Thursday , July 31 2025
Breaking News
Home / ஆன்மீகம் / ஜும்ஆ மசூதியில் ஒலித்த “மாங்கல்யம் தந்துனானே….”
NKBB Technologies

ஜும்ஆ மசூதியில் ஒலித்த “மாங்கல்யம் தந்துனானே….”

ஜும்ஆ மசூதியில் ஒலித்த
“மாங்கல்யம் தந்துனானே….”

காயங்குளம் அருகே சேராவள்ளி ஜும்ஆ மசூதி வளாகத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் குழுமி மனதார வாழ்த்த அஞ்சுவின் திருமணம் இன்று காலை 11.30 மணிக்கு நடைபெற்றது..

சேராவள்ளி பகுதியை சேர்ந்த காலஞ்சென்ற அசோகன் – சிந்து தம்பதியர் மகள் அஞ்சு..
தனது கணவர் மரணத்திற்கு பின் சிரமப்பட்டு மகளை வளர்த்து படிக்க வைத்த சிந்து போதிய பொருளாதார வசதியின்றி மகளுக்கு திருமணம் நடத்தி வைக்க முடியாமல் கண் கலங்கிய நாட்கள் அதிகம்.

தனது மகளின் திருமண உதவி கோரி ஏதோ ஒரு நம்பிக்கையில் சேராவள்ளி ஜமாஅத் நிர்வாகத்துக்கு கடிதம் கொடுக்க அந்த கடிதத்தை பரிசீலனை செய்த ஜமாஅத் நிர்வாகிகள் சிந்துவின் குடும்ப வறுமையை கவனத்தில் கொண்டு முழு செலவையும் ஏற்றுக்கொள்ள தீர்மானித்தனர்..

சிந்துவின் குடும்பத்தினர் ஏற்பாடு செய்த சரத் என்ற மணமகனுடனான திருமணத்திற்கு சேராவள்ளி ஜமாஅத் செயலாளர் நுஜுமுதீன் பெயரிலேயே அழைப்பிதழ் அச்சடித்து விநியோகம் செய்யப்பட்டு ஜும்ஆ மசூதி வளாகத்திலேயே பிரமாண்ட பந்தலில் மசூதி நிர்வாகிகள், சமூகத்தின் பல்வேறு துறை சார்ந்த பிரமுகர்கள் முன்னிலையில் வேத மந்திரங்கள் முழங்க திருமணம் நடைபெற்றது..

ஜமாஅத் பிரமுகர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு செலவை பகிர்ந்து கொள்ள ஊர் மக்கள் சுமார் மூவாயிரம் பேருக்கு சிறப்பான அறுசுவை சைவ உணவும் வழங்கப்பட்டது….
–Colachel Azheem

 

Bala Trust

About Admin

Check Also

4 1/2 ஆண்டு கால ஸ்டாலின் ஆட்சியில், ஊழலில் முதன்மை மாநிலமாக தமிழகம் உள்ளது.. டாக்டர் பா.சரவணன் குற்றச்சாட்டு..

நான்கரை ஆண்டுகால ஸ்டாலின் ஆட்சியில் தமிழகம் கடன்சுமையில் மட்டுமல்ல ஊழலில் இந்தியாவின் முதன்மை மாநிலமாக உள்ளது என அதிமுக மருத்துவரணி …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES