Monday , July 28 2025
Breaking News
Home / செய்திகள் / உசிலம்பட்டியில் பி.கே.மூக்கையாதேவர் நினைவு நாளையொட்டி அதிமுக சார்பாக மாலை அணிவித்து மரியாதை.!  ஆர்.பி.உதயகுமார் எம்எல்ஏ அழைப்பு.!!
NKBB Technologies

உசிலம்பட்டியில் பி.கே.மூக்கையாதேவர் நினைவு நாளையொட்டி அதிமுக சார்பாக மாலை அணிவித்து மரியாதை.!  ஆர்.பி.உதயகுமார் எம்எல்ஏ அழைப்பு.!!

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் பி.கே.மூக்கையாதேவர் நினைவு நாளையொட்டி அதிமுக சார்பாக மாலை அணிவித்து மரியாதை.!  ஆர்.பி.உதயகுமார் எம்எல்ஏ அழைப்பு விடுத்து சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர்,மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளர் ஆர்.பி. உதயகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

 அரசியலும், பொதுசேவை புரிவதிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டவரும், நாடாளுமன்ற உறுப்பினராகவும், சட்டமன்ற உறுப்பினராகவும் மக்களுக்கு பணிஆற்றியவரும், தேவர் தந்த தேவர், கல்வித்தந்தை ,பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக உழைத்திட்ட திரு.பி.கே.மூக்கையா தேவர் அவர்களின் 43 வது நினைவு நாளையொட்டி கழக இடைக்கால பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடியார் அவர்களின் ஆணைக்கிணங்க உசிலம்பட்டியில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் கல்லூரியில் அமைந்திருக்கும் அவரது நினைவிடத்தில் நாளை காலை 10.45 மணிக்கு மலர் வளையம் வைத்து  மரியாதை செய்யப்படுகிறது

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர், கழகத் துணை பொதுச் செயலாளர் நத்தம் இரா. விசுவநாதன், முன்னாள் அமைச்சர் கழகப் பொருளாளர் திண்டுக்கல் சி.சீனிவாசன், முன்னாள் அமைச்சர் கழக அமைப்புச் செயலாளர் செல்லூர் கே ராஜு, கழக அமைப்புச் செயலாளர், மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா, கழக அமைப்புச் செயலாளர் எஸ்.டி.கே.ஜக்கையன், மேலூர் சட்டமன்ற உறுப்பினர் பி.பெரியபுள்ளான் என்ற செல்வம் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பார்த்திபன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் கா.தவசி பா.நீதிபதி ஆகியோர்கள் பங்கேற்கின்றனர் 

 பி.கே.மூக்கையா தேவருக்கு புகழ் அஞ்சலி செலுத்து வண்ணம் முன்னாள், நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட கழக நிர்வாகிகள், ஒன்றிய, நகர  பேரூர், கிளைக் கழகநிர்வாகிகள், வார்டு கழக நிர்வாகிகள், மாவட்ட அணி நிர்வாகிகள் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் கூட்டுறவு சங்க நிர்வாகிகள், கழக செயல் வீரர்கள் மற்றும் செயல் வீராங்கனைகள் அனைவரும் அணி திரண்டு வருமாறு மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழகத்தின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்

 

 

 

Bala Trust

About Kanagaraj Madurai

Check Also

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு சிறப்பாக வரவேற்பு அளிப்பது குறித்து ஆலோசனை கூட்டம்

மதுரை மாநகருக்கு வருகை தர உள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு சிறப்பாக வரவேற்பு அளிப்பது குறித்து விளாங்குடி …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES