மதுரை காந்தி என்.எம்.ஆர் சுப்பராமன் மகளிர் கல்லூரி மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் 1000 பேர் 24 நிமிடங்கள் 51 வினாடிகளில் திருப்பாவை 30 பாசுரங்களை பாடி உலக சாதனை படைத்தனர்
மதுரை தெப்பக்குளம் அருகே உள்ள மதுரை காந்தி என்.எம்.ஆர் சுப்பராமன் மகளிர் மகளிர் கல்லூரி மற்றும் புஸ்பலஸ் இன்டர்நேஷனல் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் நிறுவனம் இணைந்து நடத்திய உலக ரெக்கார்டு சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி நடைபெற தங்கமயில் ஜுவல்லரி நிறுவனம் பெரும் உதவிகளை செய்தனர்.
இதில் கல்லூரி மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் என 1000 பேர் திருப்பாவை 30 பாடல்களை ஒரே குரலில் பாடி உலக சாதனை படைத்தனர்.
கல்லூரியின் தாளாளர் “வித்யா கலா சேவா பிரவீனா” திருமதி M.V.ஜனரஞ்சனி பாய் வரவேற்புரை வழங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். புஸ்பலஸ் இன்டர்நேஷனல் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் அமைப்பின் நிறுவனர் மற்றும் தலைவர் டாக்டர் எம்.ஆர்.சித்ரா மாய் நிகழ்ச்சி குறித்து சிறப்புரையாற்றினார்.
கல்லூரியின் செயலாளர் திருமதி N.M.H கலைவாணி, தங்கமயில் ஜுவல்லரி குமார் மற்றும் கல்லூரி முதல்வர் டாக்டர் K.S.கோமதி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
ஆண்டாள் பாடிய திருப்பாவையை பாடி எந்த ஒரு மத வேற்றுமையின்றி அனைவரும் ஒன்றிணைந்து 1000 மாணவிகள் 24 நிமிடங்கள் 51 வினாடிகளில் திருப்பாவை 30 பாசுரங்களை பாடி உலக சாதனை நிகழ்த்தினர். பின்னர் உலக சாதனை படைத்த மாணவிகள் மற்றும் பேராசிரியர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சி மூலம்
மாணவிகளுக்கு ஒழுக்கத்தையும் பக்தியையும் கற்று கொடுக்கப்பட்டு வரும் நிலையில், இது போன்று திருப்பாவை பாடி உலக சாதனை படைத்துள்ள கல்லூரி நிர்வாகத்தை ஏராளமானோர் பாராட்டி பேசினார்கள்
இதுகுறித்து கல்லூரியின் தாளாளர் M.V.ஜனரஞ்சனி பாய் கூறுகையில்:
எங்கள் கல்லூரி மாணவிகளுக்கு படிப்பு மட்டுமன்றி,ஒழுக்கத்தையும் பக்தியையும் கற்றுக் கொடுக்கிறோம். அனைத்து மாணவிகளும் வேற்றுமையின்றி ஒற்றுமையாக இன்று திருப்பாவை பாடியது மிகவும் பெருமையாக உள்ளது. இந்த உலக சாதனை படைத்தது கல்லூரிக்கு பெருமை சேர்க்கும் வகையில் இருக்கிறது என்று கூறினார்.
நிகழ்ச்சியின் முடிவில் கல்லூரியின் துணை முதல்வர் முனைவர் எஸ்.மஹிமா நன்றியுரை கூறினார்.
நிர்வாக அதிகாரி ஸ்ரீலேகா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இளைஞர் குரல் செய்திகளுக்காக மதுரை மாவட்ட செய்தியாளர் கனகராஜ்