Thursday , December 12 2024
Breaking News
Home / செய்திகள் (page 26)

செய்திகள்

All News

பின்னடைவுக்குப் பிறகு புகைப்படக் கலைஞர்களின் படங்களில் AI இன்போ என AI லேபிளுடன் உருவாக்கப்பட்ட மெட்டா மாற்றங்கள்

பின்னடைவுக்குப் பிறகு புகைப்படக் கலைஞர்களின் படங்களில் AI இன்போ என AI லேபிளுடன் உருவாக்கப்பட்ட மெட்டா மாற்றங்கள்

ஒரு வாரத்திற்கு முன்பு, மெட்டா தனது சமூக ஊடக தளங்களில் மேட் வித் AI எனத் தவறாகக் குறியிட்டதற்காக தலைப்புச் செய்திகளை வெளியிட்டது. பல புகைப்படக் கலைஞர்கள் தாங்கள் கிளிக் செய்த படங்கள் கூட மேட் பை AI லேபிளைக் கொண்டிருப்பதாகச் செய்தி நிறுவனங்களிடம் பேசியுள்ளனர்.

இதற்கு எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, சமூக ஊடக தளம் தற்போது இந்த பிரச்சனைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுத்துள்ளது. இப்போது, ​​Meta ஆனது மேட் வித் AI லேபிளை மாற்றியமைத்து, படங்களில் AI இன்ஃபோ என்று மாற்றியுள்ளது. நிறுவனம் ஒரு வலைப்பதிவு இடுகையில் மாற்றத்தை அறிவித்தது, அதன் முந்தைய லேபிள்கள் பயனர்களின் “எதிர்பார்ப்புகளை” பூர்த்தி செய்யவில்லை என்பதை ஒப்புக்கொண்டது.

“தொழில்துறையில் உள்ள மற்றவர்களைப் போலவே, இந்தக் குறிகாட்டிகளின் அடிப்படையிலான எங்கள் லேபிள்கள் எப்போதும் மக்களின் எதிர்பார்ப்புகளுடன் ஒத்துப்போவதில்லை மற்றும் போதுமான சூழலை எப்போதும் வழங்கவில்லை என்பதைக் கண்டறிந்துள்ளோம். எடுத்துக்காட்டாக, AI ஐப் பயன்படுத்தி சிறிய மாற்றங்களை உள்ளடக்கிய சில உள்ளடக்கங்கள், அதாவது ரீடூச்சிங் போன்றவை. AI உடன் தயாரிக்கப்பட்டது என்று லேபிளிடப்பட்ட தொழில்துறை நிலையான குறிகாட்டிகள், செயல்முறையை மேம்படுத்துவதற்காக நாங்கள் தொழில்துறையில் உள்ள நிறுவனங்களுடன் பணிபுரியும் போது, ​​எங்கள் லேபிளிங் அணுகுமுறை எங்கள் நோக்கத்துடன் சிறப்பாகப் பொருந்துகிறது, நாங்கள் எங்கள் பயன்பாடுகள் முழுவதும் AI தகவலுக்கு மேம்படுத்துகிறோம். , மேலும் தகவலுக்கு மக்கள் கிளிக் செய்யலாம்,” என்று நிறுவனம் இடுகையில் குறிப்பிட்டது.

தி வெர்ஜுக்கு McLaughlin இன் அறிக்கையின்படி, மொபைல் பயன்பாடுகளில் புதிய AI தகவல் லேபிளை இணையத்தில் தோன்றும் முன் பயனர்கள் முதலில் கவனிப்பார்கள். வெளியீடு படிப்படியாக அனைத்து தளங்களிலும் நடக்கிறது.

எனவே, இந்த புதுப்பிப்பில் என்ன மாற்றங்கள் சரியாக உள்ளன? நீங்கள் புதிய குறிச்சொல்லைக் கிளிக் செய்யும் போது, ​​அது பழைய “AI உடன் தயாரிக்கப்பட்டது” லேபிளின் அதே செய்தியைக் காண்பிக்கும். ஆனால் இப்போது, ​​இந்தச் செய்தி குறிச்சொல் பயன்பாட்டின் விரிவான விளக்கத்துடன் வரும், படம் முழுவதுமாக AI-உருவாக்கப்பட்டதாகவோ அல்லது ஜெனரேட்டிவ் ஃபில் போன்ற AI- அடிப்படையிலான கருவிகளைப் பயன்படுத்தி திருத்தப்பட்டதாகவோ இருக்கலாம் என்பதைக் குறிக்கிறது.

பிப்ரவரியில் தனது சமூக வலைப்பின்னல்களில் AI கருவிகள் மூலம் உருவாக்கப்பட்ட புகைப்படங்களை லேபிளிடுவதற்கான தனது விருப்பத்தை Meta அறிவித்தது. AI-உருவாக்கப்பட்ட உள்ளடக்கத்தை உண்மையான புகைப்படங்களிலிருந்து வேறுபடுத்திப் பார்க்க பயனர்களுக்கு உதவுவதை நோக்கமாகக் கொண்டது இந்த நடவடிக்கை. இந்த ஆண்டு மே மாதம் முதல், Meta தனது Facebook, Instagram மற்றும் Threads ஆப்ஸில் “மேட் வித் AI” லேபிளுடன் சில படங்களைத் தொடர்ந்து டேக் செய்து வருகிறது. இருப்பினும், இந்த முயற்சியானது விமர்சனங்களை எதிர்கொள்வதற்காக ஸ்கேனரின் கீழ் வந்தது. கடந்த வாரம், ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் தாய் நிறுவனம், “AI உடன் தயாரிக்கப்பட்டது” எனக் குறியிட்டதற்காக பயனர்கள் மற்றும் புகைப்படக்காரர்களிடமிருந்து பின்னடைவை எதிர்கொண்டதாக ஒரு TechCrunch அறிக்கை கூறியது. இந்த சிக்கல் பரவலான விரக்தியைத் தூண்டியது, பலர் தங்கள் மனிதனால் உருவாக்கப்பட்ட அல்லது குறைந்தபட்சமாக திருத்தப்பட்ட படங்கள் இயங்குதளத்தின் புதிய AI கண்டறிதல் அமைப்பால் தவறாக லேபிளிடப்பட்டதாகக் கூறினர்.

புகைப்படக் கலைஞர்கள் மற்றும் பயனர்கள் தங்கள் படங்கள் தவறாக லேபிளிடப்பட்ட பல நிகழ்வுகளைப் புகாரளித்தனர். ஒரு குறிப்பிடத்தக்க உதாரணம், TechCrunch ஆல் முன்னிலைப்படுத்தப்பட்டது, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அவர்களின் இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி வெற்றியைக் கொண்டாடும் புகைப்படம், இது மேட் வித் ஏஐ என்று தவறாகக் குறிக்கப்பட்டது. லேபிள் மொபைல் பயன்பாடுகளில் மட்டுமே தெரியும், இணையத்தில் இல்லை, இது குழப்பத்தை அதிகரிக்கிறது

பட்டாசு விபத்து பலி எண்ணிக்கை 4 ஆக உயர்வு… ரூ.3 லட்சம் நிவாரண தொகை அறிவித்தார் முதல்வர் ஸ்டாலின்!

பட்டாசு விபத்து பலி எண்ணிக்கை 4 ஆக உயர்வு... ரூ.3 லட்சம் நிவாரண தொகை அறிவித்தார் முதல்வர் ஸ்டாலின்!

இன்று அதிகாலை பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் நிவாரண தொகையை முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி, சாத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஏராளமான பட்டாசு ஆலைகள் உள்ளன. தீபாவளி பண்டிகைக்காக பட்டாசு தயாரிப்பு பணியில் பட்டாசு ஆலை தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.சாத்தூர் அருகே பந்துவார்பட்டியில் ஏராளமான பட்டாசு ஆலைகள் உள்ளன. இன்று அங்கு காலை ஒரு பட்டாசு ஆலையில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இதில் வேலை செய்து கொண்டிருந்த மூன்று தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.

மேலும், வெடி விபத்தில் மூன்று அறைகள் சேதமாகியுள்ளதாகவும், சிலர் உள்ளே சிக்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தகவல் அறிந்த சாத்தூர் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளளனர். அத்துடன் பட்டாசு ஆலைக்குள் யாரும் சிக்கியுள்ளனரா என தேடி வருகின்றனர். பட்டாசு ஆலை விபத்து குறித்து சாத்தூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது குறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், விருதுநகர் மாவட்டம், சாத்தூர் வட்டம், பந்துவார்பட்டி கிராமத்தில் இயங்கி வரும் தனியாருக்குச் சொந்தமான பட்டாசு தயாரிக்கும் ஆலையில் இன்று (29-06-2024) காலை திடீரென ஏற்பட்ட வெடி விபத்தில் அச்சங்குளம் திரு. ராஜ்குமார் (வயது 45), நடுச்சூரங்குடி திரு. மாரிச்சாமி (வயது 40), வெம்பக்கோட்டை திரு. செல்வகுமார் (வயது 35) மற்றும் திரு. மோகன் (வயது 30) ஆகியோர் உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமும், வேதனையும் அடைந்தேன்.இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களும், ஆறுதல்களும். அத்துடன் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ3,00,000 முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

“லடாக்கில் உயிர்நீத்த ராணுவ வீரர்களின் தியாகத்தை நாடு நினைவில் கொள்ளும்” – ராகுல் காந்தி

"லடாக்கில் உயிர்நீத்த ராணுவ வீரர்களின் தியாகத்தை நாடு நினைவில் கொள்ளும்" - ராகுல் காந்தி

புதுடெல்லி: ‘பயிற்சியின் போது ஆற்றில் மூழ்கி 5 ராணுவ வீரர்கள் உயிரிழந்த செய்தி மிகவும் வருத்தம் அளிக்கிறது.

நாடு அவர்களின் தியாகத்தை, அர்ப்பணிப்பை எப்போதும் நினைவில் கொள்ளும்’ என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் இந்தியில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘லடாக்கில் ராணுவப் பயிற்சியில் டேங்கரில் ஆற்றைக் கடக்க முயன்ற போது ஆற்று வெள்ளத்தில் மூழ்கி 5 ராணுவ வீரர்கள் உயிரிழந்த சம்பவம் மிகவும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

வீரமரணம் அடைந்துள்ள அனைத்து வீரர்களுக்கும் எனது அஞ்சலியை செலுத்துவதுடன், அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த துயர் மிகு தருணத்தில் நாங்கள் அவர்களுடன் இருக்கிறோம். அவர்களின் அர்ப்பணிப்பு, தியாகம் மற்றும் சேவைகளை தேசம் எப்போதும் நினைவில் வைத்திருக்கும்’ என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, லடாக் தலைநகர் லே-வில் இருந்து 148 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பகுதி நியோமோ-சுஷுல். இங்குள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு (எல்ஏசி) அருகே ராணுவ வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டு வந்துள்ளனர். இன்று (ஜூன் 29) அதிகாலை 1 மணி அளவில் டேங்கர் மூலம் ஆற்றைக் கடக்கும் பயிற்சியில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர். அப்போது, ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் காரணமாக 5 ராணுவ வீரர்களும் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தனர்.

“பாஜகவுக்கு கூலிப்படை தலைவன் சீர்காழி சத்யாவுடன் தொடர்பு” – செல்வப்பெருந்தகை கடும் தாக்கு!!

"பாஜகவுக்கு கூலிப்படை தலைவன் சீர்காழி சத்யாவுடன் தொடர்பு" - செல்வப்பெருந்தகை கடும் தாக்கு!!

கமலாலயம் என்பது ரவுடிகளின் புகலிடமாகவும், பாதுகாப்பு அரணாகவும் மாறியிருப்பது தமிழக பா.ஜ.க. எந்த திசையில் பயணிக்கிறது என்பதை புரிந்து கொள்ளலாம் என்று செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 10 ஆண்டுகளாக பா.ஜ.க. தலைமையிலான ஒன்றிய அரசு செயல்படுவதால் சமூக விரோத சக்திகள், கூலிப்படை தலைவர்கள், குற்ற வழக்கில் காவல்துறையினரால் தேடப்படுபவர்கள் ஆகியோர் தங்களை பாதுகாத்துக் கொள்ள தமிழக பா.ஜ.க.வில் இணைவது நீண்டகாலமாக நடந்து வருகிறது. கடந்த 2021 ஜனவரி 20 ஆம் தேதி பா.ஜ.க. தலைமை அலுவலகமான கமலாலயத்தில் மாநில நிர்வாகிகள் முன்னிலையில் தனது ஆதரவாளர்களுடன் பெரும் படையோடு பா.ஜ.க.வில் இணைந்தவர் கூலிப்படைத் தலைவர் சீர்காழி சத்யா. திருச்சி ராமஜெயம் கொலை வழக்கில் சந்தேகிக்கப்பட்டு தேடப்பட்டு வந்த மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியைச் சேர்ந்த சத்யா பிரபல தாதாவாக கருதப்படுபவர். கோவையை சேர்ந்த பிரபல ரவுடி மோகன்ராமுக்கு வலது கரமாக பல குற்றங்களில் ஈடுபட்டு வந்தார். 2017 ஆம் ஆண்டு கும்பகோணத்தில் வழக்கறிஞர் ராஜா என்பவரை கொலை செய்த நபர்கள் மூன்று பேரை பொது மக்கள் முன்னிலையில் ஓடஓட வெட்டி படுகொலை செய்தவர் சீர்காழி சத்யா என்று காவல்துறையினரால் வழக்கு பதிவு செய்யப்பட்டு தேடப்பட்டு வருபவர். காவல்துறை என்கவுண்டர் பட்டியலில் மூன்றாம் இடத்தில் இருந்தவர். தமிழக அமைச்சர் கே.என். நேருவின் சகோதரர் கொலை வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணையில் சந்தேக நபர்களான 12 ரவுடிகளை அடையாளம் கண்டு அதில் முக்கியமான நபராக சீர்காழி சத்யாவை காவல்துறையினர் தேடி வந்தனர்.

இதற்கிடையே பா.ஜ.க.வை சேர்ந்த முக்கிய நபர் ஒருவருக்கு நேற்று முன்தினம் பிறந்தநாள் விழா செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அருகே உள்ள ரிசார்ட் ஒன்றில் மதுவிருந்துடன் நடந்துள்ளது. இதில் பா.ஜ.க. முக்கிய நிர்வாகிகளும் கலந்து கொண்டுள்ளனர். இவ்விழாவில் காவல்துறையால் தேடப்பட்டு வரும் கூலிப்படை தலைவரான பிரபல தாதா சீர்காழி சத்யா தனது ஆதரவாளர்களுடன் கலந்து கொண்டுள்ளதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனடிப்படையில் அவரை கைது செய்ய காவல்துறையினர் முனைந்த போது விழா முடிந்து காரில் செங்கல்பட்டு மார்க்கமாக சென்று கொண்டிருந்த போது பழவேலி பகுதியில் தடுத்து நிறுத்தி கைது செய்ய முயன்ற போது, தப்பிக்க முயன்ற சீர்காழி சத்யா கையில் வைத்திருந்த அரிவாளால் இன்ஸ்பெக்டரை வெட்டி காயப்படுத்திய போது காவல்துறையினர் அவரை காலில் சுட்டு வளைத்து பிடித்து கைது செய்துள்ளனர். இத்தகைய கொடூரமான கொலை வழக்குகளில் சம்பந்தப்பட்டவரை பா.ஜ.க.வில் சேர்த்து புகலிடம் கொடுத்தது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது. கமலாலயம் என்பது ரவுடிகளின் புகலிடமாகவும், பாதுகாப்பு அரணாகவும் மாறியிருப்பது தமிழக பா.ஜ.க. எந்த திசையில் பயணிக்கிறது என்பதை புரிந்து கொள்ளலாம்.

அரசியலில் ரவுடிகளின் ஆதிக்கத்தை அனுமதிக்கிற எந்த இயக்கமும் வளர்ந்ததாக வரலாறு கிடையாது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை பற்றியும், கள்ளக்குறிச்சி விஷ சாராய சாவு குறித்தும் வாய்கிழிய நாள்தோறும் பேசுகிற அண்ணாமலை, கூலிப்படை தலைவன் சீர்காழி சத்யா உள்ளிட்ட பிரபல ரவுடிகளுக்கும், பா.ஜ.க.வுக்கும் உள்ள தொடர்பு அம்பலமாகி வருவது குறித்து என்ன விளக்கம் தரப் போகிறார் என்பதை நாடே எதிர்பார்க்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

மதுவிலக்கு திருத்தச் சட்ட மசோதா தாக்கல் – தமிழ்நாட்டில் இனி கள்ளச்சாராயம் விற்றால் ஆயுள்தண்டனை – ஸ்டாலின்

CM Stalin: மதுவிலக்கு திருத்தச் சட்ட மசோதா தாக்கல் - தமிழ்நாட்டில் இனி கள்ளச்சாராயம் விற்றால் ஆயுள்தண்டனை - ஸ்டாலின்

மதுவிலக்கு திருத்தச் சட்ட மசோதாவை முதலமைச்சர் ஸ்டாலின், தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.

அதன்படி, இனி தமிழ்நாட்டில் இனி கள்ளச்சாராயம் விற்றால் ஆயுள்தண்டனை விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுவிலக்கு திருத்தச் சட்ட மசோதா:

மதுவிலக்கு திருத்தச் சட்ட மசோதாவை சட்டப்பேரவையில் தாக்கல் செய்து பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், கள்ளச்சாராய விற்பனைக்கு தற்போது வழங்கப்படும் தண்டனை போதுமானதாக இல்லாததால் திருத்தம் என விளக்கமளித்தார். கள்ளச்சாராயம் விற்பனை, பதுக்கல் என அனைத்துவிதமான குற்றங்களையும் தடுக்கும் வகையில் சட்டதிருத்தம் செய்யப்பட்டுள்ளது. கள்ளச்சாராய விற்பனை, தயாரிப்புக்கு வழங்கப்படும் தண்டனைகள் போதுமானததாக இல்லாததால் சட்ட திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

தண்டனை விவரங்கள்:

கள்ளச்சாராயத்தை முற்றிலும் ஒழிக்க கடுமையான தண்டனை வழங்கும் வகையில் சட்டதிருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. புதிய மசோதாவின்படி, கள்ளச்சாராய குற்றங்களான பதுக்கல் மற்றும் விற்பனையில் பயன்படுத்தப்படும் அனத்து அசையும் சொத்துக்களையும் பறிமுதல் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. கள்ளச்சாராயத்தை தயாரித்து விற்பவர்களுக்கு, ஆயுள் வரை கடுங்காவல் தண்டனையுடன், 10 லட்சம் ரூபாய் வரையில் அபராதம் விதிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஜாமின் முறிவினை நிறைவேற்ற நிர்வாகத்துறை நடுவருக்கு அதிகாரம் அளிக்க சட்டதிருத்தத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

தத்துவ நோக்கில் செவ்வியல் இலக்கியங்கள் என்ற பன்னாட்டு கருத்தரங்கம்…

தத்துவ நோக்கில் செவ்வியல் இலக்கியங்கள் என்ற பன்னாட்டு கருத்தரங்கம் இன்று இனிதே நடைபெற்றது. நிகழ்வில் பல்வேறு பல்கலைக்கழகங்களை சேர்ந்து பேராசிரியர்கள் ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பித்தார்கள். வெளிநாடுகளிலிருந்தும், வெளி மாநிலங்களிலிருந்தும் ஆய்வாளர்கள் /பேராசிரியர்கள் ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்திருந்தார்கள். உயிர்மை பதிப்பகத்தின் நிறுவன கவிஞர் திரு மனுஷ்யபுத்திரன், திரு, பழமலை IAS, கல்லூரியின் நிர்வாக அறங்காவலர் அவர்களும் பசுமைக்குடி சார்பில் இணைய வழியாக நானும் கலந்து கொண்டிருந்தேன். பேராசிரியர் து. ராஜ்குமார் அவர்கள் நிகழ்வை சிறப்பு ஒருங்கிணைத்திருந்தார். 285 பக்கத்தில்ஆய்வு மலர் வெளியிடப்பட்டது.

-நரேந்திரன் கந்தசாமி

தமிழ்நாடு நீர்வளத்துறையின் புதிய இலச்சினை வெளியீடு: அமைச்சர் துரைமுருகன் வெளியிட்டார்

சென்னை: தமிழ்நாடு நீர்வளத்துறையின் புதிய இலச்சினையை அமைச்சர் துரைமுருகன் வெளியிட்டார். சென்னை தலைமைச்செயலகத்தில் தமிழ்நாட்டில் நீர்வளத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில், நீர்ப்பாசனம் பாதுகாப்பான குடிநீர் மற்றும் மாநில நீர் பாதுகாப்பு ஆகியவற்றை நிறைவேற்றி தமிழ்நாட்டை நீர்மிகை மாநிலமாக மாற்றும் குறிக்கோளை உள்ளடக்கிய நீர்வளத்துறையின் புதிய இலச்சினையை (லோகோ) அமைச்சர் துரைமுருகன் வெளியிட்டார்.

இந்த நிகழ்ச்சியின் போது, நீர்வளத்துறையின் கூடுதல் தலைமைச்செயலர் சந்தீப் சக்சேனா, நீர்வளத்துறையின் சிறப்பு செயலர் முருகன், முதன்மை தலைமை பொறியாளர் அசோகன், திருச்சி மண்டல தலைமை பொறியாளர் சுப்பிரமணியன் மற்றும் நீர்வளத்துறை பொறியாளர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.

இலங்கை வர்த்தகத்தை விற்ற ஏர்டெல்.. வாங்கியது யார் தெரியுமா..?

இலங்கை வர்த்தகத்தை விற்ற ஏர்டெல்.. வாங்கியது யார் தெரியுமா..?

இந்திய நிறுவனங்களுக்கு புதிய முதலீட்டு சந்தையாக மாறியிருக்கிறது இலங்கை, ஆட்டோமொபைல் முதல் உணவு பொருட்கள் வரையில் பல இந்திய தயாரிப்புகளை இலங்கையில் விற்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கடந்த 3 வருடத்தில் அந்நாட்டு உள்கட்டமைப்பு திட்டத்திலும் இந்திய நிறுவனங்கள் அசத்தி வருகிறது.உதாரணமாக அதானி குழுமம் துறைமுகத்தில் இருந்து மின்சாரம் வரையில் பல துறையில் இலங்கையில் முதலீடு செய்து வருகிறது. இப்படியிருக்கும் சூழ்நிலையில் ஏற்கனவே இலங்கையில் செயல்பட்டு வந்த ஏர்டெல் மொத்தமாக வெளியேற முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.இலங்கையின் தொலைத்தொடர்பு சந்தையில் முன்னிலை வகிக்கும் டைலாக் ஆக்சியாடா (Dialog Axiata) நிறுவனம், இந்தியாவின் பார்தி ஏர்டெல் நிறுவனம் 100% பங்குகளை வைத்திருந்த அதன் இலங்கை கிளை நிறுவனத்தை (Bharti Airtel Lanka) முழுவதுமாக வாங்கியுள்ளது.Dialog Axiata நிறுவனம் 100 சதவீத பங்குகளையும் கைப்பற்றியுள்ளதாக ஜூன் 26 ஆம் தேதி அதிகாரப்பூர்வ அறிக்கை மூலம் அறிவித்தது. இதன் கைப்பற்றல் பணிகள் பணமாக இல்லாமல் பங்கு மாற்று ஒப்பந்தம் (Share Swap Deal) மூலம் முடிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் பார்தி ஏர்டெல் நிறுவனம், டைலாக் ஆக்சியாடா பங்குகளை வாங்கியுள்ளது.டைலாக் நிறுவனம் ஏர்டெல் லங்காவின் 100% பங்குகளையும் பெற்றுள்ள நிலையில், இதன் மதிப்புக்கு இணையாக பாரதி ஏர்டெல் நிறுவனத்திற்கு டைலாக் நிறுவனத்தின் 10.355% பங்குகளை அளித்துள்ளது.ஏப்ரல் 2024 இல், இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணையம் பாரதி ஏர்டெல் லங்காவை பங்கு மாற்று ஒப்பந்தம் மூலம் டைலாக் ஆக்சியாடா நிறுவனத்துடன் இணைப்பதற்கான அனுமதியை வழங்கியது. இதை தொடர்ந்து தற்போது பாரதி ஏர்டெல் லங்கா மொத்தமாக டைலாக் ஆக்சியாடா உடன் இணைக்கப்பட்டு உள்ளது.இதன் வாயிலாக இலங்கையில் உள்ள பாரதி ஏர்டெல் வாடிக்கையாளர்கள், டைலாக் ஆக்சியாடா வாயிலாக தடையற்ற வலையமைப்பில் சிறந்த தொலைத்தொடர்பு சேவைகளைப் பெற முடியும் என பாரதி ஏர்டெல் நிர்வாக இயக்குநர் கோபால் வித்தல் தெரிவித்திருந்தார்.இலங்கையில் 17 மில்லியனுக்கும் அதிகமான வாடிககையாளர்களை கொண்ட மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமாக டைலாக் ஆக்சியாடா விளங்குகிறது. ஏர்டெல் லங்கா சுமார் 5 மில்லியன் சந்தாதாரர்களைக் கொண்டுள்ளது.பாரதி ஏர்டெல் மற்றும் டைலாக் ஆக்சியாடா நிறுவனங்கள், 2023 ஆம் ஆண்டு மே மாதமே இலங்கையில் தங்கள் வர்த்தகத்தை இணைப்பதற்கான ஒப்பந்தத்தை செய்துக் கொண்டது, ஆனால் இலங்கை டெலிகாம் ஆணையம் அனுமதி வழங்கவில்லை, இதனால் தாமதமானது.

விண்வெளியில் மேடே: செயற்கைக்கோள் உடைந்ததால், ஸ்டார்லைனரில் தங்குவதற்கு சுனிதா வில்லியம்ஸ் உத்தரவிட்டார்

விண்வெளியில் மேடே: செயற்கைக்கோள் உடைந்ததால், ஸ்டார்லைனரில் தங்குவதற்கு சுனிதா வில்லியம்ஸ் உத்தரவிட்டார்

சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS), நாசா விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் ஒரு பதட்டமான தருணத்தில் போயிங்கின் ஸ்டார்லைனர் விண்கலம் மற்றும் பிற திரும்பும் வாகனங்களில் அவசரகால தங்குமிடம் பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது .

புதன்கிழமை விண்வெளிக் குப்பைகள் சுற்றுவட்ட ஆய்வகத்தை அச்சுறுத்தியதால் அவசர உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

செயற்கைக்கோள் குறித்து நாசாவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டபோது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளதுநிலையத்திற்கு அருகில் உயரத்தில் உடைப்பு.

ஒரு நிலையான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மிஷன் கண்ட்ரோல் அனைத்து குழு உறுப்பினர்களையும் அந்தந்த விண்கலத்தில் தங்குமிடம் பெற அறிவுறுத்தியது. ஜூன் 5 முதல் ISS கப்பலில் இருந்த வில்லியம்ஸ் மற்றும் வில்மோர், ஸ்டார்லைனர் கேப்சூலில் தஞ்சம் புகுந்தனர்.

ஏறக்குறைய ஒரு மணி நேரம், விண்வெளி வீரர்கள் தங்களுடைய பாதுகாப்பு தங்குமிடங்களில் இருந்தபோது, ​​மிஷன் கண்ட்ரோல் குப்பைகளின் பாதையை உன்னிப்பாகக் கண்காணித்தது. உடனடி அச்சுறுத்தல் கடந்துவிட்டதா என்பதைத் தீர்மானித்த பிறகு, குழுவினர் தங்கள் விண்கலத்திலிருந்து வெளியேறவும், நிலையத்தில் இயல்பான செயல்பாடுகளை மீண்டும் தொடங்கவும் அனைத்து தெளிவுகளையும் வழங்கினர்.

திருச்சியில் கலைஞர் நூலகம், ஓசூரில் பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்படும்: ஸ்டாலின் அறிவிப்பு…

Tamil News Today  Live updates: திருச்சியில் கலைஞர் நூலகம், ஓசூரில் பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்படும்: ஸ்டாலின் அறிவிப்பு

ஓசூரில் சர்வதேச விமான நிலையமும், திருச்சியில் கலைஞர் பெயரில் நூலகமும் அமைக்கப்படும் என்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

தமிழ்நாட்டை நோக்கி உலக நிறுவனங்கள் வந்து கொண்டுள்ளனர். இதன் மூலம் தமிழக இளைஞர்களுக்கு வேலை கிடைக்கிறது. மோட்டார் வாகனங்கள், உதிரி பாகங்கள் ஏற்றுமதியில் இந்தியாவின் முதல் மாநிலமாக தமிழகம் இருக்கிறது. இந்தியாவில் இரண்டாவது பொருளாதார மாநிலமாக இருக்கிறது தமிழகம்.

ஓசூர் கடந்த சில ஆண்டுகளாக அதிக முதலீட்டுகளை ஈர்த்து வருகிறது. அந்த நகரை தமிழகத்தின் முக்கியமான பொருளாதார வளர்ச்சி மையமாக உருவாக்க நவீன உள்கட்டமைப்பை ஏற்படுத்தி வருகிறது தமிழக அரசு. கிருஷ்ணகிரி, தருமபுரி பொருளாதார வளர்ச்சி அடைய ஓசூரில் விமான நிலையம் அமைப்பது அவசியமாக கருதப்படுகிறது. ஓசூரில் 2,000 ஏக்கரில் ஆண்டுக்கு 3 கோடி பயணிகளை கையாளும் விதமாக பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்படும்’ என்று அறிவித்தார்.

மேலும் திருச்சியில் கலைஞர் பெயரில் நூலகம் மற்றும் ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES