Friday , November 22 2024
Breaking News
Home / செய்திகள் (page 113)

செய்திகள்

All News

எச் சரிக்கை த கவல்..!கொரோனாவால் யாருக்கு அதிக ஆபத்து… யாரை எளிதில் தாக்கும்…?

கொரோனா வைரஸ் யாரை எளிதில் தாக்குவதற்கு வாய்ப்பிருக்கு ,யாருக்கு அதிகம் ஆபத்து இருக்கு இங்கிலாந்து சுகாதாரதுறை வெலீயிட்டு உள்ள தகவல்கள்.

சீனாவின் உகான் நகரில் தோன்றி உலகம் முழுவதும் 155 நாடுகளுக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது. இத்தாலி, ஈரான் போன்ற நாடுகளில் கொரோனா வைரஸ் மிகக் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா வைரசால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை உலகளவில் 7,157 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை, 1,82,438 பேருக்கு தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. அதில், 79 ஆயிரத்து, 212 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர்.

இங்கிலாந்தில் மட்டும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,543-ஆக உள்ளது. இதுவரை 55 பேர் உயிரிழந்துள்ளனர்.

இது வரும் நாட்கள் மற்றும் வாரங்களில் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இங்கிலாந்து அரசு தங்கள் நாட்டு மக்களை காப்பாற்றுவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும், ஒரு சில எச்சரிக்கைகளையும் விடுத்து வருகிறது.

தற்போது கொரோனா வைரஸ் யாரை எளிதில் தாக்குவதற்கு வாய்ப்பிருக்கு என்ற புதிய பட்டியலை அரசு வெளியிட்டுள்ளது.

* 70 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடையவர்கள் (அவர்களின் மருத்துவநிலையை பொறுத்து)

* ஆஸ்துமா, நாள்பட்ட நுரையீரல் நோய், மூச்சுக்குழாய் அழற்சி மற்றும் நாள்பட்ட சுவாச நோய்கள்.

* இதய செயலிழப்பு போன்ற நீண்டகால இதய நோய்.

* நாள்பட்ட சிறுநீரக நோய்

* நாள்பட்ட கல்லீரல் நோய்

* பார்கின்சன் நோய்(நடக்க முடியாமல் மிகவும் தள்ளாடுபவர்கள்), மோட்டார் நியூரோன் நோய், மல்டிபிள் ஸ்களீரோசிஸ், கற்றல் குறைபாடு அல்லது பெருமூளை வாதம் போன்ற நாள்பட்ட நரம்பியல் நிலைகள் உள்ளவர்கள்.

* நீரிழிவு நோய் உங்கள் மண்ணீரலில் உள்ள சிக்கல்கள் (உயிரணு நோய் அல்லது உங்கள் மண்ணீரல் அகற்றப்பட்டிருந்தால்)

* எச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸ் அல்லது ஸ்டீராய்டு மாத்திரைகள் அல்லது கீமோதெரபி போன்ற மருந்துகளின் விளைவாக பலவீனமாகும் நோயேதிர்ப்பு அமைப்பு.

* தீவிரமாக அதிக எடையுடன் இருப்பது (40 அல்லது அதற்கு மேற்பட்ட BMI)

* கர்ப்பமாக இருப்பவர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், கொரோனாவில் இருந்து கடுமையான நோய் ஆபத்து அதிகம் உள்ள சிலர் இருப்பதாகவும் சில தகவல்கள் வெளியாகியுள்ளது.

* உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை பெற்றவர்கள் மற்றும் தொடர்ந்து நோயெதிர்ப்பு தடுப்பு மருந்துகளில் இருப்பவர்கள்.

* புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் செயலில் கீமோதெரபி அல்லது கதிரியக்க சிகிச்சைக்கு உட்படுத்தப்படுகிறார்கள்.

* சிகிச்சையின் எந்த கட்டத்திலும் இருக்கும் ரத்த புற்றுநோய் அல்லது லுகேமியா போன்ற எலும்பு மஜ்ஜை உள்ளவர்கள்.

* சிஸ்டிக் பைப்ரோஸிஸ் அல்லது கடுமையான ஆஸ்துமா போன்ற கடுமையான மார்பு நிலைமைகளைக் கொண்டவர்கள். (மருத்துவமனையில் அனுமதி அல்லது ஸ்டீராய்டு மாத்திரைகளின் ஆலோசனை தேவை)

* கடுமையான சிறுநீரக நோய் (டயாலிசிஸ்) போன்ற உடல் அமைப்புகளின் கடுமையான நோய்கள் உள்ளவர்கள்.

* ஆபத்தில் இருக்கும் எவரும் எவ்வாறு சமூக ரீதியாக தங்களைத் தூரம் விலக்கிக் கொள்ள வேண்டும். அப்படி அவர்கள் தனிமையில் இருக்கும்போது அவர்கள் எவ்வாறு நிர்வகிக்க முடியும் என்பது குறித்து ஆலோசனை வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நாட்டின் பிரதமர் போரிஸ் ஜான்சன், பாதிக்கப்படக்கூடிய பட்டியலில் உள்ளவர்கள் – 70 வயதிற்கு மேற்பட்டவர்கள் குறிப்பிட்ட சூழ்நிலைகளைத் தவிர்த்து தனிமைப்படுத்துவதன் மூலம் தொடர்பைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாக அறிவித்துள்ளார். அனைத்து சமூக தொடர்புகளையும் தவிர்ப்பது குறித்த இந்த ஆலோசனை 70 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும், கர்ப்பிணிப் பெண்களுக்கும் இது மிகவும் முக்கியம் என்று குறிப்பிட்டுள்ளார்.-source: dailythanthi

 

Newsகொரோனா வைரஸிற்கு 13 தடுப்பூசிகள்! மகிழ்ச்சியான செய்தி!

சோவியத் கால உயிரியல் ஆயுத ஆராய்ச்சி நிறுவன விஞ்ஞானிகள் குழு கொரோனா தொடர்பில் 13 தடுப்பூசிகளை சோதனை செய்ய திட்டமிட்டுள்ளனர் என சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

இது தொடர்பில் தெரியவருதாவது,

கொரோனா தடுப்பூசி தொடர்பில் விலங்குகளுக்கும் அதேவேளை மனிதர்களுக்கும் அடுத்த வாரம் சோதனை மேற்கொள்ளப்படும் என பிரித்தானியா அறிவித்த நிலையில், தற்போது ரஷ்யாவில் இருந்து செயல்பட்டுவரும் சோவியத் கால உயிரியல் ஆயுத ஆராய்ச்சி நிறுவனம் ஒன்று இதை அறிவித்துள்ளது.

ரஷ்ய விஞ்ஞானிகள் குழு நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்ட 253 பேருக்கும், அந்த 13 தடுப்பூசிகள் ஒவ்வொன்றிலிருந்தும் மாதிரிகளைச் சோதித்து, பின்னர் அவற்றை சைபீரியாவின் அருகிலுள்ள வெக்டர் ஸ்டேட் ரிசர்ச் சென்டர் ஆஃப் வைராலஜி அண்ட் பயோடெக்னாலஜி ஆய்வுக்கு அனுப்ப உள்ளனர்.

மொத்தம் 13 தடுப்பூசிகள் உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில், அதில் ஒன்று அல்லது மூன்று தடுப்பூசிகள் ஜூன் மாதத்தில் தயாராகும் என ரஷ்ய விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

உலகின் மிகப்பெரிய நாடுகளை ஒப்பிடுகையில் ரஷ்யாவில் கொரோனா பாதிப்பு மிக மிகக் குறைவு. இதுவரை கொரோனா பாதிப்புக்கு ஒருவர் மட்டுமே இறந்துள்ளதாக அரசு தரப்பு அறிவித்துள்ளது.

ஆனால், உண்மை நிலவரத்தை வடகொரியா போன்று ரஷ்யாவும் மூடி மறைப்பதாக பரவலாக குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.

1973 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந்த ஆய்வகமானது வைசூரி அல்லது பெரியம்மை நோய்க்கான மருந்தை வியாபார ரீதியில் தயாரித்துள்ளது.

மட்டுமின்றி மிகவும் கொடூரமான Marburg என்ற கிருமியை ஆயுதமாகவும் பயன்படுத்தியுள்ளது.

தற்போது இந்த ஆய்வகம் பிளேக், ஆந்த்ராக்ஸ், எபோலா, ஹெபடைடிஸ் பி, எச்.ஐ.வி, சார்ஸ் மற்றும் புற்றுநோய்க்கான தடுப்பு மருந்துகளை உருவாக்குவதில் முழு மூச்சில் ஈடுபட்டு வருகிறது.

 

இத்தாலி அதிபரின் கண்ணீரின் வலி உணர்ந்து மனித சமூகத்தை மீட்டு செல்வோம் விழிப்புணர்வால்…

☝☝இந்த ஒற்றை புகைப்படம் பல லட்சம் மக்களின் வலிகளை பிரதிபலிக்கிறது.

இத்தாலியின் அதிபர் . மேம்படுத்தபட்ட சுகாதார கட்டமைப்பு இருப்பினும் வைரஸை கட்டுபடுத்த இயலாமல் செய்வதறியாது கண்ணீருடன் நிற்கின்றார்.

இத்தாலியில் நிமிடத்திற்கு ஒருவர் பாதிப்பும் , சராசரியாக 5 நிமிடத்திற்கு ஒரு இறப்பும் நிகழ்ந்து வருகிறது.

அறிவியலும் செய்வதறியாது விலகி நிற்கிறது. என்ன செய்ய போகிறோம் என வல்லரசு நாடுகளே அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

இந்த நிலையில் மக்களது ஒத்துழைப்பு மட்டுமே நிலையை மட்டுபடுத்தும்.

கரோனோவால் பாதித்த பெண் தெரிந்தும் எனக்கு வந்தது பிறருக்கும் வர வேண்டும் என விமானம், தொடர்வண்டியில் பயணித்து பரப்பியது நடந்த நிகழ்வு.

இதுவும் ஒரு மன நோயே. நான் துன்பப்படும் போது மற்றவர் எப்படி மகிழ்வாய் இருக்கலாம் என்பது.

ஞாயிறு ஊரடங்கு என்றதும் சனி அன்று மக்கள் இரட்டிப்பு கூட்டமிட்டு கூடி நோய் பரவல் வீதத்தை அதிகரித்ததும் அறிந்ததே.

இவர்களுக்கும் அந்த பெண்ணிற்கும் மனதளவில் பெரிய வித்தியாசம் இல்லை.

மாணவர்களுக்கு விடுமுறை விட்டது பாதுகாப்பிற்கு. ஆனால் அதனை சுற்றுலா போல ஊர் சுற்றி கொண்டாடி மகிழ்வது வருத்தம் தருகிறது என சுகாதார துறை அமைச்சர் வருந்தியது கண் முன் எட்டி செல்கிறது.

பாதித்த 3 லட்சம் பேரில் 13 ஆயிரம் பேர் இறப்பு . மீதமுள்ள 2.8 லட்சம் மக்கள் நோய் பரப்பும் இடை உடலங்களாக உள்ளனர்.

பரவும் வைரஸ் நம் ஊருக்கெல்லாம் வர போகுதா என அதிமேதாவி வசனம் பேசி பொறுப்பின்றி விழிப்புணர்வின்றி நடப்போர் விழித்து கொள்ளுங்கள். உங்களால் உங்கள் ஊரில் பெரும் பாதிப்பு ஏற்படலாம்.

வரும் நாட்கள் மிக முக்கியமானது . 2வது Stage ல் உள்ள நாம் 3 வது 4வது Stage செல்லாமல் தடுப்பதும் நம் விழிப்புணர்விலே உள்ளது.

நம் வீட்டில் உள்ளவர்களுக்காவது தேவையற்ற பயணம் தவிருங்கள்.

அதிபரின் கண்ணீர் ஒட்டு மொத்த மனித சமூகத்திற்கான அழுகுரல்.

இறந்தவர்களை தனிமைபடுத்தி புதைக்கவே இங்கு இடம் இல்லை என வருந்தும் இத்தாலி நாட்டு அதிபர் குரல் நிகழ்வின் முக்கியதுவத்தை உணர்த்துகிறது.

நோய் துவங்கிய முதல் வாரத்தில் 200 பேர் மட்டுமே பாதித்த இத்தாலியில் தற்போது நேற்று மட்டும் 750 இறப்பை கடந்துள்ளது. நோய் பிறப்பிடம் சீனாவையும் மிஞ்சிய பரவல் .

வெயில் அதிகம் இங்கு பரவாது என்பது மடமை. வெப்ப நிலை பரவுதல் வேகத்தை வேண்டுமானால் மட்டுப்படுத்தும். ஆனால் பரவாமல் தடுக்காது.
வெப்ப நிலை அதிகமான பல நாடுகளில் வைரஸ் தீவிரமாய் பரவி வருவது பார்த்து வருகிறோம்.

மருந்தே கண்டறியா நோயிற்கு மருந்து தனிமைபடுதல் மட்டுமே.
மனித உயிரினத்தை காக்க தற்போது இந்திய மக்கள் நிச்சயம் அரசிற்கு துணை நிற்க வேண்டும்.

நோயிற்கு ஆட்பட்டு தனிமைபடுத்தபடும் போது ஆகப்பெரிய வெறுமையை உணர்வதை தவிர்க்க இன்று வீடுகளில் தனிமைபட்டிருப்பது சிறந்தது.

வீர வசனம் பேசுவதை தவிர்த்து சமூக பரவலை முறியடிக்க வேண்டிய தருணம் இது. கோரோனா பரவும் சங்கிலியை உடைப்பது மிக அவசியம்.

பல முறை இந்திய முன்னெடுப்புகள் உலகிற்கு பாடமாக அமைந்துள்ளது. இம்முறையும் நம் கட்டுபாடுகளால் உலக நாடுகளுக்கு உணர்த்தி வைரஸிடம் இருந்து மீண்டு வர வழி சொல்லுவோம்.

இனி பழைய படி வாழ்வை நகர்த்தலாம் என பயணிக்க எண்ணினால் அது முட்டாள்தனம். வைரஸை மெது மெதுவாய் நீக்கி இந்த வைரஸால் பாதிக்கப்பட்ட கடைசி மனிதனை குணப்படுத்தும் வரை இந்த உயிரி போர் ஓயாது.

அறிவியலும் மருத்துவமும் ஒரு நாள் துணை வரும் எனும் நம்பிக்கை உள்ளது.
அது எட்டும் நாள் வரை தனித்து நிற்போம்.
மனிதம் என்ற உணர்வால் இணைந்து நிற்போம்.

அரசிற்கும் – இதற்காக களத்தில் உயிரை பணயம் வைத்து போராடும் மனிதர்களுக்கும் முழுவதுமாக துணை நிற்போம்.

இத்தாலி அதிபரின் கண்ணீரின் வலி உணர்ந்து மனித சமூகத்தை மீட்டு செல்வோம் விழிப்புணர்வால் …

 

வீடு இருப்பவர்கள் வீட்டில் சமைத்துக் கொள்ளலாம் வீடு இல்லாதவர்களும் ஹோட்டல் கடை நம்பி இருப்பவர்கள் சாப்பாட்டிற்கு என்ன செய்வார்கள்????

தமிழ்நாடு இளைஞர் கட்சி திருப்பூர் மாவட்டம் சார்பாக ஆதரவற்றவர்கள் மற்றும் வெளியூரிலிருந்து வந்த வேலை செய்பவர்களுக்கும் உணவு அளிக்கப்பட்டது.

ஊரடங்கு உத்தரவை பின்பற்ற சொல்லி அரசாங்கம் சொல்லி இருந்தாலும் இவர்களுக்கு எதுவும் செய்யவில்லை.

வீடு இருப்பவர்கள் வீட்டில் சமைத்துக் கொள்ளலாம் வீடு இல்லாதவர்களும் ஹோட்டல் கடை நம்பி இருப்பவர்கள் சாப்பாட்டிற்கு என்ன செய்வார்கள்????

இந்த மகத்தான சேவையை புரிந்த தமிழ்நாடு இளைஞர் கட்சிக்கு இளைஞர் குரல் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

மரபைத் தொலைத்தோம் மரணத்தை அறுவடை செய்தோம்…

கைகூப்பித்தானே கும்பிட்டோம்…தொழுதோம்…

கை கால் முகம் கழுவிதானே இல்லம் நுழைந்தோம்

ஆடி, தீபாவளிதானே
அசைவம் உட்கொண்டோம்

பயணம் செல்வோருக்கும்
கட்டுச்சோறு தவிர்த்து கலப்புக்கடை உணவு கலாச்சாரத்தில் இல்லையே!

பயிறு பொறி காராச்சேவு போன்றவற்றைத் தவிற பலகாரம் இல்லையே!

இட்டிலி தோசை கூட ஏகாதசி கார்த்திகைக்குத் தானே!

அரிசிச் சோறு அரிதாய் இருந்தது
மண்வீடாயினும் ஆரோக்கியமாய் இருந்தது

அம்மையும் காலராவையும் தவிற வேறு நோய் ஏது?

அஞ்சரைப்பெட்டி இல்லாத வீடேது?

மா,வேம்பு தோரணம் கட்டி
மக்கள் கூடும் விழா மஞ்சள் நீராட்டோடு முடிந்தது நோய் தொற்றை தவிர்க்கத்தானே…..

வாரம் இருமுறை பூசி மெழுகாத அடுப்பாங்கரை ஏது?

வெள்ளியும் செவ்வாயும் கோமியம் தெளிக்காமல் விடியல் ஏது?

கொடியேற்றம் துவங்கியதும் திருவிழா ஊரில் கவுச்சி இல்லை பால்நுகர்ச்சி இல்லை
ஆதலால் நோய் தொற்று இல்லை

மரபைத் தொலைத்தோம்
மரணத்தை அறுவடை செய்தோம்

என்றைக்கு அடிக்கடி அசைவம் உட்கொண்டோமோ?

என்றைக்கு நீராகாரம் மறந்து பேக்கரி சென்றோமா?

என்றைக்கு கலப்புக்கடையில் கண்டதை
தின்றோமோ?

என்றைக்கு ஓரிடத்தில் குவியத் தொடங்கினானோ?

என்றைக்கு பூமியயை ரசாயனத்தால் கொலை செய்தோமோ
பிளாஸ்டிக்கால் பூமியின் தாய்மை அழித்து மலடாக்கினோமோ?

சுயநலம் பெருகி
சுற்றம் சுருங்கியது

விளைவு மனிதகுலம் வீங்கி வெடிக்கிறது

மரபை மீட்போம்
மனிதத்தை காப்போம்

– இளைஞர் குரல்

கோரோன வைரஸ் – ஐயப்பபக்தர்கள் அனைவரும் வரவேண்டாம் என்று கேரள அரசு மற்றும் சபரிமலை தேவஸ்தானம் போர்டு அறிவிப்பு

ஐயப்ப பக்தர்கள் அனைவருக்கும் தெரிவித்துக் கொள்வது என்னவென்றால் கொரானாவைரஸ் பரவும் அச்சம் கேரளாவில் அதிகம் உள்ள காரணத்தினால் இந்த மாதம் தமிழ் பங்குனி மாதம்பிறப்பிற்கு சபரிமலையில் சாஸ்தாவின் சன்னிதானம் 5 நாட்கள் நடை திறந்திருக்கும் பூஜைகள் எப்பொழுதும் போன்று நடைபெறும் ஆனால் பக்தர்களுக்கு மேலே செல்ல அனுமதி இல்லை ஆகையால் ஐயப்பபக்தர்கள் அனைவரும் வரவேண்டாம் என்று கேரள அரசு மற்றும் சபரிமலை தேவஸ்தானம் போர்டு அறிவிக்கிறது.

(NPR)என்பிஆருக்கு எந்த ஆவணமும் கேட்கப்படாது.. பயப்பட வேண்டாம்.. அமித் ஷா முக்கிய அறிவிப்பு

என்பிஆருக்கு எந்த ஆவணமும் கேட்கப்படாது.. பயப்பட வேண்டாம்.. அமித் ஷா முக்கிய அறிவிப்பு

டெல்லி: என்பிஆர் குறித்து யாரும் அச்சப்பட வேண்டாம் என்றும் எந்த ஆவணமும் கேட்கப்படாது என்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று ராஜ்யசபாவில் கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கும் போது உறுதி அளித்தார்.

குடியுரிமை திருத்த சட்டம்(சிஏஏ), மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு (என்பிஆர்) ஆகியவற்றுக்கு எதிராக இந்தியாவின் பல்வேறு இடங்களில் கடந்த டிசம்பர் மாதம் முதல் போராட்டங்கள் நடந்து வருகிறது.

குறிப்பாக என்பிஆர் குறித்து அஸ்ஸாமில் கேட்கப்பட்ட ஆவணங்களாக தந்தையின் பிறந்த நாள் சான்றிதழ்கள் மற்றும் அவர்கள் இந்திய குடிமகன்கள் தானான என்பதை நிரூபிக்க கேட்கப்பபட்ட வாக்குரிமை ஆவணங்கள் உள்ளிட்டவை மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது. அத்துடன் பிறப்பு சான்றிதழ் இல்லை என்றால் முகாம்களில் அடைக்கப்படுவோமோ என்ற பயமும் பீதியும் பெரிய அளவில் பரவியதால் என்பிஆர் விவகாரம் பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்புக்கு வித்திட்டுள்ளது.

இதனால் என்பிஆர் மற்றும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டங்கள் நாடு முழுவதும் வேகமாக பரவின. இந்த போராட்டம் இன்று வரை பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது.
இந்நிலையில் ராஜ்யசபாவில் காங்கிரஸ் மூத்த எம்பி கபில் சிபல் CAA NPR உடன் இணைந்தால் என்ன ஆகும் என என்பிஆர் குறித்து கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசுகையில் , NPR இன் போது எந்த ஆவணமும் கேட்கப்படாது. எந்த ஆவணங்களும் அளிக்க தேவையில்லை. எனவே யாரும் பயப்பட வேண்டாம். ஒருவர் குறிப்பிட்ட தகவல்களை வழங்க விரும்பவில்லை என்றால், எந்த கேள்வியும் கேட்கப்படமாட்டாது, சிஏஏ குறித்து முஸ்லீம் சகோதர சகோதரிகள் மத்தியில் தவறான பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது. என்பதை அவர்களிடம் நான் சொல்ல விரும்புகிறேன்” இவ்வாறு அமித் ஷா கூறினார்.

எதிர்க்கட்சியான காங்கிரஸ், இடதுசாரிகள் ஆளும் கேரளா, திரிணாமுல் ஆளும் வங்காளம் மற்றும் பாஜக கூட்டணி தலைவரான நிதீஷ்குமாரால் ஆளப்படும் பீகார் ஆகிய நாடுகளும் பல மாநிலங்கள் என்.பி.ஆர் பயிற்சியை மேற்கொள்ள மறுத்துவிட்டன. இதேபோல் தெலுங்கானா, ஆந்திராவும் என்பிஆரை அமல்படுத்த மறுத்துள்ளன. இந்நிலையில் பாஜகவின் கூட்டணி கட்சியான அதிமுகவும் தமிழகமும் என்பிஆரை நிறுத்துவதாக அறிவித்துள்ளது.

முடங்கிய ஐரோப்பா.. வேகமாக உயரும் பலி எண்ணிக்கை.. 1,26,139 பேரை தாக்கிய கொரோனா.. கொடூரம்

முடங்கிய ஐரோப்பா.. வேகமாக உயரும் பலி எண்ணிக்கை.. 1,26,139 பேரை தாக்கிய கொரோனா.. கொடூரம்

பெய்ஜிங்: உலகம் முழுக்க கொரோனா வைரஸால் பலியானோர் எண்ணிக்கை 4,627 ஆக உயர்ந்துள்ளது.

டிசம்பர் மாதம் இறுதியில் திடீர் என்று சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுக்க பெரிய அச்சுறுத்தலாக மாறி உள்ளது. சீனா, ஜப்பான், இத்தாலி, ஈரான், மத்திய கிழக்கு நாடுகள், ஐரோப்பா நாடுகள், அமெரிக்கா என்று பல நாடுகளை இந்த வைரஸ் நிலைகுலைய வைத்துள்ளது.
கொரோனா இதுவரை 123 நாடுகளுக்கு பரவியுள்ளது. சீனாவில் வுஹான் நகரத்தில் இந்த வைரஸ் உருவானது. இதற்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை.
கொரோனா வைரஸ் அவசர நிலை இல்லை.. பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும்.. கர்நாடகா அரசு

எத்தனை பலி
உலகம் முழுக்க கொரோனா வைரஸால் பலியானோர் எண்ணிக்கை 4,627 ஆக உயர்ந்துள்ளது.கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,26,139 ஆக உயர்ந்துள்ளது.சீனாவில் பலியானோர் எண்ணிக்கை 3,169ஆக உயர்ந்துள்ளது.சீனாவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 80,796ஆக உயர்ந்துள்ளது. சீனாவில் இந்த வைரஸ் கொஞ்சம் கொன்ஜமாக் வேகமாக குறைந்து வருகிறது.

சீனா
இந்த கொரோனா வைரஸால் சீனாவிற்கு அடுத்தபடியாக இத்தாலிதான் அதிகம் பாதிக்கப்பட்டடுள்ளது. இத்தாலியில் முதலில் இரண்டு நகரங்கள் இந்த வைரசால் மூடப்பட்டது. தற்போது மொத்தமாக இத்தாலி மூடப்பட்டது, அங்கு அவசர நிலை அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இத்தாலியில் மொத்தம் 12,462 பேர் வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இத்தாலியில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 827 ஆக அதிகரித்துள்ளது.

ஈரான் வைரஸ்
அதற்கு அடுத்து ஈரானிலும் வைரஸ் வேகமாக பரவி வருகிறது. ஈரானில் 9,000 பேருக்கு வைரஸ் ஏற்பட்டுள்ளது. அங்கு நேற்று மட்டும் 63 பேர் ஒரே நாளில் பலியாகி உள்ளனர். 354 பேர் இதுவரை ஈரானில் பலியாகி உள்ளனர். அதற்கு அடுத்து தென் கொரியாவில் 7,869 பேர் வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 66 பேர் அங்கு இந்த வைரஸ் தாக்குதலால் பலியாகி உள்ளனர்.

அமெரிக்கா எப்படி
அமெரிக்காவில் 1,313 பேர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு 38 பேர் பலியாகி உள்ளனர். இதனால் வாஷிங்கடன் மொத்தமாக அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. பிரான்சில் 2,281 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு 48 பேர் பலியாகி உள்ளனர். ஸ்பெயினில் 2277 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு 55 பேர் பலியாகி உள்ளனர். ஐரோப்பாவில் இந்த வைரஸ் தற்போது வேகம் எடுத்து வருகிறது.

மொத்தம் எத்தனை
இந்தியாவில் இந்த வைரஸ் தாக்கி மொத்தம் 57 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். முக்கியமாக தமிழகத்தில் வைரஸ் தாக்கிய நபர் குணப்படுத்தப்பட்டு இருக்கிறார். கேரளாவில் 14 பேருக்கு வைரஸ் தாக்கியுள்ளது. இதில் இரண்டு பேர் மோசமான நிலையில் இருக்கிறார்கள். கர்நாடகாவில் வைரஸ் தாக்கியதாக சந்தேகிக்கப்பட்ட முதியவர் நேற்று பலியானார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீ சத்யம் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில்இரத்த தான முகாம்

இன்று (11.03.2020) இரத்த தான முகாம் ஸ்ரீ சத்யம் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கிடையூர் இணைந்து இரத்த தான முகாம் ஸ்ரீ சத்யம் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்றது.

இதில் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு இரத்த தானத்தின் அவசியம் பற்றியும் விழிப்புணர்வு பற்றியும் எடுத்துரைக்கப்பட்டது. மேலும் இதில் 64 மாணவ மாணவிகள் ரத்ததானம் வழங்கினர் பெறப்பட்ட இரத்தம் சேலம் மோகன் குமாரமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

இதில் கலந்து கொண்ட இரத்த வங்கி மருத்துவ அலுவலர் டாக்டர் ரமதரன் வட்டார மருத்துவ அலுவலர், டாக்டர் ரமேஷ்குமார், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் பஞ்சட்சரம், சுகாதார ஆய்வாளர்கள் கந்தசாமி, கார்த்திக் குமார், வெங்கடாசலம் ஆகியோர்களுக்கு கல்லூரி நிறுவனர் டாக்டர் சுஜாதா அவர்கள் நன்றியை தெரிவித்தார்.

YouTube player

கொரோனா பயத்தால்’ பள்ளிகளுக்கு கால வரையற்ற விடுமுறை… உச்சகட்டமாக ஆண்டுத்தேர்வை ‘ரத்து’ செய்து… கோடை ‘விடுமுறை’ அறிவித்த பள்ளி

கொரோனா அச்சத்தால் பள்ளி ஒன்று ஆண்டு இறுதித்தேர்வை ரத்து செய்து கோடை விடுமுறை அறிவித்துள்ளது.

கொரோனா காரணமாக பெங்களூரில் உள்ள அனைத்து தொடக்கப்பள்ளிகளையும் நாளை மூடுமாறு கர்நாடகா அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. நாளை முதல் அடுத்த உத்தரவு வரும் வரை மூடப்பட்டு என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

இந்த நிலையில் கிழக்கு பெங்களூரில் உள்ள டெல்லி பப்ளிக் ஸ்கூல் என்னும் பள்ளியொன்று ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையில் ஆண்டு இறுதித்தேர்வை ரத்து செய்து, கோடை விடுமுறையாக அறிவித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடைசியாக நடத்தப்பட்ட தேர்வு மதிப்பெண்ணின் அடிப்படையில், மாணவர்கள் அடுத்த வகுப்புக்கு தேர்வு செய்யப்படுவார்கள் என்று அந்த பள்ளி அறிவித்துள்ளது. இதேபோல கேரளா மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு 3 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES