கொடிய கொரோனா வைரஸ் பாதிப்பால் சீனாவில் பலர் சாலை ஓரத்தில் இறந்து கிடக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி மிகுந்த துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜனவரி 31ம் திகதி வரை சீனாவில் மொத்தம் 11,791 பேருக்கு கொரோனா அறிகுறிகள் ஏற்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. இதில், 259 உயிரிழந்துள்ளனர் மற்றும் 243 மீட்கப்பட்டுள்ளனர்.
ஹூபே மாகாணத்தில் உள்ள வுஹான் நகரில் தோன்றி கொரோனா வைரஸ் இன்று அமெரிக்கா, பிரித்தானியா, இந்தியா உட்பட 22 நாடுகளுக்கு பரவியுள்ளது.
சீனா முழுவதும் கொரோனா வைரஸ் பரவியதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உலக சுகாதார அமைப்பும் உலகளாவிய அவசரநிலை பிரகடனம் செய்துள்ளது.
அதேசமயம், கொரோனா வைரஸால் சீனாவில் பலர் உயிரிழந்திருக்கலாம் எனவும், அந்நாட்டு அரசு அதை வெளி உலகத்திடமிருந்து மறைக்கிறது என கூறப்படுகிறது.
இந்நிலையில், ஹூ மாகாணத்தில் சாலை ஓரத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட பலர் உயிரிழந்து கிடக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளது. இந்த வைரஸால் சுமார் மில்லயன் கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக உள்ளுர் மக்கள் தகவல் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.