தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை மதுரை மண்டலம் சார்பாக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் ஆழ்வார்புரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு மண்டல தலைவர் டி.எஸ்.மைக்கேல்ராஜ் தலைமை தாங்கினார். மாநிலத் தலைவர் முத்துக்குமார் சிறப்புரையாற்றினார். இதில் மாநிலத் துணைத் தலைவர் சூசை அந்தோணி, மாநிலச் செயலாளர் குட்டி என்ற அந்தோணிராஜ், மண்டல செயலாளர் ஜெயக்குமார், மதுரை வடக்கு மாவட்ட தலைவர் சரவணன் என்ற சாமுவேல், துணைத்தலைவர் கார்மேகம், ஆன்மீக பிரிவு செயலாளர் கணேசன், துணைச் செயலாளர் சந்திரன், பொருளாளர் மணி, மாநில அமைப்பு செயலாளர் தங்கராஜ், இளைஞரணி தலைவர் சில்வர் சிவா, கிழக்குப் பகுதி செயலாளர் பிச்சை பலம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் மாநிலத் தலைவர் முத்துக்குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில் :-
தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை சார்பாக கோவையில் நடைபெறும் 41-வது வணிகர் தின மாநாட்டிற்கு மதுரை மண்டலத்தின் சார்பாக வியாபாரிகள் திரளாக கலந்து கொள்ள வேண்டும்.
வியாபாரிகளுக்கு தற்போது தமிழகத்தில் பாதுகாப்பான நிலை இல்லை. ரவுடிகளாலும் மது போதையாலும் வியாபாரிகளை மாமுல் கேட்டு மிரட்டுவதும், தரவில்லை என்றால் கத்தியை காட்டி மிரட்டுவதும் வாடிக்கையாக உள்ளது. எனவே வியாபாரிகளை பாதுகாக்க வியாபாரிகளுக்கு தனியாக பாதுகாப்பு சட்டத்தை இயற்ற தமிழக அரசை இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.
போதை இல்லா தமிழகத்தை உருவாக்க மதுரை மண்டலத்தின் சார்பாக முதல்வருக்கு மிஸ்டு கால் கொடுப்பது என்றும் இக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என கூறினார்.