Friday , March 20 2026
Breaking News
Home / செய்திகள் / மதுரை மாவட்டம், திருமங்கலம் சாத்தங்குடி கிராமத்தில், பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ அய்யனார் திருக்கோயில் பிரமலைக்கள்ளர் சமுதாயம் சின்ன பங்காளி பெட்டி எடுப்பு திருவிழா.!
NKBB Technologies

மதுரை மாவட்டம், திருமங்கலம் சாத்தங்குடி கிராமத்தில், பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ அய்யனார் திருக்கோயில் பிரமலைக்கள்ளர் சமுதாயம் சின்ன பங்காளி பெட்டி எடுப்பு திருவிழா.!

மதுரை மாவட்டம், திருமங்கலம் வட்டம், சாத்தங்குடி கிராமத்தில் அமைந்துள்ள, சக்கரைத்தேவன் வகையறாவிற்கு பாத்தியப்பட்ட பழமை வாய்ந்த, அருள்மிகு ஸ்ரீபூரண, ஸ்ரீ புஷ்கலா, சமேத அய்யனார் திருக்கோயிலில், 300 வருடங்களுக்கு பிறகு பிரமலைக்கள்ளர் சமுதாயம் சின்ன பங்காளி பெட்டி எடுப்பு திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

சுவாமியின் நகைகள் மற்றும் பொருட்கள் அடங்கிய பெட்டி பூக்களால் அலங்கரிக்கப்பட்டு மாலை மரியாதையுடன் சிறப்பு ஆராதனை செய்யப்பட்டு , கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக எடுத்து வரப்பட்டது.

300 வருடங்களுக்கு பிறகு திருவிழா நடைபெறுவதால் கிராமத்தினர் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.கிராமமே திருவிழா கோலம் பூண்டுள்ளது.

திருவிழா ஏற்பாடுகளை சக்கரை தேவன் வகையறாவை சேர்ந்த பங்காளிகள் சிறப்பாக செய்திருந்தனர்.

மதுரை மாவட்ட செய்தியாளர் கனகராஜ்

Bala Trust

About Kanagaraj Madurai

Check Also

மதுரை கோ.புதூர் அல்-அமீன் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா

மதுரை கோ.புதூர் அல்-அமீன் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது. மதுரை பிப் 06 மதுரை …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES