Friday , November 22 2024
Breaking News
Home / Admin (page 10)

Admin

போதைப்பொருள் ஒழிப்பு: முதல்வர் தலைமையில் கல்லூரி மாணவர்கள் உறுதிமொழி

சென்னை: தமிழ்நாடு காவல்துறை சார்பில் போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். சென்னை பல்கலைக்கழகத்தில் காவல்துறை சார்பில் போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. போதைப் பொருட்கள் ஒழிப்பு குறித்து உறுதிமொழியை முதலமைச்சர் முன்னிலையில் மாணவ, மாணவிகள் எடுத்துக் கொண்டனர். போதைப் பொருட்கள் ஒழிப்பில் சிறப்பாக பணியாற்றிய காவல் அதிகாரிகள், அலுவலர்களுக்கு முதல்வர் பதக்கம் வழங்கினார்

Read More »

உலகத்திலே இதுதான் பெரியது..அப்டேட் கொடுத்த உதயநிதி!! கோவையில் 200 ஏக்கரில் கிரிக்கெட் ஸ்டேடியம்.

கோயம்புத்தூரில் அமைய உள்ள சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தை கட்டுவதற்கு விரிவான திட்ட அறிக்கையை (டிபிஆர்) தயார் செய்ய மாநில அரசு டெண்டர் விடுத்துள்ளது. சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தின் மேம்பாட்டிற்கான டிபிஆர் தயாரிப்பதற்கும் வடிவமைப்பு ஆலோசகரை ஈடுபடுத்துவதற்கும் டெண்டர் முன்வைக்கப்பட்டுள்ளதாக உயர்நிலை விளையாட்டுத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தியாவிலேயே அமைய போகும் பெரிய கிரிக்கெட் மைதானமாக இது இருக்கும். இதன் மூலம் உலகிலேயே மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமாக இது இருக்கும். ஏலதாரர்கள் …

Read More »

தமிழ்நாடு காங்கிரஸ் தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகத்துறை ஆலோசனைக் கூட்டம்…

இன்று சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகத்துறை ஆலோசனைக் கூட்டம் திரு K.T லட்சுமி காந்தன் தலைமையில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநிலத் தலைவர் திரு செல்வப் பெருந்தகை அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்ற இருக்கிறார். –பாலமுருகன் கந்தசாமி,கரூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்,தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகத்துறை.

Read More »

கருணாநிதியின் உருவம் பொறித்த ரூ. 100 நாணயம்:17-ம் தேதி ராஜ்நாத்சிங் வெளியிடுகிறார்

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உருவம் பொறித்த 100 ரூபாய் நாணயத்தை சென்னையில் வரும் 17-ம் தேதி அதிகாரப்பூர்வமாக மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் வெளியிடுகிறார். முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு நிறைவை முன்னிட்டு, அவரது உருவம் பொறிக்கப்பட்ட நாணயத்தை வெளியிட மத்திய அரசு ஒப்புதல் அளித்து, கடந்த ஜூன் 4-ம் தேதி ரூ.100 மதிப்பிலான நாணயம் வெளியிடப்பட்டது. இந்த நாணயத்தை அதிகாரப்பூர்வமாக வரும் 17-ம் தேதி சென்னை கலைவாணர் அரங்கில், தமிழக …

Read More »

உதயநிதி ஸ்டாலின் ஆகஸ்ட் 19ம் தேதிக்கு துணை முதல்வர்? ராஜகண்ணப்பன் சொன்ன மேஜர் விஷயம்

சென்னை: ஆகஸ்ட் 19ம் தேதிக்கு பிறகு விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாட்டின் துணை முதல்வராக பொறுப்பேற்க உள்ளதாக அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறியுள்ளார். முன்னதாக தமிழக முதல்வர் ஸ்டாலின் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில், உதயநிதி துணை முதல்வராவதற்கான காலம் கனிந்துவர வில்லை என்று கூறியிருந்தார். உயர்கல்வியில் மாணவர்கள் சேர்க்கை அதிகரிக்க வேண்டும் என்று, மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 …

Read More »

“நாங்கள் யாரை வேண்டுமானாலும் சந்திக்கலாம்; இது எங்கள் உரிமை!” – ராகுல் காந்தி ஆவேசம்!

மீனவ குழுவுக்கு நாடாளுமன்ற வளாகத்திற்குள் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வெளியே வந்து அவர்களை சந்தித்து பேசினார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜூலை 22ஆம் தேதி முதல் இரு அவைகளிலும் நடைபெற்று வருகிறது. மத்திய நிதியமைச்சர் மக்களவையில் தாக்கல் செய்த மத்திய பட்ஜெட் குறித்து விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இடையே, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை சந்திக்க …

Read More »

சுதந்திர தினமான ஆகஸ்ட் 15-ம் தேதி அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடத்த தமிழ்நாடு அரசு அனுமதி!!

சென்னை : சுதந்திர தினமான ஆகஸ்ட் 15-ம் தேதி அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடத்த தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது. தமிழகத்தில் ஆண்டுக்கு ஆறுமுறை கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. அதன்படி, குடியரசு தினம் (ஜன. 26), உலக தண்ணீா் தினம் (மாா்ச் 22 ), தொழிலாளா் தினம் (மே 1), சுதந்திர தினம் (ஆக. 15), மகாத்மா காந்தி பிறந்த தினம் (அக். 2), உள்ளாட்சிகள் …

Read More »

விலைவாசி உயர்வை கண்டித்து எதிர்க்கட்சி எம்பிக்கள் போராட்டம்!

விலைவாசி உயர்வைக் கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜூலை 22ஆம் தேதி முதல் இரு அவைகளிலும் நடைபெற்று வருகிறது. மத்திய நிதியமைச்சர் மக்களவையில் தாக்கல் செய்த மத்திய பட்ஜெட் குறித்து விவாதம் நடைபெற்று வருகிறது. வக்ஃப் சட்டத்தில் திருத்தம் செய்யும் முக்கிய மசோதா இன்று தாக்கல் செய்யப்படலாம் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் விலைவாசி உயர்வைக் கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி …

Read More »

தமிழ்ப் புதல்வன் திட்டம்: கோவையில் வெள்ளிக்கிழமை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

சென்னை: தமிழக அரசின் தமிழ்ப் புதல்வன் திட்டத்தை கோவையில் நாளை (ஆக.9) முதல்வர் ஸ்டாலின் தொடங்கிவைக்கிறார். இதுதொடர்பாக தமிழக அரசு விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ‘அரசுப் பள்ளிகளில் பயின்ற, ஏழை, எளிய மாணவர்களை சாதனையாளர்களாக உருவாக்கிடவும், அரசுப் பள்ளி மாணவரின் உயர்கல்விச் சேர்க்கையை உயர்த்திடவும் தமிழ்ப் புதல்வன் எனும் ஒரு மாபெரும் திட்டம் வரும் நிதியாண்டு முதல் அறிமுகப்படுத்தப்படும். இத்திட்டத்தின் கீழ், 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை …

Read More »

மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தல் இந்தியா கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் உத்தவ் தாக்கரே? ராகுல், கார்கேவை சந்தித்து ஆலோசனை

புதுடெல்லி: மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பில் உத்தவ் தாக்கரே முதல்வர் வேட்பாளராக நிறுத்தப்படலாம் என்று தெரிகிறது. மகாராஷ்டிராவில் பா.ஜ கூட்டணி ஆட்சி நடக்கிறது. சிவசேனாவில் இருந்து பிரிந்து சென்ற ஏக்நாத் ஷிண்டே முதல்வராக உள்ளார். அங்கு அக்டோபரில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால் இந்தியா கூட்டணியில் இடம் பெற்று இருக்கும் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் (சரத்பவார் பிரிவு), சிவசேனா (உத்தவ் தாக்கரே) பிரிவு ஆகியவை தொகுதி பங்கீடு …

Read More »
NKBB TECHNOLOGIES