Thursday , December 12 2024
Breaking News
Home / செய்திகள் (page 97)

செய்திகள்

All News

திரு. ராகுல் காந்தி இந்திய ஒற்றுமைப் பயணம்” வெற்றிபெற வாழ்த்து – தமிழக முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின்

அன்புச் சகோதரர் திரு. ராகுல் காந்தி அவர்கள், இந்தியாவின் ஆன்மாவை மீட்டெடுக்க, நமது குடியரசின் உயர் விழுமியங்களை உயர்த்திப் பிடிக்க, நாட்டு மக்களை அன்பால் ஒன்றிணைப்பதற்கான பயணத்தை இன்று தொடங்கியிருக்கிறார்.

சமத்துவத்தின் சின்னமான வள்ளுவர் சிலை உயர்ந்து நிற்கும் குமரிமுனையைக் காட்டிலும் இந்த “இந்திய ஒற்றுமைப் பயணத்தைத் தொடங்கப் பொருத்தமான இடம் வேறு இருக்கமுடியாது. மதத்தால் பிளவுபடுத்தலும், கேடு விளைவிக்கும் வெறுப்புப் பரப்புரைகளும் மக்களின் மனங்களை மூழ்கடித்துக் கொண்டிருக்கும் வேளையில், இந்தியாவை ஆதிக்கத்திலிருந்து விடுவிக்கும் அரும்பணியை நாட்டின் பழம்பெரும் கட்சியான காங்கிரஸ் பேரியக்கம் முன்னெடுத்துள்ளது.

பெருமைமிகு நமது குடியரசை மீண்டும் கண்டெடுக்கும் தனது நோக்கத்தில் “இந்திய ஒற்றுமைப் பயணம்” வெற்றிபெற வாழ்த்துகிறேன். -தமிழக முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின்

மதுரையில் நோபல் உலக சாதனை புரிந்த மாணவி அபிநிதா.!

மதுரை தெப்பக்குளம் பகுதியில் உள்ள மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் இந்துமதி மற்றும் பி.டி.ஆர் பொறியியல் கல்லூரி முதல்வர் டாக்டர் தனவேலன் ஆகியோர் முன்னிலையிலும், 18-ஆம் படி சிலம்பம் அகாடமியின் தலைமை ஆசான் சிலம்பு செல்வன் மாரிமுத்து மற்றும் நோபல் புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட் புரொபஷனல் எடிட்டர் தியாகராஜன் அவர்களின் தலைமையிலும் நோபல் உலக சாதனை முயற்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மதுரையை சேர்ந்த சிலம்புச்செல்வன் மாரிமுத்து- கல்யாணி ஆகியோரின் மகள் 9-ம் வகுப்பு பயிலும் மாணவி அபிநிதா (வயது 14) இடைவிடாது இரண்டு மணி நேரம் சிலம்பம் சுற்றி நோபல் உலக சாதனை படைத்தார். அவருக்கு ஏராளமானோர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

மதுரை விளாங்குடியில் நடந்த கந்தன் திருமண விழாவில் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்று வாழ்த்து.!

மதுரை விளாங்குடியில் கந்தன் என்ற கந்தசாமி திருமண விழா நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்ட முன்னாள் கூட்டுறவுதுறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ, ஜெயந்தி ராஜூ ரம்யா கணேஷ்பிரபு மற்றும் மாவட்ட துணைச்செயலாளர் ராஜா, மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் எம்.எஸ் பாண்டியன், அவைத்தலைவர் அண்ணாதுரை, மாவட்ட பொருளாளர் பா.குமார், மாமன்ற உறுப்பினர்கள் சோலைராஜா,பி.கே.எம்.மாரிமுத்து,பி.ஆர்.சி.கிருஷ்ணமூர்த்தி, நாகஜோதி சித்தன்,அதிமுக பகுதி செயலாளர் சித்தன்,20 வது வார்டு வட்டக்கழக செயலாளர் மார்க்கெட் மார்நாடு, தென்னிந்திய பார்வர்ட் பிளாக் நிறுவனத்தலைவர் திருமாறன் ஜி, முக்குலத்தோர் எழுச்சி கழகம் பொதுச்செயலாளர் வி.ஆர்.கே கவிக்குமார், பாஜக மாவட்ட செயலாளர் வேங்கை மாறன், உள்பட ஏராளமான முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு மணமக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

மதுரையில் பி.கே மூக்கையா தேவரின் சிலைக்கு, தென்னிந்திய பார்வர்ட் பிளாக் நிறுவனத்தலைவர் திருமாறன் ஜி மாலை அணிவித்து மரியாதை.!

பி.கே மூக்கையா தேவரின் நினைவு தினத்தை முன்னிட்டு, மதுரை அரசரடி பகுதியில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு, தென்னிந்திய பார்வர்ட் பிளாக் நிறுவனத்தலைவர் திருமாறன் ஜி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் மாநில செயலாளர் மாரிமறவன்,மாநில தொண்டரணி தலைவர் ஸ்ரீ ராம்ஜி, மாநில தொழிற்சங்க துணைத்தலைவர் விருமாண்டி, மாநில மகளிர் அணி பொதுச் செயலாளர் தெய்வசக்தி, மாவட்ட தலைவர் மருதுஆனந்த், மாவட்ட பொதுச் செயலாளர் ஊமச்சிகுளம் சுரேஷ்,மாவட்ட செயலாளர் கமல் உள்பட நிர்வாகிகள், ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மதுரை மாவட்ட செய்தியாளர் கனகராஜ்

மதுரை மாவட்டம், திருமங்கலம் சாத்தங்குடி கிராமத்தில், பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ அய்யனார் திருக்கோயில் பிரமலைக்கள்ளர் சமுதாயம் சின்ன பங்காளி பெட்டி எடுப்பு திருவிழா.!

மதுரை மாவட்டம், திருமங்கலம் வட்டம், சாத்தங்குடி கிராமத்தில் அமைந்துள்ள, சக்கரைத்தேவன் வகையறாவிற்கு பாத்தியப்பட்ட பழமை வாய்ந்த, அருள்மிகு ஸ்ரீபூரண, ஸ்ரீ புஷ்கலா, சமேத அய்யனார் திருக்கோயிலில், 300 வருடங்களுக்கு பிறகு பிரமலைக்கள்ளர் சமுதாயம் சின்ன பங்காளி பெட்டி எடுப்பு திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

சுவாமியின் நகைகள் மற்றும் பொருட்கள் அடங்கிய பெட்டி பூக்களால் அலங்கரிக்கப்பட்டு மாலை மரியாதையுடன் சிறப்பு ஆராதனை செய்யப்பட்டு , கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக எடுத்து வரப்பட்டது.

300 வருடங்களுக்கு பிறகு திருவிழா நடைபெறுவதால் கிராமத்தினர் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.கிராமமே திருவிழா கோலம் பூண்டுள்ளது.

திருவிழா ஏற்பாடுகளை சக்கரை தேவன் வகையறாவை சேர்ந்த பங்காளிகள் சிறப்பாக செய்திருந்தனர்.

மதுரை மாவட்ட செய்தியாளர் கனகராஜ்

மதுரையில் பி.கே மூக்கையா தேவரின் சிலைக்கு, முக்குலத்தோர் எழுச்சி கழகத்தின் பொதுச்செயலாளர் வி.ஆர்.கே.கவிக்குமார் மாலை அணிவித்து மரியாதை.!

பி.கே மூக்கையா தேவரின் நினைவு தினத்தை முன்னிட்டு, மதுரை அரசரடி பகுதியில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு, முக்குலத்தோர் எழுச்சி கழகத்தின் பொதுச்செயலாளர் வி.ஆர்.கே.கவிக்குமார் அவர்களின் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வின் போது நேதாஜி சுபாஷ் சேனை மாநில செயலாளர் சுமன் தேவர் உடன் இருந்தார்.

இதில் மதுரை புறநகர் மாவட்ட செயலாளர் துரை கோபிநாதன், மாவட்ட இளைஞரணி செயலாளர் பசும்பொன் ராஜா உள்பட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மதுரையில் பீ.கே.மூக்கையாத்தேவர் சிலைக்கு அ.இ.பார்வர்ட் பிளாக் கட்சி மாநில பொதுச்செயலாளர் பி.வி.கதிரவன் மாலை அணிவித்து மரியாதை

பீ.கே.மூக்கையாத்தேவரின் நினைவு தினத்தை முன்னிட்டு மதுரை அரசரடி பகுதியில் உள்ள அவரின் திருவுருவச் சிலைக்கு அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் மாநில பொதுச் செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான பி.வி.கதிரவன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்வில் கட்சி நிர்வாகிகள் முத்துராமலிங்கம், திருப்பதி, பசும்பொன், சிவபாண்டியன், வடிவேல், ஆசைராஜ், ஆதவன், தங்கப்பாண்டி, சண்முகம் உள்பட நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மதுரை மாவட்ட செய்தியாளர் கனகராஜ்

மதுரையில் பீ.கே.மூக்கையாத்தேவரின் சிலைக்கு நேதாஜி சுபாஷ் சேனை மாநில செயலாளர் சுமன் மாலை அணிவித்து மரியாதை.!

பி.கே மூக்கையா தேவரின் நினைவு தினத்தை முன்னிட்டு, மதுரை அரசரடி பகுதியில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு, ஏராளமான அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அந்த வகையில் நேதாஜி சுபாஷ் சேனை நிறுவனத் தலைவர் வழக்கறிஞர் மகாராஜன் அவர்களின் ஆணைக்கிணங்க, மாநில செயலாளர் சுமன்தேவர் அவர்கள் ஏராளமான நிர்வாகிகளுடன் வந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்வில் மாவட்ட நிர்வாகிகள், ஆட்டோ தொழிற்சங்க நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மதுரை மாவட்ட செய்தியாளர் கனகராஜ்

மதுரை மாவட்டம் கீழபனங்காடியில் எஸ்.கே.எம் உலக சிலம்பம் விளையாட்டு சங்கம் சார்பாக மாநில அளவிலான சிலம்பம் போட்டி

மதுரை மாவட்டம் கீழபனங்காடியில் எஸ்.கே.எம் உலக சிலம்பம் விலையாட்டு சங்கம் சார்பாக நடந்த மாநில அளவிலான சிலம்பம் போட்டியில் ஸ்ரீ.சித்தந்த இராவணன் சிலம்பம் &நாட்டுப்புற கலை அகாடமி மாணவர்கள். மாணவிகள். 6 முதல் பரிசு.6 இரண்டாம் பரிசு வென்றனர்.

இந்நிகழ்வில் சிலம்பம் ஆசான்.ச.விக்னேஷ்வரன், ஆனையூர் அரசு உயர்நிலைப் பள்ளி ஆசிரியர் ப.ஹரிபாபு, சிறப்பு விருந்தினர் நாகராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மதுரை மாவட்ட செய்தியாளர் கனகராஜ்

மதுரை மாவட்டம் கீழபனங்காடியில் எஸ்.கே.எம் உலக சிலம்பம் விலையாட்டு சங்கம் சார்பாக நடந்த மாநில அளவிலான சிலம்பம் போட்டியில் ஸ்ரீ.சித்தந்த இராவணன் சிலம்பம் &நாட்டுப்புற கலை அகாடமி மாணவர்கள். மாணவிகள். 6 முதல் பரிசு.6 இரண்டாம் பரிசு வென்றனர்.

இந்நிகழ்வில் சிலம்பம் ஆசான்.ச.விக்னேஷ்வரன் ஆனையூர் அரசு உயர்நிலைப் பள்ளி ஆசிரியர் ப.ஹரிபாபு அவர்கள் சிறப்பு விருந்தினர். திரு.நாகராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES