Monday , July 28 2025
Breaking News
Home / செய்திகள் / கொடநாடு வழக்கு குற்றவாளிகளை சிறையில் அடைத்தது அதிமுக அரசு : அவர்களுக்கு ஜாமீன் வழங்கியது திமுக அரசு.முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேட்டி
NKBB Technologies

கொடநாடு வழக்கு குற்றவாளிகளை சிறையில் அடைத்தது அதிமுக அரசு : அவர்களுக்கு ஜாமீன் வழங்கியது திமுக அரசு.முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேட்டி

கொடநாடு வழக்கு குற்றவாளிகளை சிறையில் அடைத்தது அதிமுக அரசு : அவர்களுக்கு ஜாமீன் வழங்கியது திமுக அரசு ஆர்.பி.உதயகுமார் பேட்டி

மதுரை,ஆக.25-

அதிமுகவில் குழப்பம், இடையூறு ஏற்படுத்தியவர்களுககு  சரியான சம்பட்டி‌ அடியான தீர்ப்பை நீதிமன்றம் கொடுத்துள்ளது என சட்டமன்ற எதிர்க்கட்சித் துணை தலைவர் ஆர்.பி. உதயகுமார் கூறினார்.

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு புரட்சித்தமிழர் பட்டம் வழங்கியதை தொடர்ந்து மதுரை மாட்டுத்தாவணியில் உள்ள செய்தியாளர் அரங்கத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

 இதில் நலத்திட்ட உதவிகளை சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி. உதயகுமார் எம்எல்ஏ வழங்கினார் . இந்நிகழ்வில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.எஸ்.சரவணன், கே.தமிழரசன், எம்.வி.கருப்பையா, மாணிக்கம், மாநில அம்மா பேரவை துணைச் செயலாளர் வெற்றிவேல் உட்பட பலர் கலந்து  கொண்டனர். 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியதாவது :

ரோம் நகர் பற்றி எரியும்போது நீரோ மன்னன் பிடில் வாசித்தது போல, இன்றைக்கு சொத்து வரி உயர்வு, மின்கட்டண உயர்வு, காய்கறி விலை உயர்வு  இதைப் பற்றி எல்லாம் ஸ்டாலின் கவலைப்படவில்லை.
 54 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணித்திட்டத்தை வழங்கினோம், 13 லட்சம் பெண்களுக்கு தாலிக்கு தங்கம்  திட்டத்தை வழங்கினோம். ஆனால் அதையெல்லாம் மூடு விழா கண்டு சில திட்டங்களுக்கு திறப்பு விழா காண்கிறார்கள்.மேலும் தேர்தல் அறிக்கையில் கல்வி கடன் ரத்து, நீட் தேர்வு என்று பச்சை பொய் பேசினார்கள் எதையும் நிறைவேற்றவில்லை.

கொடநாடு கொலை வழக்கு குற்றவாளிகளை சிறையில் அடைத்தது அதிமுக அரசு. ஆனால் அவர்களுக்கு ஜாமீன் வழங்கியது திமுக அரசு .குற்றச்சாட்டப்பட்குற்றவாளியுடன் திமுக முதலமைச்சர் அருகில் நின்று புகைப்படம் எடுத்திருக்கிறார். கேரளாவில் உள்ளவர்க்கு இங்கு இருக்கும் வழக்கறிஞர் எப்படி ஜாமீன் பெற்றார். தொடர்ந்து கடத்தல், கொலை, கொள்ளை, திருட்டு வழிப்பறி கொடும் குற்றம் புரிந்தவர்களுக்கு  திமுகவைச் சேர்ந்தவர்கள் எப்படி ஜாமீன்தார்களாக இருந்தார்கள்.

அவர்களுக்கும் திமுகவுக்கும் என்ன தொடர்பு, அவர்கள் விடுதலை செய்ய வாதாடிய திமுக வழக்கறிஞர்களை நீலகிரி சார்பு நீதிபதியாக நியமித்திருக்கின்றனர்.இதில் மர்மம் இருக்கிறது  என தெளிவாக கூறியுள்ளார் இது சட்டமன்ற பதிவில் உள்ளது.

இரண்டு நிகழ்வுகள் உலகம் முழுவதுமாக பேசப்பட்டு வருகிறது ஒன்று சந்திராயன் 3 நிலவில் வெற்றி பெற்றது,மற்றொன்று எடப்பாடியார் தலைமையில் நடைபெற்ற மாநாடு வெற்றியை பேசப்பட்டு வருகிறது. இதையெல்லாம் திசை திருப்ப காலவதியானவர்கள் சிலர் பேசி வருகிறார்கள் இவர்களுக்கு தோல்விதான் பரிசாக கிடைக்கும்.

Bala Trust

About Kanagaraj Madurai

Check Also

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு சிறப்பாக வரவேற்பு அளிப்பது குறித்து ஆலோசனை கூட்டம்

மதுரை மாநகருக்கு வருகை தர உள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு சிறப்பாக வரவேற்பு அளிப்பது குறித்து விளாங்குடி …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES