Thursday , December 12 2024
Breaking News
Home / செய்திகள் (page 92)

செய்திகள்

All News

தென்காசி மாவட்டத்தில் புதிய மருத்துவக் கல்லூரி அமைக்க அதிமமுக துணை பொதுச்செயலாளர் நெல்லை மேட்டுப்பட்டி முத்துக்குமார் தமிழக அரசுக்கு கோரிக்கை.!!

தென்காசி மாவட்டத்தில் புதிய மருத்துவக் கல்லூரி அமைக்க அதிமமுக துணை பொதுச்செயலாளர் நெல்லை மேட்டுப்பட்டி முத்துக்குமார் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளதாவது:-

தென்காசி மாவட்டத்திற்கு உட்பட்ட தென்காசி, கடையநல்லூர், சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர் பொதுமக்கள் சார்பாக மாண்புமிகு தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கும், தமிழக சுகாதார துறை அமைச்சர் அவர்களுக்கும், தென்காசி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பொதுமக்கள் சார்பாக கடையநல்லூர் சட்டமன்ற தொகுதி உட்பட்ட பொதுமக்கள் சார்பாகவும் சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மக்கள் சார்பாகவும் வாசுதேவநல்லூர் சட்டமன்ற தொகுதி உட்பட்ட பொதுமக்கள் சார்பாகவும் பணிவான கோரிக்கை.

தற்போது திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து தனியாக பிரிக்கப்பட்டு தென்காசி மாவட்டமாக செயல்பட்டு கொண்டிருக்கிறது. தற்போது தென்காசி மாவட்டத்திற்கு மாவட்ட மருத்துவக் கல்லூரி கிடையாது. தென்காசி, கடையநல்லூர், வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில் தொகுதிக்கு உட்பட்ட பொதுமக்கள் அனைவரும் மாவட்டக் கல்லூரி மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என்றால் திருநெல்வேலி செல்லக்கூடிய சூழ்நிலை உள்ளது.

அதே போல் தென்காசி மாவட்டத்திற்கு உட்பட்ட பொதுமக்கள் கோரிக்கையான தென்காசியை தலைமையிடமாக கொண்டு மருத்துவக் கல்லூரி ஒன்று அமைத்துக் கொடுத்தால் என்றும் தென்காசி மாவட்ட பொதுமக்கள் பொதுமக்கள் அனைவரும் என்றும் நன்றியுடன் இருப்பார்கள்.

அண்ணா திராவிட மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் என்ற முறையில் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு தென்காசி மாவட்ட பொதுமக்கள் சார்பாக இதை கோரிக்கையாக வைக்கிறேன்.

என அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

மதுரையில் “சிவசக்தி டிரஸ்ட்” சார்பாக ஆயுதபூஜை விழா.!!

மதுரை பெத்தானியாபுரத்தில் “சிவசக்தி டிரஸ்ட்” சார்பாக “ஆயுதபூஜை” விழா சிறப்பாக நடைபெற்றது.

மேலும் ஏழை,எளிய மக்களுக்கு அன்னதானம் நடைபெற்றது. இந்நிகழ்வில் டாக்டர் பாலசுப்பிரமணியன்,டாக்டர் ராகவன்,பூமிராஜன்,முருகன், திருஞானசம்பந்தம், சோலை எஸ்.பரமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மதுரை மாவட்ட செய்தியாளர் கனகராஜ்

மதுரையில் தமிழ் சினிமா நடிகர்கள் சங்கம் சார்பாக ஆயுதபூஜை விழா.!

மதுரை,அக்.05

மதுரையில் தமிழ் சினிமா நடிகர்கள் சங்க சார்பில் நடைபெற்ற ஆயுத பூஜை விழா

தமிழகம் முழுவதும் நவராத்திரி திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரக்கூடிய வேலையில்

மதுரை காளவாசல் அருகே உள்ள பாத்திமா நகர் 1வது தெருவில்
உள்ள தமிழ் சினிமா நடிகர்கள் சங்க சார்பில் இன்று பொதுச்செயலாளர் வினோத் அவர்கள் தலைமையில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது

ஆயுத பூஜையை முன்னிட்டு தமிழ் சினிமா நடிகர்கள் சங்க அலுவலகத்தில் பிதாமகன் திரைப்பட புகழ் பிதாமகன் ஐயர் அவர்கள் சிறப்பு பூஜைகள் செய்தார்.

இவ்விழாவில் தமிழ் சினிமா நடிகர்கள் சங்க தலைவர் அப்துல் ஜப்பார் , தமிழ் சினிமா நடிகர்கள் சங்க மேலாளர் பாலா,துணைச் செயலாளர் மதுர பாலா, தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும் பிரபல திரைப்பட நடிகருமான விக்டர், அப்பா பாலாஜி,நாகராஜ்,வெங்கடேஷ் தங்கப்பாண்டி,சுகுமார், கணேஷ்,சத்யா,காலி.கார்த்தி

வெங்கட், டான் கார்த்திக், குணா, அலி காளி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

விழா ஏற்பாட்டினை சங்க மேலாளர் பாலா, செய்தித் தொடர்பாளர் நாட்டி நவனி செய்தார்கள். அனைவருக்கும் பயறு வகைகள், பழங்கள், பொரி, கடலை வழங்கப்பட்டன.

இளைஞர் குரல் செய்திகளுக்காக மதுரை செய்தியாளர் கனகராஜ்

மதுரை துவரிமான் அருகே உள்ள K.L.B COLD STORAGE ல் ஆயுத பூஜை விழா கொண்டாட்டம்.!!

மதுரை மாவட்டம் துவரிமான் அருகே உள்ள K.L.B COLD STORAGE ல் ஆயுத பூஜை விழா நிறுவன ஊழியர்களுடன் கொண்டாட்டப்பட்டது.

நாடு முழுவதும் இன்று ஆயுதபூஜை வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. மதுரை, திருநெல்வேலி உள்பட பல்வேறு நகரங்களில் ஆயுத பூஜைக்கு தேவையான பூ, பழங்கள், பொரி போன்ற பொருட்களின் விற்பனை களைகட்டியது.

ஆயுதபூஜையையொட்டி வீடுகள், கடைகள், அலுவலகங்கள், தொழிற்சாலைகளில் பயன்படுத்தும் அனைத்து பொருட்களையும் சுத்தம் செய்தனர். இறைவனுக்கு பழங்கள், பொரி உள்ளிட்ட படையலை படைத்து மக்கள் ஆயுதபூஜையை உற்சாகமாக கொண்டாடினர்.

மதுரையில் ஆயுத பூஜையை முன்னிட்டு தொழில் கூடங்கள் சுத்தம் செய்யப்பட்டு காலையிலேயே தங்களது குடும்பத்துடன் வந்து பூஜை செய்து சுவாமிக்கு படையலிட்டு வழிபட்டனர்.

கொரொனா தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆயுதபூஜை கொண்டாட்டம் முடங்கியிருந்த நிலையில் தற்போது கொண்டாடுவது மகிழ்ச்சியளிப்பதாக தொழில் கூடங்களில் உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

மதுரை துவரிமான் அருகே உள்ள K.L.B COLD STORAGE ல் ஆயுத பூஜை விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் நிர்வாக இயக்குனர் சுந்தரம், மோகன்குமார், மணிராஜ் மற்றும் குடும்பத்தினர், நிறுவன ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இளைஞர் குரல் செய்திகளுக்காக மதுரை செய்தியாளர் கனகராஜ்

கரூர் நாடாளுமன்ற தொகுதியில் (வேடசந்தூர் – எரியோடு பகுதியில்) இந்திய ஒற்றுமை பயண விழிப்புணர்வு பிரச்சார வாகனம் துவக்க விழா…

கரூர் நாடாளுமன்ற தொகுதியில் (வேடசந்தூர் – எரியோடு பகுதியில்) இந்திய ஒற்றுமை பயண விழிப்புணர்வு பிரச்சார வாகனம் துவக்க விழா கரூர் எம்பி ஜோதிமணி அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

வாகனத்தை துவக்கி வைத்து பின்னர் தாம் இந்திய ஒற்றுமைப் பயணத்தில் கலந்து கொண்ட அனுபவத்தை மக்களுக்கு எடுத்துச் சொன்னார். இந்திய ஒற்றுமை பயணம் காஷ்மீர் அருகே சென்றவுடன் மிகப்பெரிய மாற்றம் இந்திய நாட்டில் நடக்கும் என்று சூருரைத்தார்.

வருங்கால இந்திய பிரதமர் திரு. ராகுல் காந்தி அவர்களின் இந்திய ஒற்றுமை பயணத்தில் இணையத்தின் வழியாக கலந்து கொள்ளுமாறு கூடியிருந்த மக்களிடம் கேட்டுக் கொண்டார்.

இளைஞர் குரல் சார்பாக இந்திய ஒற்றுமை பயணம் வெற்றி பெற வாழ்த்துகிறோம்.

YouTube player

மதுரை ஸ்ரீ தசகாளி அம்பாள் கோவிலில் நடந்த அலங்கார பூஜையில் முன்னாள் கவுன்சிலர் பாலயோகி பங்கேற்பு.!

மதுரை தெற்குவாசல் அருகே சின்னக்கடை பகுதியில் உள்ள ஸ்ரீ தசகாளி அம்பாள் திருக்கோவிலில் நடைபெற்ற ஸ்ரீமகிஷா சூரமர்த்தினி அலங்கார பூஜை நடைபெற்றது.

இந்நிகழ்வில்

சிறப்பு அழைப்பாளர்களாக முன்னாள் கவுன்சிலர் ஆர்.கே.பாலயோகி, விஷ்ணுவர்தன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

ராமியா.கு.நா.பாலுச்சாமி பட்டர் வகையறா, ஜெயபிரகாஷ், ராகுல் பட்டர், & பாலாஜி பட்டர் ஆகியோர் சிறப்பு அலங்காரம் செய்து பூஜைகளை நடத்தினர்.

மதுரையில் காமராஜர் சிலைக்கு விசிக சார்பாக மாலை அணிவித்து மரியாதை.!!

கர்மவீரர் காமராஜர் நினைவு தினத்தை முன்னிட்டு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பாக மாலை அணிவித்து மரியாதை

காமராஜர் நினைவு தினத்தை முன்னிட்டு மதுரை விளக்குத்தூண் பகுதியில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு விடுதலைச் சிறுத்தை கட்சி துணைப் பொதுச் செயலாளரும், அரசு வழக்கறிஞருமான வில்லவன் கோதை தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இதில் கல்வி பொருளாதாரம் விழிப்புணர்வு இயக்கம் அய்யங்காளை,செல்லப்பாண்டி, ஜீவனா,வீரக்குமார்,பெரியவர் பங்கேற்றனர்.

இளைஞர் குரல் செய்திகளுக்காக மதுரை செய்தியாளர் கனகராஜ்

போரிங் பவுடர் 2.5 லட்சத்துக்கு வாங்கிய கோடந்தூர் ஊராட்சி…

கரூர் மாவட்டம் க.பரமத்தி ஊராட்சி ஒன்றியம் கோடந்தூர் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் இனிதே நடந்து முடிந்ததது. கூட்டத்தில் மக்களின் குறைகளை கேட்டறிந்து அதிகாரிகள் அதற்கு தகுந்த பதில்களை அளித்தனர். ஒவ்வொருத்தரின் குறைகளையும் தனித்தனியாக கேட்டு பதில் அளித்தனர். கிராமத்தின் வரவு செலவு கணக்குகளை கிராம மக்கள் கேட்டு அறிந்தனர்.

இதுபோல எல்லா கிராம சபைகளிலும் மக்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து தமது கிராமத்திற்கு என்ன வேண்டும் என்ற கருத்துக்களை ஒருங்கிணைந்து கேட்டால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்பதும் தெளிவாகிறது.

இந்த கிராம சபை கூட்டத்தில் பெரும்பாலான கிராம மக்கள் கலந்து கொண்டு கிராம சபை கூட்டத்தை சிறப்பித்தனர்.

கோடந்தூர் ஊராட்சியின் சாதனைகள்:

  1. போரிங் பவுடர் 2.5 லட்சத்துக்கு வாங்கிய கோடந்தூர் ஊராட்சி…
  2. வரவு செலவு கணக்கு இல்லாமல் கிராம சபை கூட்டம்…
  3. கடந்த ஆண்டு வரவு செலவு பழைய பிளக்ஸ் பேனருடன் கோடந்தூர் கிராம சபை கூட்டம்…
  4. ஒரு கையெழுத்துக்காக 80 வயது முதியவரை இருபது முறை அலைய வைத்த கோடந்தூர் பஞ்சாயத்து…
  5. தெருவிளக்கு இல்லாமல் கிராமங்களை இருளில் மூழ்கடித்து திருட்டுக்கு வழிவகுக்கும் கோடந்தூர் பஞ்சாயத்து…
  6. ஒவ்வொரு செயலும் உள்நோக்கம் கருதி செயல்படுவதால் கோடந்தூர் ஊராட்சியில் சலசலப்பு…
  7. தகவல் ஆணையமே! உத்தரவிட்டும் பஞ்சாயத்து வரவு செலவு கணக்குகளை கொடுக்க மறுக்கும் கோடந்தூர் ஊராட்சி…
YouTube player

வெட்டுக்காட்டு வலசு இளைஞர் மோகன்ராஜ் என்பவர் கோடந்தூர் ஊராட்சியில் கலந்து கொண்டு தங்களது கிராமத்திற்கு தேவையான அனைத்து வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுக்குமாறு பல கேள்விகளை அதிகாரிகளிடம் கேட்டார்.

கிராம சபை கூட்டங்களில் இளைஞர்கள் கலந்துகொண்டு கிராம முன்னேற்றத்திற்காக என்னென்ன வேண்டும் என்று கேட்டு அறிந்தால் கிராமம் முன்னேறும்…

கிராமங்கள் முன்னேறும் போது தான்… நாடும் முன்னேறும்…

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மதுரையில் சிவசக்தி டிரஸ்ட் சார்பாக மாபெரும் மருத்துவ முகாம்.!!

அக்டோபர் 2 தேச பிதா மகாத்மா காந்தி மற்றும் லால் பகதூர் சாஸ்திரி ஆகியோர் பிறந்த நாள் மற்றும் கர்ம வீரர் காமராஜர் நினைவு நாளை முன்னிட்டு, மதுரை பெத்தானியாபுரத்தில் சிவசக்தி டிரஸ்ட் சார்பாக வறுமையில் வாடும் முதியோர்களுக்கு மாபெரும் மருத்துவ முகாம் நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் விளாங்குடி சபா ராம் மருத்துவமனை டாக்டர் பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார்.டாக்டர் ராகவன், சிவக்குமார், ராமநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் உதயசூரியன் மருத்துவ முகாமை துவக்கி வைத்தார். சிறப்பு அழைப்பாளராக மத்திய அரசு வழக்கறிஞர் பாலகிருஷ்ணன் பங்கேற்றார்.

மாபெரும் அன்னதானத்தை டாக்டர் பாலசுப்பிரமணியம் அவர்கள் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் அறக்கட்டளை அறங்காவலர்கள் பூமிராஜன், சோலை பரமன், முருகன் மற்றும் போஸ், திருஞான சம்பந்தம், இர்வின் பார்க்கர், முத்துலட்சுமி, சதிஷ்கண்ணா, முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மதுரை மாவட்டம் காதக்கிணறு ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் செல்வி சேகர் தலைமையில் கிராம சபை கூட்டம்.!!

அக்டோபர் 2 காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது.

மதுரை மாவட்டம் கிழக்கு ஊராட்சி ஒன்றியம், காதக்கிணறு ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் செல்வி சேகர் அவர்களின் தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இக்கூட்டத்தில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ஆரோக்கிய ஜெயந்தி ஸ்டாலின், ஊராட்சி செயலர் செல்லப்பா, மற்றும் வார்டு உறுப்பினர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், பொதுமக்கள், தூய்மை பணியாளர்கள், கால்நடை மருத்துவர்கள், சட்டப்பணிகள் ஆணைக்குழுவினர்,அங்கன்வாடி, ரேசன் கடை பணியாளர்கள், சமூக ஆர்வலர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இளைஞர் குரல் செய்திகளுக்காக மதுரை செய்தியாளர் கனகராஜ்

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES