மதுரை மாநகராட்சி பொறியியல் பிரிவு பணியாளர்கள் சங்கம் சார்பாக அறிஞர் அண்ணா மாளிகை முன்பு,12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பெருந்திரள் முறையீடு போராட்டம் நடைபெற்றது.
ஓய்வு பெறும் நாளிலேயே அனைத்து ஓய்வூதிய பழங்களையும் வழங்கிட வேண்டும்.
தகுதியுள்ள அனைவருக்கும் அனைத்து நிலை பதவி உயர்வு வழங்கிட வேண்டும். கொரோனா ஊரடங்கு காலத்தில் பணியாற்றிய முன் களப்பணியாளர்கள் அனைவருக்கும் ஊக்கத்தொகை 15 ஆயிரம் ரூபாய் வழங்கிட வேண்டும். போன்ற 12 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றிட வலியுறுத்தி கண்டன கோஷங்களை நிர்வாகிகள் எழுப்பினர்.
இப்போராட்டத்திற்கு மாநிலத் துணைப்பொதுச் செயலாளர் சி.எம் மகுடீஸ்வரன் தலைமை தாங்கினார். மாநகராட்சி மண்டல நிர்வாகிகள் துரைராஜ், சின்னச்சாமி, செல்லப்பா, அழகுபாண்டி, செல்வகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் செல்வம் துவக்க உரை ஆற்றினார். பொறியியல் பிரிவு பணியாளர் சங்கத்தின் செயலாளர் மற்றும் கூட்டுறவு சங்க தலைவர் கே.கண்ணன் கோரிக்கைகள் குறித்து விளக்கி பேசினார். தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் சங்கத்தின் மாநில பொருளாளர் இரா.தமிழ் வாழ்த்துரை வழங்கினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் நீதிராஜா சிறப்புரை ஆற்றினார். ஆர்ப்பாட்டத்தின் முடிவில் பொறியியல் பிரிவு பணியாளர் சங்கத்தின் பொருளாளர் கே.டி. துரைக்கண்ணன் நன்றியுரை கூறினார்.
இந்நிகழ்வில் நகர்ப்புற சுகாதார செவிலியர் சங்க தலைவர் பஞ்சவர்ணம், எழுத்தர் சங்க துணைத் தலைவர் எஸ்.சின்னச்சாமி, வருவாய் உதவியாளர் சங்கம் முகுந்தன், ஓட்டுனர் சங்கத் தலைவர் முருகன், தமிழ்நாடு நகராட்சி, மாநகராட்சி அலுவலர் சங்க பொதுச் செயலாளர் தாமோதரன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.