மதுரையில் குத்துவிளக்கு ஏற்றி பூஜையை தொடங்கி வைத்த முன்னாள் கவுன்சிலர் பாலயோகி.!
நவராத்திரி 6ஆம் நாள் முன்னிட்டு மதுரை கான்பாளையம் பூந்தோட்ட தெருவில், பிரம்மா குமாரிகள் இராஜயோக தியான நிலையம் சார்பாக, முன்னாள் கவுன்சிலர் ஆர்.கே பாலயோகி மற்றும் சி.பா.அமுதா ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி பூஜையை தொடங்கி வைத்தனர்.
இந்நிகழ்விற்கு சகோதரி கோமதி தலைமை தாங்கினார்.
இளைஞர் குரல் செய்திகளுக்காக மதுரை செய்தியாளர் கனகராஜ்
திண்டுக்கல் கிழக்கு மாவட்ட சிவாஜி மன்றம் சார்பாக நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பிறந்த நாள் விழா.!!
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் 95 வது பிறந்த நாளை முன்னிட்டு, திண்டுக்கல் கிழக்கு மாவட்ட சிவாஜி மன்றம் சார்பாக பூமார்க்கெட் அருகே உள்ள காமராஜர் சிலை முன்பு பொதுமக்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.
மேலும் ஏழை,எளிய மக்களுக்கு அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
புதிதாக கட்டப்பட்டு வரும் நாடாளுமன்றத்தில் சிவாஜி கணேசன் திருவுருவ படம் வைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
இந்நிகழ்வில் மாவட்ட தலைவர் சிவாஜி திருப்பதி, மாவட்ட செயலாளர் சிவாஜி வெங்கிடு, ஆலோசகர் வி.எல் டால்டன் மற்றும் சஞ்சய்குமார், மாரியப்பன், வடிவேலு முருகன், முத்துக்குமார், சத்தியன், கண்டிராஜன், கௌதம், திருமலைச்சாமி, நடராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தங்கமயில் ஜூவல்லரி சார்பாக மின்மினி வைர நகைகள் மதுரையில் அறிமுகம்.!!
மதுரையில் செடோய் அமைப்பு சார்பாக உறுதி மொழி ஏற்பு விழா.!!
மதுரை அப்பல்லோ மருத்துவமனை சார்பாக இருதய நோய் விழிப்புணர்வு நடை பேரணி.!
உலக இருதய தினத்தை முன்னிட்டு மதுரையில் அப்பல்லோ சிறப்பு மருத்துவமனை சார்பாக “நெஞ்சார நடந்துக்குவோம்” என்ற தலைப்பில் மாபெரும் இருதய நோய் விழிப்புணர்வு நடை பேரணி நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக அப்பல்லோ மருத்துவமனையில் இருதய நோய்க்கான சிகிச்சை பெற்று பலன் அடைந்தவர்கள் கலந்து கொண்டனர். மேலும் மருத்துவமனையை சார்ந்த மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் உற்சாகத்துடன் பங்கேற்றனர்.
இந்த விழிப்புணர்வு பேரணியில் இருதய நோய்க்கான காரணிகள் அதை முன்கூட்டி தடுப்பதற்கான வழிமுறைகள் மற்றும் மாரடைப்பு ஏற்பட்டவர்களுக்கு எவ்வாறு முதலுதவி அளிக்க வேண்டும் என்பது பற்றியும் விழிப்புணர்வை மருத்துவமனையை சேர்ந்த மூத்த இருதய அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ஸ்ரீதர் மற்றும் இருதயவியல் துறை மருத்துவ குழு மூத்த மருத்துவர் டாக்டர் விவேக் போஸ், டாக்டர் சுப்பு ராமகிருஷ்ணன், டாக்டர் கருப்பையா, டாக்டர் செந்தில்குமார் மற்றும் டாக்டர் மணிகண்டன் மற்றும் அவசர சிகிச்சை துறையின் மருத்துவர் டாக்டர் ஜூடு வினோத், டாக்டர் மதன் ராஜா ஆகியோர் பேசினர். மேலும் சிகிச்சை பயனாளர்கள் தங்களது சிகிச்சை பலனில் அனுபவத்தையும், மற்றும் அதை எதிர் கொள்வதற்கான நடைமுறைகளையும் பகிர்ந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியின் போது மதுரை மண்டல முதன்மை செயல் அதிகாரி நீலகண்டன், மார்க்கெட்டிங் பொது மேலாளர் மணிகண்டன் மற்றும் நிர்வாக பொது மேலாளர் நிக்கில் திவாரி ஆகியோர் உடன் இருந்தனர். நிகழ்ச்சியின் முடிவில் நெஞ்சார நடந்துக்குவோம் என்பது இருதய நோய்க்கு மட்டுமில்லாமல் நம் வாழ்வியல் முறையிலும் மற்றும் நெஞ்சார்ந்தவர்களுக்கு வழிமுறைகளை வகுக்க வேண்டும் என்று மூளை நரம்பியல் துறை டாக்டர் மீனாட்சி சுந்தரம் வலியுறுத்தி பேசினார்.
மன அழுத்தம் காரணமாக கடந்த 20 ஆண்டுகளில் இந்திய இளம் தலைமுறையினர் மத்தியில் இதய நோய்கள் 200% அதிகரிப்பு.!
மன அழுத்தம் காரணமாக கடந்த 20 ஆண்டுகளில் இந்திய இளம் தலைமுறையினர் மத்தியில் இதய நோய்கள் 200% அதிகரித்துள்ளது என மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்
● உலகின் மக்கள் தொகையில் 20%-க்கும் குறைவானதாக இருக்கின்ற போதிலும் உலகின் இதய நோய் சுமையில் 50% பங்கை இந்தியா கொண்டிருக்கிறது. இந்திய குடிமக்களின் ஆரோக்கியமற்ற வாழ்க்கைமுறை, மனஅழுத்தம், சுற்றுசூழல் மாசு மற்றும் மரபணு அமைப்புகளே இதற்கு காரணம்.
● வாழ்க்கை முறை மாற்றங்கள் மற்றும் ஆரம்பநிலையிலே கண்டறிவதன் மூலம் 80% மாரடைப்புகள் மற்றும் பக்கவாதங்கள் நிகழாமல் தடுக்க முடியும்; ஆனால் இதற்கு சரியான சமயத்தில் மருத்துவ பரிசோதனைகள் செய்து கொள்வது அவசியமாகிறது.
மதுரை, 28 செப்டம்பர் 2022: “நாட்பட்ட மற்றும் கடுமையான மனஅழுத்தம், உடல் உழைப்பற்ற மந்தமான வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியமில்லாத உணவுகள் ஆகியவை ஒருங்கிணைந்து இளைஞர்களின் இதய ஆரோக்கியத்தை வேகமாக சேதப்படுத்தி வருகின்றன. இதனால், இதய இரத்த நாள நோய்களினால் ஏற்படும் இந்தியாவின் சுமை பன்மடங்காக உயர்ந்து வருகிறது. கடந்த 20 ஆண்டுகளில் இந்தியாவில் அதிக வேலை செய்ய கூடிய 20 – 50 வயதில் உள்ள மக்கள் மத்தியில் கடும் அச்சுறுத்தலாக இதய நோய்களில் 200% அதிகரிப்பு காணப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக உலகளவில் இதய நோய்களுக்கான சுமையில் 50% பங்களிப்பை நமது நாடு கொண்டிருக்கிறது. இருப்பினும், ஆரோக்கியமான வாழ்க்கைமுறை, சரியான சமயத்தில் மருத்துவ பரிசோதனை மற்றும் ஆரம்ப நிலையிலேயே சிகிச்சை ஆகியவையால் 80% மாரடைப்பு மற்றும் பக்கவாதங்கள் வராமல் தடுக்க முடியும்” என்கின்றனர் மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் மருத்துவ நிபுணர்கள்.
உலக இதய தினம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 29ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பின் போது பேசிய மருத்துவ நிபுணர்கள், இதயத்தையும் இரத்த நாளங்களையும் பாதிக்கிற நோய்களின் தொகுப்பான இதய நாள நோய்களே சமீப ஆண்டுகளில் மிகப்பெரிய எண்ணிக்கையில் உயிரிழப்பை ஏற்படுத்தி வருகின்றன என்று சுட்டிக்காட்டினர். ஒவ்வொரு ஆண்டும் இந்நோய்களால் 18 மில்லியன் நபர்கள் உலகளவில் இறக்கின்றனர்; இந்தியாவில் மட்டும் ஏறக்குறைய 5 மில்லியன் என்ற அளவில் இந்த உயிரிழப்பு இருக்கிறது.
மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் இதயவியல் துறையின் தலைவர் டாக்டர் N கணேசன் பேசுகையில், “இந்நோய்க்கான மிக முக்கிய ஆனால் மாற்றக்கூடிய இடர்காரணிகளுள் ஒன்றாக கடுமையான மற்றும் நாட்பட்ட மனஅழுத்தம் இருக்கிறது. கடும் போட்டி மற்றும் காலக்கெடுவை எதிர்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் ஆகியவற்றின் காரணமாக இளவயது நபர்களுக்கு தொடர்ந்து அளவுக்கு அதிகமான மன அழுத்தம் ஏற்படுகிறது. இதய தமனிகளின் உட்புற படலங்களை மாற்றி, அழற்சியையும், வீக்கத்தையும் மன அழுத்தம் விளைவிக்கிறது. இந்த மாற்றங்கள் இரத்தக்கட்டிகள் உருவாவதை ஏதுவாக்கி மாரடைப்புகளை விளைவிக்கக்கூடும். மன அழுத்தத்தோடு சேர்த்து இன்றைய இளைஞர்கள் குறைவான நேரமே தூங்குகின்றனர்; நள்ளிரவு வரை அவர்கள் பொதுவாக விழித்திருக்கின்றனர்; மனதை ரிலாக்ஸாக வைப்பதற்கு அவர்களுக்கு நேரம் இருப்பதில்லை. அடிக்கடி துரித உணவகங்களில் ஆரோக்கியமற்ற உணவுகளை உண்பதும் அவர்களது பழக்கமாக மாறியிருக்கிறது. மேலும், இந்தியாவில் புகைப்பிடிப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. உலகளவில் புகைப்பிடிப்பவர்களில் 12% நபர்கள் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். தொழில்துறையில் பணியாற்றுவதால் உடல்சார்ந்த உழைப்பு மிகவும் குறைவாக இருக்கிறது. மேற்குறிப்பிடப்பட்ட காரணிகள் அனைத்தும் ஒருங்கிணைந்து, இதய நோய்களுக்கு ஆளாவதற்கான இடர்வாய்ப்பை இந்திய இளம் தலைமுறையினரிடம் அதிகரித்திருக்கின்றன,” என்று கூறினார்.
“மனஅழுத்தம் என்பது பொதுவானது மற்றும் தவிர்க்க முடியாதது என்பது உண்மையே; எனினும் இந்த அழுத்தத்தை நமது உடல் எப்படி ஏற்கிறது மற்றும் அதற்கு நாம் எப்படி பதில்வினையாற்ற வேண்டும் என்பதை நாம் அறிந்திருப்பது அவசியம். அழுத்தம் தரும் சூழ்நிலைகளிலிருந்து விலகி இருப்பதற்கு நேரம் எடுத்துக் கொள்ளுங்கள். எப்படி ரிலாக்ஸ் செய்வது என்று அறிந்துகொள்ளுங்கள். அது இசையை கேட்பதாகவோ, தோட்ட வேலையாகவோ அல்லது மகிழ்ச்சி தரும் ஒரு ஹாபியை செய்வதாகவோ அது இருக்கலாம். யோகா பயிற்சியும் கூட மனதை தளர்வாக்க உதவக்கூடும். நடப்பதும் ஒரு சிறந்த உடற்பயிற்சியாகும். ஜிம்மிற்கு சென்று பாடிபில்டிங் செயல்பாட்டில் ஈடுபடுவது தசைகளை வலுப்படுத்த உதவும்; ஓட்டப்பயிற்சியும், ஜாக்கிங்-ம் ஒருவரின் உடல் உறுதியையும், தாங்கு திறனையும் அதிகரிக்கலாம். ஆனால், இதயத்தின் ஆரோக்கியத்தை இவைகளெல்லாம் கண்டிப்பாக அதிகரிக்கும் என்று கருதக்கூடாது; ஆனால் ஒவ்வொரு நாளும் சுமார் 45 நிமிடங்கள் என்ற அளவில் ஒரு வாரத்தில் 5 நாட்கள் சுறுசுறுப்பாக நடப்பது, மாரடைப்புகளுக்கான இடர்வாய்ப்பை 20% வரை குறைக்கக்கூடும்,” என்று மன அழுத்த மேலாண்மையின் அத்தியாவசியத்தை டாக்டர் கணேசன் வலியுறுத்தினார்.
இதய மற்றும் இரத்தநாள அறுவை சிகிச்சைத் துறையின் தலைவரும் முதுநிலை நிபுணருமான டாக்டர் ஆர் எம் கிருஷ்ணன் கூறியதாவது: “மரபணு ரீதியாகவே இதயநோய்கள் பாதிப்புக்கு ஆளாகுபவர்களாக இந்தியர்கள் இருக்கின்றனர்; ஆகவே பிற இடங்களிலுள்ள மக்களைவிட மாரடைப்பு ஏற்படும் அதிக இடர்வாய்ப்பு இந்தியர்களுக்கு இருக்கிறது. ஒவ்வொரு இந்தியருமே மாரடைப்புக்கு ஆளாகக்கூடியவராகவே இருக்கிறார். ஒரு ஐரோப்பியரைவிட மூன்று மடங்கும் மற்றும் ஒரு சீனரை விட ஆறு மடங்கும் மற்றும் ஒரு ஜப்பானியரைவிட இருபது மடங்கும் மாரடைப்பு ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புள்ளவராக ஒரு சராசரி இந்தியர் இருக்கிறார். இது மட்டுமின்றி அதிவேக, பரபரப்பான வாழ்க்கை முறை மற்றும் மாசு நிறைந்த சூழல் ஆகியவை இந்த நிலைமையை இன்னும் மோசமாக்கி வருகிறது. காற்று மற்றும் ஒலியினால் ஏற்படும் மாசு கூட தமனிகளில் அழற்சியை ஏற்படுத்தக்கூடியவை.”
“காபி அல்லது தேனீர் மற்றும் சமோசா சாப்பிடுவதற்காக வெளியில் செல்வது என்பது பிரேக் எடுப்பதற்கான மக்களின் மிகவும் பிடித்தமான வழிமுறையாக இருப்பது உண்மையே. ஆனால், இத்தகைய உணவுப்பொருட்கள் ஆரோக்கியத்திற்கு உகந்தவை அல்ல. நாம் உட்கொள்ளும் 75% நொறுக்குத்தீனிகள் மற்றும் சிற்றுண்டிகளில் ‘டிரான்ஸ் ஃபேட்’ எனப்படும் தீங்கு விளைவிக்கும் கொழுப்பு இருக்கிறது. தேனீருக்கான இடைவேளையை சிறிய உடற்பயிற்சிகளுக்கான இடைவேளையாக மாற்றிக் கொள்ளலாம். உடற்பயிற்சிகள் வயது முதிர்ந்த நபர்களுக்கு மட்டுமன்றி, குழந்தைகளுக்கும் இளவயது நபர்களுக்கும் முக்கியமானது. அதிக உடல்எடை / உடற்பருமன் கொண்ட நபர்கள், கொழுப்பு மற்றும் சர்க்கரை அடங்கிய உணவுகளிலிருந்து எடுத்துக்கொள்ளப்படும் கலோரிகளின் அளவை கண்டிப்பாக குறைக்க வேண்டும். நாள் முழுவதும் போதுமான அளவு நீர் திரவங்களை அருந்தி நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்; கொழுப்பு, சர்க்கரை மற்றும் உப்பு குறைவாக உள்ள உணவுகள், முழு தானியங்கள், பதப்படுத்தப்படாத புதிதாக சமைத்த உணவுகள், பழங்கள் மற்றும் காய்கறிகள் அடங்கிய உணவுமுறையை நாம் கொண்டிருப்பது அவசியம்,” என்று டாக்டர். ஆர். எம். கிருஷ்ணன் மேலும் கூறினார்.
மருத்துவப் பரிசோதனைகளின் முக்கியத்துவம் பற்றி வலியுறுத்திய இதய மயக்கவியல் துறையின் தலைவர் மற்றும் முதுநிலை நிபுணர் டாக்டர் எஸ் குமார் கூறியதாவது: “ஏறக்குறைய 25% இதயநோய்கள் எந்த அறிகுறிகளும் காட்டுவதில்லை. சுமார் 30-40% இரத்தநாள அடைப்பு இருந்தாலும் கூட அது மாரடைப்பை விளைவிக்கக்கூடும். சுறுசுறுப்பாக நடைபயிற்சி செய்யும் போது ஏற்படும் மார்பில் அசவுகரியம் அல்லது இடது கையில் வலி ஆகியவை இதய நோய்களின் அறிகுறிகளாக இருக்கக்கூடும் என்ற போதிலும், அடைப்பு கடுமையாக இருக்கும் போது கூட சிலருக்கு எந்த அறிகுறியும் வெளிப்படுவதில்லை. ஆகவே, மருத்துவ பரிசோதனைகள் முக்கியமானவை. நமது இரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் மற்றும் இரத்த சர்க்கரை ஆகியவற்றின் அளவு என்னவென்று நாம் ஒவ்வொருவரும் கண்டிப்பாக அறிந்திருக்க வேண்டும். குடும்பத்தில் இதய நோய்களின் வரலாறு, நீரிழிவு, புகைப்பிடிக்கும் பழக்கம் மற்றும் அதிக இரத்த அழுத்தம் ஆகியவை இருக்கும் நபர்களுக்கு குறித்த சமயங்களில் பரிசோதனைகள் செய்யப்படுவது கண்டிப்பாக அவசியம். ஒரு நபருக்கு 20 வயது ஆகும்போது கண்டிப்பாக இரத்த பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். உடற்பயிற்சி பரிசோதனைகள் 25 வயதிலும், 30 வயதிலிருந்து ஆண்டுக்கு ஒரு முறை உடற்பரிசோதனை மற்றும் இரத்த கொலஸ்ட்ரால் பரிசோதனைகள் செய்துகொள்வது அவசியம். 35 வயதுக்கு மேற்பட்ட நபர்களுக்கு சிடி ஸ்கேன் பரிசோதனை பரிந்துரைக்கப்படுகிறது. மேற்குறிப்பிடப்பட்ட ஆய்வக பரிசோதனைகள், உடற்பரிசோதனைகள், மருத்துவ மற்றும் குடும்ப வரலாறு ஆய்வு மற்றும் தனிநபருக்கான இடர்காரணிகள் மீதான பரிசீலனை ஆகியவை, உரிய நேரத்திற்குள் சிகிச்சை மேற்கொள்வதற்கு எங்களுக்கு உதவும்.”
மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தைச் சேர்ந்த டாக்டர். பி. கண்ணன் – மருத்துவ நிர்வாகி, டாக்டர். ஆர். சிவக்குமார் – முதுநிலை இதயவியல் நிபுணர், டாக்டர். எஸ். செல்வமணி – முதுநிலை இதயவியல் நிபுணர், டாக்டர். ஜெயபாண்டியன் – முதுநிலை இதயவியல் நிபுணர் மற்றும் டாக்டர் எம் சம்பத் குமார் – முதுநிலை இதயவியல் நிபுணர் ஆகியோர் இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் பங்கேற்ற பிற முக்கிய நிபுணர்களாவர்.
மதுரை ஆட்சியர் அலுவலகம் முன்பு வனவேங்கைகள் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்.!
ராஜபாளையம் மற்றும் தேனியில் குறவர் பழங்குடியினர் மீதான காவல்துறையினரின் தாக்குதலை கண்டித்து, வனவேங்கைகள் கட்சி சார்பாக மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் தோழர் முத்து தலைமை வகித்தார்.மாநில பொதுச் செயலாளர் குறிஞ்சி சேகர் முன்னிலை வகித்தார். இந்நிகழ்வில் ஒன்றிய செயலாளர் பாலமுருகன், திருநகர் சேகர் உள்பட பலர் பங்கேற்றனர்.
மதுரை மாவட்ட செய்தியாளர் கனகராஜ்
இதயத்தில் துளை ஏற்பட்டு அபாய கட்டத்தில் இருந்த முதியவரின் உயிரைக் காப்பாற்றி திருச்சி அப்போலோ மருத்துவர்கள் சாதனை.!
இதயத்தில் துளை ஏற்பட்டு அபாய கட்டத்தில் இருந்த முதியவரின் உயிரைக் காப்பாற்றி திருச்சி அப்போலோ மருத்துவர்கள் சாதனை
திருச்சி, செப் 24:
இதயத்தில் துளை ஏற்பட்டு மரணத்தின் விளிம்பு நிலைக்குச் சென்ற முதியவரின் உயிரைக் காப்பாற்றி திருச்சி அப்போலோ மருத்துவமனை இதய நோயியல் துறை மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
இதில், ஃப்ரீ வால் ரப்சர் எனப்படும் இதயத்தில் துளை ஏற்படும் நிலையானது அரிதான, அதேவேளையில் உயிரிழப்பை ஏற்படுத்தக்கூடிய சிக்கலான நிலையாகும். இதயத்தில் துளை ஏற்படுவதால் தொடர்ச்சியாக ரத்தம் வெளியேறி இதயம் செயலிழக்கும். இந்த நிலையில் சரியான சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் உயிரிழப்பைத் தடுக்க முடியாத சூழல் ஏற்படும். இப்படிப்பட்ட மோசமான உடல்நிலையில் அனுமதிக்கப்பட்ட 65 வயது முதியவருக்கு சிறப்பான சிகிச்சை அளித்து அவரை உயிர் பிழைக்கவைத்துள்ளனர் மருத்துவர்கள்.
அங்கு உடனடி அவசர இதய பைபாஸ் அறுவை சிகிச்சை வாயிலாக இதய ரத்தக்குழாய்கள் சரி செய்யப்பட்டு இதயத்திற்கு போதிய ஆக்சிஜன் கிடைக்கவும், இதயம் சீராக ரத்தத்தை பம்ப் செய்யவும் வழிசெய்யப்பட்டது. அன்னுலோபிளாஸ்டி மூலம் மிட்ரல் வால்வுகள் சரி செய்யப்பட்டு கசிவு தடுக்கப்பட்டது. அத்துடன் துளையும் அடைக்கப்பட்டது. இந்த அறுவை சிகிச்சையில் இதயத்தின் இணைப்பு முற்றிலுமாக பைபாஸ் செய்யப்பட்டு CPB சாதனத்தின் உதவியுடன் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. உடல்நிலை படிப்படியாக மேம்பட்ட நிலையில் 6வது நாளில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இரண்டு வாரங்களுக்குப் பின்னர் பரிசோதித்தபோது அவர் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பியிருந்தார்.
அப்போலோ மருத்துவமனை மதுரை மண்டல முதன்மை இயக்க அலுவலர் நீலக்கண்ணன் அவர்கள் உலக இருதய தின வாழ்த்துக்களை கூறி அனைவரும் இருதய நலத்தை காப்பது அவசியம் எனவும் திருச்சி அப்போலோ மருத்துவமனை பச்சிளம் குழந்தைகளுக்கான இருதய சிகிச்சை முதல் அனைத்து வயதினருக்கும் ஏனைய இருதய பிரச்சனைகளுக்கும் சிகிச்சை அளிக்கும் வகையில் கைதேர்ந்த மருத்துவர்கள் மற்றும் உபகரணங்கள் கொண்டது எனக்கூறினார்
உயிரிழப்பை ஏற்படுத்தும் தீவிர அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்ட முதியவரின் உயிரைக் காப்பாற்றி இயல்பு வாழ்க்கைக்கு திரும்பச் செய்த இதய நோய் நிபுணர்களை திருச்சி அப்போலோ மருத்துவமனை மூத்த பொதுமேலாளர் சாமுவேல் பாராட்டினார்.
இந்த செய்தியாளர் சந்திப்பில், நோயாளிக்கு வெற்றிகரமாக சிகிச்சை அளித்த டாக்டர் காதர் சாகிப், இதயநோய் சிகிச்சை சிறப்பு நிபுணர்கள் ரவீந்திரன், சாம் சுந்தர், ஸ்ரீ காந்த் பூமணா, அரவிந்த், ரோகிணி, சரவணன் ஆகியோர் அடங்கிய குழுவினர், இதய மயக்கவியல் நிபுணர் மற்றும் துணை பொது மேலாளர் சங்கீத் ராம மூர்த்தி ஆகியோர் உடனிருந்தனர்.
இளைஞர் குரல் செய்திகளுக்காக தலைமை செய்தியாளர் கனகராஜ்
புதிய தொழில் நுட்பங்களின் கண்டுபிடிப்பால் இதய நோய் சிகிச்சை புதிய பரிமாணத்தை எட்டியுள்ளது : அப்போலோ மருத்துவமனையின் மூத்த இதய நோய் சிறப்பு நிபுணர் விவேக் போஸ்
புதிய தொழில்நுட்பங்களின் கண்டுபிடிப்பால்
இதய நோய் சிகிச்சை புதிய பரிமாணத்தை எட்டியுள்ளது
அப்போலோ மருத்துவமனையின் மூத்த இதய நோய் சிறப்பு நிபுணர் விவேக் போஸ் பேட்டி
மதுரை, செப் 24:
மதுரையில் அப்போலோ மருத்துவமனையின் மூத்த இதயநோய் சிறப்பு நிபுணர் விவேக் போஸ் அவர்கள் தெரிவித்ததாவது: இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும் 10 லட்சத்துக்கும் அதிகமானோர் இதய ஆஞ்சியோ சிகிச்சை செய்துகொள்கிறார்கள்.
இதயக் குழாய் அடைப்பு உள்ள 70 வயது முதியவர்களைப் பொருத்தவரை சுமார் 90 சதவீதம் ஆண்களுக்கும், 60 சதவீதம் பெண்களுக்கும் இதயக் குழாய்களில் கால்சியம் படிமங்களாலேயே அடைப்பு ஏற்படுகிறது. இந்தப் படிமங்களால் இதயக் குழாய்கள் பாதிக்கப்பட்டு அடைப்பு ஏற்படுவதற்கு நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், புகை பிடித்தல், சிறுநீரக பாதிப்பு மற்றும் அதிக கொழுப்பு ஆகியவை குறிப்பிடத்தக்க காரணங்களாக உள்ளன.
சமீபத்திய காலம் வரை, கால்சியம் படிமம் கொண்ட இதயக் குழாய்களில் ஸ்டென்ட் பொருத்துவது கடினமான பணியாகவே இருந்தது. ஆனால் புதிய இண்ட்ராவாஸ்குலர் லித்தோ டிரிப்சி (IVL) தொழில்நுட்பத்தின் வாயிலாக இத்தகைய கடினமான படிமங்களை பலூன் சாதனத்தின் உதவியுடன் நீக்க முடிகிறது. இதனால் ஸ்டென்ட்களையும் எளிதாகப் பொருத்த முடிகிறது.
இது ஒருபுறமிருக்க தற்போது அறிமுகமாகி உள்ள ஸ்டென்டின் அதிநவீன வடிவமான பயோ அப்சார்பபிள் ஸ்கஃபோல்ட் சாதனமும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏனெனில் இதய சுற்றோட்டத்தில் ஸ்டென்ட் போன்ற எந்த உலோக சாதனமும் 3 ஆண்டுகளுக்கு மேல் நீடித்திருக்க முடியாது. இதயக் குழாய்கள் குறிப்பிட்ட காலத்தில் தங்கள் இயல்பான அளவு, செயல்பாட்டுக்கு திரும்பிவிடும்.
அதேபோல இதயக் குழாய்களின் உட்பகுதியை துல்லியமாக பரிசோதனை செய்வதற்கு இண்ட்ராவாஸ்குலார் அல்ட்ராசவுண்ட் (IVUS) மற்றும் ஆப்டிகல் கொஹிரண்ஸ் டோமோகிராபி (OCT) ஆகிய ஸ்கேனிங் சாதனங்கள் உதவிகரமாக இருக்கின்றன.
இதய வால்வு நோய்களைப் பொருத்தவரை, நான் சர்ஜிகல் அல்லது டிரான்ஸ் வால்வு என அழைக்கப்படும் அறுவை சிகிச்சை இல்லாமல் வால்வுகளைப் பொருத்தும் முறையானது புரட்சிகரமான கண்டுபிடிப்பாக உள்ளது. சமீபத்திய காலம் ஆர்டிக் இதயக் குழாயில் ஏற்படும் ஸ்டெனோசிஸ் எனப்படும் ரத்தக் கசிவு பிரச்சினைக்கு அறுவை சிகிச்சையின் வாயிலாக செயற்கை வால்வை மாற்றுவது தான் தீர்வாக இருந்தது. ஆனால் தற்போது மயக்கமருந்தோ, அறுவை சிகிச்சையோ இல்லாமல் நுண்குழாயில் வால்வைப் பொருத்தி அதனை இதயப் பகுதியில் சரியாகப் பொருத்த முடிகிறது. இந்தத் தொழில்நுட்பமானது மிகப்பெரிய நம்பிக்கை அளித்திருப்பதுடன் எதிர்காலத்தில் இதய வால்வு நோயாளிகளுக்கான சிகிச்சை முறையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதய நோயியல் துறையில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப மேம்பாடுகள் சிக்கலான சிகிச்சை வழிமுறைகளை மாற்றி, எளிதான, பாதுகாப்பான அதேவேளையில் வேதனை குறைவான சிகிச்சைமுறைகளை அறிமுகப்படுத்தியுள்ளன. இந்தப் புதிய முறைகள் நோயாளிகளுக்கு சிறப்பான சிகிச்சை மற்றும் குணமளிக்கக்கூடியவையாக உள்ளன என்று தெரிவித்தார்.
அப்போலோ மருத்துவமனை மதுரை மண்டல முதன்மை இயக்க அலுவலர் நீலக்கண்ணன் அவர்கள் உலக இருதய தின வாழ்த்துக்களை கூறி அனைவரும் இருதய நலத்தை காப்பது அவசியம் எனவும் திருச்சி அப்போலோ மருத்துவமனை பச்சிளம் குழந்தைகளுக்கான இருதய சிகிச்சை முதல் அனைத்து வயதினருக்கும் ஏனைய இருதய பிரச்சனைகளுக்கும் சிகிச்சை அளிக்கும் வகையில் கைதேர்ந்த மருத்துவர்கள் மற்றும் உபகரணங்கள் கொண்டது எனக் கூறினார்
மேலும் செய்தியாளர் சந்திப்பின்போது மதுரை மண்டல, முதன்மை இயக்க அலுவலர் நீலக்கண்ணன், மார்கெட்டிங் பிரிவு பொது மேலாளர் மணிகண்டன் மற்றும் மருத்துவ சேவை இணை இயக்குநர் பிரவீன்ராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.