சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கை: திருச்சி விழாவில் பிரதமர் மோடி திட்டங்களை துவக்கி வைத்து உரையாற்றும் போது வெள்ள பாதிப்புகளில் இருந்து மீள தமிழக மக்களுக்கு துணை நிற்போம் என்று உறுதி வழங்கியிருக்கிறார்.
வெள்ள சேதத்தை பேரிடராக அறிவித்து தமிழகத்திற்கு நிதி வழங்க பிரதமர் மோடியை நேரிலும், நேற்றைய கூட்டத்திலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியிருக்கிறார். ஒன்றிய குழு வருகை புரிந்து அறிக்கை தாக்கல் செய்ததோடு, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் தென்மாவட்ட வெள்ள பாதிப்பை நேரில் ஆய்வு செய்து இதுவரை தமிழகத்திற்கு நிவாரண நிதியாக எதுவும் வழங்கப்படவில்லை. இந்நிலையில் பிரதமரின் பேச்சை எப்படி ஏற்றுக் கொள்வது என்று தெரியவில்லை. பிரதமர் மோடி சாதுர்யமான மேடை பேச்சின் மூலம் மக்களின் துன்பங்களையும், துயரங்களையும் திசைதிருப்பி அரசியல் ஆதாயம் தேடலாம் என்று பகல் கனவு காண்கிறார். அவரது கனவு தமிழகத்தில் நிறைவேறாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ஒய்.எஸ்.ஆர் தெலுங்கானா கட்சியின் நிறுவனர் ஒய்எஸ் ஷர்மிளா இன்று டெல்லியில் ராகுல் காந்தி முன்னிலையில் காங்கிரஸில் இணைந்தார்.
ஒய்எஸ் ஷர்மிளா நேற்று இரவே அரசியல் காரணங்களால் டெல்லி சென்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அங்குள்ள அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைமையகத்தில் இன்று காலை 11 மணியளவில் ஒய்எஸ் ஷர்மிளா கட்சியில் இணைந்தார். இவருடன் ஒய்.எஸ்.ஆர் தெலுங்கானா கட்சியின் தொண்டர்களும், ஒய்.எஸ்.ஆர் தெலுங்கானா கட்சியும் காங்கிரஸில் இணைக்கப்பட்டது.
முன்னதாக நேற்று இரவு ஷர்மிளா டெல்லி விமான நிலையத்திற்கு வந்தவுடன் நிருபர்கள், ”காங்கிரஸில் இணைய உள்ளீர்களா என்ற கேள்விக்கு, ‘ஆம், அது போலதான் இருக்கிறது’ என்று கூறினார்.
ஹைதராபாத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கட்சிக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய ஒய்எஸ் ஷர்மிளா, தானும் மற்ற தலைவர்களும் அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் மேலிடத் தலைவர்களை சந்தித்து டெல்லியில் முக்கியமான அறிவிப்பை வெளியிடுவோம் என்று தெரிவித்தார்.
ஷர்மிளா பிரிக்கப்படாத ஆந்திராவின் முன்னாள் முதல்வர், மறைந்த ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் மகளும், ஆந்திரப் பிரதேச முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் தங்கையும் ஆவார்.
இந்த ஆண்டு மக்களவைத் தேர்தலுடன், ஆந்திரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலும் நடைபெறும். ஆனால், மக்களவைத் தேர்தலுக்கு முன், ஜெகன் மோகன் ரெட்டியின் தங்கை ஒய்எஸ் ஷர்மிளா காங்கிரஸில் இணைந்தது அரசியலில் மிகப்பெரிய அளவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
காங்கிரஸில் தேசிய அளவில் பெரிய பதவி:
காங்கிரஸில் இணைந்தால், ஒய்எஸ் ஷர்மிளாவுக்கு தேசிய அளவில் கட்சியில் ஏதாவது பதவி வழங்கப்படலாம் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், காங்கிரஸுடன் அவரது கட்சி இணைந்த பிறகு, தென் மாநில தேர்தல் பொறுப்பாளராக சர்மிளா நியமிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்றும் கூறப்படுகிறது.
தெலுங்கானா தேர்தலில் காங்கிரஸுக்கு ஆதரவு அளித்த ஒய்எஸ் ஷர்மிளா:
தெலுங்கானாவில் சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலின் போது, கே.சந்திரசேகர் ராவ் தலைமையிலான பி.ஆர்.எஸ்-ன் ஊழல் மற்றும் மக்கள் விரோத ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர, காங்கிரஸுக்கு ஆதரவளிப்பதாக ஷர்மிளா அறிவித்திருந்தார்.
2019 ஆந்திர பிரதேச தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டிக்காக பிரச்சாரம்:
ஒய்.எஸ். ஷர்மிளா காங்கிரஸில் இணைந்த பிறகு, ஆந்திராவில் அவரது சகோதரர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு அரசியல் பின்னடைவு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். அதே நேரத்தில், ஷர்மிளாவும் கடந்த 2021 வரை ஒய்எஸ்ஆர் காங்கிரஸில் ஒரு ஆளுமையாக இருந்தார். 2012ல் ஜெகன் நீண்ட காலம் சிறையில் இருந்தபோது, ஒய்எஸ்ஆர்சி தலைவராக சர்மிளா பொறுப்பேற்று கட்சியை சிறப்பாக வழிநடத்தினார். கடந்த 2019 ஆந்திர பிரதேச சட்டசபை தேர்தலில் ஷர்மிளா தனது சகோதரர் ஜெகன்மோகன் ரெட்டிக்காக பிரச்சாரம் செய்தார்.
2019 தேர்தலில் அபார பெரும்பான்மையுடன் ஜெகன்மோகன் வெற்றி பெற்றபோது, தனக்கு எந்தப் பதவியும் வழங்கப்படாததால் ஷர்மிளா கடும் அதிருப்தியில் இருந்தார். அதில் இருந்தே இருவருக்கும் புகைச்சல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து, இருவருக்கும் இடையே சொத்து தகராறு இருந்ததாகவும், அரசியல் கருத்து வேறுபாடுகள் இருப்பதாகவும் அதிக அளவில் ஊடகங்களில் செய்திகள் வெளிவர தொடங்கின. இதை உண்மை என நிரூபிக்கும் வகையில், இருவரும் பொது சமூக வலைதளங்களில் ஒருவரை ஒருவர் நல்ல நாளில் வாழ்த்துவது கூட இல்லாமல் போனது.
ஆனால் தற்போதைய நிலவரத்தை பார்க்கும் போது இவர்கள் ஒரு கட்டத்தில் குடும்பமாக இணைந்தாலும் அரசியல் ரீதியாக போட்டியாளர்களாகவே இருக்க வாய்ப்புகள் உள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து பாஜகவுக்கு எதிராக உருவாக்கி உள்ள இண்டியா கூட்டணி தங்களின் அடுத்த கட்ட தேர்தல் பணிகளை தொடங்கியுள்ளன.
குறிப்பாக காங்கிரஸ் மற்றும் கூட்டணியில் உள்ள மாநில கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து கடந்த முறை டெல்லியில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தின் போது விரிவாக விவாதிக்கப்பட்டது. இந்த விவாதத்தின் போது பிராந்திய கட்சிகளுடன் தொகுதி பங்கீடு செய்வதற்கான குழு அமைக்கப்பட்டு அதன் மூலம் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் மற்றும் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளை இறுதி செய்யவேண்டும் என மேற்குவங்க முதல்வர் மம்தா உள்ளிட்டோர் வலியுறுத்தினார்.
இந்நிலையில் டெல்லியில் இன்று காங்கிரஸ் மாநில பொறுப்பாளர்கள், பொதுச்செயலாளர்கள் கூட்டம் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் காலை 11 மணிக்கு நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் மாநில கட்சிகளுடனான தொகுதி பங்கீடு, வரும் 14 முதல் மார்ச் 20 ஆம் தேதி வரை நடைபெறும் ராகுல் காந்தியின் யாத்திரை ஏற்பாடுகள், நாடாளுமன்ற தேர்தல் அறிக்கை உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய சுதந்திர போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் பிறந்த நாளை முன்னிட்டு, மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு நேதாஜி சுபாஷ் சேனை நிறுவனத்தலைவர் டாக்டர் மகாராஜன் ஆணைக்கிணங்க, மாநிலச் செயலாளர் சுமன் தேவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்வில் ஆட்டோ தொழிற்சங்கத்தினர் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.
இந்திய சுதந்திர போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் பிறந்த நாளை முன்னிட்டு, மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு பெருந்தலைவர், நடிகர்திலகம், அறக்கட்டளை சார்பாக டால்பின் சுரேஷ், பாலாஜி ஆகியோர் தலைமையிலும், ஜி.முத்துக்குமார், கே.ஆர்.சுரேஷ்பாபு ஆர்.மாரிக்கனி ஆகியோர் முன்னிலையிலும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் மூவேந்திரன், போஸ், பாலமுருகன், மணிவேல், வீரவாஞ்சிநாதன், குருபிரசாத், கனகவேல் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
2024 வருட காலண்டரை சமூகசேவகர் அண்ணாநகர் முத்துராமன் வழங்கினார்
மதுரை, டிசம்பர்.31-
மதுரை அண்ணாநகர் யானைக்குழாய் பகுதியில், மக்கள் நீதி மய்யம் மதுரை வடக்கு தொகுதி நற்பணி இயக்க நிர்வாகியும், சமூக சேவகருமான அண்ணாநகர் முத்துராமன் அவர்கள் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு பொதுமக்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு இனிப்புகள் மற்றும் 2024 ஆம் வருட காலண்டரை வழங்கினார்.
இந்நிகழ்வில் நிர்வாகிகள் குணாஅலி, நாகேந்திரன், பூமிராஜா, ஆர்.சி.மணிகண்டன், கரிசல்குளம் முருகன், செந்தில்பாண்டி, ஜெயா, பாலு, ஆனையூர் சந்திரன், சக்திவேல் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
2024 வருட காலண்டரை சமூகசேவகர் அண்ணாநகர் முத்துராமன் வழங்கினார்
மதுரை, டிசம்பர்.31-
மதுரை அண்ணாநகர் யானைக்குழாய் பகுதியில், மக்கள் நீதி மய்யம் மதுரை வடக்கு தொகுதி நற்பணி இயக்க நிர்வாகியும், சமூக சேவகருமான அண்ணாநகர் முத்துராமன் அவர்கள் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு பொதுமக்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு இனிப்புகள் மற்றும் 2024 ஆம் வருட காலண்டரை வழங்கினார்.
இந்நிகழ்வில் நிர்வாகிகள் குணாஅலி, நாகேந்திரன், பூமிராஜா, ஆர்.சி.மணிகண்டன், கரிசல்குளம் முருகன், செந்தில்பாண்டி, ஜெயா, பாலு, ஆனையூர் சந்திரன், சக்திவேல் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
தேமுதிக தலைவரும், மக்கள் மனதில் எளிமையாக இடம் பிடித்த கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மறைவையொட்டி இறுதி ஊர்வலத்தில் தமிழக திரைப்பட துணை நடிகர் நடிகைகள் மற்றும் திரைப்பட உதவியாளர் நலச்சங்கம் சார்பாக பங்கேற்று மெழுகுவர்த்தி ஏந்தி சென்று அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் சங்கத் தலைவர் பன்னீர்செல்வம், பொதுச்செயலாளர் ராஜரிஷி குரு, இயக்குனர் ஹபீப்கான், திருவாரூர் நடிகர் சங்கத்தின் சட்ட ஆலோசகர் பாலாஜி கோவிந்தராஜ், நடிகைகள் கனல் சத்யா, அறந்தாங்கி மஞ்சு, கோவை அம்மு, திண்டுக்கல் தனலட்சுமி, பி ஆர் ஓ செல்வி, சாஸ்திரி, வளர்மதி, சென்னை விஜயலட்சுமி, சுமதி, சென்னை சத்தியா பார்வதி, காரைக்குடி ஜெயா, ஷகிராபானு உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக சென்னையில் உள்ள சங்க அலுவலகத்தில் கேப்டன் அவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏற்றி மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
தமிழ்நாட்டின் பாரம்பரிய பண்பாட்டு கலைகளில் சிலம்பமும் ஒன்றாகும் வீர விளையாட்டின் தாய் கலையாகவும் சிலம்பம் கலை திகழ்கிறது. இத்தகைய பாரம்பரிய கலையானது இன்றைய சந்ததியோடு மறைந்து விடக்கூடாது என்பதை கொண்டு எதிர்கால சந்ததியினருக்கு கொண்டு சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார் மதுரையை சேர்ந்த சிலம்பம் ஆசான் டாக்டர் ரா சரவண பாண்டி
மதுரை எஸ்.எஸ்.காலனி பகுதியில் உள்ள இந்திய சிலம்பம் அறக்கட்டளையின் மூலம் தாய் தந்தையற்றவர்களுக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கும் இலவசமாக சிலம்பம் கலையை கற்றுக் கொடுத்து வருகிறார்.
இந்நிலையில் இந்திய சிலம்பம் அறக்கட்டளையின் தலைமையில் ஸ்டார் புக் ஆப் ரெக்கார்டும் இணைந்து பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கண்களைக் கட்டிக் கொண்டு ஒரு மணி நேரம் இடைவிடாமல் தொடர்ந்து சிலம்பம் சுற்றும் உலக சாதனை முயற்சி நடைபெற்றது.
இந்த உலக சாதனை முயற்சியில் ஜீவனா பள்ளியில் பயிலும் ஆதித் என்ற 4 வயது சிறுவன் ஒரு மணி நேரம் இடைவிடாமல் சிலம்பம் சுற்றி உலக சாதனை புரிந்தார். மதுரை எஸ்.எஸ் காலனியை சேர்ந்த நாகேந்திரகுமார் வனிதாசங்கரி தம்பதியினரின் மகனான ஆதித் கடந்த ஆறு மாதமாக இந்திய சிலம்பம் அறக்கட்டளை நிறுவனரான சிலம்பம் ஆசான் டாக்டர் ரா சரவணபாண்டி அவர்களிடம் பயிற்சி பயின்று வருகிறார்.
உலக சாதனை புரிந்து இந்திய சிலம்பம் அறக்கட்டளைக்கும் தனது பெற்றோர்களுக்கும் பெருமை தேடித் தந்துள்ளார்…
நான்கு வயது சிறுவனுக்குள் இருக்கும் திறமையை வெளிக்கொண்டு வந்த சிலம்பம் ஆசான் டாக்டர் ரா.சரவணபாண்டியை மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்
சபரிமலையில் அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் சார்பாக இந்த மண்டல மகரவிளக்கு காலங்களில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க இயலாத சூழ்நிலையில் சபரிமலை சிறப்பு அதிகாரி (Special Officer) அவர்களின் வேண்டுகோளின் பேரில் வரிசையில் காத்திருக்கும் பக்தர்களுக்கு மூலிகை குடிநீர், பிஸ்கட் வழங்கப்பட்டது.
நவம்பர் 29 முதல் டிசம்பர் 27 வரை 31 நாட்களில் ரூபாய் 8 இலட்சம் மதிப்பிலான பிஸ்கட்கள் சன்னிதானம் வரை காத்திருக்கும் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. சன்னிதானம் அப்பாச்சிமேடு, புல்மேடு பாதையில் உடல்நலக்குறைவு ஏற்பட்ட பக்தர்களை அருகில் உள்ள மருத்துவமனைக்கு எடுத்துச்செல்ல ஸ்டெச்சர் சர்வீஸ் சேவை வழங்கப்பட்டது.
இந்தாண்டு புல்மேடு பாதையில் அதிகளவிலான பக்தர்கள் வருகை புரிவதால் உரல்குழி தீர்த்தம் செல்லும் வழி அருகே முகாம் அமைக்கப்பட்டு ஸ்டெச்சர் சர்வீஸ் பிஸ்கட் மூலிகை குடிநீர் வழங்கப்பட்டது. 622 முறை ஸ்டெச்சர் சர்வீஸ் மேற்கொள்ளப்பட்டது
குறிப்பாக இச்சேவைகளில் மண்டல காலத்தில் மட்டும் 611 சேவா சங்க தொண்டர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். தமிழ்நாடு தொண்டர்கள் மூலம் அழுதா.கரிமலை. பெரியானை வட்டம் மற்றும் பல்வேறு மாவட்டங்களிலும் அகில பாரத ஐயப்ப சேவா சங்கத்தின் சார்பில் அன்னதானம் வழங்கப்படுகிறது.
வரும் மகரவிளக்கு காலத்தில் மூலிகை குடிநீர், பிஸ்கட் வழங்குதல்,ஸ்டெச்சர் சர்வீஸ் சேவை மேற்கொள்ள அதிக அளவிலான தொண்டர்களை ஈடுபடுத்த தேவையான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
மேற்படி சேவைகளை ஒருங்கிணைத்து செய்ய மத்திய தலைவர் ஐயப்பன், மத்திய பொதுச்செயலாளர் விஜயக்குமார், மத்திய பொருளாளர் விஸ்வநாதன் மற்றும் முகாம் அலுவலர்கள் தொண்டர் படை தளபதிகள் ராஜதுரை, ராமையா மற்றும் நிர்வாகிகள் சிறப்பான ஏற்பாடுகளை செய்துள்ளனர்.