மதுரையில் "லா பியூர்" என்ற புதிய மூலிகை சோப் 5 வகை நறுமணங்களில் அறிமுகப் படுத்தப்பட்டது.மதுரை கோர்ட் மரியாட் ஹோட்டலில் "லா பியூர்" என்ற நிறுவனம் புதிய மூலிகை சோப்பை அறிமுகப்படுத்தியது. இந்த சோப் சந்தனம், மில்க், மூலிகை, வேம்பு, கற்றாழை போன்ற 5 வகைகளில் இயற்கை முறையில் தயாரிக்கப் பட்டுள்ளது.இந்த புதிய மூலிகை சோப் பற்றி "லா பியூர்" நிறுவனத்தின் இயக்குனர்கள் பாலாஜி, லலிதா ஆகியோர் கூறும் போது, பொதிகை மலையில் உற்பத்தியாகி இயற்கை மூலிகைகளால் தவழ்ந்து வரும் தாமிரபரணியின் தண்ணீர் கொண்டு இயற்கை மூலிகைகள் கலந்து மிகவும் ஆரோக்கியம் மற்றும் தூய்மையாக 5 நறுமணங்களில் இந்த சோப் தயாரிக்கப்படுகிறது. இந்த நிறுவனம் முழுக்க முழுக்க குடும்ப பெண்களால் நடத்தப்படுகிறது என்று கூறினர்.இந்நிகழ்ச்சியில் காவல்துறை முன்னாள் தடயவியல் இயக்குனர் விஜயகுமார், சோலைமலை குரூப்ஸ் சேர்மன் பிச்சை, ஐ.ஆர்.எஸ். அதிகாரி சம்பத், இந்தியன் வங்கி அதிகாரி பாண்டி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பேசினர்.இவ்விழாவில் "லா பியூர்" நிறுவனத்தின் இயக்குனர்கள் பாலாஜி, லலிதா, பிசினஸ் அட்வைசர் முத்துக்குமார் மற்றும் ஐஸ்வர்யா உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இளைஞர் குரல் செய்திகளுக்காக மதுரை செய்தியாளர் கனகராஜ்