Thursday , March 19 2026
Breaking News
Home / செய்திகள் / ஆனையூரில் அதிமுக பகுதி துணைச் செயலாளர் ஐயப்பன் ஏற்பாட்டில்,பகுதி முன்னாள் அவைத்தலைவர் எம்.கோட்டைச்சாமி நினைவுக் கம்பம் திறப்பு விழா..!
NKBB Technologies

ஆனையூரில் அதிமுக பகுதி துணைச் செயலாளர் ஐயப்பன் ஏற்பாட்டில்,பகுதி முன்னாள் அவைத்தலைவர் எம்.கோட்டைச்சாமி நினைவுக் கம்பம் திறப்பு விழா..!

அதிமுக முன்னாள் பகுதி அவைத்தலைவர் எம்.கோட்டைச்சாமி நினைவுக் கம்பம் திறப்பு விழா

மதுரை,மார்ச்.06-

மதுரை மாவட்டம் ஆனையூரில்
அதிமுக பகுதி கழக துணைச் செயலாளரும், வழக்கறிஞருமான கே.ஐயப்பன் ஏற்பாட்டில்,
பகுதி கழக முன்னாள் அவைத்தலைவர் எம்.கோட்டைச்சாமி அவர்களின் நினைவுக் கம்பம் திறப்பு விழா நடைபெற்றது.

இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் இராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ கொடியை ஏற்றி வைத்தார்.

இந்நிகழ்விற்கு ஆனையூர் பகுதி கழகச் செயலாளர் தி.கோபி தலைமை தாங்கினார். மதுரை மண்டல அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் வி.வி.ராஜ்சத்யன் மற்றும் வக்கீல் ரமேஷ், நிலையூர் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் நிர்வாகிகள், ராமமூர்த்தி, ராஜேஷ் ராமகிருஷ்ணன் வெள்ளி ராமு பாண்டி ஆகியோர் வரவேற்றுப் பேசினர்.
இந்நிகழ்வில் நிர்வாகிகள் தக்கார்பாண்டி, வாசு (எ) பெரியணன், கார்சேரி கணேசன், உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Bala Trust

About Kanagaraj Madurai

Check Also

மதுரை கோ.புதூர் அல்-அமீன் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா

மதுரை கோ.புதூர் அல்-அமீன் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது. மதுரை பிப் 06 மதுரை …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES