Thursday , December 12 2024
Breaking News
Home / செய்திகள் (page 115)

செய்திகள்

All News

சீனாவுக்கு பின் கொரோனோ வைரஸால் வெளிநாட்டில் உயிரிழந்த முதல் இளைஞன்? வெளியான உண்மை தகவல்

சீனாவில் மட்டுமே கொரோனோ வைரஸால் இறப்புகள் ஏற்பட்டு வந்த நிலையில், மலேசியாவில் இந்தியாவை சேர்ந்த 22 வயது இளைஞன் கொரோனோ வைரஸ் பாதிப்பால் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியிருந்த நிலையில், அதன் உண்மை நிலவரம் என்ன என்பது தெரியவந்துள்ளது.

திரிபுராவின் Bishalgarh-வை சேர்ந்தவர் Sahajan Mia. இவருக்கு Manir Hossain(22) என்ற மகன் உள்ளார். கிரிக்கெட் வீரரான இவர் கடந்த 2016-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அதன் பின் எந்த ஒரு வேலையும் கிடைக்காத காரணத்தினால், கடந்த 2018-ஆம் ஆண்டு மலேசியாவில் இருக்கும் உணவகத்தில் வேலைக்கு சேர்ந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த புதன் கிழமை, Manir Hossain குடும்பத்தினரை தொடர்பு கொண்ட, அங்கிருக்கும் வேலை செய்யும் நபர்கள் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் Manir Hossain மருத்துவமனையில் இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.

அதன் பின் மகன் இறப்பு குறித்து குடும்பத்தினரிடம் அவர்கள், மகன் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தாகவும், அவருக்கு கொரோனோ வைரஸின் பாதிப்பு கடந்த சில நாட்களாகவே இருந்ததாகவும் கூறியுள்ளனர்.

ஆனால் மத்திய சுகாதார அமைச்சகம் இதை இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை, இருப்பினும் Manir Hossain-ன் தந்தை தன்னுடைய மகனின் உடலை கொண்டு வர அரசு உதவ வேண்டும் என்று கேட்டுள்ளார்.

அப்படி அவர் கொரோனோ வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தார் என்பது உறுதியான சீனாவிற்கு பின் வெளிநாட்டில் உயிரிழந்த முதல் நபராக இருக்கலாம் என்று கூறப்பட்டது.

ஆனால்,இத்தகவலை மலேசிய சுகாதார அமைச்சகம் அறவே மறுத்துள்ளது. நாடு முழுவதும் கொரோனோ கிருமித் தொற்று இருப்பதாக சந்தேகிக்கப்படும் நபர்கள் அனைவரும் மருத்துவக் கண்காணிப்பு வளையத்தில் இருப்பதைச் சுட்டிக்காட்டியுள்ள சுகாதார அமைச்சகம், இந்தியர்கள் யாரும் கண்காணிப்பு வளையத்தில் இல்லை எனத் தெளிவுபடுத்தி உள்ளது.

ஜனவரி 30-ஆம் திகதி மாலை வரை இதுதான் உண்மை நிலை என்றும் மலேசிய சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.

பட்ஜெட் 2020… கடைக்கு போய் பர்சஸ் பண்ணபோறீங்களா.. கட்டாயம் தெரிஞ்சுக்க வேண்டிய 10 விஷயங்கள்.

டெல்லி: உள்நாட்டு நிறுவனங்களை ஊக்குவிக்கும் முயற்சியாக, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த ஆண்டு பட்ஜெட்டில் பல பொருட்களுக்கான சுங்க வரியை (இறக்குமதி வரி) உயர்த்தி உள்ளார்

அதாவது தட்டு சாமான்கள் மற்றும் சமையலறைப் பொருட்கள், மின் சாதனங்கள், காலணிகள், பீரோ, நாற்காலி, கட்டில் உள்பட பர்னிச்சர்கள், பேனா, பென்சில்,ஸ்கெட்ச் உள்பட எழுதுபொருள்கள் மற்றும் பொம்மைகள் என பல்வேறு வகையான பொருட்களுக்கான சுங்க வரியை உயர்த்துவதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்..
இதன் விளைவாக, சில தயாரிப்புகளை இனி நீங்கள் வாங்கினால் அதிக செலவு ஏற்படும். கடைக்கு போய் பொருட்களை வாங்குவதற்கு முன் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 10 விஷயங்கள் இங்கே உள்ளது பாருங்கள்.

நெஸ்லே நான் ப்ரோ
1. பெற்றோர்களே இது உங்களுக்குக்கான அறிவிப்பு ! இறக்குமதி செய்யப்பட்ட குழந்தைளுக்கான உணவு மற்றும் டாய்ஸ்கள்(பொம்மைகளுக்கான சுங்க வரி அதிகரிக்கப்பட்டுள்ளது இதுவரை சுமார் 1,200 ரூபாய்க்கு நீங்கள் ஒரு நெஸ்லே நான் ப்ரோவினை வாங்கியிருந்தால் இனி 1,340 ரூபாய் கொடுக்க வேண்டியதிருக்கும். அதேபோல் இப்போது 1,200 ரூபாய் விலை கொண்ட அழகான பார்பி பொம்மையை வாங்க வேண்டும் என்றால் இனி நீங்கள் கூடுதலாக ரூ.800 செலவு செய்ய வேண்டியதிருக்கும்.

நைக் காலணிகள்
2. நீங்கள் உடற்பயிற்சியில் தீவிரம் ஆர்வம் உடையவரா? மன ஆரோக்கியத்திற்கான அக்ரூட் பருப்புகள் மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கான காலணிகளை அதிக விலைக்கு வாங்க வேண்டியதிருக்கம். அதாவது . இறக்குமதி செய்யப்பட்ட கலிஃபோர்னியா அக்ரூட் பருப்புகள் சுமார் 850 ரூபாய்க்கு பதிலாக இனி ரூ .1,280 கொடுக்க வேண்டியதிருக்கும். நைக் காலணிகளுக்கு இப்போது ரூ .8,999 ஆக உள்ள நிலையில் இன ரூ .9,749 செலவாகும்.

எல்இடி விளக்குகள்
3. மெத்தை, சோபா படுக்கை, எல்.ஈ.டி விளக்குகள் மற்றும் பர்னிச்சர் இறக்குமதி செய்வதற்கான சுங்க வரி அதிகரிக்கப்பட்டுள்ளது. 51,990 ரூபாய் செலவில் IKEA’வின் இறக்குமதி செய்யப்பட்ட மெத்தை மூலம் உங்கள் கனவு இல்லத்தை அலங்கரித்திருப்பீர்கள். இப்போது நீங்கள் சுமார் 54,349 ரூபாயை அதற்காக கொடுக்க வேண்டியதிருக்கும்

ஷேவிங் செட்டுகள்
4. நீங்கள் விராட் கோலி மாதிரிபார்க்க அழகாக இருக்கணும் என்று விரும்பி இதுவரை நிறைய செலவு செய்திருப்பீங்க. அப்படின்னா, இனி அதற்கு கூடுதலாகவே செலவு செய்ய வேண்டும். ஏனெனில் ஹேர் ட்ரையர், ஹேர் ரிமூவர், கிளிப்பர், ஷேவிங் செட்டுகள், அயர்ன் பாக்ஸ்கள் மற்றும ப்ளோவர்(blower) போன்ற சாதனங்களின் இறக்குமதி வரி அதிகரிக்கப்பட்டள்ளது. ரூ .9,000 விலை கொண்ட வால் எஸ் ஸ்டார் கார்ட்லெஸ் மேஜிக் கிளிப்பருக்கு இனி சுமார் ரூ .9,890 செலவாகும்.

சீஸ் விலை
5. நீங்கள் காலை சிற்றுண்டியுடன் சீஸ் சேர்த்து சாப்பிட விரும்பும் நபரா? ஏன் இந்த கேள்வி என்றால் இறக்குமதி செய்யப்பட்ட பால் பொருட்களான வெண்ணெய், நெய், சீஸ், சமையல் எண்ணெய்கள் மற்றும் மோர் போன்ற பொருட்களின் விலை உயருகிறது, சமையலறை உபகரணங்களான டோஸ்டர்கள், தேநீர் மற்றும் காபி தயாரிப்பாளர்கள், அடுப்புகள், குக்கர்கள் மற்றும் ரோஸ்டர்கள் இப்போது அதிக சுங்க வரி அதிகரிப்பால் விலை உயருகின்றன வதிஈர்க்கின்றன. 200 கிராம் கிராஃப்ட் சீஸ் விலை ரூ .400 லிருந்து சுமார் 21 ரூபாய் அதிகரித்து 421 ஆகிறது. இதேபோல் இறக்குமதி செய்யப்பட்ட ரஸ்ஸல் ஹோப்ஸ் டோஸ்டரின் விலை ரூ .6,499 ஆக உள்ளது இனி அதற்கு கூடுதலாக ரூ..649 செலுத்த வேண்டும்.

நாணய வரி அதிகரிப்பு
6. திருமண விழாவில் பரிசாக வழங்குவதற்காக ரூ .44,000 மதிப்புள்ள இறக்குமதி செய்யப்பட்ட 10 கிராம் சுவிஸ் தங்க நாணயங்களை வாங்க திட்டமிட்டால், மேலும் 1,000 ரூபாயை கொடுக்க தயாராக இருங்கள் . ஏனெனில் விலை உயர்ந்த உலோக நாணயங்களுக்கான இறக்குமதி வரி 10% முதல் 12.5% ​​வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

விலை உயரும்
7. நீண்ட பயணத்தை விரும்பும் நபரா? சுற்றுச்சூழலை விரும்பும் வகையில் மினசார வாகனங்களை சொந்தமாக்க விரும்புகிறீர்களா? ஏனெனில் இறக்குமதி செய்யப்பட்ட கார்கள் மற்றும் மின்சார வாகனங்கள் மீது சுங்க வரி 5% முதல் 15% வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மின்சார வாகனங்கள் விலை குறையும். புதிய ஹூண்டாய் கோனா எலக்ட்ரிக் மூலம் ரூ .37.72 லட்சத்தில் இருந்து ரூ .1.2 லட்சம் திரும்ப கிடைக்கும்.

இறக்குமதி செய்தால்
8. இந்திய மருத்துவ சாதனங்கள் உற்பத்தித் துறைக்கு இறக்குமதி வரி வசூலிப்பதன் மூலம் அரசு ஊக்கமளிக்கிறது. உங்கள் வயதான பெற்றோருக்கு ரூ .40,000 செலவில் சீமென்ஸிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட காது கேட்கும் கருவி வாங்கினால் இப்போது உங்களுக்கு சுமார் 41,190 ரூபாய் செலவாகும்.

சிகரெட் விலை
9. புகைபிடித்தல் உங்கள் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிப்பதோடு மட்டுமல்லாமல், உங்கள் செல்வத்தையும் வரிகளாக அழித்துவிடும் . அனைத்து சிகரெட்டுகள் மற்றும் புகையிலை பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளது. 190 ரூபாய் விலை கொண்ட 20 கோல்ட் ஃப்ளேக் பிரீமியம் சிகரெட்டுகளின் ஒரு பாக்கெட் உங்களுக்கு ரூ .10 செலவாகும்.

இறக்குமதி வரி உயர்வு
10. பீங்கான் சமையலறைப் பொருட்களின் மீதான இறக்குமதி வரி அதிகரிக்கப்பட்டுள்ளது. ரூ .5,000 மதிப்புள்ள ஒரு கோரெல் டின்னர் செட் உங்களுக்கு சுமார் 500 ரூபாய் செலுத்த வேண்டியிருக்கும். பட்ஜெட்டில் இறக்குமதி வரி அதிகரிக்கப்பட்டுள்ளதால் ஏற்படும் தாக்கத்தை சொல்லவே மேலே சொன்ன அனைத்திலும் சில முன்னணி நிறுவன பிராண்டுகளின் பெயரை குறிப்பிட்டு அதன் பொருட்களின் விலை உயரப்போவதாக சொல்லி இருக்கிறோம். இதில்வேறு எந்த நோக்கமும் இல்லை.

சாலை ஓரத்தில் குவிந்த கிடக்கும் சடலங்கள்… வெளிச்சத்திற்கு வந்த கொரோனா கோரம்! பதபதைக்க வைக்கும் காட்சி

கொடிய கொரோனா வைரஸ் பாதிப்பால் சீனாவில் பலர் சாலை ஓரத்தில் இறந்து கிடக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி மிகுந்த துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜனவரி 31ம் திகதி வரை சீனாவில் மொத்தம் 11,791 பேருக்கு கொரோனா அறிகுறிகள் ஏற்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. இதில், 259 உயிரிழந்துள்ளனர் மற்றும் 243 மீட்கப்பட்டுள்ளனர்.

ஹூபே மாகாணத்தில் உள்ள வுஹான் நகரில் தோன்றி கொரோனா வைரஸ் இன்று அமெரிக்கா, பிரித்தானியா, இந்தியா உட்பட 22 நாடுகளுக்கு பரவியுள்ளது.

சீனா முழுவதும் கொரோனா வைரஸ் பரவியதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உலக சுகாதார அமைப்பும் உலகளாவிய அவசரநிலை பிரகடனம் செய்துள்ளது.

அதேசமயம், கொரோனா வைரஸால் சீனாவில் பலர் உயிரிழந்திருக்கலாம் எனவும், அந்நாட்டு அரசு அதை வெளி உலகத்திடமிருந்து மறைக்கிறது என கூறப்படுகிறது.

இந்நிலையில், ஹூ மாகாணத்தில் சாலை ஓரத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட பலர் உயிரிழந்து கிடக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளது. இந்த வைரஸால் சுமார் மில்லயன் கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக உள்ளுர் மக்கள் தகவல் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

மனிதர்களை மட்டுமல்ல ஸ்மார்ட் போன்களையும் அடித்து தூக்கும் கொரோனா.. எப்படி.?

 

 

சீனாவிலிருந்து கிளம்பி மின்னல் வேகத்தில் பரவி உலக நாடுகளை உலுக்கி வரும் கொரோனா வைரஸ், ஸ்மார்ட் போன்கள் மற்றும் கணினிகளை கூட பதம் பார்க்கும் என்ற புதிய தகவல் வெளியாகியுள்ளது.

அட என்ன.. உயிரை கொல்லும் வைரஸ் பா அது.. போன்கள், கம்ப்யூட்டர்களை எப்படி பாதிக்கும் என நீங்கள் யோசிப்பது புரிகிறது. இதற்கான பதிலை தெரிந்து கொள்ள மேற்கொண்டு படியுங்கள்.

உயிர்கொல்லி:

கொரோனா வைரஸ்.. இந்த வார்த்தையை இன்று உச்சரிக்காதவர்களே இல்லை. அந்த அளவிற்கு மனித குலத்தை அச்சுறுத்தி வருகிறது மேற்கண்ட வைரஸ். கொரோனா இதுவரை சுமார் 250-க்கும் மேற்பட்டவர்கள் உயிரை குடித்துள்ளது.

அறிவுறுத்தல்கள்:

வேக வேகமாக பரவி உலக நாடுகளை அச்சுறுத்தி வருவதால் பல்வேறு நாட்டின் சுகாதார மையங்கள் மற்றும் மருத்துவர்கள் இந்த உயிர்கொல்லி பற்றியும், வைரஸிலிருந்து தற்காத்து கொள்ள பல அறிவுறுத்தல்களை வழங்கி வருகின்றன.

அதிகரிக்கும் ஷேரிங்:

உலக மக்களும் கொரோனா தொடர்பான தகவல்களை தெரிந்து கொள்ளவும், அதை பற்றிய விழிப்புணர்வுக்காகவும், அதன் அறிகுறிகளை பற்றியும் பல்வேறு அதிகாரப்பூர்வமான தகவல்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. இவை அடங்கிய தகவல்கள் சமூகவலைத்தளங்களிலும் மிக அதிகமாக பகிரப்பட்டு வருகின்றன.

நம்பகமற்ற தகவல்கள்:

அதேவேளையில் கொரோனா தடுப்பு மற்றும் அறிகுறிகள் தொடர்பான பல தவறான அதிகாரப்பூர்வமற்ற தகவல்களும் பரவி வருகின்றன. எனவே எல்லா தகவல்களையும் பரப்பாமல் சரியான தகவல்களை மட்டுமே பிறருக்கு தெரிவிக்க வேண்டும் என உலக நாடுகள் பலவும் கேட்டுக்கொண்டுள்ளன.

வினையாகும் மக்களின் ஆர்வம்:

எல்லாம் சரி கொரோனா தொடர்பான தகவல்களுக்கும், நீங்கள் மேற்சொன்ன போன்கள் பாதிக்கும் தகவலுக்கும் என்ன சம்பந்தம் என்கீறீர்களா.? சம்பந்தம் இருக்கிறது. உலக மக்களின் கொரோனா ஆர்வத்தை பயன்படுத்தி புகுந்து விளையாடுகிறார்களாம் சைபர் கிரிமினல்கள்.

வலையில் விழுவோம்:

கொரோனா வைரஸ் பற்றிய PDF, MP4 மற்றும் DOCX ஃபைல்கள் போர்வையில் தான் தங்களது கைவரிசையை காட்டி வருகின்றனர் சைபர் கிரிமினல்களான ஹேக்கர்கள். ஆம் நம்முடைய நன்மைக்கு தான் கொரோனா பற்றிய தகவலை யாரோ நமக்கு அனுப்பியுள்ளார்கள் என்ற எண்ணத்தில், போன்களில் இருந்தோ கணினியில் இருந்தோ கொரோனா தொடர்பான ஃபைல்களை டவுன்லோட் செய்தால், ஹேக்கர்களின் வலையில் விழும் வாய்ப்பு உள்ளதை நினைவு கொள்ள வேண்டும்.

என்ன பெயரில் வரும்..?

சைபர் கிரிமினல்கள் அனுப்பும் ஃபைல்கள், கொரோனாவிலிருந்து பாதுகாப்பாக இருப்பதற்கான வீடியோ வழிமுறைகள் , அச்சுறுத்தல் குறித்த அப்டேட்கள், கொரோனாவை கண்டறிவதற்கான நடைமுறைகள் என்பன போன்ற தலைப்பில் அனுப்பப்படுவதாக கூறியுள்ளது பிரபல சைபர் பாதுகாப்பு நிறுவனமான Kaspersky.

பாதிப்பு என்ன?

சைபர் கிரிமினல்களால் உருவாக்கப்படும் ஃபைல்கள் நம்முடைய சாதனங்களில் உள்ள டேட்டாக்களை அழிக்க, மாற்றியமைக்க அல்லது பிரதி (xerox) எடுக்கும் திறன் கொண்டவை. மேலும் கணினி அல்லது கணினி நெட்வொர்க்குகளின் செயல்பாட்டில் குறுக்கிடும் என Kaspersky நிறுவனம் எச்சரித்துள்ளது.

இத உன்னிப்பா பாருங்க:

இந்த ஆபத்திலிருந்து தப்பிக்க கொரோனா தொடர்பான ஃபைல்களை டவுன்லோட் செய்யும் முன் அவற்றின் Extension-களை கவனமாக பாருங்கள். டாக்குமெண்ட்கள் மற்றும் வீடியோ ஃபைல்கள் .exe அல்லது .lnk என்று குறிப்பிடப்பட்டிருக்க கூடாது. அப்படி இருந்தால் அதை டவுன்லோட் செய்வதை தவிர்த்து விடுங்கள் என Kaspersky கூறியுள்ளது.

 

ஜல்லிக்கட்டு இளைஞர்கள் அடுத்த இலக்கை நோக்கி பயணத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள் நான்காம் ஆண்டில்…

ஜல்லிக்கட்டு இளைஞர்கள் அடுத்த இலக்கை நோக்கி பயணத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள் நான்காம் ஆண்டில்…

 

இப்படி செஞ்சா எப்படி விளையாட முடியும்?… ‘கேள்வி’ கேட்ட கேப்டன்… ‘அப்பவே’ சொல்லிருக்கலாமே பிசிசிஐ காட்டம்!

ஆஸ்திரேலியாவை வென்ற கையோடு நியூசிலாந்துக்கு பிளைட் பிடித்த இந்திய அணி, நாளை முதல் டி20 போட்டியில் விளையாடவுள்ளது. இந்த நிலையில் இந்திய கேப்டன் விராட் கோலி இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவரிடம் குறுகிய கால இடைவெளியில் நியூசிலாந்துக்கு எதிரான தொடர் நடத்தப்படுவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த கோலி, ” இந்தியாவை விட 7 மணி நேரம் முன்னதாக நேர வித்தியாசம் உள்ள ஒரு இடத்துக்கு மாறுவது கொஞ்சம் கஷ்டம் தான். வருங்காலத்தில் பிசிசிஐ இதை கருத்தில் கொள்ளும் என நினைக்கிறேன். இந்தாண்டு டி20 உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளதால் ஒவ்வொரு டி20 போட்டியும் முக்கியமாக உள்ளது,” என்றார்.

ஆனால் கோலியின் இந்த பேச்சுக்கு பிசிசிஐ மறுப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஐ.ஏ.என்.எஸ் நிறுவனத்துக்கு பிசிசிஐ அதிகாரி ஒருவர் அளித்த பேட்டியில், ” தன்னுடைய கருத்தை சொல்ல கோலிக்கு எல்லா உரிமையும் உள்ளது. ஆனால் வீரர்களின் நலனை கருத்தில் கொண்டே பிசிசிஐ பயணத்திட்டங்களை தீட்டி இருக்கிறது. தீபாவளி தினத்தில் அனைத்து வீரர்களும் ஓய்வில் தான் இருந்தனர்.

தற்போதைய பயண அட்டவணை கிரிக்கெட் நிர்வாக குழுவினர் இருக்கும் போது திட்டமிடப்பட்டது. இதில் என்ன சிக்கல் இருக்கிறது என்று தெரியவில்லை? ஒருவேளை கோலிக்கு இதில் அதிருப்தி ஏதும் இருந்திருந்தால் அவர் அப்போதே இதுகுறித்து தெரிவித்து இருக்கலாம்,” என பதிலளித்து இருக்கிறார்.

அவசியம் கடைபிடிக்க வேண்டிய ஆரோக்கிய குறிப்புகள்

அவசியம் கடைபிடிக்க வேண்டிய ஆரோக்கிய குறிப்புகள்!!

1?. பசிக்கும்போது மட்டும் சாப்பிடுங்கள். தாகமெடுத்தால் தண்ணீர் குடியுங்கள். குளிர் பானங்களை தவிர்த்து விடுங்கள்.

2?. பசிக்கும் போது பயமில்லாமல் பிடித்த உணவை போதுமான அளவு சாப்பிடுங்கள். பசிக்கும் போது எந்த உணவு சாப்பிட்டாலும் அது இலகுவாக ஜீரணமாகிவிடும். உணவை நிதானமாக மென்று சாப்பிடுங்கள். டிவி பார்த்துக் கொண்டு சாப்பிடாதீர்கள்.

3?. தரையில் அமர்ந்து சாப்பிடுங்கள். உங்கள் கை விரல்களால் சாப்பிடுங்கள். கை இல்லாதவர்களுக்குத் தான் ஸ்பூன் தேவை. உங்கள் ஜீரணத்திற்கும் விரல்களுக்கும் தொடர்பு உள்ளது.

4?. இயற்கை உணவு மற்றும் பழங்களை தேவையான அளவு எடுத்துக் கொள்ளுங்கள்.
பதப்படுத்தப்பட்ட உணவுகளையும், குளிர்சாதனப் பெட்டியில் வைத்த உணவுகளையும் தவிர்த்து விடுங்கள். விளம்பரம் செய்யப்படுவதை ஒருபோதும் வாங்காதீர்கள்.

5?. பசிக்கும்போது மட்டுமே சாப்பிடுபவர்களுக்கு உடற்பயிற்சி தேவையில்ல.

6?. தினமும் முடிந்த அளவு விளையாடுங்கள். விளையாட்டு சிறுவர்களுக்கு மட்டுமல்ல.

7?. ஒரு நாளைக்கு 10 நிமிடமாவது தனிமையில் அமைதியாக இருந்து சிந்தியுங்கள். உங்கள் ஆற்றல் வெளிப்படும். அவ்வப்போது மனதுக்குள் சிறிது நேரம் பிரார்த்தனை செய்யங்கள் .

8?. டிவி பார்ப்பதை குறைத்துக் கொண்டு நிறைய நல்ல புத்தகங்களைப் படியுங்கள். பிள்ளைகளுக்கு நல்ல நிஷயங்களை சொல்லிக் கொடுங்கள்.

9?. குழந்தைகளிடம் Smart Phone களை கொடுக்காதீர்கள். தேவயற்ற விஷயங்களுக்காக Whatsup, Facebook போன்ற சமூக வலைதளங்களில் உங்கள் நேரத்தை வீனடிக்காதீர்கள்.

10?. குறைந்தது 7 மணி நேரம் தூங்குங்கள். இரவு 10 மணிக்கு முன் தூங்கிவிடுங்கள். காலை 5 மணிக்குமேல் தூங்காதீர்கள்.

11?. தினம் 20 நிமிடங்கள் ரிலாக்ஸாக நடைப் பயிற்சி மேற்கொள்ளுங்கள். (உடற்பயிற்சிக்காக அல்ல மன அமைதிக்காக)

12?. உங்களை ஒருபொழுதும் மற்றவருடன் ஒப்பிடாதீர்கள். அவர்கள் பயணிக்கும் பாதை வேறு. உங்கள் பாதை வேறு. அடுத்தவரைப் பார்த்து பொறாமை கொள்வது நேர விரையம். உங்களுக்கு தேவையானது உங்களிடமே உள்ளது.

13?. எப்போதும் மனதில் நேர்மறையான எண்ணங்களை மேற்கொள்ளுங்கள்.

14?. கடுமையாக உழைக்காதீர்கள். உங்களால் முடிந்த அளவு வேலை செய்யுங்கள். அளவுக்கு மீறி எதையும் செய்யாதீர்கள்.

15?. மற்றவர்களைப் பற்றிப் புறம் பேசுவதில் உங்கள் சக்தியை வீனாக்காதீர்கள். உங்களைப் பற்றி புறம் பேசப்படுவதை பொருட்படுத்தாதீர்கள்.

16?. நீங்கள் விழித்திருக்கும் பொழுது உங்கள் தேவைகளைப் பற்றி நிறைய கணவு காணுங்கள். அதை செயல்படுத்தவும் முயற்சி செய்யுங்கள்.

17?. உங்கள் வருமானத்தில் ஒரு பகுதியை தானமாக கொடுத்து விடுங்கள். தேவை உள்ளவர்களுக்கு உதவி செய்யுங்கள்.

18?. கடந்த காலத்தை மறந்து விடுங்கள். முடிந்தது முடிந்தவையாக இருக்கட்டும். நிகழ் காலத்தில் வாழுங்கள். மகிழ்ச்சியும் மன அமைதியும் தானாக வரும்.

19?. குறுகிய கால இந்த வாழ்க்கையில் யாரையும் வெறுக்காதீர்கள். வெறுப்பு உங்களை தான் பாதிக்கும்.

20?. வாழ்க்கை ஒரு பள்ளிக்கூடம். நீங்கள் கற்றுக் கொள்ள வந்திருக்கிறீர்கள் சிக்கல்களும், பிரச்சனைகளும் இங்கு பாடங்கள்.

21?. முடியாது என்று சொல்லவேண்டிய இடங்களில் தயவு செய்து முடியாது என்று சொல்லிவிடுங்கள். இது பல பிரச்சனைகளை ஆரம்பத்திலேயே தீர்த்துவிடும்.

22?. வெளிநாட்டிலோ வெளியூரிலோ இருந்தால் குடும்பத்தில் இருப்பவர்களுக்கும், நண்பர்களுக்கும், வேண்டியவர்களுக்கும் அடிக்கடி தொலைபேசியிலோ, SMS மூலமாகவோ தொடர்பு கொண்டிருங்கள். இது உங்களுக்கும் அவர்களுக்கும் மன அமைதியையும், பரஸ்பர அன்பையும் மேம்படுத்தும்.

23?. மன்னிக்கப் பழகுங்கள். தேவையான நேரத்தில் தயங்காமல் மன்னிப்பும் கேளுங்கள். உங்கள் மனபாரம் நீங்கும்.

24?. 60 வயதிற்கு மேலிருப்பவர்களையும், 6 வயதிற்கு கீழிருப்பவர்களையும் கவனிக்க நேரம் ஒதுக்குங்கள். அவர்களுக்கு உங்கள் அன்பு தான் முக்கியம். பணம் முக்கியமல்ல.

25?. அடுத்தவர்கள் என்ன நினைப்பார்களோ என்பதைப் பற்றி ஒருபொழுதும் கவலை கொள்ளாதீர்கள். எப்பொழுதும் உங்களைப் பற்றி நினைப்பது மாற்றவர்களின் வேலையல்ல.

26?. உங்கள் நண்பர்களை மதிக்கப் பழகுங்கள். உங்கள் மனதிற்கு எது சரியென்று படுகிறதோ அதை உடனே செய்யுங்கள்.

27?. உங்களின் நிறைவேறிய தேவைக்கு இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள். நிறைவேறாத தேவைக்கு பிரார்த்தனை செய்யுங்கள்.

28?. உங்கள் ஆழ்மனதில் இருப்பது சந்தோஷம் மட்டும்தான். அதை தேடி அனுபவித்துக் கொண்டே இருங்கள். அவ்வப்போது உங்களிடம் உள்ள நல்லவைகளை நினைத்து பெருமிதம் கொள்ளுங்கள்.

29?. உங்களுக்கு எது சந்தோஷத்தை கொடுக்காதோ, அன்பை கொடுக்காதோ, நிம்மதியைக் கொடுக்காதோ அதை ஒதுக்கி விடுங்கள்.

30?. வாழ்க்கையில் எந்த சூழ்நிலையையும் எதிர் கொள்ளுங்கள்.வாழ்கையில் எதுவும் நிரந்தரமல்ல.கவலைகளும் நோய்களும் கூட .சூழ்நிலைகள் கண்டிப்பாக ஒரு நாள் மாறும்.

 

ஜும்ஆ மசூதியில் ஒலித்த “மாங்கல்யம் தந்துனானே….”

ஜும்ஆ மசூதியில் ஒலித்த
“மாங்கல்யம் தந்துனானே….”

காயங்குளம் அருகே சேராவள்ளி ஜும்ஆ மசூதி வளாகத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் குழுமி மனதார வாழ்த்த அஞ்சுவின் திருமணம் இன்று காலை 11.30 மணிக்கு நடைபெற்றது..

சேராவள்ளி பகுதியை சேர்ந்த காலஞ்சென்ற அசோகன் – சிந்து தம்பதியர் மகள் அஞ்சு..
தனது கணவர் மரணத்திற்கு பின் சிரமப்பட்டு மகளை வளர்த்து படிக்க வைத்த சிந்து போதிய பொருளாதார வசதியின்றி மகளுக்கு திருமணம் நடத்தி வைக்க முடியாமல் கண் கலங்கிய நாட்கள் அதிகம்.

தனது மகளின் திருமண உதவி கோரி ஏதோ ஒரு நம்பிக்கையில் சேராவள்ளி ஜமாஅத் நிர்வாகத்துக்கு கடிதம் கொடுக்க அந்த கடிதத்தை பரிசீலனை செய்த ஜமாஅத் நிர்வாகிகள் சிந்துவின் குடும்ப வறுமையை கவனத்தில் கொண்டு முழு செலவையும் ஏற்றுக்கொள்ள தீர்மானித்தனர்..

சிந்துவின் குடும்பத்தினர் ஏற்பாடு செய்த சரத் என்ற மணமகனுடனான திருமணத்திற்கு சேராவள்ளி ஜமாஅத் செயலாளர் நுஜுமுதீன் பெயரிலேயே அழைப்பிதழ் அச்சடித்து விநியோகம் செய்யப்பட்டு ஜும்ஆ மசூதி வளாகத்திலேயே பிரமாண்ட பந்தலில் மசூதி நிர்வாகிகள், சமூகத்தின் பல்வேறு துறை சார்ந்த பிரமுகர்கள் முன்னிலையில் வேத மந்திரங்கள் முழங்க திருமணம் நடைபெற்றது..

ஜமாஅத் பிரமுகர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு செலவை பகிர்ந்து கொள்ள ஊர் மக்கள் சுமார் மூவாயிரம் பேருக்கு சிறப்பான அறுசுவை சைவ உணவும் வழங்கப்பட்டது….
–Colachel Azheem

 

ரஜினிக்கும் எங்களுக்கும் என்ன வாய்க்கால் வரப்பு சண்டையா ஏன் அவரை விமர்சிக்கிறோம்?

ரஜினிக்கும் எங்களுக்கும் என்ன வாய்க்கால் வரப்பு சண்டையா ஏன் அவரை விமர்சிக்கிறோம்?

கிட்டத்தட்ட 45 ஆண்டுகள் தமிழகத்தோடு தன் வாழ்க்கை பயணத்தை அமைத்துக் கொண்டவர்.  அம்மக்களுக்கு எது பிடிக்கும் எது பிடிக்காது என்று இன்னும் அவருக்கு தெரியவில்லை. அவர்களிடம் என்ன பேச வேண்டும் எதை பேசக்கூடாது என்றும் தெரியவில்லை. நடிகர் விவேக்கின் திறமையையும், ஆற்றலையும், பேச்சையும் அறிவையும் பார்த்து அவர் பிராமணன் என கருதினேன் என்கிறார். தன் உறவினர் அனிருத்தை முன்னிறுத்துவதற்காக இளையராஜா இடத்தில் அனிருத்தை பார்க்கிறேன் என்கிறார். மலையை மடுவோடு ஒப்பிடுகிறார். திரைப்படத்தில் மக்களை போராட தூண்டுகிறார், தரையில் மக்கள் போராடினால் நாடு சுடுகாடு ஆகிவிடும் என்கிறார். போராடும் போராட்டக்காரர்களை தீவிரவாதிகள் என்கிறார். நிராயுதபாணியாக இருந்த ஜே.என்.யூ.மாணவர்களை கொடூரமாக தாக்கியவர்களை கண்டிக்காமல், போராடும் மாணவர்களை வன்முறையாளர்களாக சித்தரிக்கிறார். 45 – ஆண்டுகளாக பணம் சம்பாதிப்பதை குறிகோளாக கொண்ட இவர் பண மதிப்பிழப்பை வரவேற்கிறார். என்ன பேச வேண்டும்,எப்படி பேச வேண்டும் என்பதறியாமல் உளறுகிறார். பொதுமக்களுக்கு துளியும் தொடர்பில்லாத தமிழருவி மணியன்,ஏ.சி.சண்முகம்,கராத்தே தியாகராஜன் போன்றோரை அரசியல் ஆலோசராக வைத்துள்ளார். தமிழனின் ஒரு துளி வேர்வைக்கு ஒரு தங்ககாசு தருவேன் என்கிறார்,தமிழகத்தில் உள்ள கிருஷ்ணகிரி எனது பூர்வீகம் என்கிறார்.

தமிழகத்தை தாண்டியவுடன் நான் மராட்டியன் நான் வாழ்ந்தது கர்நாடகத்தில் என்கிறார் தமிழகத்தை லாவகமாக தவிர்த்து விடுகிறார். காவேரி தண்ணிரை திறந்து விடக்கோரி கர்நாடகத்துக்கு எதிராக போராடினால் மௌன சாமியராகி விடுகிறார். நெய்வேலி மின்சாரத்தை கர்நாடகத்துக்கு தராதே என பாரதிராஜா தலைமையில் திரையுலகம் போராடினால்..அதை திசை திருப்ப மறுநாள் இவர் மட்டும் தனியாளாக உண்ணாவுரதம் இருக்கிறார். நலிந்த அல்லது சிறு தயாரிப்பாளர்களுக்கு கால்ஷீட் கொடுக்க மறுக்கிறார்.

உழைப்பாளி படத்தை விஜயா- வாகினி கோடீஸ்வர கம்பெனிக்கு கால்ஷீட் கொடுத்தார். இத்தருணத்தில் பிரபல இயக்குனர் பீம்சிங்கின் மகனும் சிறந்த பிலிம் எடிட்டருமான பீ.லெனின் சிறு,குறு, நலிந்த தயாரிப்பாளர்களுக்கு கால்ஷீட் கொடுக்காத ரஜினியை கண்டித்து இனிமேல் அவர் படத்துக்கு பணிபுரிய மாட்டேன் என வெளிப்படையாக அறிவித்தார். தன் ரசிகர்களின் உழைப்பை விசுவாசத்தை தன் சுயலாபத்துக்காக மட்டுமே பயன் படுத்திக் கொள்கிறார்.

நூற்றுக்கணக்கான பிரச்சினையில் சிக்கித்தவிக்கும் திரையுலகத்திற்காக குரல் கொடுக்காதவர்..ஒரு துரும்பைக்கூட நகர்த்தாதவர் தான் ரஜினி, இப்படி முரண்பாடுகாளின் மொத்த உருவமாக திகழும் இந்த முட்டாத காளையைத்தான் முரட்டுக்காளை என பலரும் நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.

இவர்தான் தமிழகத்தின் அடுத்த முதல்வர் என தங்களது பிழைப்புக்காக கூறிக்கொண்டு அலைகிறது ஒரு கூட்டம்..

நிலைகுலையப் போகிறது ரஜினியின் ஆட்டம்…

ரஜினிகாந்த் திரையுலகம் எனும் நிழல் உலகத்தில் தனது 100 வயதுவரை கூட நடிக்கலாம்,நாமும் ரசிக்கலாம்,ஆட்சேபனையில்லை.

நாடு எனும் தரையுலைகில் தலையெடுக்க அவர் இனி ஒரு ஜென்மம் எடுத்து வர வேண்டும்.

தலை உள்ளவர்கள் தலைவர்கள் ஆகிவிட முடியாது என்று காகிதம் ராஜன் மட்டுமல்லாமல் மற்ற தலைவர்களும் சமூக வலைத்தளத்தில் அவர்களது கருத்துக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

இதையெல்லாம் தாண்டி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் அரசியலில் ஜெயிப்பாரா? தமிழக மக்களுக்கு நல்லது செய்வாரா?.

 

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES