Thursday , December 12 2024
Breaking News
Home / செய்திகள் (page 74)

செய்திகள்

All News

வாடிப்பட்டியில் இருந்து பால்குடம், முளைப்பாரி எடுத்து வந்த வெள்ளாளர் முன்னேற்ற கழக நிர்வாகிகள்.!

வாடிப்பட்டியில் இருந்து பால்குடம் எடுத்து வந்த வெள்ளாளர் முன்னேற்ற கழக நிர்வாகிகள்

கப்பலோட்டிய தமிழன் வ உ சிதம்பரனாரின் 152 வது பிறந்த நாளை முன்னிட்டு வெள்ளாளர் முன்னேற்றக் கழகத்தின் சார்பாக மதுரை மாவட்டம் வாடிப்பட்டி வட்டம் சி.புதுார் கிராமத்திலிருந்து வந்த நிர்வாகிகள் அழகரடி மெஜூரா கோட்ஸ் அருகே உள்ள முத்துப்பிள்ளை சிலையிலிருந்து சிம்மக்கல்லில் உள்ள வ.உ.சிதம்பரனார் சிலை வரை, மாநில மகளிரணி தலைவியும், தென்மண்டல அமைப்பாளருமான அன்னலட்சுமி சகிலா கணேசன் அவர்களின் ஆலோசனைப்படி, ஊர்வலமாக பால்குடம் மற்றும் முளைப்பாரி எடுத்துச் சென்றனர்.

இதில் மதுரை மாவட்ட துனணத்தலைவர்
வைரமுத்து (எ) விஜயன் உள்பட
நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இளைஞர் குரல் செய்திகளுக்காக மதுரை செய்தியாளர் கனகராஜ்

மதுரையில் வாஸன் கண் மருத்துவமனையின் கான்டூரா லேசிக் சிகிச்சை பிரிவை மேயர் இந்திராணி தொடங்கி வைத்தார்.

மதுரையில் வாஸன் கண் மருத்துவமனையின் கான்டூரா லேசிக் சிகிச்சை பிரிவை மேயர் இந்திராணி பொன்.வசந்த் தொடங்கி வைத்தார்

மதுரை,செப்.09-

மதுரை அண்ணாநகர் வாஸன் கண் மருத்துவமனையில் பல்வேறு கண் நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது, தற்போது புதிய தொழில்நுட்பத்துடன் அதிநவீனமான கான்டூரா லேசர் சிகிச்சை பிரிவை மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்.வசந்த் தொடங்கி வைத்தார்,

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வாஸன் கண் மருத்துவமனையின் முதன்மை தலைமை மருத்துவர் கமல்பாபு கூறுகையில் “கான்டூரா லேசிக் சிகிச்சை பிரிவு சென்னை, கோவைக்கு அடுத்தப்படியாக தென் தமிழகத்தில் முதன் முதலாக மதுரையில் கொண்டு வரப்பட்டு உள்ளது,

மிக துல்லியமாக கண் சிகிச்சை அளிக்க கான்டூரா லேசர் மிஷின் உதவிகரமாக இருக்கும், இந்த இயந்திரத்தை கொண்டு 2 கண்களிலும் 7 நிமிடங்கள் அறுவை சிகிச்சை மேற்க் கொள்ளலாம், இந்த அறுவை சிகிச்சை மேற்க் கொள்ளும் நோயாளிகள் 1 மணி நேரத்தில் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பலாம்,

மேலும் கண்களை தொடாமலேயே அறுவை சிகிச்சை செய்வது தான் இயந்திரத்தின் சிறப்பாகும்” என கூறினார்.

இளைஞர் குரல் செய்திகளுக்காக மதுரை செய்தியாளர் கனகராஜ்

சனாதனத்தால் பாதிக்கப்படாதவர் யாரும் இல்லை என்றும் இன்று நம்முடைய வாழ்க்கையின் பெரும்பாலான மக்களின் துன்பங்களுக்கு பின்னால் இருப்பதும்
சனாதனம் என்கிறார் ஆய்வாளர் ஞானகுரு தினகரன் செல்லையா அவர்கள்!
சனாதனம் என்றால் என்ன?
இந்து மத புத்தகங்கள் சுமார் 6000+ புத்தகங்களை கடந்த 30 வருடங்களாக ஆய்வு செய்து வரும் ஆய்வாளர் ஞானகுரு தினகரன் செல்லையா அவர்கள் இன்று நம்மிடையே சனாதனம் என்றால் என்ன என்பதையும் இன்று நமது வாழ்வில் அதன் தாக்கத்தையும் தெளிவாக விளக்க இருக்கிறார். இந்த Zoom சந்திப்பில் சனாதனம் பற்றிய இந்து மதம் பற்றிய, மதங்கள் பற்றிய உங்கள் சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொள்ளலாம். இன்று செப்டம்பர் 9 சனிக்கிழமை மதியம் 3.30 மணி முதல் 6.30 மணி வரை ஆய்வாளர் உங்கள் கேள்விகளுக்கு விடைகள் அளிப்பார்கள்.
https://us06web.zoom.us/j/89616106713?pwd=VTdGNTlzM1M4bnQzTXY1M25ub2pLQT0…

மதுரையில் அகில பாரத இந்து மகா சபா அமைப்பினர் கைது.!

மதுரையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அகில பாரத இந்து மகா சபா அமைப்பினரை காவல் துறையினர் கைது செய்தனர்.

சனாதனம் குறித்து தவறாக பேசியதாக தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை கண்டித்து இந்து அமைப்பினர் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கண்டன ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் அகில பாரத இந்து மகா சபா அமைப்பின் சார்பாக அதன் தேசிய தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமையிலும், மாநில இளைஞரணி செயலாளர் எம்.டி ராஜா முன்னிலையிலும், மதுரை டி.எம் கோர்ட் சந்திப்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அப்போது சனாதனம் குறித்து பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


மேலும் உதயநிதி ஸ்டாலின் தனது வீட்டில் உள்ள சனாதன தர்மத்தை முதலில் ஒழிக்க வேண்டும். திமுகவில் உள்ள அனைத்து இந்துக்களையும் கட்சியை விட்டு வெளியேற்றி விட்டு சனாதனத்தை குறித்து பேசலாம்.உதயநிதி ஸ்டாலின் அமைச்சர் பதவியை உடனடியாக பறிக்க வேண்டும். என்று தேசிய தலைவர் பாலசுப்பிரமணியன் பேசினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் அகில பாரத இந்து மகா சபா நிர்வாகிகள் செல்லத்துரை, சுபாஷ்,ராமநிரஞ்சன், பூசாரி தெய்வேந்திரன் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.மேலும் அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதால் தேசிய தலைவர் உட்பட 100 க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக அகில பாரத இந்து மகா சபா அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

இளைஞர் குரல் செய்திகளுக்காக மதுரை செய்தியாளர் கனகராஜ்

மதுரையில் பேரணியாக சென்ற காங்கிரஸ் கட்சியினர்.!

மதுரையில் காங்கிரஸ் கட்சியினர் பேரணியாக சென்றனர்

மதுரை,செப்.07-

ராகுல் காந்தி எம்.பி மேற்கொண்ட இந்திய ஒற்றுமை நடை பயணத்தின் முதலாம் ஆண்டு நிறைவை கொண்டாடும் விதமாக, மதுரையில் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக பெரியார் பஸ் நிலையம் அருகே உள்ள கட்டபொம்மன் சிலையில் இருந்து ஜான்சிராணி பூங்கா பகுதியில் உள்ள இந்திரா காந்தி சிலை வரை, மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் பி.கார்த்திகேயன் தலைமையில் பேரணி நடைபெற்றது.

இதில் கவுன்சிலர்கள் தல்லாகுளம் முருகன், ஜெய்ஹிந்த்புரம் முருகன் மற்றும் நிர்வாகிகள் சிதம்பரபாரதி, பாலு, சிலுவை, செய்யதுபாபு, ரவிச்சந்திரன், அப்துல்மாலிக், நாஞ்சில் பால் ஜோசப், மீர்பாட்ஷா, ராஜா பிரபாகரன், ஜாகிர்உசேன், பாண்டி. சுப்பையா. டாக்டர் ரவிச்சந்திரன், , மலர்பாண்டியன், வன்னி ஆனந்த் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இளைஞர் குரல் செய்திகளுக்காக மதுரை செய்தியாளர் கனகராஜ்

திருமங்கலம் அன்னை வசந்தா டிரஸ்ட் சார்பாக 500 வது நாள் உணவு வழங்கும் நிகழ்ச்சி

திருமங்கலம் அன்னை வசந்தா டிரஸ்ட் சார்பாக 500 வது நாள் உணவு வழங்கும் நிகழ்ச்சியில் ஏழை எளியோருக்கு உணவு வழங்கப்பட்டது

மதுரை,செப்.07

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் தொடர்ந்து ஏழை எளிய மக்களுக்கு தினமும் உணவு வழங்கி வரும் அன்னை வசந்தா டிரஸ்ட் சார்பாக 500-வது நாள் உணவு வழங்கும் நிகழ்ச்சியை பிரனேஷ் பிரிண்டர்ஸ் உரிமையாளர் கிஷோர்குமார், ஆரபி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

இந்நிகழ்வில் டிரஸ்ட் தலைவர் அமுதவள்ளி, செயலாளர் சித்ரா, துணைச் செயலாளர் ரகுபதி, பொருளாளர் அருள்ஜோதி ஆறுமுகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விஸ்வகர்மா யோஜனா திட்டம் குறித்து வீண் வதந்தி. தமிழ்நாடு அண்ணா கைவினைஞர்கள் சங்கம். குற்றச்சாட்டு

விஸ்வகர்மா யோஜனா திட்டம் குறித்து வீண் வதந்தி. தமிழ்நாடு அண்ணா கைவினைஞர்கள் சங்கம். குற்றச்சாட்டு.

மதுரை, செப்7-

தமிழ்நாடு அண்ணா கைவினைஞர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் திரு.இரா.ராஜேந்திரன். மாநில துணைத் தலைவர் திரு. செல்வமணி* ஆகியோர் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது:

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் விஸ்வகர்மா கௌசல் யோஜனா திட்டத்தின் படி 18 வகையான தொழில்களை செய்யக்கூடிய பாரம்பரிய கைவினைஞர்கள் சுமார் 30 லட்சம் பேருக்கு தொழில் வளர்ச்சிக்கு முதல் தவணையாக ஒரு லட்சம் ரூபாயும், இரண்டாவது தவணையாக ரூபாய் இரண்டு லட்சமும் மிகவும் குறைந்த வட்டியில் கடனாக வழங்கப்பட உள்ளது.

இந்தியா சுதந்திரம் அடைந்து 77 ஆண்டுகள் ஆன நிலையில் எந்த ஒரு அரசியல்வாதியும் சிந்தித்துக் கூட பார்க்காத நிலையில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பாரம்பரிய கைவினைஞர்களை பாதுகாக்கும் வகையில் மிகச் சிறந்த விஸ்வகர்மா யோஜனா திட்டத்தை அறிவித்து .13 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து வருகின்ற 17ஆம் தேதி இத்திட்டத்தை முறையாக துவக்கி வைக்க உள்ளார்கள்.

இத்திட்டத்தின் வாயிலாக பாரம்பரிய கைவினைஞர்களுக்கு நவீன திறன் மற்றும் உலக அளவில் சந்தைப்படுத்துதல் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

இதற்கிடையே அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக சில தீய சக்திகள இந்த திட்டம் பரம்பரை சாதி தொழிலை நோக்கி நகர்த்த படுகின்ற வர்ணாசிரம சதித்திட்டம் என்று விஸ்வகர்மா சமுதாய மக்களை திசை திருப்பி வருகின்றனர்.

தற்போது நவீன தொழில் நுட்பங்களால் பாரம்பரிய கைத்தொழில்கள் முற்றிலுமாக அழிந்து வருகிறது. நிறைய தொழிலாளர்கள் வாழ்வாதாரம் இழந்து தற்கொலை செய்து வருகின்றனர். மேலும்
லட்சக்கணக்கான கைவினைஞர்கள் பாரம்பரிய வேலைவாய்ப்புகளை இழந்து தவிக்கின்றனர். இந்த திட்டம் பாரம்பரிய கைவினைஞர்களை காப்பாற்றுவதற்காககவும், சமுதாய முன்னேற்றம் பெறுவதற்காகவும்உருவாக்கப்பட்ட திட்டமாகும்.

பாரம்பரிய கைத்தொழில் செய்பவர்களுக்கு எந்தவித உதவியும் செய்யாத சில அரசியல் கட்சிகள் சுய லாபத்திற்காக மத்திய அரசு செய்கின்ற உதவியை தடுத்து நிறுத்த ஏற்பாடு செய்து வருகின்றனர். விஸ்வகர்மா சமுதாய பெருமக்கள் விஸ்வகர்ம யோஜனா திட்டம் தொடர்பான வதந்திகளை நம்ப வேண்டாம். ஆன்மீகத்தை அடிப்படையாகக் கொண்ட நமக்கு எதிராக நாத்திகவாதிகள் செயல்படுவது தொடர்கதையாக இருந்து வருகிறது.

எனவே விஸ்வகர்மா சமுதாய மக்கள் பிரதமர் மோடி அவர்களின் விஸ்வகர்மா யோஜனா திட்டத்துக்கு முழு ஆதரவு அளித்து பயனடைய வேண்டும். விஸ்வகர்மா யோஜனா திட்டம் தொடர்பாக அவதூறு பரப்புவதை தீய சக்திகள் கைவிட வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

இளைஞர் குரல் செய்திகளுக்காக மதுரை செய்தியாளர் கனகராஜ்

மதுரையில் பி.கே மூக்கையா தேவர் சிலைக்கு அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகம் சார்பாக மாலை அணிவித்து மரியாதை.

கல்வித்தந்தை பி.கே மூக்கையா தேவர் அவர்களின் 44 வது குருபூஜை விழாவை முன்னிட்டு, மதுரை அரசரடி பகுதியில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு, “அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகம் சார்பாக மாநில தலைமைக் கழகச் செயலாளர் வேலுச்சாமி அவர்களின் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் வைகை மு.பத்மநாபன், துணைத் தலைவர் முத்துராமலிங்கம், தொழிற்சங்க பொருளாளர் செல்வராஜ், மாநில வழக்கறிஞர் அணி செயலாளர் மணிகண்டன், மாவட்ட பொருளாளர் ராமசாமி மற்றும் முனியாண்டி, சேகர்,வேல்முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இளைஞர் குரல் செய்திகளுக்காக மதுரை செய்தியாளர் கனகராஜ்

மதுரையில் பி.கே மூக்கையா தேவர் சிலைக்கு அதிமுக சார்பாக மாலை அணிவித்து மரியாதை

கல்வித்தந்தை பி.கே மூக்கையா தேவர் அவர்களின் 44-வது குருபூஜை விழாவை முன்னிட்டு,மதுரை அரசரடியில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு அதிமுக சார்பாக முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் இராஜன்செல்லப்பா, பெரியபுள்ளான் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இந்நிகழ்வில் மாநகர் மாவட்ட துணைச் செயலாளர் வில்லாபுரம் ராஜா, அவைத்தலைவர் அண்ணாதுரை, அனைத்துலக எம்ஜிஆர் மன்ற செயலாளர் எம்.எஸ்.பாண்டியன், மாவட்ட பொருளாளர் குமார், பரவை பேரூர் செயலாளர் பரவை ராஜா, பகுதி செயலாளர்கள் ஞானசேகரன், கருப்புச்சாமி, எம்.ஜி.ராமச்சந்திரன், வட்டக் கழக செயலாளர்கள் பஜார் துரைப்பாண்டி, எஸ்.பி.சேகர், சுபேதார், ஜெயபாண்டி, கே.சாலை.முருகன், ராஜூவ் மற்றும் மகளிரணி மாவட்ட செயலாளர் சுகந்தி அசோக், மகளிரணி இணைச்செயலாளர் பாண்டிச்செல்வி மற்றும் டாக்டர் வி.பி.ஆர்.செல்வகுமார், டாக்டர் சின்னச்சாமி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இளைஞர் குரல் செய்திகளுக்காக மதுரை செய்தியாளர் கனகராஜ்

மதுரையில் பி.கே.மூக்கையாதேவர் சிலைக்கு நேதாஜி சுபாஷ் சேனை சார்பாக மாலை அணிவித்து மரியாதை.!

கல்வித்தந்தை பி.கே மூக்கையா தேவர் அவர்களின் 44 வது குருபூஜை விழாவை முன்னிட்டு, மதுரை அரசரடி பகுதியில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு, “நேதாஜி சுபாஷ் சேனை” மாநில தலைவர் “டாக்டர் மகாராஜன்” அவர்களின் ஆணைக்கிணங்க, மாநில செயலாளர் “சுமன் தேவர்” மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்வில் மாவட்ட இளைஞரணி நிர்வாகிகள் நிர்மல்குமார், பாலா மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இளைஞர் குரல் செய்திகளுக்காக மதுரை செய்தியாளர் கனகராஜ்

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES