்லோ 24/7 சர்கிள் சந்தா, விங்க் மியூசிக், ஹலோ டியூன்ஸ் சலுகை வருகிறது. இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் 6 ஜிபி டேட்டாவுக்கு பிறகு 1 எம்பிக்கு 50 பைசா கட்டணமாக செலுத்த வேண்டும். மாதத்துக்கு ரூ.170 செலவில் இந்த திட்டம் கிடைக்கிறது.
ஏர்டெல் ரூ 1999 திட்ட விவரங்கள் (Airtel Rs 1999 Plan Details): இந்த வருடாந்திர ப்ரீபெய்ட் திட்டத்தில் இல்லாத சலுகைகளே கிடையாது. டேட்டாவை தவிர மற்ற சலுகைகள் வாரி வழங்கப்பட்டுள்ளன. அதாவது, 365 நாட்களுக்கும் அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால் சலுகை கிடைக்கிறது. அதேபோல சிம் ஆக்டிவாக இருக்கும்.
இதுபோக நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்கள் வீதம் கஸ்டமர்கள் அனுப்பி கொள்ளலாம். மொத்தமாக 24 ஜிபி லம்ப்-சம் டேட்டா சலுகை கிடைக்கிறது. முந்தைய திட்டங்களை போலவே ப்ரீ போஸ்ட் டேட்டா சலுகை இதிலும் கிடையாது. அப்பல்லோ 24/7 சர்கிள் சந்தா, விங்க் மியூசிக், ஹலோ டியூன்ஸ் சலுகை வருகிறது. மாதத்துக்கு ரூ.167 செலவில் கிடைக்கிறது.
ஐசியு தீவிர பிரிவில் செந்தில் பாலாஜி… இன்று முக்கிய டெஸ்ட்..!
கடந்த ஆண்டு ஜூன் மாதம் சட்ட விரோத பணப் பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை கைது செய்தது. சிறையில் இருந்த செந்தில் பாலாஜிக்கு நேற்று மதிய உணவு சாப்பிட்ட பிறகு திடீரென நெஞ்சு வலி மற்றும் வாந்தி எடுத்தார்.
இதனையடுத்து, உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் ராயபுரத்தில் உள்ள ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் ஓமந்தூரர் மருத்துவமனைக்கு அழைத்து செல்ல பரிந்துரைத்தனர்.
சென்னை புழல் சிறையில் நேற்று மதிய உணவு சாப்பிட்ட பிறகு திடீரென நெஞ்சு வலி மற்றும் வாந்தி ஏற்பட்டது. இதனையடுத்து, உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் ராயபுரத்தில் உள்ள ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் ஓமந்தூரர் மருத்துவமனைக்கு அழைத்து செல்ல பரிந்துரைத்தனர்.
இதனையடுத்து ஸ்ட்ரெச்சரில் படுக்க வைத்து ஆம்புலன்ஸில் ஏற்றி ஓமந்தூரார் மருத்துவமனைக்கு செந்தில்பாலாஜி அழைத்துவரப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட செந்தில்பாலாஜிக்கு மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், இசிஜி உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, மருத்துவர்களின் நேரடிக் கண்காணிப்பில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மூத்த மருத்துவர்கள் முன்னிலையில் இன்று காலை செந்தில் பாலாஜிக்கு இதயம் மற்றும் நுரையீரல் தொடர்பான பரிசோதனைகள் செய்யப்பட உள்ளது எனவும், பரிசோதனை முடிவின் அடிப்படையில் மேற்கொண்டு சிகிச்சை அளிக்க முடிவு செய்துள்ளதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகின்றன.
செந்தில் பாலாஜி ஐசியுவில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், மருத்துவமனை வளாகம் முழுவதும் காவல் துறையினரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 2026 ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் கட்சியில் 100 MLA இருக்க வேண்டும் – ரூபி மனோகரன்
திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் மண்டபத்தில் திருச்சி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி , செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை தலைமை தாங்கினார்.
மேலும் இந்த நிகழ்வில் முன்னாள் எம்.பி. திருநாவுக்கரசர், திருச்சி வேலுசாமி, சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரன், திருச்சி மாநகர மாவட்ட தலைவர் ரெக்ஸ், தமிழ்நாடு இளைஞர் அணி காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் விச்சு. லெனின் பிரசாத் மற்றும் மாவட்ட தலைவர்கள், நகர, பேரூராட்சி, வட்டம், பகுதி, நிர்வாகிகள், தொண்டர்கள் என 500க்கும் மேற்பட்டோர் ஆலோசனை கட்டத்தில் கலந்துக்கொண்டனர்
சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரன் மேடை பேச்சு..
திருச்சியில் ரொம்ப காலத்திற்குப் பிறகு காங்கிரஸ் கட்சி எழுச்சி பெற்றுள்ளது. எப்போதுமே உண்மையாக உழைத்தால், உழைப்பவர்களுக்கு காங்கிரஸ் கட்சியில் இடம் உண்டு.
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில் 100 எம்எல்ஏக்கள் இருக்க வேண்டும்
தற்போது காங்கிரஸ் கட்சியில் 18 எம்.எல்.ஏ உள்ளனர். ஆனால் வரும் 2026 ஆம் ஆண்டு 100 எம்.எல்.ஏக்கள் இருக்க வேண்டும். அதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைந்து உழைக்க வேண்டும். கட்சியில் சிலருக்கு கருத்து வேறுபாடுகள் நிலவுவது வழக்கம்தான். ஆனால் அவற்றை முற்றிலும் அகற்றிவிட்டு அனைவரும் ஒன்றிணைந்து செயலாற்ற வேண்டும். ஒற்றுமையாக இருந்து செயல்பட்டால் மட்டுமே தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி மாபெரும் எழுச்சி பெறும். அண்ணாமலை IPS படிப்பிற்கும், அவருக்கும் தகுதி இல்லாத போன்று நடந்து கொள்கிறார். தமிழ்நாட்டில் எந்த காலத்திலும் பாஜக கால் ஊன்ற முடியாது. தமிழ்நாட்டு மக்களிடையே மோடியின் வித்தைகள் செல்லாது. தமிழ்நாட்டு மக்கள் முட்டாள்கள் அல்ல, எதையும் சிந்தித்து செயல்படுபவர்கள். ஒருபோதும் பாஜகவிற்கு தமிழ்நாட்டில் இடம் இல்லை என தெரிவித்தார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் உண்மையாக உழைக்க வேண்டும். நமது கட்சியினை பலப்படுத்த அனைத்து பணிகளையும் மேற்கொள்ள வேண்டும். நமது எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அவர்களின் பிரச்சார சுற்றுப்பயணம் மக்கள் மத்தியில் பெரும் எழுச்சியை ஏற்படுத்தி உள்ளது. நமது கட்சியில் பல்வேறு கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அவற்றை உதறிவிட்டு அனைவரும் ஒன்றிணைந்து செயலாற்ற வேண்டும்.
தமிழ்நாட்டில் காங்கிரஸ் கமிட்டி மாபெரும் முதன்மை இயக்கமாக திகழ அனைவரும் பாடுபட வேண்டும். தமிழ்நாட்டில் காமராஜர் அவர்களின் ஆட்சி காலத்தில் பல்வேறு திட்ட பணிகள் மக்களுக்காக செயல்படுத்தப்பட்டது. அதுபோன்று மீண்டும் காமராஜர் ஆட்சி அமைவதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைந்து பணிகளை தீவிரப்படுத்தி செயலாற்ற வேண்டும்.
இனிவரும் காலங்களில் நடைபெற உள்ள அனைத்து தேர்தலிலும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பல்வேறு பதவிகளில் பொறுப்பேற்க வேண்டும் அதற்கு ஒற்றுமையாக செயலாற்ற வேண்டும் என்பது முக்கியம் ஆகும் என்றார்.
45ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் திமுக இளைஞரணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
சென்னை: 45ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் திமுக இளைஞரணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவு: 45ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது திமுக இளைஞரணி. இளைஞரணிப் படையைச் சிறப்பாக வழிநடத்திச் செல்லும் தம்பி உதயநிதி ஸ்டாலினுக்கு பாராட்டுக்கள்! வாழ்த்துக்கள்!
கழக கொள்கைகளையும் வரலாற்றையும் இன்றைய இளைஞர்களுக்கு ஏற்றாற்போல் எடுத்துச்சென்று, அவர்களை அரசியல் விழிப்புணர்வும் கொள்கைத் தெளிவும் பெற்றவர்களாக வார்த்தெடுப்பீர்கள் எனக் கழகத் தலைவராக நம்புகிறேன். இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சர்வதேச நிலவு தினத்தை முன்னிட்டு ஐக்கிய நாடுகள் சபை தபால் தலைகளை வெளியிடுகிறது
ஜூலை 20, ஜூலை 20 அன்று சர்வதேச நிலவு தினத்தைக் கொண்டாடுவதற்காக, ஐக்கிய நாடுகள் சபையின் (UN) அஞ்சல் நிர்வாகம், சீனாவின் Chang’e திட்டம் உட்பட, சந்திர பயணங்களின் படங்களைக் கொண்ட ஆறு அஞ்சல் தலைகள் மற்றும் மூன்று நினைவுத் தாள்களை வெளியிட்டுள்ளது.
முத்திரைகள் மற்றும் நினைவுப் பரிசுத் தாள்கள் சீனாவின் Chang’e 4 மற்றும் Chang’e 5 பயணங்களையும், அமெரிக்கா, தென் கொரியா மற்றும் இந்தியா உள்ளிட்ட பிற நாடுகளின் சந்திர ஆய்வுப் பயணங்களையும் காட்சிப்படுத்துகின்றன.
வியன்னாவை தளமாகக் கொண்ட ஐக்கிய நாடுகளின் விண்வெளி விவகாரங்களுக்கான அலுவலகத்தின் இயக்குனர் ஆர்த்தி ஹோல்லா-மைனி, சந்திர ஆய்வில் சர்வதேச ஆர்வம் அதிகரித்து வருவதைக் குறிப்பிட்டார். புதிய முத்திரைகள் சந்திர பயணங்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த உதவும் என்று கூறிய அவர், எதிர்கால முயற்சிகள் குறித்த அத்தியாவசிய உரையாடலை மேம்படுத்த ஐ.நா. தனது தனித்துவமான கூட்டிணைக்கும் சக்தியைப் பயன்படுத்தும் என்றும் வலியுறுத்தினார்.
முத்திரைகள் மற்றும் நினைவுப் பரிசுத் தாள்கள் நியூயார்க், ஜெனிவா மற்றும் வியன்னாவில் உள்ள ஐநா தலைமையகத்திலும், ஐநா இணையதளத்திலும் வாங்குவதற்குக் கிடைக்கும்.
2021 ஆம் ஆண்டில், ஐநா பொதுச் சபை, அப்பல்லோ 11 பயணத்தின் போது நிலவில் முதல் மனிதன் தரையிறங்கியதன் நினைவாக ஜூலை 20 ஆம் தேதியை சர்வதேச நிலவு தினமாக நியமித்தது.
மறுப்பு: இந்த இடுகை உரையில் எந்த மாற்றமும் இல்லாமல் ஒரு ஏஜென்சி ஊட்டத்திலிருந்து தானாக வெளியிடப்பட்டது மற்றும் எடிட்டரால் மதிப்பாய்வு செய்யப்படவில்லை