Thursday , December 12 2024
Breaking News
Home / செய்திகள் (page 111)

செய்திகள்

All News

கொரொனா ருத்ர தாண்டவம் ஆட ஆரம்பித்திருக்கிறது கரூர் மாவட்டத்தில்…

கொரொனா ருத்ர தாண்டவம் ஆட ஆரம்பித்திருக்கிறது கரூர் மாவட்டத்தில்….

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் கொரொனா வேகமாக பரவி வரும் சூழலில் அரவக்குறிச்சி பஞ்சாயத்து குழுவினர் தொற்று பாதித்த நபர்கள் வசித்த தெருவை சுத்தம் செய்து, தெரு ஆரம்பமாகும் இடத்தில் கபசுரக் குடிநீர் மக்களுக்காக கொடுத்து வருகின்றனர். மேலும் அரவக்குறிச்சி ஜீவா நகர் பகுதியில் மருத்துவ முகாம் அமைத்து கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். சிறப்பாக செயல்படும் அரவக்குறிச்சி பஞ்சாயத்து குழுவினருக்கு இளைஞர் குரல் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

கொரோனா தொற்று பாதித்தவர்களுக்கு சென்னை, சாலிகிராமத்தில் உள்ள “ஜவஹர்” பொறியியல் கல்லூரியில் அரசு அனுமதியுடன் இலவச சித்த மருத்துவம் மையம்

பொது மக்களுக்கு ஓர் முக்கிய செய்தி!

“கொரோனா” தொற்று பாதித்தவர்களுக்கு சென்னை, சாலிகிராமத்தில் உள்ள “ஜவஹர்” பொறியியல் கல்லூரியில் அரசு அனுமதியுடன் இலவச சித்த மருத்துவம் மையம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இதனை சித்த மரு திரு.வீரபபாபு தலைமையில் மிக சிறப்பாக செயல்படுத்தி
வருகிறார்.

1.கட்டணம் : இல்லை (இலவசம்)

2.காலம்:5-7 நாட்கள்.

3.சேர தேவையானவை : கொரோனா
பாசிட்டிவ் என வந்த SMS அல்லது மெடிக்கல் ரிப்போர்ட், ஆதார் அட்டை.

  1. படுக்கை வசதி : 300.
  2. சிகிச்சை : மூலிகை தேனீர், கபசுரக் குடிநீர், மூச்சுப்பயிற்சி போன்ற சிகிச்சைகள்.
  3. உணவு : காலை டிபன், மதியம் சாப்பாடு, தோரம் பருப்பு,சாம்பார், வத்தக்குழம்பு, மிளகு ரசம், மாலை கொண்டகடலை சுண்டல், இரவு டிபன்,
  4. இறப்பு விகிதம் : 0%
  5. சுகாதாரம் : 100%

நோயாளிகள் உயர்தரமான சிகிச்சைகளும், உயர்தரமான உணவுகளும் , ஆரோக்கியமான உடல் பயிற்சிகளும் பெற்று “கொரோனா” தொற்று இல்லாமல் குணமாகி வருகின்றனர்.

மக்களே! இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

முகவரி:
Dr.veerababu,
Jawahar engineering college,
No.54, Kalaignar St, Kaveri Rangan nagar, Saligramam, Chennai, Tamil Nadu 600093
தொடர்பு எண் -விவேக் 9551241624

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி பாவா நகர் 1 ல் தார்ச்சாலை அமைக்கும் பணி…

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் பாவா நகரைச் சுற்றி வர தார்சாலை அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த செயல் திறம்பட பாவா நகருக்கு கொண்டு வந்த பெருமை பாவா நகர் மக்களுக்கும் தமிழ்நாடு இளைஞர் கட்சிக்கும் மற்றும் சமூக ஆர்வலர்களுக்கும் பெரும் பங்கு இருக்கிறது. மக்களின் கோரிக்கையை ஏற்று பாவா நகருக்கு சாலை அமைக்கும் பணியை விரைவில் கொண்டு வந்தமைக்கு தமிழக அரசுக்கும் மற்றும் அரவக்குறிச்சி பஞ்சாயத்து அதிகாரிகளுக்கும் இளைஞர் குரல் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

எட்டு எட்டா தமிழகத்தை பிரிச்சிக்கோ.. எந்த எட்டில் இப்ப இருக்க தெரிஞ்கோ!


எட்டு எட்டா தமிழகத்தை பிரிச்சிக்கோ.. எந்த எட்டில் இப்ப இருக்க தெரிஞ்கோ!

சென்னை: தமிழகத்தில் பொது பேருந்து போக்குவரத்தை நடைமுறைப்படுத்துவதற்காக மாநிலம் 8 மண்டலங்களாக பிரிக்கப்படுகிறது.
நோய் கட்டுப்பாடு பகுதிகளில் இந்தியா முழுவதும் ஜூன் 30-ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக புதிய வழிகாட்டும் நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டிருந்தது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் வரும் ஜூன் 30-ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் ஊரடங்கிற்கான புதிய வழிகாட்டும் நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது.
அதன்படி மாநிலத்தில் பொது பேருந்து போக்குவரத்தை ஜூன் 1ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்தும் பொருட்டு மாநிலம் கீழ்கண்ட 8 மண்டலங்களாக பிரிக்கப்படுகிறது.
போக்குவரத்திற்காக தமிழகத்தை எட்டு எட்டாக பிரித்த அரசு.


மண்டலம் 1- கோவை, நீலகிரி, ஈரோடு, திருப்பூர், கரூர், சேலம், நாமக்கல்
மண்டலம் 2- தருமபுரி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி
மண்டலம் 3- விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர், கள்ளக்குறிச்சி
மண்டலம் 4- நாகை, திருவாரூர், தஞ்சை, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை
மண்டலம் 5- திண்டுக்கல், மதுரை, தேனி, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம்
மண்டலம் 6- தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி
மண்டலம் 7- காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு
மண்டலம் 8- சென்னை காவல் எல்லைக்குள்பட்ட பகுதி


மண்டலம் 7-இல் காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, சென்னைகாவல் எல்லைக்குள்பட்ட பகுதிகள் தவிர்த்து அனைத்து மண்டலங்களுக்குள் 50 சதவீத பேருந்துகள் மட்டும் இயக்கப்படும்.
மண்டலம் 7, மண்டலம் 8-க்கு உட்பட்ட பகுதிகளில் பொது போக்குவரத்து பேருந்துகளின் இயக்கத்திற்கு தடை தொடர்கிறது. அங்கீகரிக்கப்பட்ட தடங்களில் தனியார் பேருந்துகளும் இயக்க அனுமதிக்கப்படுகிறது.

பேருந்துகளில் உள்ள மொத்த இருக்கைகளில் 60 சதவீத இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கபபடும்.

தமிழகத்தில் ஜூன் 30 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. 50 சதவீத பேருந்துகள் இயக்கம்.. அரசு அறிவிப்பு
மண்டலத்திற்குள் பயணிக்கும் பயணிகளுக்கு இ பாஸ் தேவையில்லை என்ற நிலையில் பொது போக்குவரத்து பேருந்துகளில் பயணிக்கவும் இ பாஸ் அவசியமில்லை.
அனுமதிக்கப்பட்ட இனங்களுக்கு தவிர, மண்டலங்களுக்கு இடையேயும் மாநிலங்களுக்கிடையேயுமான பேருந்து போக்குவரத்து சேவைகளுக்கான தடை தொடர்கிறது.
அரசால் தனியாக வெளியிடப்பட்டுள்ள நிலையான வழிகாட்டு நடைமுறைகளை கண்டிப்பாக பின்பற்றி பொது போக்குவரத்திற்கான பேருந்துகள் இயக்கப்படும்.
இ பாஸ் முறை
அனைத்து வகையான வாகனங்களும் மேற்கண்ட அட்டவணையில் உள்ள மண்டலத்திற்குள் இயங்க அனுமதிக்கப்படுகிறது. அவைகளுக்கு இ பாஸ் தேவையில்லை.
வெளிமாநிலங்களுக்கு சென்று வரவும், வெளி மாநிலங்களிலிருந்து தமிழகத்திற்கு வரவும் மண்டலங்களுக்கிடையே சென்று வரவும் இ பாஸ் முறை தொடர்ந்து நடைமுறையில் இருக்கும்.

புறக்கணிக்கும் ஊடகங்கள் இளைஞர்கள் பயணிக்கும் தமிழ்நாடு இளைஞர் கட்சியை…

மதுபான கடைகளை மூடக்கோரி தமிழகமெங்கும் தமிழ்நாடு இளைஞர் கட்சி யின் உறுப்பினர்கள் நிர்வாகிகள் அனைவரும் பல மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மதுபானக்கடைகளை மூடக்கோரி மனுக்கள் கொடுத்து வருகின்றனர் அதுபோல மதுபான கடைகளில் நிற்கும் குடிமகன்கள் இடம் நிவாரண நிதியை வேலூர் மாவட்டத்தை சேர்ந்த தமிழ்நாடு இளைஞர் கட்சியின் வேலூர் மாவட்ட தலைவர் உண்டியலில் வசூல் செய்து அதை பொதுமக்களுக்கு கொண்டு சேர்க்கும் பணியில் இருந்ததை பார்த்து ஒரு சில குடிமகன்கள் விழிப்புணர்வு வந்திருக்கும் என்று நம்புவதாக இந்நிகழ்ச்சி மக்களின் மனதில் சென்றடைந்தது என்பதை நாம் மறுக்க இயலாது.

 

 

குறிப்பாக எந்த ஒரு நல்ல விஷயங்களையும் ஊடகங்கள் பிரித்துக் காண்பிப்பது வியப்பாக இருக்கிறது…

அப்துல்கலாம் அய்யா அவர்களே நாளைய இந்தியா இளைஞர்களின் கையில் என்று கூறியதை இப்பொழுது நினைவுபடுத்த விரும்புகிறோம்.

like

இளைஞர்கள் ஒரு பக்கம் டாஸ்மாக்கில் நின்று நிவாரணம் சேகரிப்பதும் மறுபக்கம் குழந்தைகளுக்கு பால் கொடுப்பதும் இந்த தமிழகத்தில் அதுவும் தமிழ்நாடு இளைஞர் கட்சியை சேர்ந்த இளைஞர்களால் அரங்கேறிக் கொண்டிருக்கிறது…

இந்த வித்தியாசமான முயற்சிகளை எடுத்த இந்த இளைஞர்களுக்கும் மற்றும் தமிழ்நாடு இளைஞர் கட்சிக்கும் இளைஞர் குரல் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

கச்சா எண்ணெய் விலை ஜீரோவிற்கு கீழே ஆனால் இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை ஹீரோ விலையில்…

ஜீரோ வின் மதிப்பு மிகப்பெரியது என்பதை இந்தியா தொடர்ந்து மக்களுக்கு வலியுறுத்தி வருகிறது.

ஏனெனில் கச்சா எண்ணெய் விலை பல மடங்கு குறைந்து ஜீரோ விற்கும் கீழே சென்று கொண்டிருக்கும் வேளையில்… கச்சா எண்ணெய்யை பயன்படுத்தி பெட்ரோல் மற்றும் டீசல் உருவாக்கி அதை ஹீரோ விலையில் விற்பது எந்த விதத்தில் நியாயம் என்பது தெரியவில்லை…

மற்ற நாடுகள் கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்ய விலையும் தருகிறார்கள் இன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனா கொடிய வைரஸ் வில்லனுக்கு தண்ணி காட்டும் கரூர் அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரி…

கொரோனா கொடிய வைரஸ் வில்லனுக்கு தண்ணி காட்டும் கரூர் அரசு மருத்துவமனை:

கடந்த காலங்களில் மற்றும் இப்பொழுதும் ஒட்டு மொத்த இந்தியாவையும் அல்லாமல் உலகையே உலுக்கி கொண்டிருக்கும் கொடிய வைரஸ் கொரோனாவை அடித்து விரட்டிக் கொண்டிருக்கும் கரூர் மாவட்டம் அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக்கல்லூரி இதுவரை 102 நோயாளிகளை குணப்படுத்தி ஒட்டுமொத்த இந்தியாவிற்கே முன் உதாரணமாக திகழ வைத்த பெருமை கரூர் மாவட்ட ஆட்சியர் திரு அன்பழகன் அவர்களுக்கு சென்றடைகிறது என்பதில் கரூர் மாவட்ட மக்கள் பெருமிதம் கொள்கிறார்கள்.

ஏனென்றால் கரூர் மாவட்ட ஆட்சியர் அவர்களின் வழிகாட்டுதலும், திட்டமிடுதலும், மருத்துவர்களுக்கு போதிய ஓய்வு நேரம் அளிப்பதும், செவிலியர்களுக்கு போதிய ஓய்வு நேரம் அளிப்பதும், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதை தொடர்ந்து கண்காணித்து வர தனியாக தனிப்படை போன்று மருத்துவக் குழுவை உருவாக்கி நோயாளிகளை குணமடைந்து வைத்து இந்த சாதனைக்கு சொந்தக்காரர் ஆகிறார்.

இளைஞர்கள் சார்பாக கரூர் மாவட்ட ஆட்சியர் திரு அன்பழகன் அவர்களை பாராட்டாமல் இருக்க முடியவில்லை,  மீண்டும் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறோம் இளைஞர் குரல் சார்பாக.

 

தமிழ்நாடு இளைஞர் கட்சியின் கோரிக்கை – கொரோன நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பொருட்டு உயிர்த்தியாகம் செய்யும் மருத்துவர்களுக்கு அரசு ராணுவ மரியாதையுடன் அடக்கம் – தமிழக அரசு ஒப்புதல்

 

கொரோன நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பொருட்டு உயிர்த்தியாகம் செய்யும் மருத்துவர்களுக்கு அரசு ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்ய வேண்டும் என்று முன்வைத்த தமிழ்நாடு இளைஞர் கட்சியின் கோரிக்கையை உடனடியாக செயல்படுத்திய தமிழக முதல்வர் திரு பழனிச்சாமி அவர்களுக்கு தமிழ்நாடு இளைஞர் கட்சியின் பொதுச் செயலாளர் டாக்டர் ராஜசேகர் அவர்கள் நன்றியை தெரிவித்தார்.

ஏற்கனவே தமிழக முதல்வர் ஐயா அவர்கள் பல நற்காரியங்களை இந்த ஊரடங்கு காலத்தில் மக்களுக்கு செவ்வனே செய்து வருகிறார்.

அதுபோல மாற்று கட்சியினர் சொன்னாலும் அது மக்களுக்கு தேவை என்ற உடனே முன்வைத்த அனைத்து கோரிக்கைகளையும் செயல்படுத்திக் கொண்டிருக்கிறார்.

இளைஞர்களின் மனதை புரிந்து கொண்ட தமிழக முதல்வர் திரு பழனிச்சாமி அவர்களுக்கு இளைஞர் குரல் சார்பாக நன்றி கலந்த பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

 

 

 

இளைஞர் குரல் மூலமாக திருப்பூரில் இளைஞர்கள் அரசுடன் இணைந்து திருப்பூர் மக்களுக்கு கொரானா விழிப்புணர்வு…

இளைஞர் குரல் மூலமாக திருப்பூரில் இளைஞர்கள் அரசுடன் இணைந்து திருப்பூர் மக்களுக்கு கொரானா விழிப்புணர்வு, பசிக்கு உணவு அளித்தல் மற்றும் ஏராளமான சேவைகளை செய்வதற்கு  அங்கீகாரம் அளித்த திருப்பூர் மாவட்ட அதிகாரிகளுக்கு மிக்க நன்றியை தெரிவித்துக் கொள்வதுடன் வரும் காலங்களில் மேலும் சில இளைஞர்களுடன் இணைந்து மக்களுக்கு தேவையான வசதிகளை செய்வோம் என்றும்,  இளைஞர்கள் தனியாக சாலையோர ஏழை எளிய மக்களுக்கு காலை மற்றும் மதிய உணவுகள் அளிப்பது மிக்க மகிழ்ச்சியை மனதிற்கு தருவதாகவும்  இளைஞர் குரல் திருப்பூர் மாவட்ட செய்தியாளர் திரு விமல் ராஜா அவர்கள் தெரிவித்தார்.

பின்வரும் காலங்களில் இதுபோன்ற மகத்தான சேவையை தமிழகம் முழுவதும் செயல்பட முயற்சி செய்வோம் என்று இளைஞர் குரல்  மாநில ஒருங்கிணைப்பாளர் திரு முகமது அலி கூடுதல் விஷயமாக  கூறினார்.

 

Covid -19 நிவாரண பொருட்கள் தேவைப்படுகிறது – தமிழ்நாடு இளைஞர் கட்சி கரூர் மாவட்டம்…

Covid -19 நிவாரண பொருட்கள் தேவைப்படுகிறது.
கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக இந்தியாவில் ஊரடங்கு அறிவித்து இருக்கும் காலக்கட்டத்தில் மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளும் பல்வேறு உதவிமற்றும் நலத்திட்டங்கள் அறிவித்து செயல்பாட்டில் இருக்கிறது.

இரண்டு வாரங்களுக்கு மேலாக ஊரடங்கு அமலில் இருப்பதால் தினக்கூலி வேலை செய்வோர்கள், ஏழை,எளியோர் மற்றும் இலங்கை மக்கள் முகாம்கள் என பலரும் வெகுவாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.

ஏழை மக்களுக்கு உதவும் வகையில் சமூக அமைப்பு மற்றும் தமிழ்நாடு இளைஞர் கட்சி இணைந்து பொதுமக்களிடம் நிவாரண பொருட்களை பெற்று பாதிப்பு அடைந்த மக்களுக்கு கொண்டு சேர்க்கும்
பணியில் இறங்கி உள்ளது.

நிவாரண பொருட்கள் (மளிகை,கிருமிநாசினி,முகக்கவசம் ) வழங்க உள்ளவர்கள்
கரூர் மாவட்ட தொடர்புக்கு:

வெ.லோகேஷ்
நகர தலைவர்
தமிழ்நாடு இளைஞர் கட்சி
கரூர் மாவட்டம்.
8056920705

இரா.இராஜ்குமார்
மாவட்ட செயலாளர்
தமிழ்நாடு இளைஞர் கட்சி
கரூர் மாவட்டம்.
9786689789

பொருளாதார உதவி:

TamilNadu Ilangyar Katchi
Acc No: 6737473954
IFSC: IDIB000P047
Porur Indian Bank

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES