Thursday , December 12 2024
Breaking News
Home / செய்திகள் (page 75)

செய்திகள்

All News

உலக எம்ஜிஆர் பேரவை மாநாடு நடத்துவது குறித்த முதல் ஆலோசனைக் கூட்டம் மதுரையில் நடைபெற்றது

உலக எம்ஜிஆர் பேரவை மாநாடு நடத்துவது குறித்த முதல் ஆலோசனைக் கூட்டம் மதுரையில் நடைபெற்றது

உலக எம்ஜிஆர் பேரவை மாநாடு நடத்துவது குறித்த முதல் ஆலோசனைக் கூட்டம் மதுரை வடக்கு ஆவணி மூல வீதியில் உள்ள ராஜ் பிலிம்ஸ் அலுவலகத்தில், “உலக எம்ஜிஆர் பேரவை நிறுவனர் “முருகு பத்மநாதன்” தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக எம்ஜிஆர் மன்ற மாவட்ட செயலாளர் எஸ்.டி.ஜெயபால் கலந்து கொண்டு பேசினார்.

நிகழ்ச்சிக்கு வருகை தந்தவர்களை நசீர் பாட்ஷா வரவேற்று பேசினார். “ஸ்ரீ இறைவன் எம்ஜிஆர் தீவிர பக்தர்கள் குழுவை சேர்ந்த “தமிழ்நேசன்” நன்றியுரை கூறினார்.

மேலும் உலக எம்ஜிஆர் பேரவை மாநாடு சிறப்பாக நடத்துவது குறித்த இந்த ஆலோசனை கூட்டம் ஒவ்வொரு மாவட்டத்திலும் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இளைஞர் குரல் செய்திகளுக்காக மதுரை செய்தியாளர் கனகராஜ்

ஊதிய உயர்வுக்காக போராடிய முன்னாள் எம்எல்ஏ ஜெகவீரபாண்டியனுக்கு பயனாளிகள் நன்றி.

பூம்புகார் கல்லூரி ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் ஊதிய உயர்வுக்காக பெரிதும் போராடிய முன்னாள் எம்எல்ஏ ஜெகவீரபாண்டியனுக்கு பயனாளிகள் நேரில் வந்து நன்றிகளை தெரிவித்தனர்..

மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் மேலையூரில் இந்து சமய அறநிலைய ஆட்சித் துறையின் கீழ் இயங்கும் சுயநிதி பிரிவு கல்லூரியில் பணியாற்றும் அலுவலக, ஆய்வக, நூலக உதவியாளர்கள், ஓட்டுநர், இரவு காவலர், துப்புரவு பணியாளர்கள் உட்பட்டவர்களுக்கு பல ஆண்டுகளாக மாதம் ரூபாய் 5000 மட்டுமே ஊதியமாக வழங்கப்பட்டு வந்தது.

மிகுந்த பொருளாதார கஷ்டத்திலும் வறுமையிலும் வாடி வந்த ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்று கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆட்சி மன்றக்குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

அதன்படி ஊதிய உயர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டும் பல மாதங்களாக வழங்கப்படவில்லை என்னும் குற்றச்சாட்டு எழுந்தது. பாதிக்கப்பட்ட பூம்புகார் கல்வி கல்லூரி ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் மயிலாடுதுறை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜெக வீரபாண்டியனை நேரில் சந்தித்து முறையிட்டார்கள். தொழிற்சங்க விதிப்படி சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் ஜெகவீர பாண்டியன் நேரடியாக கல்லூரி நிர்வாகத்திடம் முறையிட்டு கோரிக்கை வைத்தும், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் மற்றும் இணை ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் எடுத்துரைத்து நியாயமான இந்த கோரிக்கையினை நிறைவேற்றித் தர பெரும் முயற்சி மேற்கொண்டார்.

மேலும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, மாவட்ட செயலாளர் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா.எம்.முருகன் உள்ளிட்டவர்களின் கவனத்திற்கும் இப் பிரச்சினையை கொண்டு சென்று தற்பொழுது இந்த மாதம் முதல் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

மேற்படி ஊதியத்தை பெற்றுக்கொண்ட பூம்புகார் கல்லூரி ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் அலுவலக உதவியாளர் ஜெயமணி, சுமதி ஆய்வக உதவியாளர்கள் லட்சுமணன், ராம்குமார், நூலக உதவியாளர் கயல்விழி, ஓட்டுநர் எழிலரசன், இரவு காவலர் சக்கரவர்த்தி, கூட்டுபவர்கள் நிலமதி, சரோஜா, உஷாராணி, துப்புரவு பணியாளர் செல்விமாலதி உள்ளிட்டவர்கள் மயிலாடுதுறையில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜெக வீரபாண்டியன் அவர்களை அவர்களது அலுவலகத்தில் சந்தித்து நன்றி தெரிவித்துக் கொண்டார்கள்.

தங்களுடைய நெடுநாளைய கோரிக்கைக்காக தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு ஊதிய உயர்வை பெற்று தந்ததற்காக கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தது மிகவும் நெகிழி செய்ததாக அமைந்தது.

இந்நிகழ்வின் பொழுது மயிலாடுதுறை மாவட்ட திமுக விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் குத்தாலம் இரா. மனோகரன் மற்றும் சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் ஆகியோர் உடன் இருந்தனர்.மேலும் தலைமை செயற்குழு உறுப்பினர் மேலையூர் முத்து மகேந்திரனை சந்தித்து நன்றி தெரிவித்துக்கொண்டார்கள்.

இளைஞர் குரல் செய்திகளுக்காக மயிலாடுதுறை மாவட்ட செய்தியாளர் திருமுருகன்

பொதுமக்களை திரட்டி சாலை மறியல் : மதுரை மாநகராட்சி 27 வது வார்டு கவுன்சிலர் மாயத்தேவன் அறிவிப்பு.!

பொதுமக்களை திரட்டி சாலை மறியல் செய்ய போகிறேன் மதுரை மாநகராட்சி 27 வது வார்டு கவுன்சிலர் மாயத்தேவன் அறிவிப்பு

மதுரை,செப்.04-

மதுரை மாநகராட்சி 27 வது வார்டு 60 அடி ரோடு மெயின் ரோட்டில் சேரும் சகதியாக வயல்வெளி போல் இருப்பதால் பொதுமக்கள் தினமும் நடந்து செல்வோர், வாகனங்களில் செல்வோர் சாகசம் செய்வது போல் அந்த ரோட்டில் தினமும் சென்று வருகின்றனர். மந்த நிலையில் வேலை நட்ப்பதால் அந்த பகுதியில் செல்லும் பொதுமக்கள் முகம் சுளித்து செல்கின்றனர்.

இதுகுறித்து 27-வது வார்டு மாமன்ற உறுப்பினர் ஆ.மாயத்தேவன் நம்மிடம் கூறுகையில், 

செல்லூர் 60 அடி ரோட்டில் சேரும் சகதியாக உள்ளதால் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். நடந்து செல்வோர் வாகனங்களில் செல்வோர் விழுந்து செல்கின்றனர். தினமும் ஆயிரக்கணக்கானோர் கடந்து செல்லும் இந்த ரோட்டில்  உடனடியாக தார் சாலை அமைக்க வேண்டும். பலமுறை இது குறித்து மாமன்ற கூட்டங்களில் எடுத்துரைத்தும் ஆணையாளரிடம் மனு வழங்கியும் பணிகள் நடைபெறவில்லை. சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரியிடம் சொல்லியும் அவரும் எதுவும் செய்து கொடுப்பதில்லை.

நான் கவுன்சிலராக பொறுப்பேற்ற போது செல்லூர் 60 அடி ரோட்டில் பாதாள சாக்கடை பணிகள் தொடங்கியது.15 மாதங்கள் ஆகியும் இன்னும் பாதாள சாக்கடை பணிகள் நிறைவடையவில்லை.

மேலும் குப்பை அள்ளும் பேட்டரி வண்டிகள் ரிப்பேர் ஆகி உள்ளதால் தூய்மை பணியாளர்கள் குப்பைகளை சேகரிக்க  முடியவில்லை. மேலும் குப்பைத்தொட்டியை எடுத்துச் செல்லும் குப்பை லாரிகளும் சரிவர இந்த வார்டுக்கு வருவதில்லை. எனது வார்டு அதிமுக வார்டு என்பதால் மாநகராட்சி அதிகாரிகள் இந்த வார்டை தொடர்ந்து புறக்கணித்து வருகின்றனர்.

பாதாள சாக்கடை கழிவு நீர் தெருக்களில் தேங்கி இருக்கும் போது கழிவுநீர் உறிஞ்சும் வாகனத்தை அனுப்பச் சொன்னால் அனுப்புவதில்லை. மேலும் இந்த வார்டில் நாய் தொல்லைகள் அதிகமாக உள்ளது. சமீபத்தில் ஒரு வெறி நாய் எட்டு பேருக்கும் மேல் கடித்தது. உடனடியாக அதிகாரிகளுக்கு இதைச் சொல்லியும் நாய் பிடிக்கும் வண்டியை அனுப்பி நாய்களை  பிடிப்பதற்கு ஏற்பாடுகள் செய்யவில்லை. இதனால் பொதுமக்கள் இரவு நேரங்களில் வெளியில் செல்ல முடியவில்லை நாய்கள் விரட்டி விரட்டி கடிக்கிறது‌. இதனால் பொதுமக்கள் இரவு நேரங்களில் வெளியே செல்ல பயன்படுகின்றனர்.

மேலும் இந்த வார்டுக்கு உட்பட்ட பல தெருக்களில் சாலை வசதிகள் இல்லாமல் உள்ளதால் குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் மழை நீர் தேங்கி கொசுத்தொல்லை அதிகமாகி வருகிறது. எனவே உடனடியாக அனைத்து தெருக்களிலும் தார் சாலைகளை அமைப்பதற்கு  மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாநகராட்சி அதிகாரிகளிடம் இது பற்றி கூறினால் எதுவும் கண்டு கொள்வதில்லை. எனவே  அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காவிட்டால் பொதுமக்களை திரட்டி சாலை மறியலில் ஈடுபட போகிறேன் என கூறினார்.

மயிலாடுதுறை மாவட்டம் திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான ஸ்ரீ மாயூரநாதர் கோவிலில் மஹா கும்பாபிஷேகம்

மயிலாடுதுறை மாவட்டம் திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான ஸ்ரீ மாயூரநாதர் கோவிலில் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது

மயிலாடுதுறை மாவட்டம் திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு மாயூரம் ஸ்ரீ அபயப்பிரதாம்பிகை சமேத ஸ்ரீ மாயூரநாதசுவாமி திருக்கோவில் பழமை மாறாமல் சீரமைப்பு பணிகள் நடைபெற்று 18 ஆண்டுகளுக்குப் பிறகு திருவாவடுதுறை ஆதீனம் 24-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள் முன்னிலையில் மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

கும்பாபிஷேக விழாவில் மாவட்ட ஆட்சியர் ஏ. பி. மகாபாரதி, தகவல் தொழில்நுட்பத் துறை அரசு செயலாளரும், இந்து சமய அறநிலைத்துறை சிறப்பு அதிகாரியுமான குமரகுருபன் மற்றும் அரசு அலுவலர்கள் வெளிமாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

500-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இளைஞர் குரல் செய்திகளுக்காக மயிலாடுதுறை மாவட்ட செய்தியாளர் திருமுருகன்

மதுரையில் இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பாக புதிய வட்டாரக் கிளைகள் தொடக்க விழா.!

மதுரை காலேஜ் ஹவுஸ் உள் அரங்கத்தில் இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பாக மதுரை மாவட்டம் மற்றும் 7 புதிய வட்டாரக் கிளைகள் தொடக்க விழா நடைபெற்றது.

இந்நிகழ்வில் வட்டாரப் பொறுப்பாளர்கள் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் புதிதாக பதவி ஏற்று கொண்டனர். இந்நிகழ்விற்கு மாநில தலைவர் ஆனந்தகுமார் தலைமை தாங்கினார்.

மாநில பொறுப்பாளர் கண்ணன் முன்னிலையில், மாநில பொதுச் செயலாளர் ராபர்ட் அனைத்து பொறுப்பாளர்களுக்கும் பதவி பிரமாணம் செய்து வைத்தார். மாநிலத் துணைத் தலைவர் ஞானசேகரன், மாநில துணைச் செயலாளர் வேல்முருகன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். மதுரை மாவட்ட தலைவர் பால் பிரின்ஸ் வரவேற்று பேசினார்.

விழாவிற்கான ஏற்பாடுகளை மதுரை மாவட்டச் செயலாளர் குமரேசன் செய்திருந்தார். நிகழ்ச்சியின் முடிவில் மாவட்ட பொருளாளர் சதீஷ் நன்றியுரை கூறினார்.

இதில் மாவட்ட துணைத் தலைவர் கமலக்கண்ணன், மாவட்ட துணைச் செயலாளர் நிவாஸ் கார்த்திக்ராஜ், மாவட்ட மகளிரணி ஒருங்கிணைப்பாளர் மீனாட்சி, மாநில செயற்குழு உறுப்பினர் அருளானந்த் மற்றும் 7 வட்டார பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.


மேலும் வரும் செப்டம்பர் 5ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை கோரிக்கை அட்டை அணிந்து பணிக்கு செல்வது எனவும், செப்டம்பர் 28 ஆம் தேதி முதல் பருவ விடுமுறையின் போது மாணவர்கள் நலன் பாதிக்கப்படாமல் சென்னை டிபிஐ வளாகத்தில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்துவது எனவும், அதற்கு மதுரை மாவட்டத்தின் சார்பாக அனைத்து ஆசிரிய பெருமக்களும் குடும்பத்தோடு கலந்து கொள்வது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இளைஞர் குரல் செய்திகளுக்காக மதுரை செய்தியாளர் கனகராஜ்.

திமுக அயலக அணி மதுரை மாநகர் மாவட்ட அமைப்பாளராக அ.சையது அலி நியமனம்.!

திமுக அயலக அணி மதுரை மாநகர் மாவட்ட அமைப்பாளராக அ.சையது அலி நியமனம் செய்யப்பட்டுள்ளார்

மதுரை,செப்.02-

திமுக அயலக அணி மதுரை மாநகர் மாவட்ட அமைப்பாளராக அ.சையது அலி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், என்னை நியமனம் செய்த தமிழ்நாடு முதல்வரும், திமுக தலைவருமான எம்.கே.ஸ்டாலின், விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சரும்,திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் மற்றும் பரிந்துரை செய்த தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சரும், திமுக சொத்து பாதுகாப்பு குழு செயலாளருமான பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன்,மதுரை மாநகர் மாவட்ட செயலாளர் கோ.தளபதி எம்.எல்.ஏ, அயலக அணி மாநில செயலாளர் எம்.எம்.அப்துல்லா எம்.பி ஆகியோர்களுக்கு எனது நன்றியினை தெரிவித்து கொள்கிறேன் என கூறியுள்ளார்.

புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட சையது அலி அவர்களுக்கு திமுக நிர்வாகிகள் மற்றும் நண்பர்கள் ஏராளமானோர் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

மதுரையில் வேத்விக் மீடியா நிறுவனம் சார்பாக மருந்து பொருட்கள் கண்காட்சி.100 நிறுவனங்கள் பங்கேற்பு.!

மதுரை தமுக்கம் மைதானத்தில் வேத் விக் மீடியா நிறுவனம் சார்பில் அகில இந்திய மருந்து பொருட்கள் கண்காட்சி நடைபெற்றது.

இந்த கண்காட்சியை வேத்விக மீடியா நிறுவன இயக்குனர்கள் சிவன் சர்மா, பண்டாரி, அகில இந்திய முற்போக்கு மருந்து தொழில் முனைவோர் கூட்டமைப்பு சேர்மன் நாகராஜன், தலைவர் ஜெயச்சந்திரன், செயலாளர் ராமசாமி ஆகியோர் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தனர்.

இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக தியாகராஜர் கல்லூரி முன்னாள் முதல்வர் ராஜா கோவிந்தசாமி பங்கேற்று கண்காட்சியை திறந்து வைத்தார்.

இக்கண்காட்சியில் சித்தா, ஆயுர்வேதம், யுனானி, அலோபதி உள்பட பல்வேறு மருத்துவ நிறுவனங்கள் சார்பில 100க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டு இருந்தது.

தமிழகத்தைச் சேர்ந்த ஏராளமான மருந்து மொத்த விற்பனையாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் கண்காட்சியில் கலந்து கொண்டனர்.

மேலும் அகில இந்திய முற்போக்கு மருந்து தொழில் முனைவோர் கூட்டமைப்பு சார்பில் கருத்தரங்கம் மற்றும் புதிதாக மருந்து உற்பத்தி தொழில் தொடங்குவதற்கு இலவச ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

இளைஞர் குரல் செய்திகளுக்காக மதுரை செய்தியாளர் கனகராஜ்

அரசியலுக்கு வரும் பெண்களை ஊக்கப்படுத்தாவிட்டாலும், மலினப்படுத்தும் வேலையை செய்யாமல் இருக்கலாம்…

அரசியல் பின்புலம் இல்லாமல் சாதாரண குடும்பத்தில் இருந்து பல்வேறு போராட்டங்களை தினம் தினம் கடந்து அரசியலுக்கு வரும் பெண்களை ஊக்கப்படுத்தாவிட்டாலும், மலினப்படுத்தும் வேலையை விகடன் செய்யாமல் இருக்கலாம். நடுநிலையாக செய்திகள் வெளியிட்டு பத்திரிக்கை கண்ணியத்தை காக்குமாறு ஜூனியர் விகடன் நாளிதழை கேட்டுகொள்கிறேன்.

இப்படிக்கு,
கிருத்திகா பாலகிருஷ்ணன்,
இளைஞர் காங்கிரஸ்,
கரூர் மாவட்டம்.

பெஸ்ட் ஹோம் அப்ளையன்ஸ், பர்னிச்சர் & மொபைல்ஸ் ஷோரூம் திறப்பு விழா

மதுரை ஞானஒளிவுபுரத்தில் பெஸ்ட் ஹோம் அப்ளையன்ஸ், பர்னிச்சர் & மொபைல்ஸ் ஷோரூம் திறப்பு விழா

மதுரை,ஆக‌.30-

மதுரை ஏ.ஏ.ரோடு ஞானஒளிவுபுரம் ஆர்.சி.மஹால் அருகே செயிண்ட் ஜோசப் ஷாப்பிங் காம்ப்ளக்ஸில் பெஸ்ட் ஹோம் அப்ளையன்ஸ், பர்னிச்சர் & மொபைல்ஸ் ஷோரூம் திறப்பு விழா நடைபெற்றது.

இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்ட மதுரை ராதா டிரான்ஸ்போர்ட் நிர்வாக இயக்குனர் கண்ணன் மற்றும் விஜிலென்ஸ் டி.எஸ்.பி செல்வராஜ் ஆகியோர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர். விழாவிற்கு வருகை தந்தவர்களை ஷோரூம் உரிமையாளர் முகமது ஷாஜின் வரவேற்றார்.

திறப்பு விழா சலுகையாக பொருட்கள் வாங்கும் அனைவருக்கும் நிச்சய பரிசு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தாயார் நினைவு தினத்தை முன்னிட்டு வி.பி.ஆர் செல்வகுமார் மாலை அணிவித்து மரியாதை

முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தாயார் நினைவு தினத்தை முன்னிட்டு வி.பி.ஆர் செல்வகுமார் தனது ஆதரவாளர்களுடன் சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்

மதுரை,ஆக.30-

முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ தாயார் ஒச்சம்மாள் அவர்களின் 5-ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, மதுரை செல்லூரில் உள்ள இல்லத்தில் அவரது படத்திற்கு வி.பி.ஆர் செல்வகுமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அருகில் வட்டக்கழக செயலாளர் பாம்சி.கண்ணன் மற்றும் டாக்டர்.சின்னச்சாமி,ஷேக் அப்துல்லா, விஜயராஜா,கவிஞர் மணிகண்டன், இன்சூரன்ஸ் ராஜா, திவ்யபாரதி,சுமதி உள்ளனர்.

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES