இன்று (18-09-2021) தஞ்சாவூரில் முப்பால் நுண்ணறிவு கலை மன்றம் மற்றும் ஆரஞ்சு தமிழ் (ஏபிசிமேட்ரிக்ஸ்) குழுமத்தின் சார்பாக தூய பேதுரு மேல்நிலைப் பள்ளியில் தமிழ் இலக்கிய மன்ற கலந்துரையாடல் நடைபெற்றது
நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் முனைவர் ஞா. செல்வகுமார் அவர்கள் தலைமை தாங்கினார். இந்த பள்ளி 238 ஆண்டுகள் பழமைவாய்ந்த சிறப்பிற்குரியது. அதனினும் சிறப்பு இந்த பள்ளி ஜி. யூ. போப் அவர்கள் பணியாற்றிய பள்ளி என்பது மேலும் சிறப்பிற்குரியது.
இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக, பிரபஞ்ச திருக்குறள் ஆய்வு அறவாரியத்தின் பொதுச் செயலாளர் தமிழ் செம்மல் , தமிழக அரசின் திருவள்ளுவர் விருத்தாளர் முனைவர் மு. க. அன்வர் பாட்சா மற்றும், கவையன் புத்தூர் தமிழ்ச் சங்கத்தின் செயலாளர் செந்தமிழ் கவி சிற்பி ந. கணேசன் அவர்களும் பங்கேற்று சிறப்பித்தார்கள். தஞ்சாவூர் திருக்குறள் மாரிமுத்து அய்யா அவர்களும், மற்றும் பள்ளி ஆசிரியர் பெருமக்களும் பங்கேற்று நிகழ்ச்சிக்கு அணி சேர்த்தனர். சிறப்பு விருந்தினர்களுக்குச் சிறப்புச் செய்யப்பட்டது.
நிகழ்ச்சியில் திருக்குறள் சார்ந்த விளையாட்டு மற்றும் தொழில்நுட்பம் உலகளவில் அறிமுகம் செய்ய முன்மொழியப் பட்டது.
நிறைவாக முப்பால் நுண்ணறிவு கலை மன்றத்தின் தலைவர் பொறியாளர் திருக்குறள் நேசர் கோ. கார்த்திகேயன் அவர்கள் நன்றி நவில நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.