இன்று அதிகாலை பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் நிவாரண தொகையை முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம் சிவகாசி, சாத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஏராளமான பட்டாசு ஆலைகள் உள்ளன. தீபாவளி பண்டிகைக்காக பட்டாசு தயாரிப்பு பணியில் பட்டாசு ஆலை தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.சாத்தூர் அருகே பந்துவார்பட்டியில் ஏராளமான பட்டாசு ஆலைகள் உள்ளன. இன்று …
Read More »“பாஜகவுக்கு கூலிப்படை தலைவன் சீர்காழி சத்யாவுடன் தொடர்பு” – செல்வப்பெருந்தகை கடும் தாக்கு!!
கமலாலயம் என்பது ரவுடிகளின் புகலிடமாகவும், பாதுகாப்பு அரணாகவும் மாறியிருப்பது தமிழக பா.ஜ.க. எந்த திசையில் பயணிக்கிறது என்பதை புரிந்து கொள்ளலாம் என்று செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 10 ஆண்டுகளாக பா.ஜ.க. தலைமையிலான ஒன்றிய அரசு செயல்படுவதால் சமூக விரோத சக்திகள், கூலிப்படை தலைவர்கள், குற்ற வழக்கில் காவல்துறையினரால் தேடப்படுபவர்கள் ஆகியோர் தங்களை பாதுகாத்துக் கொள்ள தமிழக பா.ஜ.க.வில் இணைவது …
Read More »மதுவிலக்கு திருத்தச் சட்ட மசோதா தாக்கல் – தமிழ்நாட்டில் இனி கள்ளச்சாராயம் விற்றால் ஆயுள்தண்டனை – ஸ்டாலின்
மதுவிலக்கு திருத்தச் சட்ட மசோதாவை முதலமைச்சர் ஸ்டாலின், தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். அதன்படி, இனி தமிழ்நாட்டில் இனி கள்ளச்சாராயம் விற்றால் ஆயுள்தண்டனை விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுவிலக்கு திருத்தச் சட்ட மசோதா: மதுவிலக்கு திருத்தச் சட்ட மசோதாவை சட்டப்பேரவையில் தாக்கல் செய்து பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், கள்ளச்சாராய விற்பனைக்கு தற்போது வழங்கப்படும் தண்டனை போதுமானதாக இல்லாததால் திருத்தம் என விளக்கமளித்தார். கள்ளச்சாராயம் விற்பனை, பதுக்கல் என அனைத்துவிதமான குற்றங்களையும் …
Read More »தமிழ்நாடு நீர்வளத்துறையின் புதிய இலச்சினை வெளியீடு: அமைச்சர் துரைமுருகன் வெளியிட்டார்
சென்னை: தமிழ்நாடு நீர்வளத்துறையின் புதிய இலச்சினையை அமைச்சர் துரைமுருகன் வெளியிட்டார். சென்னை தலைமைச்செயலகத்தில் தமிழ்நாட்டில் நீர்வளத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில், நீர்ப்பாசனம் பாதுகாப்பான குடிநீர் மற்றும் மாநில நீர் பாதுகாப்பு ஆகியவற்றை நிறைவேற்றி தமிழ்நாட்டை நீர்மிகை மாநிலமாக மாற்றும் குறிக்கோளை உள்ளடக்கிய நீர்வளத்துறையின் புதிய இலச்சினையை (லோகோ) அமைச்சர் துரைமுருகன் வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியின் போது, நீர்வளத்துறையின் கூடுதல் தலைமைச்செயலர் சந்தீப் சக்சேனா, நீர்வளத்துறையின் சிறப்பு செயலர் முருகன், முதன்மை …
Read More »திருச்சியில் கலைஞர் நூலகம், ஓசூரில் பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்படும்: ஸ்டாலின் அறிவிப்பு…
ஓசூரில் சர்வதேச விமான நிலையமும், திருச்சியில் கலைஞர் பெயரில் நூலகமும் அமைக்கப்படும் என்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: தமிழ்நாட்டை நோக்கி உலக நிறுவனங்கள் வந்து கொண்டுள்ளனர். இதன் மூலம் தமிழக இளைஞர்களுக்கு வேலை கிடைக்கிறது. மோட்டார் வாகனங்கள், உதிரி பாகங்கள் ஏற்றுமதியில் இந்தியாவின் முதல் மாநிலமாக தமிழகம் இருக்கிறது. இந்தியாவில் இரண்டாவது பொருளாதார மாநிலமாக இருக்கிறது தமிழகம். …
Read More »நீதிமன்ற வளாகம் முன்பாக ஆர்ப்பாட்டம்அறிவிப்பு…
கரூர் வழக்கறிஞர் சங்கம் சார்பில் ஒண்றிய அரசின் கொடுஞ் சட்டத்திற்கு எதிராக 27.06.2024,28.06.2024, மற்றும் 01.07.2024 நீதிமன்ற பணியில் இருந்து விலகி இருப்பது என்றும் 02.07.2024 தேதி மீண்டும் பொதுக் குழு கூட்டத்தைக் கூட்டி முடிவெடுக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது ,01.07.2024 திங்கள் கிழமை அன்று கருப்பு பட்டை அணிந்து கொண்டு பெருந்திரளாக கலந்து கொண்டுள்ள வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. வழக்கறிஞர் சங்க பொதுக்குழுவின் முடிவின்படி 27- …
Read More »நேற்று பெய்த மழையில் முளைத்த காளான் அண்ணாமலை… அந்த விஷயத்திற்கு எச்சரிக்கை செய்த செல்வப்பெருந்தகை.!!
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை இன்று பாஜகவை விமர்சித்துப் பேசியுள்ளார். அதாவது அவர் கூறியதாவது, இந்திரா காந்தியினுடைய பெருமையை, விடுதலைப் போராட்டத்தில் கடுகளவும் பங்கு பெறாத ஆர்எஸ்எஸ் வழிவந்த பாஜக தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதேன்று, நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான் போல அண்ணாமலையும் அறிந்திருக்க வாய்ப்பே கிடையாது. எனவே வரலாற்றுத் திரிபு வாதங்களை அண்ணாமலை நிறுத்திக் கொள்வது நல்லது என்று எச்சரித்துள்ளார்.
Read More »‘நான் முதல்வன்’ உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்தக் கூடுதலாக 2 இணை இயக்குநர் – அரசாணை வெளியீடு!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் கனவுத் திட்டமான “நான் முதல்வன்” திட்டமானது. கடந்த 1.3.2022 அன்று தொடங்கி வைக்கப்பட்டது, இந்த மாபெரும் திறன் மேம்பாட்டிற்கான திட்டமானது ஈராண்டுகளைக் கடந்து வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயன்பெற்று, வேலைவாய்ப்புகளையும் பெற்று வருகின்றனர். இந்நிலையில் ‘நான் முதல்வன்’ உள்ளிட்ட சிறப்புத் திட்டங்களை செயல்படுத்தக் கூடுதலாக 2 இணை இயக்குநர் பணியிடங்களுக்கு அனுமதியளித்து பள்ளிக் கல்வித்துறை செயலாளர் குமரகுருபரன் …
Read More »பூப்பூ நீராட்டு விழாவில் பசுமைக்குடி தன்னார்வ இயக்கத்தின் சார்பில் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது…
கரூர் மாவட்டம் கடவூர் ஊராட்சி ஒன்றியம் வீராணம்பட்டி திரு ஏழுமலை அவர்கள் எனது மகளின் பூப்பூ நீராட்டு விழாவிற்கு, வருகை தரும் உறவினர்களும், நண்பர்களும் மரக் கன்றுகள் வழங்க வேண்டும் என திரு நரேந்திரன் கந்தசாமி கணினி தொழில்நுட்ப ஆலோசகர் (அமெரிக்கா) பசுமைக்குடி தன்னார்வ இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர், அவர்களிடம் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, திரு நரேந்திரன் கந்தசாமி அவர்களின் அறிவித்தலின்படி ஐயா திரு மு கந்தசாமி வரவனை ஊராட்சி மன்ற …
Read More »“2025 ஆம் ஆண்டிற்குள் குழந்தை தொழிலாளர் முறை நிச்சயம் ஒழிக்கப்படும்” : அமைச்சர் சி.வி.கணேசன் உறுதி!
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத் தொடர் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல்நாளான நேற்று மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இன்று கேள்வி நேரத்துடன் சட்டப்பேரவை தொடங்கியது. பின்னர் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. இதில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் அமைச்சர் சி.வி.கணேசன் பதிலளித்து உரையாற்றினார். அப்போது பேசிய அமைச்சர் சி.வி.கணேசன், ” குழந்தை தொழிலாளர் …
Read More »