Saturday , March 15 2025
Breaking News

Recent Posts

திருப்பரங்குன்றம் கிரிவலம் சென்ற பக்தர்களுக்கு ஜெகம் சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பாக அன்னதானம்

பௌர்ணமியை முன்னிட்டு மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் கிரிவலப் பாதையில் நடந்து சென்ற பக்தர்களுக்கு ஜெகம் சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பாக அதன் மேனேஜிங் டிரஸ்டி சோலை எஸ்.பரமன் அன்னதானம் வழங்கினார். இந்நிகழ்விற்கு டிரஸ்ட் பொருளாளர் திருஞானசம்பந்தம் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சிக்கு வருகை தந்தவர்களை டிரஸ்டி முத்துலட்சுமி வரவேற்றார். இதில் சிறப்பு அழைப்பாளர்களாக கருப்பசாமி ஆசிரியர், ஜெயராம் – சாந்தலட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Read More »

மதுரை பெத்தானியாபுரத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 76- வது பிறந்த நாள் விழா

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 76 வது பிறந்த நாளை முன்னிட்டு, மதுரை பெத்தானியாபுரத்தில் அதிமுக 63 வது வட்டக்கழகத்தின் சார்பாக மாமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சோலை ராஜா தலைமையில், 63 வது வார்டு மாமன்ற உறுப்பினர் பி.ஆர்.சி கிருஷ்ணமூர்த்தி முன்னிலையில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உருவப்படத்திற்கு நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் வட்டக்கழக நிர்வாகிகள் …

Read More »

மதுரை விளாங்குடியில் ஆக்கிரமிப்புகள் அதிரடியாக அகற்றப்பட்டது

மதுரை மாநகராட்சி வார்டு 1 புதுவிளாங்குடி நேருஜி மெயின் ரோட்டில் புதிதாக தார்சாலை விரைவில் அமைக்கப்பட உள்ளது. இந்நிலையில் மீனாட்சி காபி பாரில் இருந்து பாலமுருகன் கோவில் வரை சாலையின் இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றும் பணியை மாநகராட்சி அதிகாரிகள் இன்று மேற்கொண்டனர். பொதுமக்களே தாமாக ஆக்கிரமிப்பை அகற்றுவதற்கான காலஅவகாசம் மாநகராட்சி சார்பாக ஏற்கனவே வழங்கியும், அகற்றாததால் ஜேசிபி புல்டோசர் மூலம் இன்று அதிரடியாக அகற்றப்பட்டது. கூடல்புதூர் காவல்துறையினர் பாதுகாப்பு …

Read More »
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES