கரூர் மாவட்டம் க.பரமத்தி ஊராட்சி ஒன்றியம் கோடந்தூர் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் இனிதே நடந்து முடிந்ததது. கூட்டத்தில் மக்களின் குறைகளை கேட்டறிந்து அதிகாரிகள் அதற்கு தகுந்த பதில்களை அளித்தனர். ஒவ்வொருத்தரின் குறைகளையும் தனித்தனியாக கேட்டு பதில் அளித்தனர். கிராமத்தின் வரவு செலவு கணக்குகளை கிராம மக்கள் கேட்டு அறிந்தனர்.
இதுபோல எல்லா கிராம சபைகளிலும் மக்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து தமது கிராமத்திற்கு என்ன வேண்டும் என்ற கருத்துக்களை ஒருங்கிணைந்து கேட்டால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்பதும் தெளிவாகிறது.
இந்த கிராம சபை கூட்டத்தில் பெரும்பாலான கிராம மக்கள் கலந்து கொண்டு கிராம சபை கூட்டத்தை சிறப்பித்தனர்.
கோடந்தூர் ஊராட்சியின் சாதனைகள்:
- போரிங் பவுடர் 2.5 லட்சத்துக்கு வாங்கிய கோடந்தூர் ஊராட்சி…
- வரவு செலவு கணக்கு இல்லாமல் கிராம சபை கூட்டம்…
- கடந்த ஆண்டு வரவு செலவு பழைய பிளக்ஸ் பேனருடன் கோடந்தூர் கிராம சபை கூட்டம்…
- ஒரு கையெழுத்துக்காக 80 வயது முதியவரை இருபது முறை அலைய வைத்த கோடந்தூர் பஞ்சாயத்து…
- தெருவிளக்கு இல்லாமல் கிராமங்களை இருளில் மூழ்கடித்து திருட்டுக்கு வழிவகுக்கும் கோடந்தூர் பஞ்சாயத்து…
- ஒவ்வொரு செயலும் உள்நோக்கம் கருதி செயல்படுவதால் கோடந்தூர் ஊராட்சியில் சலசலப்பு…
- தகவல் ஆணையமே! உத்தரவிட்டும் பஞ்சாயத்து வரவு செலவு கணக்குகளை கொடுக்க மறுக்கும் கோடந்தூர் ஊராட்சி…
வெட்டுக்காட்டு வலசு இளைஞர் மோகன்ராஜ் என்பவர் கோடந்தூர் ஊராட்சியில் கலந்து கொண்டு தங்களது கிராமத்திற்கு தேவையான அனைத்து வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுக்குமாறு பல கேள்விகளை அதிகாரிகளிடம் கேட்டார்.
கிராம சபை கூட்டங்களில் இளைஞர்கள் கலந்துகொண்டு கிராம முன்னேற்றத்திற்காக என்னென்ன வேண்டும் என்று கேட்டு அறிந்தால் கிராமம் முன்னேறும்…
கிராமங்கள் முன்னேறும் போது தான்… நாடும் முன்னேறும்…