Thursday , December 12 2024
Breaking News
Home / செய்திகள் (page 106)

செய்திகள்

All News

மதுரை மாநகராட்சி பொறியியல் பிரிவு பணியாளர்கள் சங்கம் சார்பாக பெருந்திரள் முறையீடு போராட்டம்

மதுரை மாநகராட்சி பொறியியல் பிரிவு பணியாளர்கள் சங்கம் சார்பாக அறிஞர் அண்ணா மாளிகை முன்பு,12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பெருந்திரள் முறையீடு போராட்டம் நடைபெற்றது.

ஓய்வு பெறும் நாளிலேயே அனைத்து ஓய்வூதிய பழங்களையும் வழங்கிட வேண்டும்.

தகுதியுள்ள அனைவருக்கும் அனைத்து நிலை பதவி உயர்வு வழங்கிட வேண்டும். கொரோனா ஊரடங்கு காலத்தில் பணியாற்றிய முன் களப்பணியாளர்கள் அனைவருக்கும் ஊக்கத்தொகை 15 ஆயிரம் ரூபாய் வழங்கிட வேண்டும். போன்ற 12 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றிட வலியுறுத்தி கண்டன கோஷங்களை நிர்வாகிகள் எழுப்பினர்.

இப்போராட்டத்திற்கு மாநிலத் துணைப்பொதுச் செயலாளர் சி.எம் மகுடீஸ்வரன் தலைமை தாங்கினார். மாநகராட்சி மண்டல நிர்வாகிகள் துரைராஜ், சின்னச்சாமி, செல்லப்பா, அழகுபாண்டி, செல்வகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் செல்வம் துவக்க உரை ஆற்றினார். பொறியியல் பிரிவு பணியாளர் சங்கத்தின் செயலாளர் மற்றும் கூட்டுறவு சங்க தலைவர் கே.கண்ணன் கோரிக்கைகள் குறித்து விளக்கி பேசினார். தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் சங்கத்தின் மாநில பொருளாளர் இரா.தமிழ் வாழ்த்துரை வழங்கினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் நீதிராஜா சிறப்புரை ஆற்றினார். ஆர்ப்பாட்டத்தின் முடிவில் பொறியியல் பிரிவு பணியாளர் சங்கத்தின் பொருளாளர் கே.டி. துரைக்கண்ணன் நன்றியுரை கூறினார்.

இந்நிகழ்வில் நகர்ப்புற சுகாதார செவிலியர் சங்க தலைவர் பஞ்சவர்ணம், எழுத்தர் சங்க துணைத் தலைவர் எஸ்.சின்னச்சாமி, வருவாய் உதவியாளர் சங்கம் முகுந்தன், ஓட்டுனர் சங்கத் தலைவர் முருகன், தமிழ்நாடு நகராட்சி, மாநகராட்சி அலுவலர் சங்க பொதுச் செயலாளர் தாமோதரன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மதுரையில் மின் கட்டண உயர்வை கண்டித்து சிம்னி விளக்குகள் ஏந்தி எஸ் டி பி ஐ கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில்

மதுரையில் மின் கட்டண உயர்வை கண்டித்து சிம்னி விளக்குகள் ஏந்தி எஸ் டி பி ஐ கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மதுரை முனிச்சாலை சந்திப்பு அருகே மின் கட்டண உயர்வை கண்டித்து, தெற்கு மாவட்ட எஸ்டிபிஐ கட்சி சார்பாக ஆர்ப்பாட்டம், தெற்கு மாவட்ட தலைவர் சீமான் சிக்கந்தர் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில துணைத்தலைவர் அப்துல் ஹமீது, தெற்கு மாவட்ட செயலாளர் ஆரிப்கான், பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா மாநில பேச்சாளர் காஜாமைதீன், தெற்கு தொகுதி செயலாளர் பாஷா, ஊடக ஒருங்கிணைப்பு குழு மாவட்ட தலைவர் தாஜூதீன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே மூட்டா மற்றும் டான்சாக் சார்பாக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே மூட்டா மற்றும் டான்சாக் சார்பாக தியாகராஜர் கல்லூரி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க கோரி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ‌

தியாகராஜர் கல்லூரியில் விதியை மீறி நடைபெறும் ஆசிரியர் அலுவலர் பணி நியமனத்தை தடுத்திடு எனவும், கட்டாய தேர்வு கட்டணத்தால் வாய்ப்பை இழந்த விண்ணப்பதாரர்களும் வாய்ப்பு பெறும் வகையில் பணி நியமன தெரிவை புதிதாக நடத்திடு எனவும் கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

இதில் மூட்டா ‌செயலாளர்கள் பெர்மின் ஏஞ்சலோ செல்வின், பெரியசாமிராஜா,டான்சாக் செயலாளர் மனோகரன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

4 காங்கிரஸ் உறுப்பினர்கள் மழைக்கால கூட்டத் தொடர் முழுவதும் இடைநீக்கம்…

மக்களவையில் திங்கள்கிழமை பிளக்ஸ் பேனர்களை அசைத்ததற்காக 4 காங்கிரஸ் உறுப்பினர்கள் மழைக்கால கூட்டத் தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

உறுப்பினர்கள், மாணிக்கம் தாகூர், டி.என். பிரதாபன், ரம்யா ஹரிதாஸ் மற்றும் ஜோதிமணி ஆகியோர் சபையின் செயல்பாட்டைத் தடுத்ததாக விதி 374ன் கீழ் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

தலைவர் ராஜேந்திர அகர்வால், பிளக்ஸ் பேனர்களை அசைக்க வேண்டாம் என்று எச்சரித்தார். அவரது எச்சரிக்கையை உறுப்பினர்கள் ஏற்க மறுத்ததால், வாக்கெடுப்பை நிறுத்தி வைப்பதற்கான தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

சபை மாநாட்டின்படி நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

முன்னதாக, சபாநாயகர் ஓம் பிர்லா, பதாகைகளை வைத்திருக்கக் கூடாது என உறுப்பினர்களுக்கு எச்சரிக்கை விடுத்தார். “சட்டசபைக்குள் பிளக்ஸ் அட்டையை கொண்டு வரும் எந்தவொரு உறுப்பினரும் சபை நடவடிக்கைகளில் பங்கேற்க அனுமதிக்கப்பட மாட்டார்கள்,” என்று அவர் கூறினார்.

பால்,அரிசி,தயிர்,பென்சில், மருத்துவமனை என்று அனைத்து அத்தியாவசியப் பொருட்கள் மீதும் மோடி வரி விதிக்கப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் ரூ100க்கு மேல், சமையல் எரிவாயு விலை 1000க்கு மேல்…

இதை எதிர்த்து போராடுவது குற்றமென்றால் அந்த குற்றத்தை மீண்டும் மீண்டும் செய்வோம் என்று நாடாளுமன்ற உறுப்பினர் – கரூர் ஜோதிமணி கூறியது குறிப்பிடத்தக்கது.

வள்ளுவர் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் NKBB டெக்னாலஜிஸில் 20 நாட்கள் இன்டன்ஷிப்…

வள்ளுவர் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் வேர்ட்பிரஸ் கட்டமைப்பில் இணையதள மேம்பாட்டிற்காக என்கேபிபி டெக்னாலஜிஸில் 20 நாட்கள் இன்டன்ஷிப் எடுத்துள்ளனர்.

இளைஞர் குரல், சாமானிய மக்கள் நலக்கட்சி போன்ற என்கேபிபி டெக்னாலஜிஸ் வாடிக்கையாளர்களுக்கு இணையதள மேம்பாட்டில் மாணவர்கள் பணியாற்றினர்.

மாணவர்கள் கேன்வா டிசைன் டூல் மற்றும் டிஜிட்டல் மார்க்கெட்டிங் ஆகியவற்றிலும் பயிற்சி பெற்றனர். (குறிப்பாக இன்ஸ்டன்ட் டேட்டா ஸ்கிராப்பர் கருவியைப் பயன்படுத்தி தரவு வேட்டையாடும் செயல்முறை). 

சாமானிய மக்கள் நலக்கட்சியின் பொதுச் செயலாளர் டாக்டர் குணசேகரன் சார்பில், சாமானிய மக்கள் நலக்கட்சியின் இணையதள வளர்ச்சியில் ஈடுபட்டுள்ள பயிற்சியாளர்களுக்கு எனது வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.



The Students from Valluvar College has taken 20 days internship at NKBB Technologies for website development in WordPress Framework.

Students worked on Website Development to NKBB Technologies clients such as ilangyar Kural, Samaniya Makkal Nalakatchi .

Students had taken training on Canva Design Tool and Digital Marketing too…Especially Data Hunting Process by using Instant Data Scraper tool.

On behalf of the Samaniya Makkal Nalakatchi General Secretary Dr. Gunasekaran said, I would like to express my best wishes and thanks to the trainees involved in the development of the website of the Samaniya Makkal Nalakatchi

மணப்பாறை மற்றும் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிகளில் இரண்டு அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் திறப்பு…

மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் இன்று ஒரே நாளில் தமிழகம் முழுவதும் 20 கலை அறிவியல் கல்லூரிகளைத் திறந்துவைத்து சாதனை படைத்துள்ளார்.

இதில் எமது கரூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட மணப்பாறை மற்றும் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிகளில் இரண்டு அரசு கலை, அறிவியல் கல்லூரிகளையும் இன்று காணொளி வாயிலாகத் திறந்து வைத்துள்ளார்கள்.

இந்த கல்லூரிகள் அமைய வேண்டும் என்பது எமது மக்களின், மாணவர்களின் நீண்ட காலக் கனவு.

அந்த கனவு இன்று நினைவாகி இருக்கிறது. இதற்கான முயற்சியில் எனது எளிய பங்களிப்பும் உள்ளது என்பதில் மகிழ்ச்சியும்,மனநிறைவும்.

மாண்புமிகு தமிழக முதல்வர் M. K. Stalin அவர்களுக்கும், உயர்கல்வித்துறை அமைச்சர் திரு. பொன்முடி அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகளை கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் (காங்கிரஸ் MP) ஜோதிமணி அவர்கள் தெரிவித்தார்.

இலங்கை:குழம்பிய குட்டையில் ஜரூராக மீன்பிடிக்கும் சீனா-அடுத்த பிரதமராகும் சஜித் பிரேமதாசவுடன் பேச்சு!

கொழும்பு: இலங்கையில் அதிஉச்சகட்ட அரசியல் குழப்பம் நீடித்து வரும் நிலையில் அடுத்த பிரதமராக வாய்ப்புள்ளவராக கருதப்படும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாவை இலங்கைக்கான சீனாவின் தூதர் சந்தித்து பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இலங்கையில் பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வு காண முடியாத அரசாங்கம் பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தி அந்த நாடு பற்றி எரிகிறது. தென்னிலங்கை, வட இலங்கை என அனைத்து நிலமும் போர்க்களமாக உருமாறிக் கிடக்கிறது. தலைநகர் கொழும்பில் ஒரு மாத காலமாக ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சே, பிரதமர் மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்ய கோரி போராட்டங்கள் தொடருகின்றன.

Thanks to One India….

DEC 29 தமிழகத்தில் தடுப்பூசி திணிப்பிற்கு எதிராக மிகப்பிரம்மாண்ட போராட்டம்…

தேதி : 29.12.2021 நாள் : புதன்கிழமை நேரம் : மதியம் 2.00 மணி

இடம் : சீர்காழி பழைய பேருந்து நிலையம், ஸ்டேட் வங்கி அருகில் இப்போராட்டத்தில் கலந்துகொள்ள விரும்புவோர் தங்கள் பெயர் உள்ளிட்ட விபரங்களை இந்த இணைப்பிற்கு சென்று பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றோம் 👇🏽

பதிவு படிவம் / Registration form

சீர்காழி போராட்டத்தில் பங்கேற்க விருப்பம் உள்ளவர்கள் இந்த telegram குழுவில் இணையலாம்

https://t.me/tn_covidprotest

சீர்காழி நிகழ்விற்கு வருபவர்கள் யாரேனும் உணவு, குடிநீர், பாக்குமட்டை, பேப்பர் கப் போன்றவற்றை தங்களால் முடிந்த அளவு எண்ணிக்கையில் செலவை ஏற்றுக்கொண்டு, ஏற்பாடும் செய்து விநியோகம் செய்தால் வரவேற்கத்தக்கது. ஆர்வமுள்ளவர்கள் எவ்வளவு எண்ணிக்கைகளுக்கான பொறுப்பை ஏற்றுக்கொள்கிறீர்கள் என இந்த Whats app எண்ணில் தெரியப்படுத்தலாம் 📞

9865126889

சீர்காழி போராட்டத்திற்கு நிதியுதவி செய்ய விரும்புவோர் கீழே குறிப்பிடப்பட்டுள்ள Google Pay எண்ணுக்கு உங்கள் பங்களிப்பை செலுத்தலாம்

Google Pay Number

7338863911

கட்டாய தடுப்பூசிக்கு எதிராக ஒன்றுகூடுவோம் 🤝 சந்ததி காக்க அனைவரும் அலைகடலென திரண்டு வாரீர் 🙏🏽

இயற்கை வழி வாழ்வியலாளர்கள் கூட்டமைப்பு தமிழ்நாடு

நன்றி

இரா.மதிவாணன்

தூய பேதுரு மேல்நிலைப் பள்ளியில் தமிழ் இலக்கிய மன்ற கலந்துரையாடல் நடைபெற்றது

இன்று (18-09-2021) தஞ்சாவூரில் முப்பால் நுண்ணறிவு கலை மன்றம் மற்றும் ஆரஞ்சு தமிழ் (ஏபிசிமேட்ரிக்ஸ்) குழுமத்தின் சார்பாக  தூய பேதுரு மேல்நிலைப் பள்ளியில் தமிழ் இலக்கிய மன்ற கலந்துரையாடல் நடைபெற்றது

நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் முனைவர் ஞா. செல்வகுமார் அவர்கள் தலைமை தாங்கினார். இந்த பள்ளி 238 ஆண்டுகள் பழமைவாய்ந்த சிறப்பிற்குரியது. அதனினும் சிறப்பு இந்த பள்ளி ஜி. யூ. போப் அவர்கள் பணியாற்றிய பள்ளி என்பது மேலும் சிறப்பிற்குரியது. 


இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக, பிரபஞ்ச திருக்குறள் ஆய்வு அறவாரியத்தின் பொதுச் செயலாளர் தமிழ் செம்மல் , தமிழக அரசின் திருவள்ளுவர் விருத்தாளர் முனைவர் மு. க. அன்வர் பாட்சா மற்றும், கவையன் புத்தூர் தமிழ்ச் சங்கத்தின் செயலாளர்  செந்தமிழ் கவி சிற்பி ந. கணேசன் அவர்களும் பங்கேற்று சிறப்பித்தார்கள்.  தஞ்சாவூர் திருக்குறள் மாரிமுத்து அய்யா அவர்களும், மற்றும் பள்ளி ஆசிரியர் பெருமக்களும் பங்கேற்று நிகழ்ச்சிக்கு அணி சேர்த்தனர். சிறப்பு விருந்தினர்களுக்குச்  சிறப்புச் செய்யப்பட்டது.  


நிகழ்ச்சியில் திருக்குறள் சார்ந்த விளையாட்டு மற்றும் தொழில்நுட்பம் உலகளவில் அறிமுகம் செய்ய முன்மொழியப் பட்டது.


நிறைவாக முப்பால் நுண்ணறிவு கலை மன்றத்தின் தலைவர் பொறியாளர் திருக்குறள் நேசர் கோ. கார்த்திகேயன் அவர்கள் நன்றி நவில நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. 

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES