Thursday , December 12 2024
Breaking News
Home / செய்திகள் (page 77)

செய்திகள்

All News

தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரி பவள விழா நிறைவு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு

தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரி பவள விழா நிறைவு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று சிறப்பித்தார்

மயிலாடுதுறை மாவட்டம், தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரியின் 75-ஆம் ஆண்டு பவள விழா நிறைவை முன்னிட்டு நடைபெற்ற முப்பெரும் விழாவில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

தருமபுரம் ஆதீனத்தின் இவ்விழாவிற்கு 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் முன்னிலை வகித்தார். பின்னர் திருக்குறள் உரைவளம் என்ற நூலை முதலமைச்சர் வெளியிட்டார்.

இவ்விழாவில், இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் சிவ.வி. மெய்யநாதன், தமிழ்நாடு அரசின் தில்லி சிறப்புப் பிரதிநிதி ஏ.கே.எஸ். விஜயன், நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். ராமலிங்கம், சட்டமன்ற உறுப்பினர்கள் எம். பன்னீர்செல்வம், நிவேதா எம். முருகன், எஸ். ராஜ்குமார், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் க.வீ.முரளீதரன், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.பி. மகாபாரதி, தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரியின் முதல்வர் முனைவர் சி. சாமிநாதன், செயலாளர் முனைவர் இரா. செல்வநாயகம், இந்து சமய அறநிலையத் துறை உயர்நிலை குழு உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ தலைமையில் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ தலைமையில் பொதுமக்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது

மதுரை,ஆக.25-

அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு தடை விதிக்கக் கோரி ஓபிஎஸ் உள்ளிட்ட 4 பேர் தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதை தொடர்ந்து மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே ராஜூ எம்எல்ஏ தலைமையில் பொதுமக்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்வில் பகுதி, வட்டக்கழக செயலாளர்கள், மகளிரணியினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

கொடநாடு வழக்கு குற்றவாளிகளை சிறையில் அடைத்தது அதிமுக அரசு : அவர்களுக்கு ஜாமீன் வழங்கியது திமுக அரசு.முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேட்டி

கொடநாடு வழக்கு குற்றவாளிகளை சிறையில் அடைத்தது அதிமுக அரசு : அவர்களுக்கு ஜாமீன் வழங்கியது திமுக அரசு ஆர்.பி.உதயகுமார் பேட்டி

மதுரை,ஆக.25-

அதிமுகவில் குழப்பம், இடையூறு ஏற்படுத்தியவர்களுககு  சரியான சம்பட்டி‌ அடியான தீர்ப்பை நீதிமன்றம் கொடுத்துள்ளது என சட்டமன்ற எதிர்க்கட்சித் துணை தலைவர் ஆர்.பி. உதயகுமார் கூறினார்.

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு புரட்சித்தமிழர் பட்டம் வழங்கியதை தொடர்ந்து மதுரை மாட்டுத்தாவணியில் உள்ள செய்தியாளர் அரங்கத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

 இதில் நலத்திட்ட உதவிகளை சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி. உதயகுமார் எம்எல்ஏ வழங்கினார் . இந்நிகழ்வில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.எஸ்.சரவணன், கே.தமிழரசன், எம்.வி.கருப்பையா, மாணிக்கம், மாநில அம்மா பேரவை துணைச் செயலாளர் வெற்றிவேல் உட்பட பலர் கலந்து  கொண்டனர். 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியதாவது :

ரோம் நகர் பற்றி எரியும்போது நீரோ மன்னன் பிடில் வாசித்தது போல, இன்றைக்கு சொத்து வரி உயர்வு, மின்கட்டண உயர்வு, காய்கறி விலை உயர்வு  இதைப் பற்றி எல்லாம் ஸ்டாலின் கவலைப்படவில்லை.
 54 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணித்திட்டத்தை வழங்கினோம், 13 லட்சம் பெண்களுக்கு தாலிக்கு தங்கம்  திட்டத்தை வழங்கினோம். ஆனால் அதையெல்லாம் மூடு விழா கண்டு சில திட்டங்களுக்கு திறப்பு விழா காண்கிறார்கள்.மேலும் தேர்தல் அறிக்கையில் கல்வி கடன் ரத்து, நீட் தேர்வு என்று பச்சை பொய் பேசினார்கள் எதையும் நிறைவேற்றவில்லை.

கொடநாடு கொலை வழக்கு குற்றவாளிகளை சிறையில் அடைத்தது அதிமுக அரசு. ஆனால் அவர்களுக்கு ஜாமீன் வழங்கியது திமுக அரசு .குற்றச்சாட்டப்பட்குற்றவாளியுடன் திமுக முதலமைச்சர் அருகில் நின்று புகைப்படம் எடுத்திருக்கிறார். கேரளாவில் உள்ளவர்க்கு இங்கு இருக்கும் வழக்கறிஞர் எப்படி ஜாமீன் பெற்றார். தொடர்ந்து கடத்தல், கொலை, கொள்ளை, திருட்டு வழிப்பறி கொடும் குற்றம் புரிந்தவர்களுக்கு  திமுகவைச் சேர்ந்தவர்கள் எப்படி ஜாமீன்தார்களாக இருந்தார்கள்.

அவர்களுக்கும் திமுகவுக்கும் என்ன தொடர்பு, அவர்கள் விடுதலை செய்ய வாதாடிய திமுக வழக்கறிஞர்களை நீலகிரி சார்பு நீதிபதியாக நியமித்திருக்கின்றனர்.இதில் மர்மம் இருக்கிறது  என தெளிவாக கூறியுள்ளார் இது சட்டமன்ற பதிவில் உள்ளது.

இரண்டு நிகழ்வுகள் உலகம் முழுவதுமாக பேசப்பட்டு வருகிறது ஒன்று சந்திராயன் 3 நிலவில் வெற்றி பெற்றது,மற்றொன்று எடப்பாடியார் தலைமையில் நடைபெற்ற மாநாடு வெற்றியை பேசப்பட்டு வருகிறது. இதையெல்லாம் திசை திருப்ப காலவதியானவர்கள் சிலர் பேசி வருகிறார்கள் இவர்களுக்கு தோல்விதான் பரிசாக கிடைக்கும்.

மதுரையில் நடந்த திமுக உண்ணாவிரத போராட்டத்தில் நிர்வாகிகள் ஜெயவிஷ்வா தர்ஷன்,புதூர் வி.சி.மாதவன், புதூர் சி.மோகன் பங்கேற்பு.!

நீட் தேர்வை ரத்து செய்யாத மத்திய அரசை கண்டித்து, மதுரை அண்ணாநகர் அம்பிகா திரையரங்கம் அருகே திமுக சார்பாக மாபெரும் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

இதில் மருத்துவரணி மாவட்ட துணை அமைப்பாளர் ஜெயவிஷ்வா தர்ஷன், 10-வது வட்டக் கழக செயலாளர் புதூர் வி.சி.மாதவன், வடக்கு மாவட்ட பிரதிநிதி புதூர் சி.மோகன், புதூர் வி.சி.எம். தீபக் ,விவசாய அணி ராஜேஷ் கண்ணா, சம்பக்குளம் துரைப்பாண்டியன், பிரேம், மாணவரணி சுகந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கிராமப்புற பெண்கள் மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு களநீர் பரிசோதனை பெட்டி FTK பயன்படுத்துதல் குறித்த பயிற்சி

மதுரை,ஆக.25-

மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றிய கூட்ட அரங்கில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பாக, கிராமப்புற பெண்கள் சுகாதாரக் குழுக்கள், மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு களநீர் பரிசோதனை பெட்டி FTK பயன்படுத்துதல் மற்றும் வலைத்தளத்தில் பதிவு குறித்த பயிற்சி வகுப்பு,கிராம குடிநீர் திட்ட கோட்ட நிர்வாக பொறியாளர் வி.செந்தில்குமரன் தலைமையில் நடைபெற்றது.

ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் பா.வீரராகவன் விழாவை துவக்கி வைத்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் பா.உலகநாதன் சிறப்புரையாற்றினார்.

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய உதவி நிர்வாகப் பொறியாளர் பி.கருத்த பாண்டியன் மற்றும் பெட்கிராட் நிர்வாக இயக்குனர் M.A.சுப்புராமன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

பெட்கிராட் பொருளாளர் எஸ்.கிருஷ்ணவேணி நன்றியுரை கூறினார். இந்நிகழ்வில் மேற்கு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 29 கிராம பஞ்சாயத்துகளில் பணியாற்றும் பம்ப் ஆப்ரேட்டர்களுக்கு நீரின் தன்மைகள் குறித்து செய்முறைகள் மூலமாக தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நீர் பரிசோதனையாளர் விளக்கி கூறினார்.

இந்த நிகழ்ச்சி மூலமாக நீரின் பல்வேறு தன்மைகள் குறித்து தாங்கள் அறிந்து கொண்டதாக பம்ப் ஆப்ரேட்டர்கள் தெரிவித்தனர்.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஜூபிடர் பெண்கள் கூட்டமைப்பு பெட்கிராட் நிர்வாகிகள் எஸ்.அங்குசாமி, ஜி.சாராள் ரூபி, பா.மார்ட்டின் லூதர் கிங் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.

இளைஞர் குரல் செய்திகளுக்காக மதுரை செய்தியாளர் கனகராஜ்

தமுமுக மதுரை தெற்கு மாவட்டம் சார்பாக 29 ஆம் ஆண்டு துவக்க விழா

User Rating: Be the first one !

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் 29 ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு, மதுரை தெற்கு மாவட்ட தலைமை அலுவலகத்தில் தெற்கு மாவட்ட தலைவர் ஷேக் இப்ராஹிம் தலைமையில் கழக கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.

மாநில மருத்துவ சேவை அணி பொருளாளர் அப்துல் ரஃபி கொடியை ஏற்றி வைத்தார். இதில் தமுமுக மாவட்ட செயலாளர் ஆம்புலன்ஸ் சேக், மமக மாவட்ட செயலாளர் முபாரக் நிஜாமுதீன், தமுமுக மமக மாவட்ட பொருளாளர் அப்துல் ஹமீது மற்றும் மாவட்ட துணை அணி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

உலக அரங்கில் இந்திய மல்யுத்தக் கூட்டமைப்பு உறுப்பினர் சேர்க்கை நிறுத்தப்பட்டது…

சுருக்கமாக, யுனைடெட் வேர்ல்ட் மல்யுத்தம் இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் உறுப்பினர் பதவியை நிறுத்தி வைத்துள்ளது உலக மல்யுத்த அமைப்பு அதன் தேர்தலை சரியான நேரத்தில் நடத்தாததற்காக WFI ஐ இடைநீக்கம் செய்துள்ளது WFI தொடர்ச்சியான சர்ச்சைகளில் சிக்கியுள்ளது, இதனால் அதன் தேர்தல்கள் கணிசமாக ஒத்திவைக்கப்படுகின்றன.

இந்திய மல்யுத்த சம்மேளனம் (WFI) தேவையான தேர்தல்களை கூட்டமைப்பு நடத்தத் தவறியதால், யுனைடெட் வேர்ல்ட் மல்யுத்தம் (UWW) காலவரையின்றி இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் (WFI) உறுப்பினரை நிறுத்தி வைத்துள்ளது. WFI தொடர்ச்சியான சர்ச்சைகளில் சிக்கியுள்ளது, இதனால் அதன் தேர்தல்கள் கணிசமாக ஒத்திவைக்கப்படுகின்றன. இந்தியாவின் மல்யுத்த ஆளும் குழுவான கூட்டமைப்பு, ஜூன் 2023 இல் தேர்தலை நடத்தவிருந்தது. இருப்பினும், இந்திய மல்யுத்த வீரர்களின் தொடர் எதிர்ப்புகள் மற்றும் பல்வேறு மாநில பிரிவுகளின் சட்ட மனுக்கள் காரணமாக தேர்தல்கள் மீண்டும் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

மல்யுத்தத்திற்கான உலக ஆளும் அமைப்பான UWW, WFI தனது தேர்தலை சரியான நேரத்தில் நடத்தாததற்காக இடைநீக்கம் செய்துள்ளது, இது இந்தியக் கொடியின் கீழ் வரவிருக்கும் உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் இந்திய கிராப்லர்கள் போட்டியிட அனுமதிக்காது. பூபேந்தர் சிங் பஜ்வா தலைமையிலான தற்காலிக குழு, தேர்தலை நடத்துவதற்கான 45 நாள் காலக்கெடுவை மதிக்காததால், செப்டம்பர் 16 ஆம் தேதி தொடங்கும் ஒலிம்பிக்-தகுதி உலக சாம்பியன்ஷிப்பில் இந்திய மல்யுத்த வீரர்கள் ‘நடுநிலை விளையாட்டு வீரர்களாக’ போட்டியிட வேண்டும். மல்யுத்த வீரர்கள், செப்டம்பர் 23 ஆம் தேதி ஹாங்சோவில் தொடங்கும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியக் கொடியின் கீழ் போட்டியிடலாம், ஏனெனில் இது IOA தான் பதிவுகளை அனுப்பியுள்ளது, WFI அல்ல.

WFI இன் ஆளும் குழுவில் 15 பதவிகளுக்கான தேர்தல் ஆகஸ்ட் 12 அன்று நடைபெற இருந்தது. திங்களன்று, பதவி விலகும் இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங்கின் நெருங்கிய உதவியாளர் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த சஞ்சய் சிங் உட்பட நான்கு வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர். புதுதில்லி ஒலிம்பிக் பவனில் ஜனாதிபதி. சண்டிகர் மல்யுத்த அமைப்பைச் சேர்ந்த தர்ஷன் லால் பொதுச் செயலாளராகவும், உத்தரகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த எஸ்பி தேஸ்வால் பிரிஜ் பூஷன் முகாமில் இருந்து பொருளாளராகவும் பரிந்துரைக்கப்பட்டனர். WFI முதலில் ஜனவரியில் இடைநிறுத்தப்பட்டது, அதன் செயல்பாட்டிற்கு எதிராக இந்தியாவின் உயர்மட்ட மல்யுத்த வீரர்கள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, அதன் அப்போதைய தலைவர் பிரிஜ் பூஷன் பெண் மல்யுத்த வீரர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டதை அடுத்து மீண்டும் மே மாதம் இடைநீக்கம் செய்யப்பட்டது. WFI இன் அன்றாட விவகாரங்கள் தற்போது பூபேந்தர் சிங் பஜ்வா தலைமையிலான இந்திய ஒலிம்பிக் சங்கத்தால் அமைக்கப்பட்ட தற்காலிகக் குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. குறிப்பிடத்தக்க வகையில், யுனைடெட் வேர்ல்ட் மல்யுத்தம், உயர் மட்டத்தில் உள்ள விளையாட்டின் நிர்வாகக் குழு, தேர்தல்கள் தாமதமானால் இடைநீக்கம் செய்யப்படும் என்று WFI எச்சரித்தது. மகாராஷ்டிரா மற்றும் திரிபுரா தேர்தல்களில் பிரதிநிதிகளை கொண்டிருக்க மாட்டார்கள், ஏனெனில் தேர்தல் அதிகாரி இரு பிரிவினரின் உரிமைகோரல்களை முன்னாள் “தகுதியற்றவர்கள்” எனக் கருதினார், அதே நேரத்தில் திரிபுரா 2016 முதல் இணைக்கப்படவில்லை.

Ref / Thanks to https://www.indiatoday.in/sports/other-sports/story/wfi-membership-suspended-by-world-federation-over-failure-to-conduct-elections-2425861-2023-08-24

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணிபுரியும் 18-ஆயிரம் ஒப்பந்த ஊழியர்களை நிரந்தரம் செய்ய முதலமைச்சருக்கு கோரிக்கை.!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணிபுரியும் 18-ஆயிரம் ஒப்பந்த ஊழியர்களை நிரந்தரம் செய்ய முதலமைச்சருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் 38 மாவட்ட விநியோக வட்டங்களில் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் 10 வருடங்களுக்கும் மேலாக பணிபுரிந்து வருகின்றனர்.

இவர்களை அடையாளப்படுத்தி பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லும் விதமாக திருவண்ணாமலை வேங்கிக்கால் சமுதாயக் கூடத்தில் முதல் கட்டப் பட்டியல் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஒப்பந்த தொழிலாளர்கள் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கு மாநில ஒருங்கிணைப்பாளர்கள் மகேந்திரன் , ஏழுமலை, பாலா (எ)பாலச்சந்தர், சபீர் ஆகியோர் தலைமை வகித்தனர்.

மேலும் ஒப்பந்த ஊழியர்களிடம் இருந்து பணி நிரந்தரம் செய்வதற்கான கோரிக்கை மனுக்களை, தமிழக ஒருங்கிணைப்பாளர்கள் ஏழுமலை, பாலச்சந்திரன், மகேந்திரன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

இதுகுறித்து ஒருங்கிணைப்பாளர் ஏழுமலை செய்தியாளர்களிடம் கூறியதாவது :-

தமிழக மின்சார வாரியத்தில் மின் கம்பம் நடுதல், மின்சாதன பொருட்களை சரி செய்து கொடுப்பது போன்ற பணிகளில் 18 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஒப்பந்த பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் மட்டும் 1200 தொழிலாளர்கள் பணி செய்கின்றனர். ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி தொடர்ந்து கோரிக்கை விடுத்தும் மின்வாரியம் கண்டு கொள்ளாமல் உள்ளது.

மேலும் ஒப்பந்த ஊழியர்களாக பணிபுரிவோருக்கு மின்சார வாரியம் நிர்ணயித்துள்ள 380 ரூபாய் கூலியை நேரடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தொழிலாளர்களிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்களை தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் ஆகியோருக்கு அனுப்பி வைக்க உள்ளோம் எனக் கூறினார்.

மதுரையில் கமலஹாசன் நலம் பெற வேண்டி மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகள் சிறப்பு பூஜை.!

மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாவட்ட செயலாளர்கள், நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்களுடன் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் சென்னை அண்ணாநகரில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதில் 117 மாவட்டச் செயலாளர்கள், 7 நிர்வாகக் குழு, 25 செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.


கூட்டத்தில் கலந்து கொண்ட கமல்ஹாசனுக்கு காலில் கடுமையான வலி ஏற்பட்டது. வலியையும் பொருட்படுத்தாமல் ஆலோசனைகளை வழங்கி பேசினார். இதை அறிந்த மதுரை மாநகர் மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் மேலமாசிவீதியில் உள்ள ஆலால சுந்தரவிநாயகர் ஆலயத்தில் கமலஹாசன் விரைவில் நலம் பெற வேண்டி சிறப்பு பூஜைகள் செய்தனர்.

இதில்
சமூக சேவகர் முத்துராமன், ஆசைத்தம்பி, சிவக்குமார்,
முனியசாமி, நம்மவர் செந்தில்,
வெங்கடேசன், பாஸ்கர்,
மாணிக்கராஜ்,
ராமலிங்கம்,
சண்முகம்,
தினேஷ்பாபு,
சீனிவாசன், பங்கேற்றனர்.

அர்ஜூனா விருது பெற்ற மதுரை வீராங்கனை ஜெர்லின் அனிகாவிற்கு, தேசிய மனித உரிமை சமூக நீதி கவுன்சில் ஆஃப் இந்தியா குளோபல் சார்பாக பாராட்டு.!

அர்ஜூனா விருது பெற்ற மதுரை வீராங்கனை ஜெர்லின் அனிகாவிற்கு, தேசிய மனித உரிமை சமூக நீதி கவுன்சில் ஆஃப் இந்தியா குளோபல் சார்பாக நிர்வாகிகள் பாராட்டுக்களை தெரிவித்தனர்.

மதுரை அவனியாபுரத்தை சேர்ந்த வீராங்கனை ஜொ்லின் அனிகா. மாநில, தேசிய மற்றும் சர்வதேச பேட்மிண்டன் போட்டிகளில் பங்கேற்று 6 தங்க பதக்கங்களை பெற்ற அவர் உயரிய விருதான அர்ஜுனா விருதுக்கு தேர்வானார்.


இந்நிலையில், டெல்லியில் நடைபெற்ற விழாவில், குடியரசு தலைவர் திரெளபதி முர்மு, வீராங்கனை ஜெர்லின் அனிகாவிற்கு, அர்ஜூனா விருதை வழங்கி கௌரவித்தார்.

விருது பெற்ற அவருக்கு தேசிய மனித உரிமை சமூக நீதி கவுன்சில் ஆஃப் இந்தியா குளோபல் மாநிலத் தலைவர் டாக்டர் நம்புதாளை பாரீஸ் அவர்களின் ஆலோசனைப்படி, அவனியாபுரத்தில் உள்ள வீராங்கனை ஜெர்லின் அனிகா இல்லத்தில் ஒருங்கிணைந்த மதுரை மாவட்ட தலைவர் பிச்சைவேல் அவர்களின் தலைமையிலும், வடக்கு மாவட்ட தலைவர் வி.பி.ஆர் செல்வகுமார் அவர்களின் முன்னிலையிலும், மாநிலத் துணைத் தலைவர் டாக்டர் கஜேந்திரன், மாநில இணைச் செயலாளர் டாக்டர் ஜெகநாதன், மாநில மகளிரணி துணைத்தலைவி குரு லட்சுமி கஜேந்திரன், மாவட்ட செயலாளர்கள் முருகேசபாண்டி, சின்னச்சாமி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் மாணிக்கராஜ், ஒருங்கிணைந்த மகளிரணி மாவட்ட தலைவி சங்கரேஸ்வரி, மாவட்ட துணைத் தலைவர்கள் பொன்முருகன், பழனிவேல், மணிகண்ட பிரபு, மாவட்ட ஆலோசகர்கள் ராமன், ஆறுமுகம், இணைச் செயலாளர் பிரகாஷ் உள்ளிட்டோர் கேடயம் மற்றும் சான்றிதழை வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES