Thursday , December 12 2024
Breaking News
Home / செய்திகள் (page 78)

செய்திகள்

All News

திருச்சியில் தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி ஓய்வு பெற்ற அனைத்துப் பணியாளர்கள் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம்!

தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி ஓய்வு பெற்ற அனைத்துப் பணியாளர்கள் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் திருச்சியில் மாநில தலைவர் செல்லமுத்து தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கூட்டுறவு சங்கங்களில் ஓய்வு பெற்று இறந்த பணியாளர்களின் குடும்பத்தினருக்கும் கருணை ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும் மாநில அமைப்புச் செயலாளராக சேலம் சின்னத்தம்பி, மாநில செய்தி தொடர்பு செயலாளராக மதுரை ஆசிரியதேவன், மாநில போராட்ட குழு செயலாளராக நாகை காத்தையன் ஆகியோர் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இந்நிகழ்வில் மாநில கௌரவ பொதுச் செயலாளர் திரு.சி.குப்புசாமி, பொதுச் செயலாளர் திரு.முத்துப்பாண்டியன், பொருளாளர் கலியமூர்த்தி உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் அனைத்து உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

திருச்சியில் மாநில தொடக்க கூட்டுறவு வங்கி ஓய்வு பெற்ற அனைத்து பணியாளர்கள் சங்க மாநில செயற்குழு கூட்டம்

தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி ஓய்வு பெற்ற அனைத்துப் பணியாளர்கள் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் திருச்சியில் மாநில தலைவர் செல்லமுத்து தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கூட்டுறவு சங்கங்களில் ஓய்வு பெற்று இறந்த பணியாளர்களின் குடும்பத்தினருக்கும் கருணை ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும் மாநில அமைப்புச் செயலாளராக சேலம் சின்னத்தம்பி, மாநில செய்தி தொடர்பு செயலாளராக மதுரை ஆசிரியதேவன், மாநில போராட்ட குழு செயலாளராக நாகை காத்தையன் ஆகியோர் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இந்நிகழ்வில் மாநில கௌரவ பொதுச் செயலாளர் திரு.சி.குப்புசாமி, பொதுச் செயலாளர் திரு.முத்துப்பாண்டியன், பொருளாளர் கலியமூர்த்தி உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் அனைத்து உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

தேசிய மனித உரிமை சமூக நீதி கவுன்சில் ஆஃப் இந்தியா குளோபல் மதுரை வடக்கு மாவட்ட ஆலோசனைக் கூட்டம்.!

தேசிய மனித உரிமை சமூக நீதி கவுன்சில் ஆஃப் இந்தியா குளோபல் மாநில தலைவர் டாக்டர் நம்புதாளை பாரீஸ் அவர்களின் ஆலோசனைப்படி, மதுரை வடக்கு மாவட்டத்தில் புதிய நிர்வாகிகள் நியமனம் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

மேலும் புதிய நிர்வாகிகளுக்கான விண்ணப்பங்களை ஒருங்கிணைந்த மாவட்ட தலைவர் முனைவர் பிச்சைவேலிடம் வடக்கு மாவட்ட தலைவர் வி.பி.ஆர் செல்வகுமார் வழங்கினார்.

இந்நிகழ்வில் ராஜேந்திரன், இன்சூரன்ஸ் ராஜா, மணிகண்டபிரபு, சுமதி, திவ்யபாரதி, ரூபி உள்பட பலர் பங்கேற்றனர்.

இந்திய ஜனநாயக கட்சி மாநில தலைவர் டாக்டர் ரவி பச்சமுத்துக்கு மதுரையில் வரவேற்பு.!

இந்திய ஜனநாயக கட்சியின் மாநில தலைவர் டாக்டர் இளைய வேந்தர் ரவி பச்சமுத்து, ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபெற்ற புதிய தமிழகம் கட்சியின் வெள்ளி விழா மாநாட்டிற்கு சிறப்பு அழைப்பாளராக பங்கேற்பதற்காக செல்லும் போது மதுரை மாவட்டம் சித்தம்பட்டி டோல்கேட்டில் இந்திய ஜனநாயக கட்சி மதுரை வடக்கு மாவட்டத் தலைவர் ஞானசேகரன், கிழக்கு மாவட்ட தலைவர் செந்தில்குமார் தலைமையில் ஆளுயர மாலை மற்றும் சால்வை அணிவித்து சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

இந்நிகழ்ச்சியில் வடக்கு மாவட்ட செயலாளர் ஜான், கிழக்கு மாவட்ட செயலாளர் நீலமேகம் மற்றும் இந்திய ஜனநாயக கட்சியின் ஒன்றிய, நகர, கிளை நிர்வாகிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

மதுரையில் “தேசிய மனித உரிமைகள்- சமூக நீதி கவுன்சில் ஆஃப் இந்தியா குளோபல் அமைப்பு சார்பாக சமூக சேவகர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கும் விழா.!

சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு, மதுரையில் “தேசிய மனித உரிமைகள்- சமூக நீதி கவுன்சில் ஆஃப் இந்தியா குளோபல் அமைப்பு மாநில தலைவர் டாக்டர் நம்புதாளை பாரீஸ் அவர்களின் ஆலோசனைப்படி, புதிதாக நியமனம் செய்யப்பட்ட நிர்வாகிகளுக்கு அங்கீகார சான்றிதழ், அடையாள அட்டை வழங்கும் விழா மற்றும் சமூகசேவகர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கும் விழா மதுரை மாவட்ட தலைவர் முனைவர் ஆர்.பிச்சைவேல் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக ராஜ்குமார் கலந்து கொண்டு சிறப்பித்தார். மேலும் வடக்கு மாவட்ட தலைவராக புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட வி.பி.ஆர் செல்வகுமாருக்கு அங்கீகார சான்றிதழ் அடையாள அட்டை வழங்கி நிர்வாகிகள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்



இந்நிகழ்வில் மாநில பொதுச் செயலாளர்கள் டாக்டர் ஜமாலூதீன், முஜிபூர்ரகுமான், மாநில துணைத்தலைவர் டாக்டர் கஜேந்திரன், மாநில இணைச் செயலாளர்கள் ரகுபதி,ஜெகநாதன்,மாநில ஆலோசகர் முன்னாள் டி.எஸ்.பி குசலவன், மாநில சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் சத்தியமூர்த்தி, மாநில செயலாளர் கீதா முருகன், மாநில மகளிரணி துணைத்தலைவி மருத்துவர் குருலட்சுமி கஜேந்திரன், மாவட்ட ஆலோசகர்கள் முன்னாள் ராணுவ வீரர் இராமன், ஆறுமுகம் கலந்து கொண்டனர்.

விலைவாசி உயர்வு,சட்டம் ஒழுங்கு சீர்கேட்டை கண்டித்து மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் ஒன்றியத்தில் அதிமுக சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்.!

விலைவாசி உயர்வு சட்ட ஒழுங்கு சீர்கேட்டினை கண்டித்து மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் ஒன்றியத்தில் அதிமுக கழக அமைப்பு செயலாளர், நாகை மாவட்ட கழக செயலாளர் ஓ.எஸ்.மணியன் MLA., மற்றும் மாவட்ட கழக செயலாளர் எஸ்.பவுன்ராஜ் Ex MLA., ஆகியோர் அறிவுறுத்தலின்படி கொள்ளிடம் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் என்.சிவக்குமார் தலைமையிலும் கொள்ளிடம் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் கே.எம்.நற்குணன் முன்னிலையிலும் நடைபெற்றது.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் தலைமை செயற்குழு உறுப்பினர் மாவட்ட மகளிர் அணி செயலாளர் ம.சக்தி, மாவட்டம் மீனவர் அணி செயலாளர் ஜி.நாகரத்தினம், மாவட்ட விவசாய பிரிவு செயலாளர் வேட்டங்குடி சீனிவாசன் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினார்கள்

நிகழ்வில் திருச்சி மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு துணைத் தலைவர் முனைவர் மாதாணம் சத்தியமூர்த்தி, ஒன்றிய அவைத்தலைவர்கள் எம்.எஸ்.ராஜேந்திரன் கிருஷ்ணமூர்த்தி பிள்ளை, மற்றும் பொறுப்பாளர்கள் சொக்கலிங்கம் பாஸ்கரன், இனியன், வக்கீல் ரவி, பாலதண்டாயுதம், செந்தில்குமார், கருணாகரன், காட்டூர் வடிவேல், சந்திரசேகர் விக்னேஸ்வரன், மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

மதுரையில் நடைபெற உள்ள தமிழக திரைப்பட துணை நடிகர்- நடிகைகள் & திரைப்பட உதவியாளர்கள் நலச்சங்கத்தின் முப்பெரும் விழாவிற்கான டிக்கெட்டை வி.பி.ஆரிடம் பன்னீர்செல்வம் வழங்கினார்.!

தமிழக திரைப்பட துணை நடிகர்- நடிகைகள் & திரைப்பட உதவியாளர்கள் நலச்சங்கம் சார்பாக மதுரை காந்தி மியூசியத்தில் ஜனவரி 5 ஆம் தேதி நடைபெற உள்ள முப்பெரும் விழா மற்றும் “மதுரையை கலக்க போவது யாரு” நிகழ்ச்சியில் சினிமா நடிகர்கள், சின்னத்திரை நடிகர்கள் என ஏராளமானோர் கலந்து கொள்ள உள்ளனர்.

இதற்கான டிக்கெட்டை தேசிய மனித உரிமைகள் சமூக நீதி கவுன்சில் ஆஃப் இந்தியா குளோபல் மதுரை வடக்கு மாவட்ட தலைவர் வி.பி.ஆர் செல்வக்குமார் அவர்களிடம் சங்கத்தலைவர் பன்னீர்செல்வம் வழங்கினார்.

இந்நிகழ்வின் போது வடக்கு மாவட்ட செயலாளர் சின்னசாமி, மாவட்ட இணைச்செயலாளர் பிரகாஷ், மாவட்ட துணைத் தலைவர் மணிகண்டபிரபு, வளைகுடா வாழ் தமிழர்கள் நலச்சங்கம் வடக்கு தொகுதி செயலாளர் ஜெயப்பாண்டி ஆகியோர் உடன் இருந்தனர்…

மதுரையில் “லா பியூர்” புதிய மூலிகை சோப்‌ அறிமுகம்.!


மதுரையில் “லா பியூர்” என்ற புதிய மூலிகை சோப்‌ 5 வகை நறுமணங்களில் அறிமுகப் படுத்தப்பட்டது.
மதுரை கோர்ட் மரியாட் ஹோட்டலில் “லா‌ பியூர்” என்ற நிறுவனம் புதிய மூலிகை சோப்பை அறிமுகப்படுத்தியது. இந்த சோப் சந்தனம், மில்க், மூலிகை, வேம்பு, கற்றாழை போன்ற 5 வகைகளில் இயற்கை முறையில் தயாரிக்கப் பட்டுள்ளது.

இந்த புதிய மூலிகை சோப் பற்றி “லா பியூர்” நிறுவனத்தின் இயக்குனர்கள் பாலாஜி, லலிதா ஆகியோர் கூறும் போது, பொதிகை மலையில் உற்பத்தியாகி இயற்கை மூலிகைகளால் தவழ்ந்து வரும் தாமிரபரணியின் தண்ணீர் கொண்டு இயற்கை மூலிகைகள் கலந்து மிகவும் ஆரோக்கியம் மற்றும் தூய்மையாக 5 நறுமணங்களில் இந்த சோப் தயாரிக்கப்படுகிறது. இந்த நிறுவனம் முழுக்க முழுக்க குடும்ப பெண்களால் நடத்தப்படுகிறது என்று கூறினர்.

இந்நிகழ்ச்சியில் காவல்துறை முன்னாள் தடயவியல் இயக்குனர் விஜயகுமார், சோலைமலை குரூப்ஸ் சேர்மன் பிச்சை, ஐ.ஆர்.எஸ். அதிகாரி சம்பத், இந்தியன் வங்கி அதிகாரி பாண்டி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பேசினர்.

இவ்விழாவில் “லா பியூர்” நிறுவனத்தின் இயக்குனர்கள் பாலாஜி, லலிதா, பிசினஸ் அட்வைசர் முத்துக்குமார் மற்றும் ஐஸ்வர்யா உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இளைஞர் குரல் செய்திகளுக்காக மதுரை செய்தியாளர் கனகராஜ்

மதுரை கே.புதூர் தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகம் முன்பு ஒப்பந்த தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்.!

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 19 ஆண்டுகளாக பணியாற்றி வரும் ஒப்பந்த ஊழியர்கள் தங்களை நிரந்தர படுத்த கோரி மதுரை கே.புதூர் பகுதியில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்ட ஒப்பந்த தொழிலாளர்கள் தங்களை விரைவில் நிரந்தர படுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து கண்டன கோஷங்களை எழுப்பினர். இதில் திருநெல்வேலி, தூத்துக்குடி, திருவண்ணாமலை, கொடைக்கானல், திண்டுக்கல், ராமநாதபுரம், திருச்சி போன்ற மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மதுரையில் இ.டி.இ.இ, அசெஞ்சர் மற்றும் பெட்கிராட் இணைந்து கைவினை பொருட்கள் தயாரிப்பது குறித்து பயிற்சி பெற்ற பெண்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

மதுரையில் இந்திய தொழில் முனைவோர் மேம்பாட்டு மையம், இ.டி.இ.இ. அசெஞ்சர் மற்றும் பெட்கிராட் அமைப்பு இணைந்து கைவினை பொருட்கள் தயாரிப்பது குறித்து ஒருமாத பயிற்சி பெண்களுக்கு வழங்கப்பட்டு, அதற்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி எஸ்.எஸ்.காலனியில் உள்ள “பெட்கிராட்” அலுவலகத்தில் நிர்வாக இயக்குனர் சுப்புராம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

செயலாளர் சாராள்ரூபி வரவேற்று பேசினார். நிகழ்ச்சிக்கு தலைவர் சுருளி,பொதுச் செயலாளர் அங்குசாமி, பொருளாளர் கிருஷ்ணவேணி, செயலாளர் ராஜசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


இந்நிகழ்வில் இந்திய தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனத்தின் திட்ட அலுவலர் கார்த்திகேயன் பாராட்டி பேசினார். இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட வடக்கு தாசில்தார் தமிழ்ச்செல்வி சான்றிதழ்களை வழங்கினார். நிகழ்ச்சியின் முடிவில் பெட்கிராட் துணைத் தலைவர் மார்ட்டின் நன்றியுரை கூறினார்.

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES