மதுரை,ஆக.25-
மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றிய கூட்ட அரங்கில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பாக, கிராமப்புற பெண்கள் சுகாதாரக் குழுக்கள், மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு களநீர் பரிசோதனை பெட்டி FTK பயன்படுத்துதல் மற்றும் வலைத்தளத்தில் பதிவு குறித்த பயிற்சி வகுப்பு,கிராம குடிநீர் திட்ட கோட்ட நிர்வாக பொறியாளர் வி.செந்தில்குமரன் தலைமையில் நடைபெற்றது.
ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் பா.வீரராகவன் விழாவை துவக்கி வைத்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் பா.உலகநாதன் சிறப்புரையாற்றினார்.
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய உதவி நிர்வாகப் பொறியாளர் பி.கருத்த பாண்டியன் மற்றும் பெட்கிராட் நிர்வாக இயக்குனர் M.A.சுப்புராமன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
பெட்கிராட் பொருளாளர் எஸ்.கிருஷ்ணவேணி நன்றியுரை கூறினார். இந்நிகழ்வில் மேற்கு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 29 கிராம பஞ்சாயத்துகளில் பணியாற்றும் பம்ப் ஆப்ரேட்டர்களுக்கு நீரின் தன்மைகள் குறித்து செய்முறைகள் மூலமாக தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நீர் பரிசோதனையாளர் விளக்கி கூறினார்.
இந்த நிகழ்ச்சி மூலமாக நீரின் பல்வேறு தன்மைகள் குறித்து தாங்கள் அறிந்து கொண்டதாக பம்ப் ஆப்ரேட்டர்கள் தெரிவித்தனர்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஜூபிடர் பெண்கள் கூட்டமைப்பு பெட்கிராட் நிர்வாகிகள் எஸ்.அங்குசாமி, ஜி.சாராள் ரூபி, பா.மார்ட்டின் லூதர் கிங் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.
இளைஞர் குரல் செய்திகளுக்காக மதுரை செய்தியாளர் கனகராஜ்