Thursday , December 12 2024
Breaking News
Home / செய்திகள் (page 73)

செய்திகள்

All News

பாஜக மதுரை மாவட்ட துணைத்தலைவர் ஜெயவேல் அதிமுகவில் இணைந்தார்

பாஜக மதுரை மாவட்ட துணைத்தலைவர் ஜெயவேல் அதிமுகவில் இணைந்தார்

மதுரை,செப்.22

பாஜக மதுரை மாநகர் மாவட்ட துணைத்தலைவர் ஜெயவேல் மற்றும் இளைஞர் அணி பாரி உள்பட ஏராளமானோர் அக்கட்சியில் இருந்து விலகி முன்னாள் அமைச்சர் செல்லூர் கே ராஜூ எம்எல்ஏ முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். மேலும் சமீபத்தில் அதிமுகவில் இணைந்த டாக்டர் வி.பி.ஆர் செல்வகுமார் ஏற்பாட்டில் விவேக் விஷ்வா, முருகேசன் உள்பட 10க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் தங்களை இணைத்து கொண்டனர். இந்நிகழ்வின்போது மாநகர் மாவட்ட துணைச் செயலாளர் வில்லாபுரம் ராஜா, அனைத்துலக எம்ஜிஆர் மன்ற செயலாளர் எம்.எஸ் பாண்டியன், அவைத்தலைவர் அண்ணாதுரை, மாவட்ட பொருளாளர் பா குமார், முன்னாள் எம்.எல்.ஏ டாக்டர் சரவணன், முன்னாள் மேயர் திரவியம் ஆகியோர் உடன் இருந்தனர்.

மதுரையில் விஸ்வகர்மா யோஜனா திட்ட தொடக்க விழா: மத்திய அமைச்சர் சிங் பாகேல் மற்றும் எம்.எஸ்.எம்.இ சேர்மன் முத்துராமன் பங்கேற்பு.!

மதுரையில் விஸ்வகர்மா யோஜனா திட்ட தொடக்க விழா: மத்திய அமைச்சர் சிங் பாகேல் மற்றும் எம்.எஸ்.எம்.இ சேர்மன் டாக்டர் முத்துராமன் ஆகியோர் பங்கேற்று சிறப்பித்தனர்.

விஸ்வகர்மா ஜெயந்தியை முன்னிட்டு, விஸ்வகர்மா யோஜனா என்ற திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். பிரதான் மந்திரி விஸ்வகர்மா யோஜனாவைத் தொடங்குவதற்கு முன், துவாரகாவில் உள்ள இந்திய சர்வதேச மாநாடு மற்றும் கண்காட்சி மையத்தில் விஸ்வகர்மா பகவானுக்கு பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இந்த நிகழ்ச்சியின் போது, காலணித் தொழிலுடன் தொடர்புடைய கைவினைக் கலைஞர்களை பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.

நாட்டின் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குவதும் அவர்களின் கைவினைத்திறனை மேம்படுத்துவதும் இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம் ஆகும்.

கிராமப்புறங்களில் உள்ள கைவினைக் கலைஞர்கள் பிரதான் மந்திரி விஸ்வகர்மா யோஜனா திட்டத்தின் பலனைப் பெறலாம். தற்போது 18 வகையான தொழில்கள் இத்திட்டத்தின் கீழ் சேர்க்கப்பட்டுள்ளன.

மதுரையில் இந்த திட்டத்தின் தொடக்க விழா சிக்கந்தர் சாவடியில் உள்ள வணிக வளாகத்தில் நடைபெற்றது.
இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக மத்திய சுகாதார துறை அமைச்சர் சிங் பாகேல் கலந்து கொண்டு சிறப்பித்தார். எம்.எஸ்.எம்.இ அகில இந்திய சேர்மன் டாக்டர் முத்துராமன் மற்றும் காந்தி எம்.எல்.ஏ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்நிகழ்வில் எம்.எஸ்.எம்.இ தமிழ்நாடு பி.ஆர்.ஓ மாறன் உள்பட பலர் பங்கேற்றனர்.

கட்சி நிர்வாகிக்கு நிவாரண தொகை வழங்கிய முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ

இருசக்கர வாகன விபத்தில் காயமடைந்த 88-வது வார்டு அதிமுக பிரதிநிதி கருப்புசாமிக்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ அவர்கள் 10.000 ரூபாயை நிவாரணமாக வழங்கினார்.

இதற்கான ஏற்பாடுகளை அண்ணா தொழிற்சங்க மாவட்ட துணைத் தலைவர் அனுப்பானடி பாலகுமார் செய்திருந்தார்.

இந்நிகழ்வில் மாநகர் மாவட்ட துணைச் செயலாளர் வில்லாபுரம் ராஜா, அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் சக்தி விநாயகர் பாண்டியன், பகுதி செயலாளர் கறிக்கடை முத்துகிருஷ்ணன், கவுன்சிலர் பிரேமா டிமிட் ராவ், வட்டக் கழகச் செயலாளர்கள் ஜி மணிகண்டன், கண்ணன், ஏ.கே.சுந்தர் மற்றும் அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் விஜயபாண்டியன், ராஜசேகர் மற்றும் வழக்கறிஞர் முருகராஜா, பாலமுருகன், பிரான்சிஸ், லட்சுமணன், பாண்டிச்செல்வி உள்பட மகளிரணியினர் பலர் கலந்து கொண்டனர்

இளைஞர் குரல் செய்திகளுக்காக மதுரை செய்தியாளர் கனகராஜ்….

தியாகி இரட்டை மலை சீனிவாசன் மற்றும் தியாகி இம்மானுவேல் சேகரன் படத்திற்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மாலை அணிவித்து மரியாதை.!

தியாகி இரட்டை மலை சீனிவாசன் மற்றும் தியாகி இம்மானுவேல் சேகரன் ஆகியோர் நினைவு தினத்தை முன்னிட்டு, மதுரை அனுப்பானடியில் உள்ள அவரது படத்திற்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்விற்கு அண்ணா தொழிற்சங்க மாவட்ட துணைத் தலைவர் அனுப்பானடி பாலகுமார் தலைமை வகித்தார்.

இந்நிகழ்வில் மாநகர் மாவட்ட துணைச் செயலாளர் வில்லாபுரம் ராஜா, அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் சக்தி விநாயகர் பாண்டியன், பகுதி செயலாளர் கறிக்கடை முத்துகிருஷ்ணன், கவுன்சிலர் பிரேமா டிமிட் ராவ், வட்டக் கழகச் செயலாளர்கள் ஜி மணிகண்டன், கண்ணன், ஏ.கே.சுந்தர் மற்றும் அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் விஜயபாண்டியன், ராஜசேகர் மற்றும் வழக்கறிஞர் முருகராஜா, பாலமுருகன், பிரான்சிஸ், லட்சுமணன், பாண்டிச்செல்வி உள்பட மகளிரணியினர் பலர் கலந்து கொண்டனர்.

இளைஞர் குரல் செய்திகளுக்காக மதுரை செய்தியாளர் கனகராஜ்

மதுரை கோசாகுளத்தில் வெல்கம் கஃபே திறப்பு விழா

மதுரை கோசாகுளத்தில் வெல்கம் கஃபே திறப்பு விழா நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தமிழ்நாடு யாதவ மகாசபை மாநில பொதுச்செயலாளர் வேல்மனோகரன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

விழாவிற்கு வருகை தந்தவர்களை வெல்கம் கஃபே நிறுவனர் சங்கர் மற்றும் குடும்பத்தினர் வரவேற்றனர். இந்நிகழ்வில் முக்கிய பிரமுகர்கள், உறவினர்கள், நண்பர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இளைஞர் குரல் செய்திகளுக்காக மதுரை செய்தியாளர் கனகராஜ்

தமிழ்நாடு நகராட்சி மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஒருங்கிணைப்பு கூட்டம்

தமிழ்நாடு நகராட்சி மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஒருங்கிணைப்பு கூட்டம் மதுரை மேலப்பெருமாள் மேஸ்திரி வீதியில் உள்ள தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க கட்டிடத்தில் நடைபெற்றது.

மாநில ஒருங்கிணைப்பாளர்
முருகானந்தம்
மாநில ஒருங்கிணைப்பாளர்கள் , ஐவன்,கே.டி.துரைக்கண்ணன்,பஞ்சவர்ணம், சரவணன், செந்தில்குமார்,
மோகன்,பிரபாகரன் மற்றும் மாநில செய்தி தொடர்பாளர் தாமோதரன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தமிழ்நாடு நகராட்சி மாநகராட்சி அலுவலர் சங்கத்தின் மாநில நிர்வாகிகள் சி.எம்.மகுடீஸ்வரன்,
ஆர்.குமரவேல், சக்திவேல்,
செந்தில்குமார்,
மதிவாணன், உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட நகராட்சி மாநகராட்சி ஊழியர்கள் பங்கேற்றனர்.

பணியிட மாறுதல்களை கலந்தாய்வு மூலம் மேற்கொள்ளப்பட வேண்டும். அனைவருக்கும் பழைய ஓய்வூதிய திட்டம் வழங்கிட வேண்டும்.
எல்லை விரிவாக்க பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும். செயல் திறனற்ற பணியாளர்களுக்கு ஊதிய விகிதம் 5200-20200+1900 வழங்கிட வேண்டும்.

அலுவலக நேரத்தில் ஆய்வு கூட்டங்களை நடத்திட வேண்டும். விடுமுறை நாட்களில் கூட்டம் நடத்துவதை கைவிட வேண்டும். அரசாணை எண் 152 மற்றும் அரசாணை எண் 10ல் விடுபட்ட பணியிடங்களை வழங்கிட வேண்டும்.

நகராட்சி மாநகராட்சி ஊழியர்களுக்கு கொரோனா ஊக்க ஊதியம் வழங்கிட வேண்டும். 1.101996க்கு முன்பாக பணியில் சேர்ந்த தினக்கூலி பணியாளர்கள் அனைவருக்கும் பழைய ஓய்வூதிய திட்டம் வழங்கிட வேண்டும்.
அலுவலக உதவியாளர்கள், குடிநீர் பிரிவு ஊழியர்கள், செயல் திறனற்ற பணியாளர்களுக்கு கல்வித் தகுதி அடிப்படையில் பணி மூப்பு அடிப்படையில் பதவி உயர்வு வழங்கிட வேண்டும்.

நகராட்சி தரத்திற்கு கேற்றார் போல் வழங்கப்பட்டுள்ள வருவாய் உதவியாளர் பணியிடங்களை வரி விதிப்பு எண்கள் எண்ணிக்கைகளின் அடிப்படையில் நகராட்சி மாநகராட்சிகளில் வருவாய் உதவியாளர் பணியிடங்களை தோற்றுவிக்கப்பட வேண்டும்.
பணி ஓய்வு பெறும் நாளில் பணி பயன்களை வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி

(05.10.2023) அன்று ஒரு நாள் தற்செயல் விடுப்பு போராட்டமும்,
( 17.10.2023) அன்று மண்டல அளவில் உண்ணாவிரதமும்
( 15.11.2023) அன்று மாநில அளவில் காத்திருப்பு போராட்டம் நகராட்சி நிர்வாக இயக்குநர் அலுவலகம் முன்பாக நடத்துவது எனவும்,
20.9.2023 அன்று மாண்புமிகு நகராட்சி நிர்வாக துறை அமைச்சர், நகராட்சி நிர்வாக இயக்குனர், மற்றும் அரசு செயலாளர் அவர்களை ஒருங்கிணைப்புக் குழுவின் சார்பில் நேரில் சந்தித்து கோரிக்கைகளை வலியுறுத்துவது என முடிவெடுக்கப்பட்டது.

மதுரையில் தமுமுக சுற்றுச்சூழல் அணியின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்.!

மதுரையில் தமுமுக சுற்றுச்சூழல் அணியின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

மதுரை,செப்.10-

மதுரையில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சுற்றுச்சூழல் அணியின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தெற்கு மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு சுற்றுச்சூழல் அணியின் மாநில செயலாளர் நைனார் முஹம்மது தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் முகமது பிலால் இறைவசனம் ஓதினார்.மாநில பொருளாளர் காஜா வரவேற்புரை நிகழ்த்தினார்.

தமுமுக தலைமை நிர்வாகக் குழு உறுப்பினர் முகமது கௌஸ், தமுமுக மாநில துணைப் பொதுச் செயலாளர் மைதீன் சேட்கான், மமக மாநில அமைப்பு செயலாளர் காதர் மைதீன், மாநில துணைச் செயலாளர் சாகுல் ஹமீது,தெற்கு மாவட்ட தலைவர் ஷேக் இப்ராஹிம், வடக்கு மாவட்ட தலைவர் சீனி அகமது ஆகியோர் கருத்துரை வழங்கினர்.

தலைமை பிரதிநிதி ஹாரூன் ரசீது சுற்றுச்சூழல் அணியின் அவசியத்தை பற்றி எடுத்துரைத்தார். இந்நிகழ்வில் தெற்கு வடக்கு மாவட்ட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியின் முடிவில் தெற்கு மாவட்ட தலைவர் ஷேக் இப்ராஹிம் நன்றியுரை கூறினார்.

இளைஞர் குரல் செய்திகளுக்காக மதுரை செய்தியாளர் கனகராஜ்

மதுரையில் டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனையின் தேசிய கண் தான விழிப்புணர்வு பேரணி

மதுரையில் டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனையின் தேசிய கண்தான விழிப்புணர்வு பேரணி

மதுரை ஆரப்பாளையம் பகுதியில்
உலக தரம் வாய்ந்த டாக்டர். அகர்வால்ஸ் கண் மருத்துவமனை மற்றும் அண்ணா ஆப்டோமெட்ரி கல்லுரி இணைந்து நடத்திய தேசிய கண்தான
விழிப்புணர்வு பேரணியானது மருத்துவமனை வளாகத்தில் தொடங்கி பைபாஸ் சாலை வரை நடைபெற்றது.

இவ்விழாவில் தலைமை விருந்தினராக டாக்டர். பத்திரிநாராயணன் தலைமை மருத்துவ அதிகாரி அவர்கள்
பங்குபெற்று பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இந்நிகழ்வில் அண்ணா காலேஜ் நிறுவனர் அண்ணாத்துரை, மண்டல பொது மேலாளர் ஸ்ரீனிவாசன், கிளை மேலாள‌ர் இராஜபாண்டியன், டாக்டர். அகர்வால்ஸ் கண் மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் அண்ணா ஆப்டோ மெட்ரிக் கல்லுரி மாணவர்கள் 150க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தேசிய கண்தான விழிப்புணர்வு பேரணியை சிறப்பித்தனர்.

இளைஞர் குரல் செய்திகளுக்காக மதுரை செய்தியாளர் கனகராஜ்

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES