Thursday , December 12 2024
Breaking News
Home / செய்திகள் (page 98)

செய்திகள்

All News

மதுரையில் பாஜக அமைப்பு சாரா தொழிலாளர் பிரிவு மாநில மாவட்ட உட்பிரிவு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

பாரதிய ஜனதா கட்சி அமைப்பு சாரா தொழிலாளர் பிரிவு மாநில மாவட்ட உட்பிரிவு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் ஆலாத்தூர் கணேஷ் மஹாலில் நடைபெற்றது….

இதில் மாநிலத் தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.

கேசவ விநாயகம் மாநில அமைப்பு பொதுச் செயலாளர் பொன் பாலகணபதி மாநில பொதுச் செயலாளர் கரு நாகராஜன் மாநில துணைத்தலைவர் பாண்டித்துரை முன்னாள் மாநிலத் தலைவர் அமைப்பு சாரா தொழிலாளர் பிரிவு. மதுரை புறநகர் மாவட்ட தலைவர் மகா சுசீந்திரன் மற்றும் பிரிவின் மாநில நிர்வாகிகள் செந்தில்குமார் ராஜேஷ் கண்ணன் ரௌத்திரம் ஜெகதீஸ் பிரிவின் மாவட்ட தலைவர் அருண்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிக வாக்கு பாரதிய ஜனதா கட்சிக்கு பெற்றுத்தரும் என்று உறுதிமொழி அளித்து நிகழ்ச்சியை முடித்தனர்.

உசிலம்பட்டியில் பி.கே.மூக்கையாதேவர் நினைவு நாளையொட்டி அதிமுக சார்பாக மாலை அணிவித்து மரியாதை.!  ஆர்.பி.உதயகுமார் எம்எல்ஏ அழைப்பு.!!

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் பி.கே.மூக்கையாதேவர் நினைவு நாளையொட்டி அதிமுக சார்பாக மாலை அணிவித்து மரியாதை.!  ஆர்.பி.உதயகுமார் எம்எல்ஏ அழைப்பு விடுத்து சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர்,மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளர் ஆர்.பி. உதயகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

 அரசியலும், பொதுசேவை புரிவதிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டவரும், நாடாளுமன்ற உறுப்பினராகவும், சட்டமன்ற உறுப்பினராகவும் மக்களுக்கு பணிஆற்றியவரும், தேவர் தந்த தேவர், கல்வித்தந்தை ,பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக உழைத்திட்ட திரு.பி.கே.மூக்கையா தேவர் அவர்களின் 43 வது நினைவு நாளையொட்டி கழக இடைக்கால பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடியார் அவர்களின் ஆணைக்கிணங்க உசிலம்பட்டியில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் கல்லூரியில் அமைந்திருக்கும் அவரது நினைவிடத்தில் நாளை காலை 10.45 மணிக்கு மலர் வளையம் வைத்து  மரியாதை செய்யப்படுகிறது

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர், கழகத் துணை பொதுச் செயலாளர் நத்தம் இரா. விசுவநாதன், முன்னாள் அமைச்சர் கழகப் பொருளாளர் திண்டுக்கல் சி.சீனிவாசன், முன்னாள் அமைச்சர் கழக அமைப்புச் செயலாளர் செல்லூர் கே ராஜு, கழக அமைப்புச் செயலாளர், மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா, கழக அமைப்புச் செயலாளர் எஸ்.டி.கே.ஜக்கையன், மேலூர் சட்டமன்ற உறுப்பினர் பி.பெரியபுள்ளான் என்ற செல்வம் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பார்த்திபன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் கா.தவசி பா.நீதிபதி ஆகியோர்கள் பங்கேற்கின்றனர் 

 பி.கே.மூக்கையா தேவருக்கு புகழ் அஞ்சலி செலுத்து வண்ணம் முன்னாள், நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட கழக நிர்வாகிகள், ஒன்றிய, நகர  பேரூர், கிளைக் கழகநிர்வாகிகள், வார்டு கழக நிர்வாகிகள், மாவட்ட அணி நிர்வாகிகள் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் கூட்டுறவு சங்க நிர்வாகிகள், கழக செயல் வீரர்கள் மற்றும் செயல் வீராங்கனைகள் அனைவரும் அணி திரண்டு வருமாறு மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழகத்தின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்

 

 

 

மலேசியாவைச் சேர்ந்த டத்தோ ஸ்ரீ நடராஜனுக்கு ‘சோழன் உலக சாதனைக்கான’ அங்கீகாரம்.!

மலேசியாவைச் சேர்ந்த டத்தோ ஸ்ரீ நடராஜனுக்கு ‘சோழன் உலக சாதனைக்கான’ அங்கீகாரம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்

ஸ்டாண்டிங் ரைடிங் மோட்டார் சைக்கிள் ஹீரோ’என்று அழைக்கப்படும் மலேசியாவைச் சேர்ந்த டத்தோ ஸ்ரீ நடராஜன் பெரியசாமிக்கு இன்று சென்னையில் ‘சோழன் உலக சாதனைக்கான சான்றிதழ் வழங்கப்பட்டது.

இதற்கான சான்றிதழை சோழன் உலக சாதனை புத்தக நிறுவனர் டாக்டர் நீலமேகம் நிமலன் மற்றும் பன்னாட்டு MMA மற்றும் கிக்-பாக்சிங் சண்டையாளருமான பாலீ சதீஸ்வர் போன்றோர் தமிழ் நாடு சென்னையில் உள்ள தங்கும் விடுதியில் வைத்து வழங்கினார்கள்.

டத்தோஸ்ரீ நடராஜன் மலேசியா, தாய்லாந்து மற்றும் இலங்கை வரை நீண்ட தூரம் பயணம் செய்த முதல் மனிதன் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், தமது மகன் விபத்தில் இறந்ததை அடுத்து தமது மகனின் கண்கள், சிறுநீரகம் மற்றும் இருதயம் ஆகியவற்றைத் தேவைப்பட்டோருக்கு தானம் செய்த பெருமை டத்தோ ஸ்ரீ நடராஜனைச் சேரும்.

தமிழ் நாட்டில் வைத்து உலக சாதனைக்கான அங்கீகாரம் பெற்ற இவரை சோழன் உலக சாதனை புத்தக நிறுவனத்தின் மலேசிய கிளையின் பொதுத் தலைவர், தலைவர், தலைமைச் செயற்குழுவைச் சேர்ந்த தலைவர்கள் மற்றும் மாநிலத் தலைவர்கள் என பலரும் வாழ்த்தி தமது பாராட்டைத் தெரிவித்தார்கள்.

.

மலேசியாவைச் சேர்ந்த டத்தோ ஸ்ரீ நடராஜனுக்கு ‘சோழன் உலக சாதனைக்கான’ அங்கீகாரம்

மலேசியாவைச் சேர்ந்த டத்தோ ஸ்ரீ நடராஜனுக்கு ‘சோழன் உலக சாதனைக்கான’ அங்கீகாரம்

ஸ்டாண்டிங் ரைடிங் மோட்டார் சைக்கிள் ஹீரோ’என்று அழைக்கப்படும் மலேசியாவைச் சேர்ந்த டத்தோ ஸ்ரீ நடராஜன் பெரியசாமிக்கு இன்று சென்னையில் ‘சோழன் உலக சாதனைக்கான சான்றிதழ் வழங்கப்பட்டது.

இதற்கான சான்றிதழை சோழன் உலக சாதனை புத்தக நிறுவனர் டாக்டர் நீலமேகம் நிமலன் மற்றும் பன்னாட்டு MMA மற்றும் கிக்-பாக்சிங் சண்டையாளருமான பாலீ சதீஸ்வர் போன்றோர் தமிழ் நாடு சென்னையில் உள்ள தங்கும் விடுதியில் வைத்து வழங்கினார்கள்.

டத்தோஸ்ரீ நடராஜன் மலேசியா, தாய்லாந்து மற்றும் இலங்கை வரை நீண்ட தூரம் பயணம் செய்த முதல் மனிதன் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், தமது மகன் விபத்தில் இறந்ததை அடுத்து தமது மகனின் கண்கள், சிறுநீரகம் மற்றும் இருதயம் ஆகியவற்றைத் தேவைப்பட்டோருக்கு தானம் செய்த பெருமை டத்தோ ஸ்ரீ நடராஜனைச் சேரும்.

தமிழ் நாட்டில் வைத்து உலக சாதனைக்கான அங்கீகாரம் பெற்ற இவரை சோழன் உலக சாதனை புத்தக நிறுவனத்தின் மலேசிய கிளையின் பொதுத் தலைவர், தலைவர் தலைமைச் செயற்குழுவைச் சேர்ந்த தலைவர் மற்றும் மாநிலத் தலைவர்கள் என பலரும் வாழ்த்தி தமது பாராட்டைத் தெரிவித்தார்கள்.

இந்து மக்கள் கட்சி மதுரை மாவட்ட ஆன்மீகம் அணி சார்பாக திருநகரில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் காலை உணவு வழங்கப்பட்டது

இந்து மக்கள் கட்சி மதுரை மாவட்ட ஆன்மீகம் அணி சார்பில் மதுரை மாவட்டம் திருநகர் பகுதியில் அமைந்துள்ள சாலையோர ஆதரவற்ற படுக்கையில் இருக்கும் நோயாளிகள் மற்றும் கைவிடப்பட்ட முதியோர்கள் தாய்மடி இல்லத்தில் இந்து மக்கள் கட்சி ஆன்மீகம் அணி மதுரை மாவட்ட தலைவர் ப.குணா காலை உணவு வழங்கினார்

அவருடன் கட்சி நிர்வாகிகள் துணைத்தலைவர் முத்துக்குமார், ஒருங்கிணைப்பாளர் துரைமுருகன், மாவட்ட செயலாளர் Mu. கணேசன், புறநகர் தலைவர் கார்த்திக்ராஜா, புறநகர் துணைத்தலைவர் விக்னேஷ், மாவட்ட துணைச்செயலாளர் ஹார்வி குமார், மகளிர் அணியினர் மற்றும் பலர் உடனிருந்தனர்.

மதுரை திருப்பரங்குன்றத்தில் இந்து மக்கள் கட்சி சார்பாக விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்

மதுரை திருப்பரங்குன்றத்தில் இந்து மக்கள் கட்சியின் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் இந்துக்களின் ஒற்றுமை தினமாக கொண்டாட்டம் நடைபெற்றது

இந்து மக்கள் கட்சி மற்றும் அனுமன் சேனா இணைந்து திருப்பரங்குன்றத்தில் மிக பிரம்மாண்டமாக விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் கொட்டும் மழையிலும் இந்து ஒற்றுமை தினமாக கொண்டாடப்பட்டது.

திருப்பரங்குன்றம் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் இருந்து சுமார் 30 க்கு மேற்பட்ட விநாயகர் பிரதிஷ்டை செய்யப்பட்டு ஊர்வலமாக திருப்பரங்குன்றம் சரவணபொய்கை வழியாக செவ்வந்திகுளம் பகுதியில் விஜர்சனம் செய்யப்பட்டது.

ஊர்வலத்தில் இலங்கை மட்டகளப்பு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தமிழ்திரு.சீனிதம்பி யோகேஸ்வரன் ஊர்வத்தை துவக்கி வைத்தார். ஊர்வலத்தில் இந்து மக்கள் கட்சி மாநில துணைதலைவர் பாம்பன் பாலன் சுவாமி, மாவட்ட தலைவர் சோலைகண்ணன், தென் மாநில தலைவர் அன்பழகன், மாநில செயலாளர் வழக்கறிஞர் கணபதி சுப்பிரமணியம், இந்து மக்கள் கட்சி ஆன்மீகம் அணி மாவட்ட தலைவர் குணா, செயலாளர் கணேசன், துணைச்செயலாளர் குமார் மற்றும் அனுமன்சேனா நிர்வாகிகள், பாஜக நிர்வாகிகள் பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

மதுரை மாவட்ட செய்தியாளர் கனகராஜ்

மதுரையில் கலாம் பாரம்பரிய கலைக்கழகம் சார்பாக சோழன் உலக சாதனை நிகழ்ச்சி.!

மதுரை பாத்திமா கல்லூரி உள் அரங்கத்தில் கலாம் பாரம்பரிய கலைக்கழகம் நடத்திய பல்லுயிர்களின் வாழ்வியலில், மரங்களின் முக்கியத்துவத்தை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்தில் பர்வதாசனா நிலையில் தொடர்ந்து 30 நிமிடங்கள் மரக்கன்றுகள் தூக்கிய நிலையில் ஒர் அணியும், வீரபத்திராசனா நிலையில் தொடர்ந்து 2 மணி நேரம் சிலம்பம் சுற்றியபடி ஒர் அணியும், புதிய சோழன் உலக சாதனை படைக்கும் முயற்சி மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக சோழன் உலக சாதனை புத்தக நிறுவனத்தின் நிறுவனர் முனைவர் நிமலன் நீலமேகம், கலாம் பாரம்பரிய கலைக்கழகத்தின் தலைவர் ராஜா மகேந்திரன், மேதகு திரைப்பட கதாநாயகன் குட்டிமணி, விஜய் டிவி தொகுப்பாளர் ஆண்ட்ரூஸ், இந்தியன் சிலம்பம் ஆசான் எஸ்.எம் மணி, உடற்கல்வி இயக்குனர் செல்வகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

உலக சாதனை படைத்தோருக்கு கேடயம் மற்றும் சான்றிதழ்களை முனைவர்.நிமலன்.நீலமேகம் மற்றும் நடிகர் குட்டிமணி ஆகியோர் வழங்கி பாராட்டினர்.

நிகழ்ச்சியை கலாம் பாரம்பரிய கலைக்கழகத்தின் நிறுவனரும், சோழன் உலக சாதனை புத்தகத்தின் தென் மண்டல தலைவருமான முனைவர் சுந்தர் ஒருங்கிணைத்தார்.

மதுரை மாவட்ட செய்தியாளர் கனகராஜ்

கேப்டன் பிறந்தநாளை முன்னிட்டு மதுரை சுந்தர்ராஜன்பட்டி பார்வையற்றோர் இல்லத்தில் அன்னதானம்

தேமுதிக நிறுவனத் தலைவர் கேப்டன் விஜயகாந்த் 70 வது பிறந்த நாளை முன்னிட்டு, மதுரை அழகர்கோவில் ரோடு சுந்தர்ராஜன்பட்டியில் உள்ள இந்திய பார்வையற்றோர் சங்கம் மேல்நிலைப்பள்ளி மற்றும் மறுவாழ்வு மையத்தில்,
உயர்மட்ட குழு உறுப்பினர் ஜெ.பாலன் தலைமையேற்று 500 க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானத்தை வழங்கினார்.

இந்நிகழ்விற்கு தேமுதிக மதுரை மாநகர் வடக்கு மாவட்ட செயலாளர் வி.பி.ஆர்.செல்வகுமார் அவர்கள் முன்னிலை வகித்தார்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை இளைஞரணி மாவட்ட செயலாளர் தல்லாகுளம் ராஜா சிறப்பாக செய்திருந்தார்.

இந்நிகழ்வில் அண்ணாநகர் பகுதி கழக செயலாளர் மேலமடை ஐயப்பன்,மாவட்ட கழக துணைச் செயலாளர்கள் மானகிரியார், மனோகரன், பி.ஆர்.முருகன், செயற்குழு உறுப்பினர் சின்னசாமி, மாவட்ட செயல்வீரர் ரமேஷ்பாபு, பகுதி கழக செயலாளர்கள் கோல்டு முருகன், தெய்வேந்திரன், 31வது வட்டக் கழக செயலாளர் கண்ணன் மற்றும் 31வது வார்டு நிர்வாகிகள் முத்துக்காளை, பாண்டி, அழகர், கண்ணன்,பகுதி அவைத்தலைவர் கவிஞர் மணிகண்டன், அய்யனார், 33-வது வட்டக் கழக செயலாளர் சசிகுமார், கேப்டன் மன்றம் டி.ஆர்.சுரேஷ், வழக்கறிஞர் அணி பாலகிருஷ்ணன், நெசவாளர் அணி பிரகாஷ், வர்த்தகர் அணி ஜெயபாண்டி, ஆகியோர் கலந்து கொண்டனர்.

மதுரை மாவட்ட செய்தியாளர் கனகராஜ்

கேப்டன் பிறந்த நாளை முன்னிட்டு மதுரை காந்திபுரத்தில் அன்னதானம் வழங்கிய வி.பி.ஆர் செல்வகுமார்

தேமுதிக நிறுவனத்தலைவர் கேப்டன் அவர்களின் 70- வது பிறந்த நாளை வறுமை ஒழிப்பு தினமாக கொண்டாடும் விதமாக, மதுரை மாநகர் வடக்கு மாவட்டம், அண்ணாநகர் பகுதிக்கு உட்பட்ட 12-வது வட்டக் கழகம் புதூர் காந்திபுரத்தில் மாநகர் வடக்கு மாவட்டகழக செயலாளர், வி.பி.ஆர் செல்வகுமார் அவர்கள் கட்சி கொடியை ஏற்றி வைத்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நோட்புக் மற்றும் இனிப்புகளை வழங்கினார்.

அதனை தொடர்ந்து அப்பகுதியில் அமைந்துள்ள முதியோர் இல்லத்தில் உள்ள பெரியோர்களுக்கு அன்னதானம் வழங்கினார்.

இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை அண்ணாநகர் பகுதி கழக செயலாளர், மேலமடை ஐயப்பன், 12வது வட்டக்கழக செயலாளர் காரணம், பகுதி அவைத்தலைவர் கவிஞர் மணிகண்டன், பகுதி பொருளாளர், நாகராஜன், பகுதி துணை செயலாளர்கள் இன்பராஜா, அய்யனார் மற்றும் 12வது வட்டக் கழக நிர்வாகிகள் ஆனந்த், அசோக், கனகு, சந்திரன், செல்வம் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட கழக துணை செயலாளர்கள் பா.மானகிரியார், இராமு, மனோகரன், சேகர் பொதுக்குழு உறுப்பினர்கள் பி.ஆர்.முருகன், சின்னச்சாமி, மாரிமுத்து, புரட்சிசெல்வம், இன்சூரன்ஸ் ராஜா மற்றும் மாவட்ட செயல்வீரர்கள் ரமேஷ்பாபு,சேக் அப்துல்லா, பகுதி கழக செயலாளர்கள் கோல்டு முருகன், கோவிந்தராஜ், தெய்வேந்திரன், இளங்கோ, கேப்டன் மன்றம் டி.ஆர்.சுரேஷ், துணை செயலாளர்கள் பாஸ்கரன், சிவனேசன், இளைஞரணி செயலாளர் தல்லாகுளம் ராஜா, மாணவரணி செயலாளர், காளீஸ்வரன், துணை செயலாளர் மணிகண்ட பிரபு, வழக்கறிஞரணி பாலகிருஷ்ணன், நெசவாளர் அணி செயலாளர் பிரகாஷ், தொண்டரணி வீரா, தொழிற்சங்கம் புலிவீரன், வர்த்தகரணி செயலாளர் ஜெயபாண்டி, விவசாய அணி ஆதம்ஷா
உள்பட மகளிரணியினர், கழக நிர்வாகிகள், ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இளைஞர் குரல் செய்திகளுக்காக மதுரை செய்தியாளர் கனகராஜ்

மாற்றுத்திறனாளிக்கு சிலம்பம் பயிற்சி அளித்து சாதனை படைத்த மாணவி ஹரிணிக்கு பாராட்டு.!

மதுரை யூசி மேல்நிலைப்பள்ளியில் நடந்த 76 நிமிடங்கள் சிலம்பம் சாதனை ஜாக்கி புக் ஆப் ரெக்கார்டு நிகழ்ச்சியில், மாற்றுத்திறனாளிக்கு சிலம்பம் பயிற்சி கொடுத்து சாதனை படைத்த பள்ளி மாணவி (சிலம்பம் இளம் பயிற்சியாளர்) ஹரிணிக்கு உலக சாதனை பெண் என்ற சான்று 76 வது வார்டு கவுன்சிலர் கார்த்திக், டாக்டர் பாண்டியன் யுசி பள்ளி தலைமை ஆசிரியர் ராஜ்குமார் சான்று வழங்கி பாராட்டினர்.

மாணவி ஹரிணி ஏற்கனவே தமிழக அரசு விருது பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES