Friday , November 22 2024
Breaking News
Home / செய்திகள் (page 85)

செய்திகள்

All News

பால் உயர்வை கண்டித்து பாஜக பரவை மண்டல் தலைவர் ரமேஷ் கண்ணன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்.!

தமிழக அரசின் பால் உயர்வை கண்டித்து மதுரை மாவட்டம் பாரதிய ஜனதா கட்சி பரவை மண்டல் சார்பாக அதன் தலைவர் ரமேஷ் கண்ணன் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மண்டல் பொதுச் செயலாளர் துரைபாஸ்கர் வீரக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர் பரவை பேரூர் தலைவர் ஜெகநாதன் வரவேற்புரை ஆற்றினார்

இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்ட விவசாய அணி முன்னாள் மாநகர் தலைவர் முத்துப்பாண்டி முன்னாள் மாவட்ட துணைத்தலைவர் செல்வகுமார் மாநில பொதுக்குழு உறுப்பினர் சிவபாலன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.

இந்நிகழ்வில் எஸ்டி எனி மாவட்ட தலைவர் எம் கே முருகன் மற்றும் மண்டல் நிர்வாகிகள் பாலமுருகன் மீனாட்சிசுந்தரம் மோகன் கோவிந்தன் மாரிசாமி பாலாஜி தனபாலன் மணிகண்டன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்

திருச்சி அப்போலோ மருத்துவமனையில் குழந்தைகள் தின கொண்டாட்டம்.!

குழந்தைகளுக்கும் மருத்துவ உரிமை அவசியம்
மருத்துவமனை அலங்கரிக்கப்பட்டு சிறப்புக் கொண்டாட்டம்
குஷியான விளையாட்டுகளுடன் ஆரோக்கிய விழிப்புணர்வு

திருச்சி, நவ 15:

குழந்தைகளுக்கு பெருமை சேர்க்கும் விதமாகவும், அவர்களின் கல்வி மற்றும் நல்வாழ்வுக்கான விழிப்புணர்வைப் பரப்பும் விதமாக நாடு முழுவதும் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த குழந்தைகள் தின நாளில் ஆசியாவின் மிகப்பெரிய மற்றும் மிகுந்த நம்பிக்கைக்குரிய மருத்துவ சேவை குழுமமான அப்போலோ, குழந்தைகளுக்கான மருத்துவ உரிமை தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, நாடு முழுவதும் உள்ள அப்போலோ குழுமத்தின் சில மருத்துவமனைகளில் சிறப்பு நிகழ்ச்சியை நடத்துகிறது.
இந்த நிகழ்ச்சியில் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள குழந்தைகளை, அப்போலோ குடும்பத்தின் உறுப்பினர்களாக ஏற்று, சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்ட பகுதிக்கு அவர்களை வரவழைத்து மகிழ்வித்தோம். அத்துடன் குழந்தைகள் மருத்துவர்கள், செவிலியர்கள் போல் உடையணிந்து மருத்துவமனையில் உள்ள மருத்துவர்களையும், உள் நோயாளிகளையும் சந்தித்து நலம் பெற வாழ்த்து தெரிவித்து புது அனுபவத்தை பெற்றனர். மேலும் குழந்தைகளுக்கு போட்டிகள் நடத்தி பரிசுகள் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. கள்ளம் கபடமில்லா குழந்தைகளின் இயல்பான மகிழ்ச்சியும் சிரிப்பும் தான் நமக்கு கிடைக்கும் மிகப்பெரிய பரிசு. உணவு உடை உறைவிடம் மற்றும் கல்வி ஆகிய அடிப்படை உரிமைகளுடன், சிறந்த சுகாதார வசதிகளும் கிடைக்க வேண்டியது அவசியம் என்று திருச்சி அப்போலோ மருத்துவமனையின் முதுநிலை பொதுமேலாளர் சாமுவேல் தெரிவித்தார்.
குழந்தைகள் தங்களின் உடல் நலத்தையும், குடும்பத்தினரின் உடல் நலத்தையும் பாதுகாத்திட ஊக்கப்படுத்தும் புதிய முயற்சியாக அவர்களின் ஆடைகளில் ஃப்யூச்சர் ஹீலர் என்ற வாசகம் பதித்த ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது. மேலும் குழந்தைகள் மருத்துவர்கள் திவ்யா, ஹிம பிந்து ஆகியோர் குழந்தைகளுக்கு தாய்ப்பால் புகட்டுவதின் நன்மைகள், தடுப்பூசியின் முக்கியத்துவம், சமசீர் உணவு மற்றும் மனஆரோக்கியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மருத்துவமனை மருத்துவ நிர்வாகி Dr. சிவம் மற்றும் பொது மேலாளர் சங்கீத் ஆகியோர் குழந்தைகள் தின நிகழ்ச்சி ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர். குழந்தைகள், பெற்றோர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்

பால் விலை உயர்வை கண்டித்து மதுரை கீரைத்துறையில் பாஜக மஹால் மண்டல் சார்பாக ஆர்ப்பாட்டம்.!!


தமிழகத்தில் பால் விலை உயர்வை கண்டித்து பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக இன்று தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது. அந்த வகையில் மதுரை கீரைத்துறை பகுதியில் பாஜக மஹால் மண்டல் தலைவர் ஐ.பாலமுருகன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பாஜக நகர் மாவட்ட தலைவர் மகா.சுசீந்திரன், மாவட்ட துணைத் தலைவர் ஜெயவேல் ஆகியோர் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினர்.

இந்நிகழ்விற்கு மாவட்டச் செயலாளரும், தெற்கு தொகுதி பொறுப்பாளருமான ஜனா ஸ்ரீ முருகன்,மாமன்ற உறுப்பினர் பூமா ஜனா ஸ்ரீ முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் மாநில செயற்குழு உறுப்பினர் பாரி ஜெயவேல், மண்டல் செயலாளர் ஆறுமுகம், வார்டு தலைவர் சதீஷ்குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர் செல்லப்பாண்டி, பி.கே கண்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.

மதுரை அப்போலோ மருத்துவமனையில் குழந்தைகள் தின விழா கொண்டாட்டம்.!

அப்போலோ மருத்துவமனையில் குழந்தைகள் தின சிறப்பு நிகழ்ச்சி கொண்டாட்டப்பட்டது


குழந்தைகளுக்கு பெருமை சேர்க்கும் விதமாகவும், அவர்களின் கல்வி மற்றும் நல்வாழ்வுக்கான விழிப்புணர்வைப் பரப்பும் விதமாக நாடு முழுவதும் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது.

இந்த குழந்தைகள் தினத்தில், ஆசியாவின் மிகப்பெரிய மற்றும் மிகுந்த நம்பிக்கைக்குரிய மருத்துவ சேவை குழுமமான அப்போலோ, குழந்தைகளுக்கான மருத்துவ உரிமை தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, நாடு முழுவதும் உள்ள அப்போலோ குழுமத்தின் சில மருத்துவமனைகளில் சிறப்பு நிகழ்ச்சியை நடத்தியது.

இந்த நிகழ்ச்சியில் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள குழந்தைகளை, அப்போலோ குடும்பத்தின் உறுப்பினர்களாக ஏற்று, சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்ட பகுதிக்கு அவர்களை வரவழைத்து மகிழ்விக்கப்பட்டது. அத்துடன் குழந்தைகள் மருத்துவர்கள், செவிலியர்கள் போல் உடையணிந்து மருத்துவமனையில் உள்ள மருத்துவர்களையும், உள் நோயாளிகளையும் சந்தித்து நலம் பெற வாழ்த்து தெரிவித்து புது அனுபவத்தை பெற்றனர்.


விளையாட்டுகளில் குழந்தைகளை பங்கு பெறச் செய்வது மட்டுமல்லாமல் சுகாதாரம் குறித்த தகவல்களும் கற்றுக் கொடுக்கப்பட்டது. கேள்வி கேட்டு பதில் அளிக்கும் வகையில் உறுப்புகளை தெரிந்து கொள்ளுங்கள் என்ற தலைப்பில் நாடகம் நடத்தப்பட்டது. அந்த நாடகத்தில் இதயம், நுரையீரல், எலும்புகள், தசைகள், கண்கள், மூக்கு மற்றும் மூளையின் செயல்பாடுகள் குழந்தைகளுக்கு எடுத்து சொல்லப்பட்டது. பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் நடத்தி பின்னர் குழந்தைகளுக்கும் பெற்றோருக்கும் ஆரோக்கிய சிற்றுண்டி வழங்கப்பட்டது.


மேலும் குழந்தைகளுக்கு போட்டிகள் நடத்தி பரிசுகள் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
நமது எதிர்காலத்தை நமது குழந்தைகளே நிர்ணயிக்கின்றனர். அந்த குழந்தைகளை நாம் பாதுகாத்து அவர்களின் ஆரோக்கியத்தை காப்பது தான் நமக்கு மகிழ்ச்சி அளிப்பதாக இருக்கும். இந்நிலையில் அப்போலோ மருத்துவமனை நடத்தும் இந்த நிகழ்ச்சி எங்கள் மருத்துவமனையின் மீது நம்பிக்கை வைத்திருக்கும் பெற்றோர் மற்றும் குழந்தைகளுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வாக நடத்தப்படுகிறது.

கள்ளம் கபடமில்லா குழந்தைகளின் இயல்பான மகிழ்ச்சியும் சிரிப்பும் தான் நமக்கு கிடைக்கும் மிகப்பெரிய பரிசு. உணவு உடை உறைவிடம் மற்றும் கல்வி ஆகிய அடிப்படை உரிமைகளுடன், சிறந்த சுகாதார வசதிகளும் கிடைக்க வேண்டியது அவசியம் என்று மதுரை அப்போலோ மருத்துவமனையில் தலைமை செயல்பாட்டு அதிகாரி நீலக்கண்ணன் தெரிவித்தார்.


அப்போலோ மருத்துவமனையின் குழந்தைகள் நல மருத்துவர் செந்தில்குமார், குழந்தைகள் நல அறுவை சிகிச்சை நிபுணர் விஜய் ஆனந்த், மூத்த குழந்தைகள் நல மருத்துவர் முருகன் ஜெயராமன், குழந்தைகள் இருதய சிகிச்சை நிபுணர் எல் கே செந்தில்குமார் ஆகியோர் குழந்தைகள் தங்களின் உடல் நலத்தையும், குடும்பத்தினரில் உடல் நலத்தையும் பாதுகாத்திட ஊக்கப்படுத்தும் புதிய முயற்சியாக அவர்களின் ஆடைகளில் ஃபியூச்சர் ஹீலர் என்ற வாசகம் பதித்த ஸ்டிக்கர் ஒட்டி ஊக்கப்படுத்தினர்.


மேலும் இந்த குழந்தைகள் தின சிறப்பு நிகழ்ச்சியின் போது அப்போலோ மருத்துவமனை டாக்டர் பிரவீண் ராஜன், JDMS, மார்க்கெட்டிங் பிரிவு பொதுமேலாளர் மணிகண்டன், நிர்வாக பொதுமேலாளர் டாக்டர் நிகில் திவாரி ஆகியோர் குழந்தைகள் தின நிகழ்ச்சி ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர்.

மதுரையில் THE KING RASHID INTERNATIONAL COLLEGE சார்பாக குழந்தைகள் தின விழா.!!

மதுரையில் இயங்கி வரும் THE KING RASHID INTERNATIONAL COLLEGE
சார்பாக
குழந்தைகள் தினத்தை முன்னிட்டு YMCA பள்ளியில் காது கேளாத குழந்தைகளுடன் கொண்டாடினர்.
இந்த நிகழ்வில் கல்லூரியின் நிறுவனர் முனைவர் k ஜாபர் ஷெரிப், பள்ளியின் முதல்வர் ஜொய்ஸ் மேரி மற்றும் ஆசிரியர் பெருமக்கள் கலந்துகொண்டனர்.

இந்த விழாவினை கல்லூரியின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் ஜாஹிர் ஹுசைன், விமான பொறியாளர் அம்ஜத் ஹுசைன், கல்லூரியின் பொறுப்பாளர்கள் ஷாகுல் ஹமீது மற்றும் சூர்யா மிக சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

கல்லூரியின் நிறுவனர் அவர்கள் இந்த விழாவை வழிநடத்திய இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவி ஈஷா பிரியதர்ஷினி மற்றும் அணைத்து மாணவர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

மதுரையில் THE KING RASHID INTERNATIONAL COLLEGE சார்பாக குழந்தைகள் தின விழா.!

மதுரையில் இயங்கி வரும் “THE KING RASHID INTERNATIONAL COLLEGE”
சார்பாக குழந்தைகள் தினத்தை முன்னிட்டு YMCA பள்ளியில் காது கேளாத குழந்தைகளுடன் கொண்டாடினர்.

இந்த நிகழ்வில் கல்லூரியின் நிறுவனர் முனைவர் k ஜாபர் ஷெரிப், பள்ளியின் முதல்வர் ஜொய்ஸ் மேரி மற்றும் ஆசிரியர் பெருமக்கள் கலந்துகொண்டனர்.

இந்த விழாவினை கல்லூரியின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் ஜாஹிர் ஹுசைன், விமான பொறியாளர் அம்ஜத் ஹுசைன், கல்லூரியின் பொறுப்பாளர்கள் ஷாகுல் ஹமீது மற்றும் சூர்யா மிக சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

கல்லூரியின் நிறுவனர் அவர்கள் இந்த விழாவை வழிநடத்திய இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவி ஈஷா பிரியதர்ஷினி மற்றும் அணைத்து மாணவர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

மதுரையில் THE KING RASHID INTERNATIONAL COLLEGE சார்பாக குழந்தைகள் தின விழா.!!

மதுரையில் இயங்கி வரும் THE KING RASHID INTERNATIONAL COLLEGE
சார்பாக
குழந்தைகள் தினத்தை முன்னிட்டு YMCA பள்ளியில் காது கேளாத குழந்தைகளுடன் கொண்டாடினர்.

இந்த நிகழ்வில் கல்லூரியின் நிறுவனர் முனைவர் k ஜாபர் ஷெரிப், பள்ளியின் முதல்வர் ஜொய்ஸ் மேரி மற்றும் ஆசிரியர் பெருமக்கள் கலந்துகொண்டனர்.

இந்த விழாவினை கல்லூரியின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் ஜாஹிர் ஹுசைன், விமான பொறியாளர் அம்ஜத் ஹுசைன், கல்லூரியின் பொறுப்பாளர்கள் ஷாகுல் ஹமீது மற்றும் சூர்யா மிக சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

கல்லூரியின் நிறுவனர் அவர்கள் இந்த விழாவை வழிநடத்திய இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவி ஈஷா பிரியதர்ஷினி மற்றும் அணைத்து மாணவர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

மாமன்னர் மணிக்குறவர் 69-வது குருபூஜை விழாவை முன்னிட்டு, மதுரையில் உள்ள அவரது சிலைக்கு பாஜக ஓபிசி அணி சார்பாக மாலை அணிவித்து மரியாதை.!!

மாமன்னர் மணிக்குறவர் 69-வது குருபூஜை விழாவை முன்னிட்டு, மதுரை தத்தனேரியில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு பாஜக ஓபிசி அணி சார்பாக மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.


இந்நிகழ்வில் ஓபிசி அணி மாநில பொருளாளர் மோகன்குமார், மாவட்ட துணைத் தலைவர் பாலன் ரேடியோஸ் உரிமையாளர் பாலமுருகன், மாநிலச் செயற்குழு உறுப்பினர் சாமிக்கண்ணு உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை அலங்கை பொன்.ரவி செய்திருந்தார்.

மதுரையில் மாற்றுத்திறனாளிகளுக்கு அரிசி வழங்கிய வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை.!


மதுரை வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் நிறுவனர் வழிகாட்டி மணிகண்டன் தலைமையில் உலக கருணை தினம் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதனை முன்னிட்டு தலா ஒரு அரிசி மூடை என மூன்று மாற்றுத்திறனாளிகள் குடும்பங்களுக்கு மூன்று அரிசி மூடைகளை வழங்கினார்.

இது குறித்து வழிகாட்டி மணிகண்டன் கூறுகையில்:
நமது அறக்கட்டளை மூலம் பல்வேறு நலத்திட்ட செயல்பாடுகளை யாரிடமும் நன்கொடைகள் பெறாமல் எனது தனிப்பட்ட சேமிப்பு மூலமாக அவ்வப்போது சேமிக்கும் சிறு சிறு தொகையை பொருத்து தொடர்ந்து பல உதவிகள் செய்து வருகிறேன்.

அந்த வகையில் உலக கருணை தினத்தை முன்னிட்டு ஒரு சிறப்பு குழந்தை, ஒரு பார்வை மாற்றுத்திறனாளி மற்றும் ஒரு தவழும் மாற்றுத்திறனாளி ஆகிய மூன்று பேரின் குடும்பத்திற்கு தலா ஒரு அரிசி மூட்டையாக மூன்று அரிசி மூடைகள் வழங்கப்பட்டது என்றார்.

இந்த நிகழ்ச்சியில் சிம்மக்கல் முதியோர் இல்லம் மேலாளர் கிரேசியஸ், உண்ணுங்கள் பருகுங்கள் வீணாக்காதீர்கள் அமைப்பின் நிறுவனர் ஷேக் மஸ்தான் மற்றும் மாற்றம் தேடி பாலமுருகன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

நலத்திட்ட உதவிகளை பெற்றுக்கொண்ட மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் வழிகாட்டி மணிகண்டனுக்கு தங்களது நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர்.

இளைஞர் குரல் செய்திகளுக்காக மதுரை செய்தியாளர் கனகராஜ்

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES