Thursday , December 12 2024
Breaking News
Home / செய்திகள் (page 64)

செய்திகள்

All News

மண் காப்போம் இயக்கம் சார்பாக மதுரையில் பாரத பாரம்பரிய காய்கறி திருவிழா : நவ.5 ஆம் தேதி அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைக்கிறார்.

மண் காப்போம் இயக்கம் சார்பில் மதுரையில் பாரத பாரம்பரிய காய்கறி திருவிழா நவம்பர் 5 ஆம் தேதி நடைபெற உள்ளது.

இந்நிகழ்வை பத்திர பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைக்கிறார்

ஈஷாவின் மண் காப்போம் இயக்கம் சார்பில் பாரத பாரம்பரிய காய்கறி திருவிழா மதுரையில் நவம்பர் 5-ம் தேதி நடைபெற உள்ளது. இத்திருவிழாவை மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் திரு. மூர்த்தி அவர்கள் தொடங்கி வைக்க உள்ளார். தமிழ்நாடு முழுவதும் இருந்து சுமார் 1000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்க உள்ளனர்.

இது தொடர்பான பத்திரிக்கையாளர் சந்திப்பு மதுரை செய்தியாளர் அரங்கத்தில் இன்று (அக்.31) நடைபெற்றது. இதில் மண் காப்போம் இயக்கத்தின் தமிழக கள ஒருங்கிணைப்பாளர் முத்துகுமார் அவர்கள் கூறியதாவது:

மக்களை பாதிக்கும் பல விதமான நோய்களுக்கு அவர்கள் உண்ணும் உணவே மூல காரணமாக உள்ளது. செயற்கை உரங்களை அதிகளவு பயன்படுத்துவதால் மண்ணின் வளம் குறைந்து அதில் விளையும் விளைப்பொருட்களின் சத்தும் குறைந்து வருகிறது. இதே போல, மண் வளம் குறைந்ததால் விவசாயிகளுக்கும் மகசூல் குறைந்து வருவாய் குறைந்துள்ளது. மேலும் அவர்களின் உற்பத்திக்கு சரியான விலை கிடைப்பதில்லை. விவசாயிகள் சந்திக்கும் இதுப் போன்ற பிரச்சனைகளுக்கு இந்த நிகழ்ச்சி ஒரு தீர்வாக அமையும்.மேலும் ஒற்றை பயிர் சாகுபடி செய்து வரும் விவசாயிகளுக்கு பலப்பயிர் சாகுபடி செய்வது எப்படி என்பது குறித்தும் இந்த கூட்டத்தில் விளக்கப்படும்.

மேற்க்கூறிய பிரச்சனைகள் அனைத்திற்கும் தீர்வு காணும் விதமாக இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் பணியை மண் காப்போம் இயக்கம் மூலம் மேற்கொண்டு வருகிறோம். தமிழ்நாடு முழுவதும் மாதந்தோறும் பல்வேறு விதமான இயற்கை விவசாய பயிற்சி வகுப்புகளை நடத்தி இதுவரை சுமார் 18 ஆயிரம் விவசாயிகளுக்கு இயற்கை விவசாயத்தை கற்றுக் கொடுத்துள்ளோம்.

அதன் தொடர்ச்சியாக, பாரத பாரம்பரிய காய்கறி திருவிழா என்ற பெயரில் மாபெரும் விவசாய நிகழ்ச்சி ஒன்றை மதுரையில் நவம்பர் 5-ம் தேதி ஏற்பாடு செய்துள்ளோம். யாதவா மகளிர் கல்லூரியில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் இந்நிகழ்ச்சியில் காய்கறிகளை இயற்கை முறையில் உற்பத்தி செய்வதில் தொடங்கி அதை மதிப்பு கூட்டி சந்தைப்படுத்துவது வரை பல்வேறு அம்சங்கள் குறித்து முன்னோடி விவசாயிகள் மற்றும் வேளாண் வல்லுநர்கள் ஆலோசனைகள் வழங்க உள்ளனர்.

குறிப்பாக, நன்மை தரும் பூச்சிகள் மூலம் காய்கறி சாகுபடியை சிறப்பாக செய்வது குறித்து பூச்சியியல் வல்லுநர் திரு. பூச்சி செல்வம் பேச உள்ளார். மேலும் இயற்கை சந்தை ஒன்றை வெற்றிகரமாக உருவாக்கி நடத்தி வருபவர் பல்லடம் விவசாயி திரு. பொன் முத்து. இவர் உருவாக்கியிருக்கும் சந்தையின் மூலம் தற்சமயம் 1000 மேற்பட்ட நுகர்வோருக்கு காய்கறிகள் வழங்கி வருகிறார். ஒரு விவசாயி இயற்கை சந்தையை வெற்றிகரமாக உருவாக்கி நடத்துவது எப்படி என்பது குறித்து திரு. பொன் முத்து பேசுவார், பாரம்பரிய காய்கறிகளின் மருத்துவ குணங்கள் குறித்து காய்கறி வைத்தியர் திரு. அருண் பிரகாஷும், மிளகாய் வத்தல் உற்பத்தி செய்து அமெரிக்க, ஜெர்மன் உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் திரு. ராமர் அவர்கள் மிளகாய் வத்தல் சாகுபடி குறித்தும் ஆலோசனைகள் வழங்க உள்ளனர். இதுதவிர, முருங்கை இலை மூலம் 2 லட்சம் வருமானம் ஈட்டும் விவசாயி திருமதி. பொன்னரசி உள்ளிட்டோர் வீட்டு தோட்டம், பந்தல் காய்கறிகள் மற்றும் கீரை சாகுபடி என பல்வேறு அம்சங்கள் குறித்தும் பேச உள்ளனர்.

அத்துடன், இதில் நாட்டு காய்கறி விதைகள் மற்றும் விவசாயிகளே கண்டறிந்த எளிய வேளாண் கருவிகளின் கண்காட்சியும் இடம்பெற உள்ளது. இத்திருவிழாவில் பங்கேற்கும் விவசாயிகளுக்கு பாரம்பரிய நாட்டு காய்கறிகளின் விதைகளை இலவசமாக வழங்க உள்ளோம். விவசாயிகள் மட்டுமின்றி பொதுமக்களும் பயன் பெறும் விதமாக காய்கறிகள் மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட உணவுப் பொருட்களின் விற்பனையும் நடைபெறும். மரபு இசை கலைஞர் திரு. சவுண்ட் மணி அவர்களின் இசை நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. இத்திருவிழாவில் பங்கேற்க விரும்பும் விவசாயிகள் 8300093777 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இளைஞர் குரல் செய்திகளுக்காக மதுரை செய்தியாளர் கனகராஜ்….

தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை சார்பாக மாலை அணிவித்து மரியாதை

தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை மாநில தலைவர் முத்துக்குமார் ஆணைக்கிணங்க, மதுரை மண்டல தலைவர் டி.எஸ் மைக்கேல் ராஜ் வழிகாட்டுதலின்படி
வடக்கு மண்டல தலைவர் சாமுவேல் (எ) சரவணன் தலைமையில்
மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இதில் துணைத் தலைவர் கார்மேகம்,பொருளாளர் கணேசன், துணைச் செயலாளர் சந்திரன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மதுரை வந்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு மாநில செயலாளர் ஆதிசங்கர் தலைமையில் வரவேற்பு.!

முத்துராமலிங்க தேவர் ஜெயந்தியை முன்னிட்டு மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதற்காக வந்த மாநில தலைவர் அண்ணாமலை அவர்களுக்கு, பாஜக உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு மாநில செயலாளர் எஸ்.ஆதிசங்கர் மற்றும் செல்லூர் மண்டல் தலைவி மருதாயி ஆகியோர் ஏற்பாட்டில் 200 க்கும் மேற்பட்ட தொண்டர்களுடன் வந்து சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் மாவட்ட துணைத்தலைவர் வினோத்குமார்,மாவட்ட செயலாளர் தனலட்சுமி, மாவட்ட துணைத்தலைவர் சௌந்தரராஜன், இளைஞரணி மண்டல் தலைவர் சிவா, இ.எஸ்.ஐ மண்டல் தலைவர் முத்துவழிவிட்டான், பாலன் ரேடியோஸ் உரிமையாளர் பாலன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பசும்பொன் தேவர் நினைவிடத்தில் நேதாஜி சுபாஷ் சேனை நிறுவனத் தலைவர் டாக்டர் மகாராஜன் மாலை அணிவித்து மரியாதை.

பசும்பொன்னில் தேவர் நினைவிடத்தில் நேதாஜி சுபாஷ் சேனை நிறுவனத் தலைவர் டாக்டர் மகாராஜன் மாலை அணிவித்து மரியாதை.

இராமநாதபுரம்,அக்.30-

தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு இராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ள அவரது நினைவிடத்தில் நேதாஜி சுபாஷ் சேனை நிறுவனத் தலைவர் டாக்டர் மகாராஜன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்வில் மாநில செயலாளர் சுமன்,மாநில மகளிரணி தலைவி விஜி, மதுரை மாவட்ட இளைஞரணி நிர்மல்குமார், தூத்துக்குடி மாவட்ட செயலாளர் வசவபுரம் கணேசன் மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தேவர் ஜெயந்தியை முன்னிட்டு, மதுரையில் முத்துராமலிங்கத் தேவர் திருவுருவச் சிலைக்கு பெருந்தலைவர், நடிகர் திலகம் அறக்கட்டளை சார்பாக மாலை அணிவித்து மரியாதை

தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திருவுருவச் சிலைக்கு பெருந்தலைவர், நடிகர் திலகம் அறக்கட்டளை சார்பாக மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் மணிமாறன்,கே.ஆர் சுரேஷ்பாபு,பூக்கடை கண்ணன், வீரவாஞ்சிநாதன், பஞ்சாயத்து ராஜ் மாவட்ட தலைவர் முத்துக்குமார், மாவட்ட பொதுச் செயலாளர் செல்வராஜ் மற்றும் மூவேந்தரன்,போஸ் பவர் சிங், பாலமுருகன்,குமரகுரு, மீனாட்சி சுந்தரம், சக்திவேல்,குரு பிரசாத் லெனின், மகளிரணி பஞ்சவர்ணம் உள்பட காங்கிரஸ் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

இளைஞர் குரல் செய்திகளுக்காக மதுரை செய்தியாளர் கனகராஜ்

மதுரையில் மக்கள் நீதி மய்யம் தெற்கு தொகுதி நகர செயலாளர் எல்லன் பாண்டி பிறந்த நாள் விழா : அண்ணாநகர் முத்துராமன் வாழ்த்து.!

மதுரையில் மக்கள் நீதி மய்யம் தெற்கு தொகுதி நகர செயலாளர் எல்லன் பாண்டி பிறந்த நாள் விழா நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளராக மக்கள் நீதி மய்யம் நற்பணி இயக்க நிர்வாகி சமூக சேவகர் அண்ணாநகர் முத்துராமன் கலந்து கொண்டு சால்வை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தார்.

இவ்விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

திருப்பரங்குன்றத்தில் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக பால்,பழம்,முட்டை,ரொட்டி வழங்கும் நிகழ்ச்சி

மதுரை திருப்பரங்குன்றத்தில் விஜய் மக்கள் இயக்கம் வடக்கு மாவட்ட தலைவர் விஜய் அன்பன் கல்லணை அவர்களின் ஆலோசனைப்படி, மாணவரணி தலைவர் UPM.ஆனந்த் தலைமையில், தெற்கு நகர மாணவரணி தலைமை நகர தலைவர் விஜய் செல்வா மற்றும் நகர துணைத் தலைவர் முத்துப்பாண்டி ஆகியோர் ஏற்பாட்டில் 15-வது வாரம் குழந்தைகளுக்கு விலையில்லா ரொட்டி,பால்,பழம், முட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் Mr.பிளாக் விஜய் பாரதி,கனகவேல் உள்பட பலர் பங்கேற்றனர்.

ஜெகம் டிரஸ்ட்டில் ஆதரவற்ற முதியோர்களுக்கு புத்தாடை மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

மதுரையில் வேங்கடாச்சலம் அவர்களின் 5 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு ஆதரவற்ற முதியோர்களுக்கு புத்தாடை மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

மதுரை,அக்.29-

மதுரை பெத்தானியாபுரத்தில் உள்ள ஜெகம் டிரஸ்ட் அலுவலகத்தில் ஏழை எளிய முதியோர்களுக்கு தினமும் அன்னதானம் வழங்கி வருகின்றனர்.


அந்த வகையில் இன்று மெஜூரா கோட்ஸில் பணிபுரிந்த வெங்கடாசலம் அவர்களின் 5 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, அவரது துணைவியார் வசந்தா மற்றும் ஆவரது மகன் இந்து முன்னணி மாவட்ட துணைத்தலைவர் பாண்டியராஜன், திருமதி செண்பகாதேவி பாண்டியராஜன், பிரிமால்,பிரிஜித் ஆகியோர் 50க்கும் மேற்பட்ட ஆதரவற்ற முதியோர்களுக்கு புத்தாடை மற்றும் அன்னதானத்தை வழங்கினார்கள்.

இந்நிகழ்விற்கு
மேனேஜிங் டிரஸ்டி சோலை எஸ்.பரமன் தலைமை வகித்தார். டிரஸ்ட் பொருளாளர் திருஞானசம்பந்தம் நன்றி கூறினார்.

இளைஞர் குரல் செய்திகளுக்காக மதுரை செய்தியாளர் கனகராஜ்

தமிழக மக்கள் ஜனநாயக கட்சி சார்பாக நடந்த இலவச பொது மருத்துவ முகாமை முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தொடங்கி வைத்தார்

மதுரை,அக்.29-

மதுரை மீனாம்பாள்புரத்தில் உள்ள ராஜாஜி நடுநிலைப்பள்ளியில் தமிழக மக்கள் ஜனநாயக கட்சி மற்றும் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை இணைந்து நடத்திய மாபெரும் இலவச பொது மருத்துவ முகாமை முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார்.


இந்நிகழ்விற்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் மோகன்குமார் மற்றும் மாவட்ட துணைச்செயலாளர் மேத்தா (எ) ரபீக் ராஜா ஆகியோர் தலைமை வகித்தனர். மாவட்டச் செயலாளர் ஜலால் முஹம்மது வரவேற்று பேசினார்

இதில் சிறப்பு அழைப்பாளர்களாக மாநில துணைப் பொதுச் செயலாளர் சண்முகராஜா,
24 வது வார்டு அதிமுக மாமன்ற உறுப்பினர் மாணிக்கம்,விசிக மதுரை மண்டல செயலாளர் மாலின், தமஜக மாநிலத் துணைச் செயலாளர் சையது யூசுப்,எஸ்டிபிஐ வடக்கு மாவட்ட தலைவர் பிலால்தீன்,


நீர் நிலைகள் பாதுகாப்பு இயக்கத்தின் நிறுவனர் அபூபக்கர், தமிழ் தேச குடியரசு இயக்கம் மாநில கொள்கை பரப்பு செயலாளர் மெய்யப்பன்,இராஜாஜி நடுநிலைப்பள்ளி மேலாளர் வினோத், தமஜக முபாரக் அலி, சாதிக் பாஷா மற்றும் கார்த்திக் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இம்முகாமில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

மருதுபாண்டியர்களின் சிலைக்கு அகில பாரத இந்து மகா சபா அர்ச்சகர் பேரவை சார்பாக மாலை அணிவித்து மரியாதை

மாமன்னர்கள் மருது பாண்டியர்களின் 222-வது குருபூஜையை முன்னிட்டு மதுரை தெப்பக்குளத்தில் உள்ள அவர்களது திருவுருவச் சிலைக்கு, அகில பாரத இந்து மகா சபா அர்ச்சகர் பேரவை மதுரை மாவட்ட தலைவர் தெய்வேந்திரன் மற்றும் மாநில இளைஞரணி செயலாளர் எம்.டி.ராஜா ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

உடன் அர்ச்சகர் பிரிவு மாவட்ட செயலாளர் ராமர் மற்றும் முத்துக்குமார், சங்குமணி, முத்தையா, நீதிராஜன், அஜீத்குமார் உள்ளனர்.

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES