Thursday , December 12 2024
Breaking News
Home / செய்திகள் (page 44)

செய்திகள்

All News

பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு: குமரியில் நாளை காங்கிரஸ் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம்

பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு: குமரியில் நாளை காங்கிரஸ் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம்

சென்னை: “தமிழக அரசு கேட்ட மழை, வெள்ள நிவாரணத் தொகை ரூ.37,000 கோடியில் ஒரு சல்லிக் காசு கூட தராத நிலையில், சிறுபான்மையினரின் உரிமைகளை பறிக்கும் குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்த நினைக்கும் பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், கன்னியாகுமரியில் நாளை கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்” என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கு.செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கடந்த 2019 -ம் ஆண்டு டிசம்பர் 11 அன்று நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி நிறைவேற்றப்பட்டது தான் குடியுரிமை திருத்தச் சட்டம். அந்த சட்டம் நிறைவேற்றப்பட்டு 5 ஆண்டுகளுக்கு பிறகு துருபிடித்துப் போன பழைய அஸ்திரத்தை இன்றைக்கு பாஜக கையில் எடுத்து, மக்களை மதரீதியாக பிளவுபடுத்தி அரசியல் ஆதாயம் தேடுவதற்குத் தான் குடியுரிமை திருத்தச் சட்டத்தை பாஜக அறிமுகப்படுத்தியிருக்கிறது.

பதவிக் காலம் முடியும் நேரத்தில் தேர்தல் பத்திர நன்கொடை வழக்கில் பட்டியலை வெளியிட வேண்டுமென்ற உச்சநீதின்றத் தீர்ப்பு பாஜகவுக்கு மரணஅடியாக விழுந்துள்ளது. அதிலிருந்து தப்பிக்கவும், மக்களை திசைதிருப்புவதற்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை பாஜக நிறைவேற்ற முயற்சி செய்கிறது. ஆனால், எத்தகைய முயற்சிகள் எடுத்தாலும் பாஜகவின் வீழ்ச்சியை தடுக்க முடியாது.

சிறுபான்மையின மக்களான இஸ்லாமியர்களையும், இலங்கை தமிழர்களையும் கைவிடும் சட்டம் தான் பாஜகவின் குடியுரிமை திருத்தச் சட்டம். இந்த சட்டம் இஸ்லாமியர் மீதான வெறுப்பை விதைக்கிறது. மதத்தின் பெயரால் ஒருவரை பாகுபாட்டுடன் நடத்தக் கூடாது என்கிறது அரசமைப்புச் சட்டம். ஆனால், மத சிறுபான்மையின மக்களை புறக்கணிக்கிற ஒரு சட்டத்தை தேர்தல் தேதி அறிவிப்பு வெளியிடுவதற்கு சில நாட்களே உள்ள நிலையில் இதை அமல்படுத்த முயல்வதை விட ஒரு ஜனநாயக விரோதச் செயல் வேறு எதுவும் இருக்க முடியாது.

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் வரலாம் என்கிறார்கள். அனைவரும் வரலாம் என்று சொல்லவில்லை. அந்த நாட்டை சேர்ந்த இஸ்லாமியர்கள் நீங்கலாக மற்ற மதத்தைச் சார்ந்தவர்கள் வரலாம் என்கிறார்கள். இஸ்லாமியர்களை ஏன் புறக்கணிக்க வேண்டும்? சிறுபான்மையின மக்கள் மீதான வெறுப்பை விதைப்பதன் மூலமாக வாக்கு வங்கியை விரிவுபடுத்துவதே பிரதமர் மோடியின் நோக்கமாகும்.

மக்களை பிளவுபடுத்தி வாக்கு வங்கியை விரிவுபடுத்துவதன் மூலம் வருகிற மக்களவை தேர்தலில் வெற்றி பெற்று விடலாம் என்று பகல் கனவு காண்கிறார். அவரது கனவை தகர்க்கத் தான் தலைவர் ராகுல்காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலும், தற்போது மணிப்பூர் முதல் மும்பை வரையிலும் மாபெரும் நடைபயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்து வருகிறார். அவரது பயணம் பாஜக ஆட்சிக்கு முடிவுகட்டுகிற பயணமாகும்.

இந்நிலையில், 10 ஆண்டுகால மக்கள் விரோத பாஜக ஆட்சியினால் பொருளாதார பேரழிவு ஏற்பட்டு மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருக்கிறது. மோடி ஆட்சியில் தமிழகம் தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, சென்னை உள்ளிட்ட பகுதிகள் மழை வெள்ளத்தினால் கடுமையாக பாதிக்கப்பட்ட போது தமிழகம் வராத பிரதமர் மோடி, தமிழகத்துக்கு ஐந்தாவது முறையாக வர இருக்கிறார்.

தமிழக அரசு கேட்ட நிவாரணத் தொகை ரூபாய் 37,000 கோடியில் ஒரு சல்லிக் காசு கூட தராத நிலையில், சிறுபான்மையினரின் உரிமைகளை பறிக்கும் குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்த நினைக்கும் பிரதமர் மோடியை கண்டித்து கன்னியாகுமரி, அகஸ்தீஸ்வரம் அருகே நாளை நடைபெறும் பொதுக்கூட்டத்துக்கு அவர் வரும் போது எதிர்ப்பு தெரிவிக்கிற வகையில் சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் எஸ். ராஜேஷ்குமார் தலைமையில்,மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் பினுலால் சிங், கே.டி. உதயம், ஜெ. நவீன்குமார் ஆகியோர் முன்னிலையில் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

இதில் மக்களவை காங்கிரஸ் உறுப்பினர் விஜய் வசந்த், சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினர் ஜே.ஜி. பிரின்ஸ் மற்றும் வட்டார, நகர, பேரூர், கிராம காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள், முன்னணி அமைப்புகள், துறைகள் மற்றும் பிரிவுகளின் தலைவர்கள் உள்ளிட்ட பெருந்திரளான காங்கிரஸ் கட்சியினர் பங்கேற்று மோடி அரசுக்கு எதிராக கருப்பு கொடி ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பார்கள்’ என்று அவர் கூறியுள்ளார்.

சுமார் ரூ.3 கோடி செலவில் கட்டப்பட்ட 2 நகர்ப்புர ஆரம்ப சுகாதார நிலையங்கள் திறப்பு

சுமார் ரூ.3 கோடி செலவில் கட்டப்பட்ட 2 நகர்ப்புர ஆரம்ப சுகாதார நிலையங்கள் திறப்பு

சென்னை: மத்திய சென்னை நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் புதிதாக இரண்டு நகர்ப்புர ஆரம்ப சுகாதார நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.

மாண்புமிகு இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள், மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் திரு. தயாநிதி மாறன் அவர்கள், இராயபுரம் மண்டலம், வார்டு-56க்குட்பட்ட பி.ஆர்.என்.கார்டன், பிரகாசம் சாலையில் தேசிய நகர்ப்புற சுகாதார திட்ட நிதியின் கீழ், ரூ.2.89 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய நகர்ப்புர ஆரம்ப சுகாதார நிலையத்தினைப் பயன்பாட்டிற்குத் திறந்து வைத்தனர் மற்றும் வார்டு-55க்குட்பட்ட அப்பு மேஸ்திரி தெருவில் மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்ட நிதியின் கீழ், ரூ.1.47 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய நகர்ப்புர ஆரம்ப சுகாதார நிலையத்தினைப் பயன்பாட்டிற்குத் திறந்து வைத்தனர்.

இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு மேயர் திருமதி ஆர்.பிரியா, கூடுதல் ஆணையாளர் (சுகாதாரம்) டாக்டர் வி. ஜெய சந்திர பானு ரெட்டி, இ.ஆ.ப., வடக்கு வட்டார துணை ஆணையர் திரு. கட்டா ரவி தேஜா, இ.ஆ.ப.நிலைக்குழுத் தலைவர் (பொதுசுகாதாரம்) டாக்டர் கோ. சாந்தகுமாரி, மண்டலக் குழுத் தலைவர் திரு.பி. ஸ்ரீராமுலு, மாமன்ற உறுப்பினர் திரு. திரு.வெ. பரிமளம், மாநகர நல அலுவலர் டாக்டர் எம். ஜெகதீசன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

தென் இந்திய பார்வர்ட் ஃபிளாக் நிறுவனத் தலைவர் கே.சி.திருமாறன் ஜி பிறந்தநாள் விழா : ஏராளமானோர் வாழ்த்து..!

மதுரை ஆரப்பாளையம் பகுதியில் உள்ள சிவபாக்யா மஹாலில் தென் இந்திய ஃபார்வர்ட் பிளாக் கட்சி நிறுவனத்தலைவர் கே சி திருமாறன் ஜி தலைமையில் 10 வது மாநில பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.

அன்றைய தினம் கே.சி.திருமாறன் ஜி அவர்களின் 50-வது பிறந்த நாள் விழா என்பதால் கேக் வெட்டி அவரின் பிறந்த நாளை நிர்வாகிகள் கோலாகலமாக கொண்டாடினர்.

மேலும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், தொழிலதிபர்கள், நண்பர்கள் ஏராளமானோர் வந்திருந்து தலைவர் கே.சி.திருமாறன் ஜி அவர்களுக்கு சால்வை அணிவித்தும், பூங்கொத்து வழங்கியும் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

இந்நிகழ்வின் போது நட்சத்திர நண்பர்கள் அறக்கட்டளை தலைவர் ஸ்டார் குரு, மற்றும் அறங்காவலர்கள் சோலை கண்ணன், சோலை அழகு, புகழ்மாறன் மற்றும் தென் இந்திய பார்வர்ட் பிளாக் மாநிலச் செயலாளர்கள் எஸ்.அய்யர் தேவர் மற்றும் வி.எஸ் மாரி மறவன், மீனவர் அணி மாநில தலைவர் சக்திவேல்ராஜ், மகளிர் அணி மாநில பொதுச்செயலாளர் தெய்வசக்தி உள்பட ஏராளமானோர் சால்வை அணிவித்து பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

நெல்லை மேட்டுப்பட்டி M.A.S.முத்துக்குமார் சாருமதிக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டது

மதுரையில் பாப்பீஸ் ஹோட்டலில் சர்வதேச தமிழ் பல்கலைக்கழகம் சார்பாக நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் நெல்லை மேட்டுப்பட்டி M.A.S.முத்துக்குமார் சாருமதி அவர்களுக்கு வழங்கப்பட்டது.

சர்வதேச தமிழ்ப் பல்கலைக்கழகம் சார்பாக மதுரை ரிங் ரோட்டில் உள்ள பாப்பீஸ் ஹோட்டலில் சர்வதேச தமிழ்ப் பல்கலைக்கழகம் சார்பாக பல்வேறு சமூக சேவைகள் செய்தோர்களுக்கு பட்டமளிப்பு விழா நேற்று சனிக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்வின் போது பல்வேறு சமூகப்பணிகளை செய்து வரும் நெல்லை மேட்டுப்பட்டி M.A.S.முத்துக்குமார் சாருமதி அவர்களுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இதில் அவரது துணைவியார் சாருமதி, மகள் லின்ஸி ஸ்ரீ, மகன் டேனியல் ஜெ மார்டின் சிங் ஆகியோர் உடன் இருந்தனர்.

திருமங்கலத்தில் அன்னை வசந்தா டிரஸ்ட் சார்பாக மகளிர் தின விழா

மதுரை மாவட்டம்,திருமங்கலம் நகரில் அன்னை வசந்தா டிரஸ்ட் சார்பில் வள்ளலார் மாலை நேர பயிற்சி பள்ளி யில் மகளிர் தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் வசிக்கும் ஏழை எளிய முதியோர்களுக்கு நாள்தோறும் உணவு இலவசமாக வழங்கி வரும் அன்னை வசந்தா டிரஸ்ட் சார்பில் மாலை நேர பயிற்சி பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் மகளிர் தின விழா நிகழ்வுகள் திருமங்கலம் வள்ளலார் மாலை நேர பயிற்சி பள்ளியில் நேற்று சிறப்பாக நடைபெற்றது.

இவ்விழாவிற்கு அன்னை வசந்தா டிரஸ்ட் டிரஸ்ட் தலைவர் அமுதவள்ளி பழனி முருகன் தலைமை வகித்தார். செயலாளர் சித்ரா ரகுபதி,பொருளாளர் அருள்ஜோதி ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். டிரஸ்ட் உறுப்பினர் ரோகுபாண்டி அனைவரையும் வரவேற்றார்.

இவ்விழாவில் மாலை நேர பயற்சி பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜி.ருக்மணி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மகளிர் தின சிறப்பு கள் குறித்தும், சாதனை பெண்மணிகள் குறித்தும் பேசினார். இதனையடுத்து பள்ளி மாணவிகள் அனுஷ்கா மற்றும் தர்ஷினி ஆகியோர் மகளிர் தினம் குறித்தும், விண்வெளி சாதனை பெண்மணி கல்பனா சாவ்லா குறித்தும் சிறப்புரையாற்றினார்கள். இந்நிகழ்வில் ஏராளமான மாணவிகள் கலந்து கொண்டு பல்வேறு கலை நிகழ்ச்சிகள் மூலம் தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

முன்னதாக அன்னை வசந்தா டிரஸ்ட் சார்பில் மகளிர் தின விழாவை முன்னிட்டு 648வது நாளாக 100க்கும் மேற்பட்ட வயதான ஏழை எளிய முதியோர்க்கு நாள்தோறும் நல்லுணவு திட்டத்தின் கீழ் இலவச உணவும், சாதனை படைத்த பெண்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது. விழாவின் நிறைவில் வள்ளலார் மாலை நேர பயிற்சி பள்ளியின் ஆசிரியை சிவஜோதிகா அனைவருக்கும் நன்றி கூறினார்.

தேசிய மனித உரிமைகள் மற்றும் சமூக நீதி கவுன்சில் ஆஃப் இந்தியா குளோபல், அமைப்பின் தமிழ்நாடு மாநில துணைத்தலைவராக கீதா முருகன் நியமனம்..!

தேசிய மனித உரிமைகள் சமூக நீதி கவுன்சில் ஆஃப் இந்தியா குளோபல் என்ற அமைப்பு இந்தியா முழுவதும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பின் நிர்வாகிகள் ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு சமூக சேவைகளை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் தேசிய மனித உரிமைகள் மற்றும் சமூக நீதி கவுன்சில் ஆஃப் இந்தியா குளோபல், அமைப்பின் தமிழ்நாடு மாநில துணைத்தலைவராக சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த கீதாமுருகன் அவர்களை அமைப்பின் தேசிய பொது இயக்குனர் சர்க்கார் பட்னாவி நியமனம் செய்துள்ளார்.

புதிதாக நியமனம் செய்யப்பட்ட கீதாமுருகன் அவர்களுக்கு அமைப்பின் நிர்வாகிகள் நண்பர்கள் உறவினர்கள் ஏராளமானோர் அவரின் பணி சிறக்க வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

தமிழ்நாடு மாநில சேர்மனாக மருத்துவர் கஜேந்திரன் நியமனம்…!

தேசிய மனித உரிமைகள் மற்றும் சமூக நீதி கவுன்சில் ஆஃப் இந்தியா குளோபல், அமைப்பின் தமிழ்நாடு மாநில சேர்மனாக மதுரையை சேர்ந்த மருத்துவர் கஜேந்திரன் அவர்களை, அமைப்பின் தேசிய பொது இயக்குனர் சர்க்கார் பட்னாவி அவர்கள் நியமனம் செய்துள்ளார்.

மதுரை மாவட்டம் துவரிமான் கிராமத்தில் மத்திய அரசின் 10 ஆண்டுகால சாதனை விளக்க பொதுக்கூட்டம்

துவரிமானில் மத்திய அரசின் 10 ஆண்டுகால சாதனை விளக்க பொதுக்கூட்டம்

மதுரை, மார்ச்.07-

பாஜக மதுரை மாநகர் மாவட்ட பரவை மண்டல் துவரிமான் கிளை சார்பாக மத்திய அரசின் 10 ஆண்டுகால சாதனை விளக்க பொதுக்கூட்டம் மண்டல் தலைவர் ஜெகநாதன் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு மாநகர் மாவட்ட செயலாளர் ரமேஷ்கண்ணன், விவசாய அணி மாவட்ட தலைவர் துரை பாஸ்கர், எஸ்.டி அணி மாவட்ட பொதுச்செயலாளர் இளங்கோவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்திற்கு வருகை தந்தவர்களை துவரிமான் பகுதி கிளைத்தலைவர் ஜெயமணி வரவேற்று பேசினார்.

இக்கூட்டத்தில் பாஜக மதுரை மாவட்ட தலைவர் தாமரை சேவகன் மகா.சுசீந்திரன் கலந்து கொண்டு
பத்தாண்டு கால பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியில் அவர் செய்த பல்வேறு சாதனைகள் குறித்து விளக்கி பேசினார்.

இதில் மாவட்டத் துணைத் தலைவர் வினோத்குமார், மாவட்ட பொதுச்செயலாளர்கள் கிருஷ்ணன், சந்தோஷ் சுப்பிரமணியன், மாவட்ட பொருளாளர் நவீன் அரசு, மாவட்ட மகளிரணி தலைவி ஓம்சக்தி தனலட்சுமி, பிரச்சாரப் பிரிவு மாவட்ட செயலாளர் பிரபு நடராஜன், மண்டல் பொருளாளர் ரமணி, எஸ்.டி அணி மாவட்ட செயலாளர் கருப்பசாமி என்ற விஜி, காளவாசல் மண்டல் தலைவர் பிச்சைவேல், விவசாய அணி மாவட்ட செயலாளர் விஸ்வநாதன், மண்டல் பொதுச்செயலாளர் இருளப்பன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியின் முடிவில் மண்டல் பொதுச்செயலாளர் கண்ணன் நன்றி கூறினார்.

திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை : எடப்பாடியார் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தான் தமிழகத்தில் பெண்கள் உரிமை காக்கப்படும். டாக்டர் சரவணன் பேட்டி..!

விடியா திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நாடாக தமிழ்நாடு திகழ்கிறது

எடப்பாடியார் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தான் தமிழகத்தில் பெண் உரிமை காக்கப்படும், பாதுகாக்கப்படும்

கழக மருத்துவரணி இணை செயலாளர் பா.டாக்டர் சரவணன் பேட்டி

மதுரை,மார்ச்.07-

உலக பெண்கள் தினம் மார்ச் 8 ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது, அந்த பெண்கள் தினத்தை கொண்டாடக்கூடிய தகுதி அனைத்திந்திய  அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்திற்கு தான் உள்ளது .ஏனென்றால் பெண் சமுதாயத்திற்காக எண்ணற்ற திட்டங்களை வாரி வழங்கி, பாதுகாப்பு கவசமாக அம்மா அரசு இருந்தது.

இந்தியாவிலேயே ஏன் உலகத்திலே இல்லாத வகையில், பெண் சமுதாயத்திற்கு எண்ணற்ற திட்டங்களை புரட்சித்தலைவி அம்மாவும், அதனை தொடர்ந்து எடப்பாடியாரும் வாரி வழங்கினார்கள்

புரட்சித்தலைவி அம்மா தொட்டில் குழந்தை திட்டத்தை கொண்டு வந்தார்  இதன் மூலம் ,4500 மேற்பட்ட பெண் குழந்தைகளை பெண் சிசு கொலையில் இருந்து காப்பாற்றப்பட்டது இந்தத் திட்டத்தை அன்னை தெரசாவே பாராட்டினர்.

 அதே போல் முதன் முதலில் மகளிர் காவல் நிலையங்கள் ,பெண் கமோண்டோ படைகள் உருவாக்கினார்.மகளிர் சுய உதவி குழுக்களை உருவாக்கித் தந்தார்.

தந்தைக்கு பதில் தாய்யின்  இன்சியலையும் குழந்தைகளுக்கு சூட்டிக் கொள்ளலாம் என்று புரட்சிகரமாக அறிவித்து அதன் மூலம் ஆண்களுக்கு  பெண்கள் சமம் என்று நிரூபித்து காட்டினார்.

ஒரு கோடியே 85 லட்சம் குடும்பங்களுக்கு தாய் வீட்டு சீதனமாக விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், மின் விசிறி திட்டம் வழங்கினார்

தாலிக்கு தங்கம் திட்ட மூலம் 4 கிராம் தங்கம் படித்த பெண்களுக்கு 25000 நிதியுதவி, பட்டப் படிப்பு படித்த பெண்களுக்கு 50,000 நிதியுதவி வழங்கினார். இதன் மூலம் இந்தியாவிலேயே தமிழகத்தில் பெண்களின் கல்வி விகிதாச்சாரம் உயர்ந்தது.

 அதனைத் தொடர்ந்து 2016 சட்டமன்றத் தேர்தல் அறிக்கையில் தாலிக்கு 8 கிராம் தங்கம் வழங்கப்படும் என்று கூறினார் அதனை தொடர்ந்து, அந்த திட்டத்தை எடப்பாடியார்  தொடர்ந்து செயல்படுத்தினார். இதன் மூலம் கடந்த 10 ஆண்டுகளில் 12.51 லட்சம் ஏழைப் பெண்கள் தாலிக்கு தங்கம் திட்டம்  மூலம் பயன்பெற்றனர்.

புரட்சித்தலைவி அம்மா 2016 ஆண்டு சட்டமன்றத் தேர்தல் அறிக்கையில் தேதி உழைக்கும் பெண்களுக்கு  மானிய விலையில், இருசக்கர வாகன திட்டம் வழங்கப்படும் என்று கூறினார் .அந்த திட்டத்தினை எடப்பாடியார் செயல்படுத்தி 2.85  லட்சம் உழைக்கும் பெண்களுக்கு மானிய விலையில் இருசக்கர வாகன திட்டத்தினை வழங்கினார்.

 கிராமப்புறம் பொருளாதாரம் மேன்மை அடைய பெண்களுக்கு 12,000 கறவைபசுகள், 6 லட்சம் வெள்ளாடுகள், 2.4 லட்சம் நாட்டுக்கோழி வழங்கப்பட்ட இதன் மூலம் இனப்பெருக்கம் ஏற்பட்டு கிராமப்புற மக்களின் பொருளாதாரம் உயர்வு ஏற்பட்டது

கர்ப்பிணி பெண்களுக்கு 12,000 ரூ இருந்த உதவித்தொகையை 18,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்பட்டது.உள்ளாட்சி பதவிகளில் பெண்களுக்கு 50 சகவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று அம்மா அரசாணை வெளியிட்டார் அதனை எடப்பாடியார் செயல்படுத்தினார்.

இந்தியாவிலேயே பெண்களுக்கு பாதுகாப்பு மிக்க நகரங்களாக சென்னை மற்றும் கோவை தேர்வு செய்யப்பட்டது.பெண் குழந்தை காப்போம், பெண் குழந்தைக்கு கற்பிப்போம் என்ற திட்டத்தின் மூலம் தேசிய அளவில் தொடர் விருதுகள் பெறப்பட்டது.

 2021 தேர்தலில் திமுக பெண்களுக்கு எண்ணற்ற திட்டங்களை சட்டமன்றத் தேர்தலில் அறிவித்தார்கள் எதையும் செய்யவில்லை .அனைத்து குடும்பத்துக்கும் ஆயிரம் ரூபாய் வழங்குவோம் என்று சொல்லிவிட்டு 28 மாதங்களுக்கு பிறகு ஒரு கோடியே 15லட்சம் குடும்பங்களுக்கு வழங்கிவிட்டு மீதமுள்ள ஒரு கோடி 5 லட்சம் குடும்பங்களை தகுதி இல்லை என்று நிராகரித்து விட்டனர்.

அதேபோல கேஸ் மானியம் 100 ரூபாய் வழங்குவோம் என்று கூறினார்கள் அதையும் வழங்கவில்லை, குறிப்பாக தாலிக்கு தங்கம் திட்டத்தை ரத்து செய்துவிட்டனர் ,அதேபோல் பெண்களுக்கு இருசக்கர வாகன திட்டத்தை ரத்து செய்துவிட்டனர்.

 பெண்களுக்கு பேருந்து இலவசம் என்று கூறிவிட்டு குறைந்த பேருந்தை மட்டும்  இயக்குகிறார்கள் அதனை தொடர்ந்து ,ஓசி என்று பெண்களை இழிவு படுத்தினார்கள்.

 அதேபோல் திமுக நடத்திய மாநாட்டில் பெண் காவலர் மீது திமுகவினர் பாலியல் தொல்லை செய்தனர், இதற்கு மேலாக திமுக சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதி மகன் வீட்டில் பணிபுரிந்த பட்டியலில் இன சிறுமி மீது வன்கொடுமை தாக்குதல் செய்தனர் எடப்பாடியார் கடுமையான கண்டனத்தை தெரிவித்து பின்பு தான் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

விடியா திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நாடாக தமிழ்நாடு திகழ்கிறது.

எடப்பாடியார் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தான் தமிழகத்தில் பெண் உரிமை காக்கப்படும், பாதுகாக்கப்படும் என கூறினார்

ஆனையூரில் அதிமுக பகுதி துணைச் செயலாளர் ஐயப்பன் ஏற்பாட்டில்,பகுதி முன்னாள் அவைத்தலைவர் எம்.கோட்டைச்சாமி நினைவுக் கம்பம் திறப்பு விழா..!

அதிமுக முன்னாள் பகுதி அவைத்தலைவர் எம்.கோட்டைச்சாமி நினைவுக் கம்பம் திறப்பு விழா

மதுரை,மார்ச்.06-

மதுரை மாவட்டம் ஆனையூரில்
அதிமுக பகுதி கழக துணைச் செயலாளரும், வழக்கறிஞருமான கே.ஐயப்பன் ஏற்பாட்டில்,
பகுதி கழக முன்னாள் அவைத்தலைவர் எம்.கோட்டைச்சாமி அவர்களின் நினைவுக் கம்பம் திறப்பு விழா நடைபெற்றது.

இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் இராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ கொடியை ஏற்றி வைத்தார்.

இந்நிகழ்விற்கு ஆனையூர் பகுதி கழகச் செயலாளர் தி.கோபி தலைமை தாங்கினார். மதுரை மண்டல அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் வி.வி.ராஜ்சத்யன் மற்றும் வக்கீல் ரமேஷ், நிலையூர் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் நிர்வாகிகள், ராமமூர்த்தி, ராஜேஷ் ராமகிருஷ்ணன் வெள்ளி ராமு பாண்டி ஆகியோர் வரவேற்றுப் பேசினர்.
இந்நிகழ்வில் நிர்வாகிகள் தக்கார்பாண்டி, வாசு (எ) பெரியணன், கார்சேரி கணேசன், உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES