மதுரை வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் நிறுவனர் வழிகாட்டி மணிகண்டன் தலைமையில் உலக கருணை தினம் நிகழ்ச்சி நடைபெற்றது.இதனை முன்னிட்டு தலா ஒரு அரிசி மூடை என மூன்று மாற்றுத்திறனாளிகள் குடும்பங்களுக்கு மூன்று அரிசி மூடைகளை வழங்கினார்.இது குறித்து வழிகாட்டி மணிகண்டன் கூறுகையில்:நமது அறக்கட்டளை மூலம் பல்வேறு நலத்திட்ட செயல்பாடுகளை யாரிடமும் நன்கொடைகள் பெறாமல் எனது தனிப்பட்ட சேமிப்பு மூலமாக அவ்வப்போது சேமிக்கும் சிறு சிறு தொகையை பொருத்து தொடர்ந்து பல உதவிகள் செய்து வருகிறேன்.அந்த வகையில் உலக கருணை தினத்தை முன்னிட்டு ஒரு சிறப்பு குழந்தை, ஒரு பார்வை மாற்றுத்திறனாளி மற்றும் ஒரு தவழும் மாற்றுத்திறனாளி ஆகிய மூன்று பேரின் குடும்பத்திற்கு தலா ஒரு அரிசி மூட்டையாக மூன்று அரிசி மூடைகள் வழங்கப்பட்டது என்றார்.இந்த நிகழ்ச்சியில் சிம்மக்கல் முதியோர் இல்லம் மேலாளர் கிரேசியஸ், உண்ணுங்கள் பருகுங்கள் வீணாக்காதீர்கள் அமைப்பின் நிறுவனர் ஷேக் மஸ்தான் மற்றும் மாற்றம் தேடி பாலமுருகன் ஆகியோர் கலந்துகொண்டனர்.நலத்திட்ட உதவிகளை பெற்றுக்கொண்ட மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் வழிகாட்டி மணிகண்டனுக்கு தங்களது நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர். இளைஞர் குரல் செய்திகளுக்காக மதுரை செய்தியாளர் கனகராஜ்