உலக இருதய தினத்தை முன்னிட்டு மதுரையில் அப்பல்லோ சிறப்பு மருத்துவமனை சார்பாக “நெஞ்சார நடந்துக்குவோம்” என்ற தலைப்பில் மாபெரும் இருதய நோய் விழிப்புணர்வு நடை பேரணி நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக அப்பல்லோ மருத்துவமனையில் இருதய நோய்க்கான சிகிச்சை பெற்று பலன் அடைந்தவர்கள் கலந்து கொண்டனர். மேலும் மருத்துவமனையை சார்ந்த மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் உற்சாகத்துடன் பங்கேற்றனர்.
இந்த விழிப்புணர்வு பேரணியில் இருதய நோய்க்கான காரணிகள் அதை முன்கூட்டி தடுப்பதற்கான வழிமுறைகள் மற்றும் மாரடைப்பு ஏற்பட்டவர்களுக்கு எவ்வாறு முதலுதவி அளிக்க வேண்டும் என்பது பற்றியும் விழிப்புணர்வை மருத்துவமனையை சேர்ந்த மூத்த இருதய அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ஸ்ரீதர் மற்றும் இருதயவியல் துறை மருத்துவ குழு மூத்த மருத்துவர் டாக்டர் விவேக் போஸ், டாக்டர் சுப்பு ராமகிருஷ்ணன், டாக்டர் கருப்பையா, டாக்டர் செந்தில்குமார் மற்றும் டாக்டர் மணிகண்டன் மற்றும் அவசர சிகிச்சை துறையின் மருத்துவர் டாக்டர் ஜூடு வினோத், டாக்டர் மதன் ராஜா ஆகியோர் பேசினர். மேலும் சிகிச்சை பயனாளர்கள் தங்களது சிகிச்சை பலனில் அனுபவத்தையும், மற்றும் அதை எதிர் கொள்வதற்கான நடைமுறைகளையும் பகிர்ந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியின் போது மதுரை மண்டல முதன்மை செயல் அதிகாரி நீலகண்டன், மார்க்கெட்டிங் பொது மேலாளர் மணிகண்டன் மற்றும் நிர்வாக பொது மேலாளர் நிக்கில் திவாரி ஆகியோர் உடன் இருந்தனர். நிகழ்ச்சியின் முடிவில் நெஞ்சார நடந்துக்குவோம் என்பது இருதய நோய்க்கு மட்டுமில்லாமல் நம் வாழ்வியல் முறையிலும் மற்றும் நெஞ்சார்ந்தவர்களுக்கு வழிமுறைகளை வகுக்க வேண்டும் என்று மூளை நரம்பியல் துறை டாக்டர் மீனாட்சி சுந்தரம் வலியுறுத்தி பேசினார்.