முதலீடுகளை ஈர்க்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (27.08.2024) இரவு சென்னையில் இருந்து விமானம் மூலம் அமெரிக்கா செல்கிறார்.அதாவது தமிழகத்திற்கு பல்வேறு தொழில் முதலீடுகளை ஈர்க்க முதல்வர் மு.க.ஸ்டாலின் 17 நாட்கள் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இந்த பயணத்தின் போது அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ, சிகாகோவில் உள்ள பல முக்கிய நிறுவனங்களின் தொழிலதிபர்களைச் சந்திக்க உள்ளார். அப்போது முதல்வரின் தலைமையில் முன்னணி நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன. இந்நிலையில் திமுக தலைவரும், …
Read More »மருத்துவராகும் மாற்றுத்திறனாளி மாணவர் – நீட் தடையை தாண்டிய கனவை நிறைவேற்றிய திராவிட மாடல் அரசு!
சிவகங்கை மாவட்டம்: சாக்கோட்டை அருகே கமலை என்ற கிராமம் உள்ளது. இங்கு பெரியசாமி – விஜயா தம்பதி தனது 17 வயது மகன் நாகராஜுடன் வசித்து வருகின்றனர். தாய், தந்தை இருவரும் கூலித் தொழிலாளியாக இருக்கின்றனர். மாற்றுத்திறனாளியான நாகராஜ், அங்குள்ள ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் 5-ம் வகுப்பு வரை படித்தார். பின்னர் அதே பகுதியில் உள்ள பீர்க்கலைக்காடு அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் …
Read More »சென்னையில் ஃபார்முலா 4 கார் பந்தயத்திற்கு எதிர்ப்பு! நாளை விசாரிக்கிறது சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை: சென்னையில் ஆகஸ்ட் 31, செப்டம்பர் 1ம் தேதிகளில் ஃபார்முலா 4 கார் பந்தயம் நடத்த எதிர்ப்பு தெரிவித்த வழக்கை அவசரமாக விசாரிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. இதுதொடர்பான வழக்கை நாளை விசாரணைக்கு எடுப்பதாக தலைமை நீதிபதி அமர்வு ஒப்புதல் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் தனியார் அமைப்பு இணைந்து சென்னையில் ஃபார்முலா 4 கார் பந்தயம் நடத்த முடிவு செய்யப்பட்டது. கடந்த …
Read More »உடனடியாக மக்கள் தொகை மற்றும் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டுமென்று தமிழ்நாடு காங்கிரஸ்…
கடந்த 2011 ஆம் ஆண்டு காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் மக்கள் தொகை கணக்கெடுப்போடு சாதி வாரி கணக்கெடுப்பும் எடுக்கப்பட்டது. இதன்மூலம் சமூக, பொருளாதார சாதி வாரி கணக்கெடுப்பு எடுக்கப்பட்டு அதன் அறிக்கை ஒன்றிய அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது. பா.ஜ.க. ஆட்சி அமைந்த பிறகு அந்த கணக்கெடுப்பு மீது எந்த முடிவும் எடுக்கப்படாமல் 2021 இல் ஒன்றிய அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் 2011 இல் எடுத்த சாதி வாரி கணக்கெடுப்பை …
Read More »அரசு உயர்நிலைப்பள்ளியில் கலைஞரின் வரும் முன் காப்போம் திட்டத்தின் கீழ் சிறப்பு மருத்துவ முகாம்
திருப்பெரும்புதூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியம், படப்பை ஊராட்சியில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை சார்பில் படப்பை அரசு உயர்நிலைப்பள்ளியில் கலைஞரின் வரும் முன் காப்போம் திட்டத்தின் கீழ் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. சிறப்பாக பணியாற்றி ஆரம்ப சுகாதார மருத்துவர்கள், ஊழியர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. கர்ப்பிணி தாய்மார்களுக்கு நலதிட்டஉதவிகள் வழங்கப்பட்டது. சிறப்பு மருத்துவ முகாமில் காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி குழுத்தலைவர் திரு.படப்பை ஆ.மனோகரன் …
Read More »“ஆன்மிக வரலாற்றில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு இடம்பெறும்” – முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
பழநி: ‘ஆன்மிக வரலாற்றில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு இடம்பெறும்’ என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பழநியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு இன்று (ஆக.24) காலை தொடங்கியது. இதில் காணொலி மூலம் வாழ்த்துரை வழங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘கோயில்களை பார்த்துக்கொள்ளக் கூறி அமைச்சர் சேகர்பாபுவிடம் வழங்கினோம். ஆனால், அவர் கோயில்களிலேயே குடியிருக்கும் அமைச்சராக இருந்து வருகிறார்’ என்று புகழாரம் சூட்டினார். தமிழ்க்கடவுளான முருகப் பெருமானின் …
Read More »அதானியின் பங்குச் சந்தை மோசடிகள் குறித்து ஹிண்டன்பர்க் அளித்த அறிக்கையின் அடிப்படையில் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை கோரியும், சாதி வாரி கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வலியுறுத்தியும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. கு. செல்வப்பெருந்தகை, எம்.எல்.ஏ., அவர்கள் தலைமையில் சென்னை நுங்கம்பாக்கம், சாஸ்திரி பவனில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு எதிரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர்கள், முன்னாள் மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற காங்கிரஸ் இந்நாள் – முன்னாள் உறுப்பினர்கள், மாநில காங்கிரஸ் நிர்வாகிகள், மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் மற்றும் சர்க்கிள் ஃ வட்டார நிர்வாகிகள், சென்னை மாமன்ற காங்கிரஸ் உறுப்பினர்கள், முன்னணி அமைப்புகள், துணை அமைப்புகள், இதர துறைகள் மற்றும் பிரிவுகளின் தலைவர்கள் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் பெருமளவில் பங்கேற்றனர்.
Read More »அதானியின் பங்குச் சந்தை மோசடிகள் குறித்து அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு எதிரில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி நிர்வரிகளுடன் ஆர்ப்பாட்டம்…
அதானியின் பங்குச் சந்தை மோசடிகள் குறித்து ஹிண்டன்பர்க் அளித்த அறிக்கையின் அடிப்படையில் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை கோரியும், சாதி வாரி கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வலியுறுத்தியும் எனது தலைமையில் இன்று (22.8.2024) மாலை சென்னை நுங்கம்பாக்கம், சாஸ்திரி பவனில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு எதிரில் நடைபெறவுள்ள நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி நிர்வரிகளுடன் ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடத்தை பார்வையிட்டு, பாதுகாப்பு அதிகாரிகளுடன் ஆலோசனை செய்தேன்.
Read More »கரும்பு விவசாயிகள் சமூதாய நலக்கூடம் விழுப்புரம் மத்தி மற்றும் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகளின் நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்கள் கலந்தாய்வுக் கூட்டம்…
விழுப்புரம், கரும்பு விவசாயிகள் சமூதாய நலக்கூடம் விழுப்புரம் மத்தி மற்றும் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகளின் நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்கள் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு காங்கிரஸ் பேரியக்கத்தின் கட்டமைப்பு மற்றும் வளர்ச்சி குறித்து விரிவாக ஆலோசனை செய்தோம். விழாவில் விழுப்புரம் மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகிகள் அந்த கட்சியிலிருந்து விலகி, காங்கிரஸ் பேரியக்கத்தில் எனது முன்னிலையில் தங்களை இணைத்துக் கொண்டார்கள். நிகழ்ச்சியில் கடலூர் …
Read More »அதானி + செபி இணைந்து செய்துள்ள பங்குச்சந்தை ஊழலுக்கு கண்டன ஆர்ப்பாட்டம்…
அதானி + செபி இணைந்து செய்துள்ள பங்குச்சந்தை ஊழலுக்கு நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை கோரியும், நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பை வலியுறுத்தியும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித்தலைவர் திரு.கு.செல்வப்பெருந்தகை அவர்களின் தலைமையில் நாளை மாலை 3 மணியளவில் சென்னை சாஸ்திரிபவன் முன் நடைபெறும் கண்டன ஆர்பாட்டத்தில் பெருந்திரளாக பங்கேற்க அழைக்கிறோம்.
Read More »