
தங்கமயில் ஜூவல்லரி லிமிடெட் நிறுவனம், வர்த்தகத்தில் பாரம்பரியம் மிக்க நிறுவனம். இந்த நிறுவனம், பாலு ஜூவல்லரி பெயரில் நகை வர்த்தகம் மேற்கொண்ட தங்கள் தந்தையார் பாலுசாமி செட்டியார் அவர்களின் வழிவழியாக உருவானது. இந்த ஆபரண வர்த்தகம், 1991-தின் தொடக்கத்தில் தங்கமயில் ஜூவல்லரி என்ற பெயரில் புதிய வடிவில் தங்கள் பயணத்தை தொடங்கியது. தொடங்கிய நாளிலிருந்து வியத்தகு வளர்ச்சி பெற்ற இந்த நிறுவனமானது, 2010-ல் ஒரு பப்ளிக் லிமிடெட் நிறுவனமாக தன்னை நிலை நிறுத்திக் கொண்டு மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றது.
50-க்கும் மேற்பட்ட விற்பனை நிலையங்கள், 1800ூ மேற்பட்ட ஊழியர்கள் மற்றும் 7,000 தயாரிப்புகள் உடன் நேரடியாக விற்பனை நிலையத்தில் அல்லது அவரவர் இடத்திலிருந்து ஆன்லைனில் எந்த வகை ஆபரணங்கள் வாங்க விரும்புபவர்களின் ஒன் ஸ்டாப் ~hப் ஆக தங்கமயில் ஜூவல்லரி விளங்குகிறது. இதன் ஆபரணங்கள், மிகச் சிறந்த பொற்கொல்லர்களின் கைவண்ணத்தில் வடிவமைக்கப்பட்டு மிளிர்கின்றன.
வாடிக்கையாளர் மனம் விரும்பும் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப ஆபரண வடிவமைப்புகளையும் நிறுவனம் உருவாக்கி தருகிறது.
தங்கள் வளர்ச்சியின் அடுத்த கட்டமாக, நிறுவனமானது, மின்மினி என்ற பெயரில் ‘மின்மினி டைமண்ட் ஜூவல்லரி” என்னும் புதிய பிராண்ட்டை இப்பொழுது அறிமுகம் செய்கிறது.
அறிமுக நிகழ்ச்சியில் தங்கமயில் நிறுவனத்தின் இணை இயக்குநர்கள் திரு. டீய.ரமேஷ் மற்றும்
Nடீ.குமார் ஆகியோர் கூறியதாவது:
எங்களுடைய ‘மின்மினி டைமண்ட்; ஜூவல்லரி” என்பது மாறி வரும் வாடிக்கையாளர்களின் லைப் ஸ்டைலுக்கு தனி மிடுக்கையும், அழகையும் அளித்திடும். இவை தனித்தன்மை வாய்ந்த வடிவமைப்பு உடன் ஒவ்வொரு விசேஷத்திற்கும் ஏற்ற வகையில் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டு உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இளைஞர் குரல் செய்திகளுக்காக மதுரை செய்தியாளர் கனகராஜ்
இளைஞர் குரல் இனி ஒரு விதி செய்வோம்