மதுரை தெப்பக்குளம் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் ஆலோசனைக் கூட்டத்தில் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் செல்வப்பெருந்தகை கலந்து கொண்டு நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கி பேசினார்.
இந்நிகழ்வின் போது காங்கிரஸ் மதுரை மாநகர் மாவட்ட தலைவர் கார்த்திகேயன் ஆலோசனைப்படி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநில பிரதிநிதியும், மதுரை வடக்கு மாவட்ட துணைச் செயலாளருமான ராஜா முகமது தலைமையில், மாநில தலைவர் செல்வப்பெருந்தகை முன்னிலையில் 100 பேர் காங்கிரஸ் கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
MP மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் திரு ராஜா குமார் MLA துணைத்தலைவர் திரு சொர்ணசேதுராமன் மற்றும் காங்கிரஸ் பேரியக்க நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு சிலம்பாட்ட கழகத்தின் இணைப்பான மதுரை மாவட்ட சிலம்பாட்ட கழகத்தின் பொதுக்குழு கூட்டம் முனைவர் ஆய்வாளர் மு.ராஜேந்திரன் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாடு சிலம்பாட்ட தலைவர் யங் கேப்டன் பிரதீப் ராஜே மற்றும் செயல் தலைவர் அழகிரி மற்றும் மாநில பொதுச்செயலாளர் விஜய்பாபு ஆலோசனைப்படி மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் எதிரே உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது.
தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை மதுரை மண்டலம் சார்பாக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் ஆழ்வார்புரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு மண்டல தலைவர் டி.எஸ்.மைக்கேல்ராஜ் தலைமை தாங்கினார். மாநிலத் தலைவர் முத்துக்குமார் சிறப்புரையாற்றினார். இதில் மாநிலத் துணைத் தலைவர் சூசை அந்தோணி, மாநிலச் செயலாளர் குட்டி என்ற அந்தோணிராஜ், மண்டல செயலாளர் ஜெயக்குமார், மதுரை வடக்கு மாவட்ட தலைவர் சரவணன் என்ற சாமுவேல், துணைத்தலைவர் கார்மேகம், ஆன்மீக பிரிவு செயலாளர் கணேசன், துணைச் செயலாளர் சந்திரன், பொருளாளர் மணி, மாநில அமைப்பு செயலாளர் தங்கராஜ், இளைஞரணி தலைவர் சில்வர் சிவா, கிழக்குப் பகுதி செயலாளர் பிச்சை பலம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் மாநிலத் தலைவர் முத்துக்குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில் :-
தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை சார்பாக கோவையில் நடைபெறும் 41-வது வணிகர் தின மாநாட்டிற்கு மதுரை மண்டலத்தின் சார்பாக வியாபாரிகள் திரளாக கலந்து கொள்ள வேண்டும்.
வியாபாரிகளுக்கு தற்போது தமிழகத்தில் பாதுகாப்பான நிலை இல்லை. ரவுடிகளாலும் மது போதையாலும் வியாபாரிகளை மாமுல் கேட்டு மிரட்டுவதும், தரவில்லை என்றால் கத்தியை காட்டி மிரட்டுவதும் வாடிக்கையாக உள்ளது. எனவே வியாபாரிகளை பாதுகாக்க வியாபாரிகளுக்கு தனியாக பாதுகாப்பு சட்டத்தை இயற்ற தமிழக அரசை இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.
போதை இல்லா தமிழகத்தை உருவாக்க மதுரை மண்டலத்தின் சார்பாக முதல்வருக்கு மிஸ்டு கால் கொடுப்பது என்றும் இக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என கூறினார்.
தேனி மாவட்டம் திம்மரசநாயக்கனூர் நடுநிலைப் பள்ளியின் 99-வது ஆண்டு விழா திருவிழா போல் மிக பிரமாண்டமாக நடைபெற்றது.
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகா அருகே உள்ளது திம்மரசநாயக்கனூர் கிராமத்தில் பழமை வாய்ந்த ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி 99-ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
இந்தப் பள்ளியில் படித்த மாணவ,மாணவிகள் தற்பொழுது நல்ல உத்தியோகத்தில் தொழில் அதிபர்களாக, கல்வியை போதிக்கும் ஆசிரியர்களாக, மக்களுக்கு உணவளிக்கும் விவசாயிகளாக, மருத்துவ சேவையை வழங்கும் செவிலியர்களாக, அரசு ஊழியர்களாக தமிழக அரசின் பல்வேறு துறைகளில் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்நிலையில் பள்ளியின் 99-வது ஆண்டு விழாவை பிரமாண்டமாகவும் சிறப்பாகவும் நடத்துவது என முன்னாள் மாணவர்கள் முடிவு செய்தனர். பின்னர் அதற்கான பணிகளில் தீவிரமாக இறங்கினர்.இதற்காக முன்னாள் மாணவர்களிடம் அதற்குண்டான ஆலோசனைகள் செய்யப்பட்டு பிரம்மாண்டமான விழாவிற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டது.
கடந்த வெள்ளிக்கிழமை திம்மரசநாயக்கனூர் நடுநிலைப்பள்ளி வளாகம் அருகே உள்ள ஊர் மந்தையில் பிரம்மாண்ட மேடை அமைக்கப்பட்டு பள்ளியின் 99 -ஆண்டு விழா பள்ளியின் தலைமை ஆசிரியர் திருமதி சத்தியஷீலா தலைமையில் நடைபெற்ற இவ்விழா முன்னாள் மாணவர்கள், ஊர் பொதுமக்கள், திம்மரசநாயக்கனூர் கிராம முதன்மைக்காரர்கள் ஏற்பாட்டில் தனியார் பள்ளிகளையும் மிஞ்சும் வகையில் கலைநிகழ்ச்சிகள் மிகப் பிரமாண்டமாக நடைபெற்றது.
ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகள் கரகாட்டம், ஒயிலாட்டம், சிலம்பாட்டம், பேச்சுப்போட்டி மற்றும் பல்வேறு பாடல்களுக்கு நடனமாடி தங்களது அபார திறமைகளை வெளிப்படுத்தினர்.
மிகக் குறைந்த காலத்தில் ஒத்திகை பார்த்து இவ்வளவு அபார திறமையுடன் நடனமாடிய மாணவ,மாணவிகளை நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருந்த பொதுமக்கள் பாராட்டிக் கொண்டே இருந்தை காண முடிந்தது.
விழா தொடங்கிய மாலை 5.00 மணியில் இருந்து விழா முடிந்த இரவு 10.00 மணி வரை அந்த இடத்தை விட்டு மாணவ, மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் அந்த இடத்தை விட்டு செல்லாமல் நிகழ்ச்சியை கண்டு ரசித்தனர் என்பது இங்கே மிகவும் குறிப்பிடத்தக்கதாகும்.
திம்மராசநாயக்கனூர் கிராமத்தில் திருவிழா போல் நடந்த இந்த விழாவை காண ஊர் பொதுமக்கள் ஆயிரக்கணக்கானோர் திரண்டு மகிழ்ச்சியுடன் கண்கொட்டாமல் பார்த்து கொண்டு இருந்தனர்.
இவ்விழாவில் தொழிலதிபர் டி.டி.கே நிறுவனத் தலைவர், மற்றும் தன்னார்வலர் ராம்குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
பள்ளியின் முன்னாள் மாணவர்கள் ஏ.கே.அழகர், பி.சர்க்கரைப்பாண்டி, ஏ.பாண்டீஸ்வரன் என்ற ஈஸ் காளை, பி.ரவிச்சந்திரன், பா.மகாராஜன், பா.நவநீதன், தோழர் ராமசாமி, தொ.ராஜா மொ.பரமன், க.ரெங்கசாமிகோன் மற்றும் வி.அழகர்சாமி, வண்டிக்கார செல்வம் ஆகியோருடன் 2006 ஆம் வருடத்தில் படித்த மாணவர்கள் அனைவரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு 50 ஆண்டுகளுக்கு முன்பு படித்த முன்னாள் மாணவர்கள் நினைவு பரிசுகளை வழங்கி பாராட்டினர்.
விழாவில் கலந்து கொண்ட முன்னாள் மாணவர்களுக்கும், ஊர் பெரியவர்களுக்கும், செய்திகளை சேகரிப்பதற்காக வந்திருந்த பத்திரிகையாளர்களுக்கும் சால்வை அணிவித்து பள்ளியின் சார்பாக மரியாதை செய்யப்பட்டது.
விழா ஏற்பாடுகளை பள்ளி தலைமை ஆசிரியர் சத்தியஷீலா மற்றும் ஆசிரியர்கள், முன்னாள் மாணவர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து சிறப்பாக செய்திருந்தனர்.
மேலும் திம்மரசநாயக்கனூர் பள்ளியில் படித்து, அதே பள்ளியில் ஆசிரியராக தற்போது பணி புரியும் சக்திவேல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
பள்ளி சிறப்பாக செயல்பட்டு வர உறுதுணையாக உள்ள தலைமை ஆசிரியர் சத்தியஷீலாவுக்கு சிறந்த தலைமை ஆசிரியர் விருதும், மற்றும் பள்ளி ஆசிரியர்களுக்கு நினைவு பரிசுகளை முன்னாள் மாணவர்கள் வழங்கி கௌரவித்தனர்.
மதுரை காந்தி என்.எம்.ஆர் சுப்பராமன் மகளிர் கல்லூரி மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் 1000 பேர் 24 நிமிடங்கள் 51 வினாடிகளில் திருப்பாவை 30 பாசுரங்களை பாடி உலக சாதனை படைத்தனர்
மதுரை தெப்பக்குளம் அருகே உள்ள மதுரை காந்தி என்.எம்.ஆர் சுப்பராமன் மகளிர் மகளிர் கல்லூரி மற்றும் புஸ்பலஸ் இன்டர்நேஷனல் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் நிறுவனம் இணைந்து நடத்திய உலக ரெக்கார்டு சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி நடைபெற தங்கமயில் ஜுவல்லரி நிறுவனம் பெரும் உதவிகளை செய்தனர்.
இதில் கல்லூரி மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் என 1000 பேர் திருப்பாவை 30 பாடல்களை ஒரே குரலில் பாடி உலக சாதனை படைத்தனர்.
கல்லூரியின் தாளாளர் “வித்யா கலா சேவா பிரவீனா” திருமதி M.V.ஜனரஞ்சனி பாய் வரவேற்புரை வழங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். புஸ்பலஸ் இன்டர்நேஷனல் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் அமைப்பின் நிறுவனர் மற்றும் தலைவர் டாக்டர் எம்.ஆர்.சித்ரா மாய் நிகழ்ச்சி குறித்து சிறப்புரையாற்றினார்.
கல்லூரியின் செயலாளர் திருமதி N.M.H கலைவாணி, தங்கமயில் ஜுவல்லரி குமார் மற்றும் கல்லூரி முதல்வர் டாக்டர் K.S.கோமதி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
ஆண்டாள் பாடிய திருப்பாவையை பாடி எந்த ஒரு மத வேற்றுமையின்றி அனைவரும் ஒன்றிணைந்து 1000 மாணவிகள் 24 நிமிடங்கள் 51 வினாடிகளில் திருப்பாவை 30 பாசுரங்களை பாடி உலக சாதனை நிகழ்த்தினர். பின்னர் உலக சாதனை படைத்த மாணவிகள் மற்றும் பேராசிரியர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சி மூலம் மாணவிகளுக்கு ஒழுக்கத்தையும் பக்தியையும் கற்று கொடுக்கப்பட்டு வரும் நிலையில், இது போன்று திருப்பாவை பாடி உலக சாதனை படைத்துள்ள கல்லூரி நிர்வாகத்தை ஏராளமானோர் பாராட்டி பேசினார்கள்
இதுகுறித்து கல்லூரியின் தாளாளர் M.V.ஜனரஞ்சனி பாய் கூறுகையில்: எங்கள் கல்லூரி மாணவிகளுக்கு படிப்பு மட்டுமன்றி,ஒழுக்கத்தையும் பக்தியையும் கற்றுக் கொடுக்கிறோம். அனைத்து மாணவிகளும் வேற்றுமையின்றி ஒற்றுமையாக இன்று திருப்பாவை பாடியது மிகவும் பெருமையாக உள்ளது. இந்த உலக சாதனை படைத்தது கல்லூரிக்கு பெருமை சேர்க்கும் வகையில் இருக்கிறது என்று கூறினார்.
நிகழ்ச்சியின் முடிவில் கல்லூரியின் துணை முதல்வர் முனைவர் எஸ்.மஹிமா நன்றியுரை கூறினார். நிர்வாக அதிகாரி ஸ்ரீலேகா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இளைஞர் குரல் செய்திகளுக்காக மதுரை மாவட்ட செய்தியாளர் கனகராஜ்
அப்துல்கலாம் அறிவியல் விவசாய சங்க மாநில தலைவர் ஆபேல் மூர்த்தி பொள்ளாச்சியில் சப்-கலெக்டர் கேத்தரின் சரண்யா அவர்களை சந்தித்து மனு ஒன்றை வழங்கினார்.
அந்த மனுவில் அவர் கூறியுள்ளதாவது
திமுக தேர்தல் வாக்குறுதியில் தேங்காய்களை விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்பட்டு தேங்காய் எண்ணையாக மாற்றி ரேஷன் கடைகளில் விற்பனை செய்யப்படும் என கூறப்பட்டிருந்தது.
ஆனால் இன்று வரை அதனை நிறைவேற்றவில்லை. விவசாயிகளின் நலன் கருதி அதனை நிறைவேற்றிட கேட்டுக்கொள்கிறோம். தேங்காய் விலை வீழ்ச்சியால் தென்னை விவசாயிகள் பெரும் நஷ்டத்தில் உள்ளனர்.
வெளிநாடுகளிலிருந்து 72 சதவீதம் எண்ணணெய் வித்துக்கள் இறக்குமதி செய்யப்படுகிறது. உள்நாட்டு எண்ணெய் வகைகளான கடலை எவர்ணெய், தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய் ஆகிவற்றை ஊக்கப்படுத்தாமல் இந்தோனேஷியா, மலேசியா நாடுகளில் இருந்து மாதம் 1 கோடியே 96 லட்சம் லிட்டர் பாமாயிலை லிட்டர் ரூ.100க்கு இறக்குமதி செய்கிறது.
இதில் லிட்டருக்கு ரூ.70 மானியமாக வழங்கப்படுகிறது. ரேஷன் கடைகளில் ரூ.30க்கு பாமாயில் விற்கப்படுகிறது. மக்களின் வரி பணத்தில் ரூ.1500 கோடி பாமாயில் உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு மானியமாக வழங்கப்பட்டு வருகிறது.
ரூ.20/-க்கு விற்பனை செய்யப்பட்ட தேங்காய் தற்போது 10 ரூபாயாக குறைந்துவிட்டது. பாமாயிலுக்கு பதில் கடலை எண்ணொய், தேங்காய் என்மொய்களை தமிழக அரசும், மத்திய அரசும் கொள்முதல் செய்து ரேஷன் கடைகளில் விற்பனை செய்ய வேண்டும். அரசுக்கு தாங்கள் விவசாயிகளுடைய இந்த கோரிக்கையை அரசு நிறைவேற்றித்தரும்படி இந்த கூட்டத்தில் மினிட்ஸ் மூலமாக அரசிற்கு தெரியப்படுத்தும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
மதுரையில் சாஜர் அறக்கட்டளை ஜே.கே ஃபென்னர் நிதி நிறுவனத்துடன் இணைந்து பெருங்குடி, திருநகர், மற்றும் சமயநல்லூர் ஆகிய கிராமங்களில் தலா 25 பெண்களை ஒருங்கிணைத்து (75 பெண்களுக்கு) சிறுதானிய மதிப்பு கூட்டு பொருட்கள் தயாரிக்கும் ஒரு மாத கால பயிற்சி வகுப்புகளை நடத்தியது.
இந்த பயிற்சியில் பங்கேற்ற பெண்களிலிருந்து 17 நபர்கள் தேர்ந்து எடுக்கப்பட்டு மதுரை லெட்சுமி சுந்தரம் ஹாலில் தினமலர் மற்றும் ஆசிர்வாத் நிறுவனம் இணைந்து நடத்திய மில்லட் மகாராணி 2024 ல் கலந்து கொண்டனர்.
இதில் சமயநல்லூர் கிராமத்தை சேர்ந்த மாலதி முதலாவது பரிசான பிரிட்ஜ், மூன்றாவது பரிசான மிக்ஸியை திருமதி முத்துமீனா ஆகியோர் தட்டிச் சென்றனர்.
வெற்றி பெற்றவர்களை ஜே.கே பென்னர் நிதி நிறுவனம் மற்றும் சாஜர் அறக்கட்டளை சார்பாக வாழ்த்தினர். கலந்து கொண்ட அனைவருக்கும் தினமலர் மற்றும் ஆசிர்வாத் சார்பாக பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
மதுரையில் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று விட்டு தூத்துக்குடி செல்வதற்காக மதுரை விமான நிலையத்திற்கு வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பாஜக மதுரை மாநகர் காளவாசல் மண்டல் தலைவர் முனைவர் பிச்சைவேல் வாழ்த்து பெற்றார்.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு மதுரை தெற்கு மாவட்ட திமுக பேச்சாளர் ஆர்.வி தங்கவேல் மதுரை பெத்தானிய புரத்தில் உள்ள ஜெகம் சாரிட்டபிள் டிரஸ்ட் அலுவலகத்தில் முதியோர்களுக்கு அன்னதானம் வழங்கினார்
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் 71-வது பிறந்த நாளை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் திமுக நிர்வாகிகள் இனிப்புகள் மற்றும் அன்னதானம் வழங்கி கொண்டாடினர்.
அந்த வகையில் மதுரை பெத்தானியாபுரத்தில் உள்ள ஜெகம் சாரிட்டபிள் டிரஸ்ட் அலுவலகத்தில் பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியோர்களுக்கு மதுரை எழுமலையை சேர்ந்த தெற்கு மாவட்ட திமுக பேச்சாளர் ஆர்.வி தங்கவேல் அன்னதானம் மற்றும் இனிப்புகளை வழங்கினார்.
இந்நிகழ்வில் அவரது துணைவியார் உமாராணி மற்றும் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சியின் முடிவில் மேனேஜிங் டிரஸ்டி சோலை எஸ்.பரமன் நன்றி கூறினார்.